வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் வந்த மின்னஞ்சல் செய்தியை கீற்றில் பிரசுரித்திருந்தோம். இந்தப் பெயரில் கூட்டத்தை நடத்துபவர்கள் யார் என்பது வெளியே தெரியாத நிலையில், அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்ட யாரோ ஒரு நலம் விரும்பி(!), கேரளாவில் சிபிஎம் கட்சியினரால் பால் சக்காரியா தாக்கப்பட்ட செய்தியையும் சேர்த்து ‘பால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம்’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தலைப்புக்குப் பொருத்தமான செய்தியாக இருந்ததால் நாங்களும் விசாரிக்காமல் பிரசுரித்துவிட்டோம்.
அது முற்றிலும் தவறான தகவல் என்பதையும், இந்தக் கூட்டத்திற்கும் பால் சக்காரியாவிற்கும் தொடர்பு இல்லை என்பதையும், இது லீனா மணிமேகலைக்காக அ.மார்க்ஸ் நடத்தும் கூட்டம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். தவறான செய்தியால் சங்கடத்திற்குள்ளான சிபிஎம் தோழர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்.  தகவலை சரிப்படுத்த உதவிய தோழர் கவின்மலர், சுகுணா திவாகருக்கு நன்றி.
- கீற்று நந்தன்
எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை
தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:
இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5
அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின் மலர், நிர்மலா கொற்றவை.
எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.
தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் வந்த மின்னஞ்சல் செய்தியை கீற்றில் பிரசுரித்திருந்தோம். இந்தப் பெயரில் கூட்டத்தை நடத்துபவர்கள் யார் என்பது வெளியே தெரியாத நிலையில், அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்ட யாரோ ஒரு நலம் விரும்பி(!), கேரளாவில் பால் சக்காரியா தாக்கப்பட்ட செய்தியையும் சேர்த்து ‘பால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம்’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தலைப்புக்குப் பொருத்தமான செய்தியாக இருந்ததால் நாங்களும் விசாரிக்காமல் பிரசுரித்துவிட்டோம்.
அது முற்றிலும் தவறான தகவல் என்பதையும், இந்தக் கூட்டத்திற்கும் பால் சக்காரியாவிற்கும் தொடர்பு இல்லை என்பதையும், இது லீனா மணிமேகலைக்காக அ.மார்க்ஸ் நடத்தும் கூட்டம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். தவறான செய்தியால் சங்கடத்திற்குள்ளான சிபிஎம் தோழர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்.  தவறை சரிப்படுத்த உதவிய தோழர் கவின்மலர், சுகுணா திவாகருக்கு நன்றி.
- கீற்று நந்தன்
எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை
 
தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:
இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி
 
பங்கேற்பாளர்கள் :
அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின் மலர், நிர்மலா கொற்றவை.
எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.
தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Comments

20 comments

20
அன்பன்
தன் கட்சிக்காரர்கள் நடத்திய காலாசாரத் தாக்குதலையே கண்டிக்க முன் வரும் தோழர்களை உண்மையிலேயே பாராட்டியாக வேண்டும். ஆனால் இதில் உறுத்துவது ஒன்றே ஒன்றுதான்.... நீண்ட நாட்களாக கட்சி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆதவனும் தமிழ் செல்வனும் கட்சியில் இருந்து விலகி.....மார்க்ஸ்சுடன் சேர்ந்து புதுக் கட்சி ஒன்றை துவங்கப் போகிறார்களோ என்னவோ? மகளிர் அணிப் பதவி லீனாவுக்குக் கிடைக்குமோ.... புரட்சிக் கவிதை எல்லாம் எழுதலாம் போங்க....... வாழ்த்துக்கள்......
கவின் மலர்
கூட்டம் குறித்த கீற்று வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. பால் சக்காரியா குறித்தும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படவில்லை.
“எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை” என்ற தலைப்பை “பால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம்” என்று மாற்றியது யார்?

