பார்ப்பனர் என்றால் ஆய்வாளராம்; அந்தணர் என்றால் உயர்ந்தோராம்; பெரியார் தமிழனை அடிமையாக்கி இனப் பெருமையை சிதைத்தவராம்

நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு


‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது.

திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில், பெரியார் எதிர்ப்பை முன் வைத்து, பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடு, நாம் தமிழர் கட்சியும், தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அவைகளில் தமிழர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம் இருந்தது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. அந்த ஆவணத்தில் பெரியாருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள சில கருத்துகளை மட்டும் அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம்.

1938 ஆம் ஆண்டில் பார்ப்பன இராஜகோபாலாச்சாரி இந்தியைத் திணித்தபோது, அதை எதிர்த்துத் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டு, போராட்டத்துக்குத் தலைமை ஏற்றதே நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் மட்டும் தான் என்றும், அவர்களை ஆதரிப்பதுபோல் ஆதரித்து பெரியார் நாடகமாடி பிறகு தமிழர்களை அடிமைப்படுத்தத் தொடங்கி விட்டதாகவும் பெரியார் பெயர் குறிப்பிடாமல், அந்த ஆவணம் கூறுகிறது.

“தமிழ்நாட்டில் சாதிக் கொடுமைகளையும், சமற்கிருத மேலாளுமையையும் புகுத்தி, நிலை நிறுத்திய கிருட்டிண தேவராயர் காலத்திலிருந்தே, தமிழர் நிலங்களைப் பறித்துத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த திராவிடர்கள் மட்டும், இராசாசி இந்தியைத் திணித்தபோது, அதை எதிர்த்துத் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் ஆகியோர் தலைமையில் திரண்ட போது, அவர்களை ஆதரிக்கிறாற்போல ஆதரித்துப் பின், தங்களுடைய தமிழரைத் தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர். திராவிட நாட்டு முழக்கத்தை முன்னெடுத்தனர்.

தமிழர் அறிவையும் தன்மானத்தையும் மீட்டெடுப்பதாக முழங்கிக் கொண்டு, “தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலிலிருந்து தலை முழுகி விடுவதே அறிவுடைமை” என்று பகுத்தறிவுப் பரப்புரையும் தன்மானப் பரப்புரையும் செய்தனர். தமிழை வாழ்வியலில் இருந்துத் தவிர்க்கச் சொல்லிவிட்டு, தமிழ் வழிப்பட்ட தமிழ்த் தேசிய முழக்கமான “தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற செயல் திட்டமற்ற வெற்று முழக்கத்தை அடையாளமாக முன் வைத்துக் கொண்டே, “அறிவியல் மொழியான ஆங்கிலமே, தமிழர்க்கு மதிப்புமிக்க நல்வாழ்வு தரும்” என்று பேரளவில் பரப்பினர். தமிழர்களை ஆங்கில மோக வலைக்குள் வீழ்த்தினர். மேலும், மூடநம்பிக்கை ஒழிப்பின் பெயரால், சில வரலாற்றுச் சான்றுகளையும், பல வாழ்வியல் விழுமியங்களையும் தாங்கி நிற்கிற தமிழ் இலக்கியங்களிலிருந்து, தமிழர்களை அயன்மைப்படுத்தினர். தமிழர் என்ற அடையாளம் இழிவுபடுத்தப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டது.”


- என்கிறது ஆவணம்.

• ஈழத் தந்தை செல்வா, தந்தை பெரியாரிடம் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டபோது, “நாங்களே அடிமையாக இருக்கிறோம்; இன் னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?” என்று கூறியதை சிங்களத்திடம் பணிந்து போகுமாறு பெரியார் அறிவுரை கூறியதாக இந்த ஆவணம் கூறுகிறது. சிங்களமே, திராவிடம் தான் என்றுகூறும் இந்த “ஆராய்ச்சி” ஆவணம், அதனால் சிங்களர்களிடம் தமிழர் களை அடிமைப்படுத்தவே பெரியார் கருதியதாகவும் பதிவு செய்துள்ளது.

