• முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்கி உள்ள விஜய்க்கு வேட்பு மனுவைக் கூட ஒழுங்காக பூர்த்தி செய்யத் தெரியவில்லை. பெரம்பூரில் அவர் காட்டிய சொத்து மதிப்பு அடுத்த இரண்டு நாளில் திருச்சியில் எகிறி உள்ளது.
  • இணை பொதுச்செயலாளராக உள்ள நிர்மல் குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே ஓய்வுபெற்ற உள்துறை செயலாளர் பெயருக்கு பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதுகிறார்.
  • தேர்தல் பரப்புரைச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தேவையில்லாமல் நடிகர் ரஜினியை சீண்டி விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்களை தூண்டி விட்டார்.
  • வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜூனா பரப்புரை கூட்டத்தில் குவாட்டர் பாட்டில் விழுந்தவுடன் உடனே தனது நுண்ணறிவை கொண்டு சிந்தித்து திமுக வீசியது தான் என்றார். வீசிய வரை மேடைக்கு கொண்டு வர வேண்டும் என்று சவால் விட்டார் ஆதவ் அர்ஜூனா. குவாட்டர் பாட்டில் வீசியவர்களை உடனே காவல்துறை பிடித்தது. ஆனால் அவர்கள் இரண்டு பேரும் விஜய் ரசிகர்கள் என்ற உண்மைதான் அம்பலமானது.
  • விஜய் பரப்பரை கூட்டத்தில் குலுங்கி குலுங்கி அழுகும் ஒரு பெண்ணின் படத்தை ஒளிபரப்பினார்கள். ஒரே பெண் இப்படி திட்டமிட்டு அழவைக்கப்படுகிறார் என்றும் அவர் துணை நடிகை என்பதும் அம்பலமானது.
  • வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக வேட்பாளர் அதிகாரியை சந்தித்தார். தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனு எங்கே? என்று கேட்டபோது தவெக வேட்பாளர் அச்சச்சோ.. வேட்பு மனுவை வீட்டிலேயே மறந்து விட்டேன் என்று வீட்டுக்கு ஓடினார்.
  • புதுச்சேரியில் விஜய்க்கு பாதுகாப்பாக வரும் பவுன்சர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர் அவரது தொண்டர்கள்.
  • புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பது பாஜக கூட்டணி என்றாலும் விஜய் அங்கேயும் போய் திமுக தீய சக்தி என்று முழங்கினார்.
  • இப்படி அறிவார்ந்த தலைவர்கள், தொண்டர்கள், பொறுப்பாளர்களோடு தமிழ்நாட்டில் சுத்த சுயம் பிரகாச நல்ல சக்தியாக உயர்ந்த சிந்தனையாளர்கள் படையுடன் விஜய் கட்சி களம் இறங்கியுள்ளது.
  • அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தவெக நல்ல பொழுதுபோக்கு கட்சியாகவும், மனம் திறந்து சிரிக்க வைக்கும் கட்சியாகவும் அரசியல் களத்தில் வருவதை மக்கள் மிகவும் ரசித்து வருகிறார்கள்.

- கோடங்குடி மாரிமுத்து

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.