கீற்று பதில் சொல்ல வேண்டும்...

கீழ்கண்ட பத்தி தான் ஒரிஜினல்

”தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்”

இதை...

”தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது நேரடித் தாக்குதல், போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வுகளாக கேரளாவில் - பாலியல் உரிமை தொடர்பாக கருத்து தெரிவித்த பால் சக்காரியாவின் மீது சிபிஎம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதும், லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததையும் பார்க்கலாம். கருத்து சுதந்திரம், பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்”

என்று மாற்றிய பேர்வழி யார்?

கீற்று பதில் சொல்லட்டும்..
kesavan
தவறு செய்தது தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி என்றாலும் அதை கண்டிக்க முன்வரும் தோழர்கள் தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். மற்ற கட்சியனரும் பின்பற்ற வேண்டிய செயல் இது.
மதி
பால் சக்காரியா மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது நடை பெறாத கண்டனக்கூட்டம் லீனா மணிமேகலை மீது யாரோ ஒருவர் போலிசில் புகார் கொடுத்திருக்கிறார் என்பதற்காக ஏன் நடக்கிறது? இத்தனைக்கும் அந்த புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் சக்காரியா பாதிக்கப்பட்டது உண்மை. கவின், உண்மையில் பதில் சொல்ல வேண்டியவர்கள் நீங்களும் கூட்டம் நடத்தும் தோழர்களும்தான். சொல்வீர்களா?
Keetru Ramesh
தோழர் கவின் மலருக்கு,

'கருத்து சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்' நடத்துவதாக கூட்ட நிகழ்வு குறித்த முதல் மின்னஞ்சல் தங்களிடமிருந்து கடந்த வியாழன் அன்று வந்தது. அடுத்த நாள் லீனாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இருந்தது. அதிலும் 'கருத்து சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்' என்றுதான் இருந்தது. சனிக்கிழமை இரவு மூன்றாவதாக ஒரு மின்னஞ்சல் தமிழ் காம்ரேட் என்பவரிடம் இருந்து வந்தது. அதிலும் 'கருத்து சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்' என்றுதான் இருந்தது. கூடுதலாக பால் சக்கரியா குறித்த செய்தியும் இருந்தது. (மூன்றாவதாக வந்த மின்னஞ்சலை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஃபார்வர்ட் செய்துள்ளேன்)

இந்த மூன்று மின்னஞ்சல்களும் கீற்றிற்கு மட்டுமல்ல பலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. கடைசியாக வந்த மின்னஞ்சலில் கூடுதல் தகவல் இருந்ததால், அதுதான் அப்டேட்டட் மெயில் என்று பிரசுரித்தோம். மேலும் அதில் பிழையான தகவல் ஏதும் இருந்ததாக எங்களுக்குப் படவில்லை. கட்சியின் மூத்த தலைவர் தவறு செய்தாலும் அதை கண்டித்து நடவடிக்கை எடுப்பவர்கள், பால் சக்காரியா மீதான தாக்குதலைக் கண்டிப்பதில் ஆச்சரியம் இல்லை என்று நினைத்து பிரசுரித்தோம்.

இப்போதுதான் தெரிகிறது, இது கருத்து சுதந்திரத்தில் அக்கறை‌ உள்ளவர்களுக்கான‌ கூட்டம் இல்லை, லீனா மணிமேகலைக்கான கூட்டம் என்று.

