kashmir_people_300அப்பாவிகளின் விரல்களையும்
ஆயுதங்களென அறிவிக்கின்றன
கற்பழிப்புக்கு பெயர் போன
காவல் நிலையங்கள்..!

சிறைச்சாலைகளுக்காக
குற்றவாளிகளைத் தயாரிக்கின்றன
தண்டனைக்குரிய நீதிமன்றங்கள்..!

தீவிரவாதி என்பது
செயல்களால்
தீர்மானிக்கப் படுவதில்லை..!
சாதியைப் போலவே பிறப்பால்..!

காஷ்மீரத்தின் கர்ப்பத்தில்
பிறந்தது போதும்..!
ஆதாரங்கள் கூட அவசியமில்லை..!

அப்சல் குரு..!

உன் குரல்வளை நெரித்த
குருதிக்கசிவில் இருந்து
தேசியக் கொடிக்கு வர்ணம் கூட்ட
காவிக்கூட்டங்கள் காத்திருக்கிறன..!

படுகொலையே செய்தாலும் பக்தர்கள்
பெரும்பான்மையினர்..!
குற்றம் நிரூபிக்காவிட்டாலும்
தேசவிரோதிகள்..
சிறுபான்மையினர்..!

இனிவரும் நாட்களில்
இப்படியும் அறிவிப்பார்கள்..!
“அடிபட்டவன் அலறுவதும்
மனித உரிமை மீறல்”

”சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டு
செத்துப்போனால்
அது சட்டத்தின் மனித நேயம்..!

"காந்தியடிகள் நேசித்த
கருணைக் கொலை..!”

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
Ravanan
afsal ippothu thiyagi aagiraar.....
மனித நேயன்
பேராசிரியர்.அ.மார்க்ஸ் எழுதிய..
காஷ்மீரில் என்ன நடக்கிறது?
”அப்சல் குரு தூக்கிலிடப் பட வேண்டியவரா?”
என்கிற மனித உரிமை சார்ந்த நூலைப் படியுங்கள்..!
உண்மையில் யார்? குற்றவாளி என புரியும்.
பொய் வழக்கு போடும் காவல் துறையை அறிந்த நாம்
”அரசு பயங்கரவாதம்” குறித்து அறிவதே இல்லை.
ஈழத்தில் நடப்பதைப் போன்றே..
காஷ்மீரில் சொந்த நாட்டின் மக்கள் மீதே
நம் இராணுவம் படுகொலைகளை செய்து வருவதைக் குறித்து நாமும் நம் ஊடகங்களும் மவுனம் சாதித்து வருகிறோம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.