நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. வன்முறைகள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன.
அரியானா மாநிலம் குர்கராமில் ஒரு முஸ்லீம் இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.
முகமது பார்கர் ஆலம் என்ற அந்த இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தின்படி 4 மதவாதப் பேர்வழிகள் பார்கர் ஆலமை வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.
ஆலம் தலையில் குல்லா போடக்கூடாது என்றும், ‘பாரத் மாதாகீ ஜே’ என்று சொல்லவேண்டும் என்றும், அத்தோடு ‘ஜெய் ராம்’ என்று சொல்லவேண்டும் என்றும் மிரட்டி உள்ளர்கள்.
மிரண்டு போன ஆலம் குல்லாவைக் கழற்றிவிட்டு, ‘பாரத் மாதாகீ ஜே’ என்று சொல்லியிருக்கிறார். மாறாக ‘ஜெய் ராம்’ என்று சொல்ல மறுத்துவிட்டார். சொல்வதும் சொல்லாததும் அவருடைய உரிமை. அதை தடுக்க யாருக்கும், எந்த மத வாதிக்கும் உரிமை இல்லை.
ஆனால், ஜெய் ராம் என்று சொல்ல மறுத்த காரணத்தினால் ஆலம் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.
இதே போல மத்தியப் பிரதேசம் சியோனில் மாட்டுக்கறி கொண்டு போனதாக எழுப்பிய வதந்தியில் ஒரு பெண் உள்பட 3 இளைஞர்கள் கடும் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கடந்த பாஜக ஆட்சியில் நடைபெற்ற மாட்டிறைச்சியின் மதவாதத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன என்பதற்கு இது சான்று.
இப்பொழுது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் பாஜக அரசு சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் பயத்தை உண்டாக்கி வருகிறது.
இது ஆரோக்கியாமான அரசியலாகத் தெரியவில்லை.
ஜனநாயகம் சவக்குழிக்குள் போய்விடக்கூடாது.
நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன் போன்ற மேலை நாட்டுச் செய்தித்தாள்களின் விமர்சனம் இந்தியாவிற்கு ஏற்பட்ட பெரும் தலைகுனிவு.