எங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 200 மின்னஞ்சல்களாவது வருகின்றன. ஒவ்வொன்றின் உண்மைத்தன்மை குறித்தும் ஆராய எங்களுக்கு நேரம் இல்லை என்பதே உண்மை. எங்க‌ளுக்கு ப‌டைப்புக‌ள் அனுப்புவ‌ர்க‌ளில் 75 ச‌த‌வீத‌த்தின‌ரை நாங்க‌ள் நேரில் பார்த்த‌தோ, தொலைபேசியில் உரையாடிய‌தோ இல்லை (முக‌ம் அறியாத‌ இந்த‌ 75 ச‌த‌வீத‌த்தில் மார்க்சிஸ்ட்க‌ளும் உண்டு, பெரியாரிஸ்ட்க‌ளும் உண்டு, ம‌.க‌.இ.க‌வின‌ரும் உண்டு). க‌ருத்தை ம‌ட்டும் பார்த்துவிட்டு பிர‌சுரிக்கிறோம். அப்ப‌டிப் பார்த்து பிர‌சுரித்ததுதான் இது.

இப்போது என‌க்கு சில‌ கேள்விக‌ள்:

1. இந்த‌க் கூட்ட‌த்தை ஏற்பாடு செய்ப‌வ‌ர்க‌ள் யார்?

2. த‌வறான‌ த‌க‌வ‌ல் கீற்றில் வெளிவ‌ந்த‌து என்று கைப்பேசியில் நீங்க‌ள் தெரிவித்த‌போது, கூட்ட‌த்தை ஏற்பாடு செய்த‌வ‌ர்க‌ளை ‍இது குறித்து ஒரு மின்ன‌ஞ்ச‌ல் அனுப்ப‌ச் சொன்னால் மாற்றி விடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் இதுவ‌ரை அந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் வ‌ர‌வில்லை. ஆனால் புதிதாக‌ லோக‌னாத‌ன் என்ப‌வ‌ரிட‌மிருந்து ஒரு மின்ன‌ஞ்ச‌ல் வ‌ந்திருக்கிறது. லோகனாதனின் முகவரி, தொலைபேசியும், பிரசுரத்தில் உள்ள முகவரி, தொலைபேசியும் வேறாக இருக்கின்றன. இப்படி யார் யாரோ மின்னஞ்சல்கள் அனுப்புவதை விட, நிகழ்ச்சி நடத்துபவர்களேயே இதுகுறித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பச் சொல்லுங்களேன்.

3.இதையெல்லாம் தொலைபேசியில் த‌ங்க‌ளிட‌ம் தெரிவித்தேன். அப்ப‌டியிருந்தும், 'என‌க்கு ஒரு உண்மை தெரிஞ்சாக‌ணும்' என்று நீங்க‌ள் பின்னூட்ட‌மிட்டுள்ளீர்க‌ள். எனக்கு அது தெரியவில்லை. எனக்கு வந்த மின்ன‌ஞ்ச‌ல் முக‌வரியை தங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். தயவு செய்து நீங்களே கண்டுபிடித்து தெரிந்து கொள்ளுங்கள். முடிந்தால் எனக்கும் தெரியப்படுத்துங்கள்.
anbu
பால் சக்காரியா மீதான தாக்குதல் மட்டுமல்ல, மக்கள் தொலைக்காட்சி மீதான மார்க்சிஸ்ட்களின் தாக்குதலும் கண்டிக்கத்தக்கதே. மாற்றுக் கருத்து உடையவர்களை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளாமல், வன்முறையால் எதிர்கொள்வது ஆபத்தான போக்கு. நிச்சயம் இது கண்டிக்கத்தக்க செயல். இந்தக் கூட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்
venkatkrishan
அப்போ கவின் மலர் தோழர் நீங்க பால்சக்காரியா எல்லாம் தாக்கப்பட்டால் கூட்டம் நடத்த மாட்டீங்க... லீனா தறுதலைக்க்விதை எழுதி அதை விமர்சனம் செய்தால்தான் கூட்டம் நடத்துவீர்கள். நானும் ஏதோ எம் தோழர்களை சூரப்புலிகள் என்று நினைத்து விட்டேன்.
sundar
இந்து மக்கள் கட்சியையும், சிபிஎம் கட்சியையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது சரியானதல்ல. அப்படிப்பட்ட கூட்டத்தில் தமுஎச தோழர்கள் கலந்து கொள்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நிச்சயம் தமிழ்செல்வனும், ஆதவனும் கட்சிக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
sankar
பால் சக்காரியாவிற்காக கூட்டம் என்றால் இது எப்போதோ நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது நடத்துகிறார்கள் என்றால் இதில் ஏதோ உள் அரசியல் இருக்கிறது. முதலில் வெறுமனே லீனாவுக்காக கூட்டம் என்றார்கள். லீனாவுக்காக மட்டும் என்றால் எல்லோருக்கும் சிரிப்புதான் வரும்; கூட்டம் வராது. அதனால்தான் சக்காரியாவையும் சேர்த்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. ஆமாம் லீனாவுக்காக இந்தக் கூட்டத்தை அ.மார்க்ஸ் நடத்த வேண்டிய அவசியம் என்ன?
rosa
நேற்று நடந்த கேணி இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியின் முடிவில் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த த•மு.எ.க•ச வின் பொதுசெயலரான ச•தமிழ்செல்வன் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக நடைபெறும் இக்சா மைய கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என தங்களது கட்சி முடிவுசெய்துள்ளதாக மேடையில் வைத்தே அறிவித்தார். கட்சியின் இந்த முடிவு கவின்மலருக்கு பொருந்தாதா..
மதி
கவின்மலர், இத்தனை கேள்விகள் கேட்டு தெளிவு பெற வேண்டும் என்று நீங்கள் நினைப்பது பாராட்டுக்குரியது. ஆனால் அவசர அவசரமாக பால் சக்காரியாவை உதறித்தள்ளியிருப்பது பற்றி ஒரு கேள்விக்கும் நீங்கள் விளக்கம் சொல்லவில்லை. கருத்து சுதந்திரம் என்பது லீனா மணிமேகலைக்கு மட்டும்தானா? இந்து மக்கள் கட்சி செய்தால் மட்டும்தான் அது அச்சுறுத்தலா? அசலான முற்போக்காளரான பால் சக்காரியாவிற்கு உங்கள் கருத்து சுதந்திர மதிப்பீடுகள் பொருந்தாதா? தெளிவுப்படுத்துங்கள் தோழர். காத்திருக்கிறோம்.
பார்வையாளன்
கீற்று ரமேஷின் பதில் மூலம் வேண்டுமென்றே தமிழ் காம்ரேட் என்பவரின் மெயிலை பதிவிட்டிருப்பதாக தெரிகிறது. நடந்த தவறுக்கு மன்னிப்புதான் கேட்கவேண்டும். எழவா விழுந்துவிட்டது வருத்தம் தெரிவிக்க?
கவின் மலர்
தோழர் கீற்று ரமேஷ்

தவறான பதிவை வெளியிட்டுவிட்டபின், அதை மாற்றவோ எடுக்கவோ சொல்லும்போது ஏற்பாட்டாளர்களை மின்னஞ்சல் அனுப்பச்சொல்லும் நீங்கள் இந்த வழிமுறையை இந்த அறிவிப்பை வெளியிடும் முன் யோசித்திருக்கலாமே! அனாமதேயமாக யார் என்றே தெரியாதவர்கள் அனுப்பும் மின்னஞ்சலை நம்பி வெளியிட்டதாக சொல்லும் நீங்கள் இதை மாற்றுவதற்கு மட்டும் ஏன் இத்தனை விதிமுறைகளை விதிக்கிறீர்கள்?

கைபேசியில் தெரிவித்தது எனக்கானது மட்டுமே. இதைப் பார்த்தவர்களுக்கு எப்படி தெரியும்? இப்படி ஒரு கேள்வி கேட்பதன் மூலம் மட்டுமே வாசகர்களுக்கு தெரியப்படுத்த முடியும்.

லோகநாதன் “புலம்” வெளியீட்டாளர். அவரிடம் ஒரிஜினல் நோட்டீஸ் இருந்தது. அதனை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

உங்கள் தளத்தில் வந்ததற்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்? நீங்களே சொல்கிறீர்களே! ஏற்கனவே இரண்டு முறை இது குறித்து மின்னஞ்சல் வந்ததாகச் சொல்கிறீர்கள். அப்போதெல்லாம் இதை வெளியிட வேண்டும் என்று தோன்றாத உங்களுக்கு ஒரு 'தமிழ் காம்ரேட்' என்ற மின்னஞசல் முகவரியிலிருந்து வந்ததை மட்டும் வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது? பிரித்தாளும் சூழ்ச்சியில் கீற்றின் பங்கு என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
திகம்பரன்
ரோசா வசந்தின் வலைப்பதிவிலிருந்து..

"தீவிர அறிவு விவாதம், மற்றும் களப்பணிகள் செய்து அயர்ந்துவிட்ட தமிழ் அறிஞர் கூட்டம், சற்றே இளைப்பாற சில வெட்டி வேலைகளில் ஜாலியாக ஈடுபடுவதாக தோன்றுகிறது. இந்து மக்கள் கட்சி லீலாமணிமேகலையின் கவிதை தொகுப்பையும், இணையதளத்தையும் தடை செய்ய கோரி போலிஸில் புகார் கொடுத்திருக்கிறதாம். இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்தது; சிலர் பத்திரிகைகளில், இணையத்தில் கருத்து சொன்னார்கள்; கண்டித்தார்கள்; எல்லாம் நல்ல விஷயம்தான். இப்போது அடுத்த கட்டமாக கண்டன ஒன்று கூடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். யாரை கண்டித்து கூட்டம்? இந்து மக்கள் கட்சியையா? அப்படி என்றால் ஒரே ஒரு கூட்டம், ஒரே ஒரு விஷயத்துக்கு எப்படி போதுமானதாகும்? தினமும் ஒரு விஷயத்துக்காக கூட்டம் நடத்துவதுதானே நியாயமாக இருக்கும். ஒருவேளை அடையாள வேலை நிறுத்தம் மாதிரி எல்லாவற்றிற்கும் அடையாளமாக ஒரு நாள் கண்டன ஒன்று கூடல் போலும்.

' பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. ' என்கிறார்கள். தமாசாக இருக்கிறது. இப்படியே ஒரே மாதிரி ஸ்டீரியோடைப் வாக்கியங்களை எவ்வளவு காலத்துக்கு இன்னமும் அமைத்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.

இந்து மக்கள் கட்சியின் புகாரை ஏற்று போலிஸோ, அரசாங்கமோ தடை செய்வதற்கு முன்நடவடிக்கையாக, முதன் முதல் படியாக, ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் மேலே சொன்ன அச்சுறுத்தல் என்பதற்கு பொருள் இருக்கிறது. இந்து மக்கள் கட்சி -மும்பையில் எண்ணிக்கையிலடங்கா வண்ணம் நடந்திருப்பதுபோல்- ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டிருந்தாலும் இந்த அச்சுறுத்தல் என்று சொல்வதற்கு முகாந்திரம் உண்டு. ஒருவேளை அப்படி எதாவது நடக்காதது இவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமாகவும் இருந்து, வேறு வழியில்லாமல் புகார் கொடுத்ததையே முகாந்திரம் கொண்டு கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களோ என்னவோ! இப்படி ஏதையாவது கண்டித்து கூட்டம் நடத்தாவிட்டால் ஆழ்மனதில் ஒரு கண்டன ஈகோ நிறைவு கொள்ளாமல் ஆவியாக அலையும் போல.

அல்லது ஆண்குறி, விந்து பீச்சியடித்தல் போன்றவற்றை கச்சாவாக பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளை இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்பு வேறு எப்படி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழகமாக இருக்கும் காரணத்தால் இந்து மக்கள் கட்சி, சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் எடுக்காமல், சட்டத்திற்கு உட்பட்டு ஒரு தடையை கோரும் ஜனநாயக தன்மையை காட்டியிருக்கிறார்கள். அப்படி இருப்பது பிரச்சனையோ என்னவோ, அவர்களையும் கூட்டம் கண்டனம் என்று மேற்படி செயலில் இறங்கத் தூண்டும் வகையில் ஒன்று கூடல் நடத்துகிறார்கள். இந்து மக்கள் கட்சியை விடுங்கள் கம்யூனிஸ்டுகளும், பாமகவும், திராவிட இயக்கங்களும் கட்சியின் அதிகாரபூர்வமாக என்ன நிலைபாடு கொண்டிருக்கிறது என்று கவிதைகளை படிக்க சொல்லிவிட்டு பின் கருத்து சொல்ல கேட்டு பார்க்கலாம்.

எனக்கு லீலாமணிமேகலையின் கவிதைகளில் பிரச்சனை எதுவும் இல்லை - அவைகளை கவிதை என்றவகையில் என்னால் எந்த விதத்திலும் ரசிக்க முடியவில்லை என்பதை தவிர. மிகவும் கச்சாவான மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த கவிதைகளில் கலகமோ, கவித்துவமோ வெளிபட்டதாக நான் தனிப்பட்டு கருதி அதற்கு வக்காலத்து என்னால் வாங்க முடியாது. ஆனால் அதை எழுதுவதற்கு அவருக்கு இருக்கும் உரிமைக்கு என் ஆதரவு குரலை வெளிப்படுத்த முடியும். அதில் எந்த தயக்கமும் இல்லை. அதே நேரம் அந்த கவிதைகளை விமர்சிக்கவும், எதிர்க்கவும், அந்த கவிதைகளில் மொழிரீதியான அத்து மீறல் நடந்துள்ளதாக கருத்து சொல்லவும் மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.( என் கருத்து அதுவல்ல.) இந்து மக்கள் கட்சி மேலே ஒரு படி போய் சட்டரீதியான தடையை கோரியிருக்கிறது. அதை சட்டரீதியாக எதிர்கொள்வதை தவிர பெரிதுபடுத்த இதில் எதுவும் இல்லை. பாய்ஸ் படத்தை தடை செய்ய பெண்கள் அமைப்புகள் கேட்டது போன்றதுதான் இது. தடைசெய்ய கேட்பது என்பதும் ஒருவித எதிர்ப்பை தெரிவிக்கும் வழிதான். அதற்கு அரசின் அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் (அல்லது சட்டவிரோதமாக நடவடிக்கைகள்/தாக்குதல்கள் நடந்தாலோ) அது கருத்து சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலாக முடியும்...."

"....இதைவிட இந்த பதிவை என்னை எழுத தூண்டிய ஒரே தீவிர விஷயம் தஸ்லிமா நஸ்ரின் மீதான தொடர்ந்த தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இவர்கள் என்னவகை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் என்கிற யதார்த்தம்தான். கண்டன கூட்டம் எல்லாம் வேண்டாம். எங்காவது ஒரு இடத்தில் தங்களின் தீவிர கண்டன குரலை இவர்கள் பதிவு செய்திருக்கிறார்களா? குறிப்பாக அ.மார்க்ஸ், பிறகு ஷோபாசக்தி, குறைந்த பட்சம் லீலா மணிமேகலையாவது. எல்லா பிரச்சனை குறித்தும் கருத்து சொல்ல இயன்றதில்லை என்றால், இப்போதாவது கருத்து சொல்லும் படி நேரடியாக அறைகூவுகிறேன். இதில் அ.மார்க்ஸ் தஸ்லீமா நஸ்ரின் மீதான தாக்குதலை நியாயப்படுத்துபவர்களுடன் இணைந்து செயல்படுபவர். தமிழ் நாட்டிற்கு வெளியில் நடந்ததை விடுவோம். ஷகீலா பர்தா போடுவதற்கு எதிராக ரத்தம் கொதிக்கும் அறிக்கைகளை விட்டவர்களை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்கள்? அ.மார்க்ஸின் இந்த நிலைபாடுகளை சரியானதாக நியாயப்படுத்திய ராஜன்குறை இந்த கூட்டத்தில் என்ன பேசுவார் என்று கேட்க ஆவலாக உள்ளது. (பார்க்க: சத்தியகடிதாசியில் ராஜன் குறையின் ஒரு காகமோனா பற்றிய கட்டுரையின் பின்னூட்டத்தில் அ.மார்க்ஸ் குறித்த ரவி ஶ்ரீனிவாசின் கேள்விக்கான ராஜனின் பதில்) என்னை பொறுத்தவரை தஸ்லிமா நஸ்ரினை வாழவிடாமல் இருக்கவிடாமல் இயங்கவிடாமல் இருக்கும் அடிப்படைவாதத்தை அனுமதிக்கும்/அங்கீகரிக்கும் அரசியல்களை விட, எந்த வித முக்கியத்துவம் இல்லாத இந்த விஷயத்திற்கு கூட்டம் நடத்துவது எல்லாம் நோய்கூறுகள் கொண்ட தமாசுகள் மட்டுமே.

தமிழ் சூழலில் அக்கறை கொண்டதாலும், இவர்கள் மீதும் இவர்களின் அரசியல் மீது நெடுங்காலமாக ஈடுபாடு கொண்டவன் என்ற வகையிலும் இந்த தமாசை பார்க்க போகலாமா வேண்டாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...."
ramani
கூட்டத்தில் 40 அறிவாளிகள் ஜனநாயகத்திற்கான உரிமைக்காக கூடுகிறார்களாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் 40 பேர் மாத்திரமே பேசுவார்களாம். மற்றபடி கருத்து மாறுபாடு உள்ளவர்கள் கேள்வி எழுப்பவோ அல்லது விமர்சனங்களை முன்வைக்கவோ நேரம் ஒதுக்க வாய்ப்பில்லையாம். என்ன செய்ய ... அறிவாளிகளால் மந்தைகளாக மதிக்கப்படும் பார்வையாளர்களுக்கான ஜனநாயக உரிமையை வழங்க முடியாதாம். இப்படிப்பட்ட ஜனநாயகவாதிகளால் நடத்தப்படும் கூட்டத்தில் போய் ஜனநாயகத்திற்காக வாதிடப் போகும் அறிவாளியகளின் அறிவு நாணயம் யாருக்குமே உறுத்தலாக இல்லை. அவர்களுக்கும் இல்லை என்பது வேறு விசயம்.
ramani
இணையத்தில் விமர்சித்து எழுதுபவர்களுக்கு எதிராகவும் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. இணையத்தில் எழுதுபவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான கலாச்சார போலிசு வேலைக்கு அரசுக்கு ஏற்கனவே உள்ள சிந்தனைக்கு ஆதரவாக இவர்கள் கூடுகிறார்கள். அதாவது ஜனநாயகத்தின் பெயரால் இன்னொரு ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு பெயர் அதாவது இணையத்தில் லீனாவை விமர்சித்து எழுதும் உரிமையை பறிப்பதற்காக அணிதிரண்டு உள்ளார்கள். இந்த முரண்பாடு இவர்களுக்கு உறுத்தலாக இல்லையா..
Tholan
அதெல்லாம் இருக்கட்டும்...

கருத்துச் சுதந்திரம் நமது உரிமை என்றாலும், பொது வெளியில் இயங்கக் கூடியவர்கள் அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தும் விதத்தில் ஒரு குறைந்தபட்ச தார்மீக பொறுப்புணர்வை பராமரிக்க வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன்.

ஒருவேளை, குறைந்தபட்ச தார்மீக பொறுப்புணர்வுக்கான அளவுகோல் என்னவென்று கேள்வி எழுப்புவோர் இருந்தால், அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களுக்கு இந்த கேள்வி அல்ல.

ஆம். கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதிலும் ஒரு குறைந்தபட்ச தார்மீக பொறுப்புணர்வு உண்டு என்று நம்புவோருக்கு மட்டுமே இந்த கேள்வி.

இந்த வரிகளை படியுங்கள். இதுதானா பொறுப்புணர்வு? இதுதான் கருத்து சுதந்திரமா?

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

-லீனா மணிமேகலை
நனவு
//கூட்டத்தில் 40 அறிவாளிகள் ஜனநாயகத்திற்கான உரிமைக்காக கூடுகிறார்களாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் 40 பேர் மாத்திரமே பேசுவார்களாம். மற்றபடி கருத்து மாறுபாடு உள்ளவர்கள் கேள்வி எழுப்பவோ அல்லது விமர்சனங்களை முன்வைக்கவோ நேரம் ஒதுக்க வாய்ப்பில்லையாம்.//

அப்படியா? யார் உங்களிடம் சொன்னார்கள்?
ramani
மேற்படி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செல்பேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்டதற்கு கிடைத்த பதில் அது.
வசீகரன்
இந்து மக்கள் கட்சியின் கம்ளெய்ன்ட் இருக்கட்டும்.
விந்து பீய்ச்சும் போது மார்க்ஸ் -யோனி மயிர் உபரிமதிப்பு- பிட்டங்கள் லெனினுக்கும் ஸ்டாலினுக்கும்- முலைகள் சேவுக்கும் பிடலுக்கும்- தொடையில புரட்சி - இடையில பொதுவுடமை- விடைப்புல சோவியத்தே ஒடையுது. என்ன கவிதையிது.பிட்டுபடததையும் புரட்சியையும் மசாலா மிக்ஸ் பன்னுனமாதிரி. இந்து மக்கள் கட்சிட்ட இருந்து லீனாவ காப்பாத்துறது சரிதான். லீனாட்ட இருந்து கவிதைய யாரு காப்பத்தறது. இந்த கட்டவிழ்ப்பு(!) கவிதை சம்மந்தமா சி.பி.எம் சி.பி.ஐ.என்ன கருத்து வச்சிருக்குனு அறிக்கை விடட்டும். இந்து மக்கள் கட்சியும் லீனாவும் கூட்டா சேர்ந்து நடத்தும் இந்த விளம்பர நாடகத்துக்கு அலிபாபாவும் 40 திருடர்களும்னு தலைப்பு வைச்சிருக்கலாம். இன்னொரு செய்தி லீனா இங்கிலுசுலதான் பொயட்ரி எழுதுவாகலாம். அத தமிழ்ல செல்மா பொளப்பாகலாம். டெல்லியில விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா போராட்டம். போர் முடிஞ்சதும் புலிகளுக்கு எதிரா படம்.( பிரான்ஸ்ல இருந்து வந்து வசனம் எழுதி (இலவசமா) உழைச்சுக்கொடுக்க ஸோபா சக்தி). புலிகள் செயிச்சிருந்தா “மாவீரன் பிரபாகரன்“ எடுத்து இருப்பார். பிரபாகரனுக்கு கொடுத்து வைக்கவில்லை. லீனா சந்தர்ப்பவாதி பிழைப்புவாதி. இப்போது இந்து மக்கள் கட்சியோடு அவர் நடத்தும் நாடகத்தில் கலந்துகொண்டு கருத்துரிமை காக்கப் பாடுபடப்போகிறவர்கள்தான் பாவம். அன்புக்கு நான் அடிமை என்று அ. மார்க்ஸ் பாடினால் எப்படி இருக்கும். icsa அரங்கில் 15 ல் நேரடிக்காடசியாக காணலாம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.