ஆவணத்திலிருந்து:

“ஈழத்தைச் சேர்ந்த திராவிடமாம் சிங்களம், தமிழர் மீது அரச பயங்கரவாதத்தை ஏவி, அழித்து வந்தது. அதை எதிர்த்துப் போராடிய தந்தை செல்வாவிற்குத் திராவிடம், சிங்களத்திடம் பணிந்து போகுமாறு அறிவுரை கூறியது. தமிழ்நாட்டிற்குள், “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தான் முழங்குவதாக உரிமை கொண்டாடிய திராவிடம், “நானே அடிமை; இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி?” என்று வினவி, கைவிரித்தது.

•                 தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் கல்வி, வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீட்டினால் தங்கள் ஆதிக்கம் பறிப் போய்விட்டதே என்று குமுறிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்க, ‘நாம் தமிழர்’ கட்சி முன் வந்திருக்கிறது.  சாதிவாரி இட ஒதுக்கீட்டினால் தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடு முற்றி வருகிறதாம்.

ஆவணத்திலிருந்து:

“பற்றாக்குறைகளுக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முழுமையற்றதும், பொருளற்றதும், மாநில உரிமையையும், மகளிர் உரிமையையும் பற்றிக் கவலைப்படாததும் ஆன சாதிவாரி ஒதுக்கீட்டினால், தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடுகள் முற்றி வருகின்றன.”

•                 பார்ப்பனர் என்ற சொல்லைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ள இந்த ஆவணம், ‘மனுவியல்’ என்ற சொல்லை அதற்கு மாற்றாகப் பயன்படுத்துகிறது. இறுதிப் பகுதியில் ‘கலைச் சொல் விளக்கம்’ தரப்பட்டுள்ளது. அதில் தரப்பட்டுள்ள விளக்கங்கள்:

“அந்தணன் - ஈவு இரக்கங் கொண்ட அறநெறியாளன்

பார்ப்பான் - ஆய்வாளன், இளைஞன்

ஆரியன் - சீரியன், உயர்ந்தவன், சீரிய தவசமான கேழ்வரகு. (தர்மபுரி, சேலம் மாவட்ட வழக்கு)

பிராமணன் - பேரமணன்”

திராவிடம் பல காலக்கட்டங்களில் தமிழிலிருந்து பிரிந்து சென்று, மனுவியம் சார்ந்துப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்து போன கோட்பாடு.

- மேற்குறிப்பிட்ட உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களே பார்ப்பனர்கள் என்பதே நாம் தமிழர் கட்சியின் பார்வை என்று ஆவணம் தெளிவுபடுத்தியுள்ளது.

மனு நெறியார் என்பதற்கு -

“ஒரு குலத்துக்கு ஒரு ஞாயம் என்று சட்டம் எழுதிய மனு என்பானின் பின்பற்றாளர்கள்” - என்று இந்த ஆவணம் விளக்கம் தருகிறது.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவைதான் - மனு பிறப்பின் அடிப்படையில் பிரித்த ‘குலங்கள்’ என்று எந்த ஒரு இடத்திலும் இந்த ஆவணம் குறிப்பிடவில்லை.

•                 தமிழர் அரசியல் விடுதலையை வென்று எடுக்காமல், பெரியார் முன்னிறுத்திய பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, பெண்ணுரிமை எல்லாம் தமிழர்களை இரண்டக நிலைக்குத் தள்ளிய சீர்திருத்தமே என்று கூறுகிறது இந்த ஆவணம்.

ஆவணத்திலிருந்து:

“2000 ஆண்டுகளுக்கு மேலாக, வள்ளுவர் தொடங்கி வள்ளலார் ஊடாக மனுவிய எதிர்ப்பு மரபினைப் போற்றி வந்த அறிவு நெறிப் பொதுமைத் தமிழர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தமிழர்க்குத் தலைமையாய் உட்கார்ந்துகொண்டே திராவிடத்தின் குமுகாயத் தளம், மனு நெறியர் ஆளுமை எதிர்ப்பு, மனுவிய மடமை எதிர்ப்பு, சாதிய இடஒதுக்கீடு, சமனியம், பெண்ணுரிமை ஆகிய தளங்களில் எண்ணற்ற தமிழர் ஒற்றுமையுடன் பாடாற்றித் தமிழர்க்கு அறிவும் மானமும் ஊட்டி, அரசியல் விடுதலையும், பொருளியல் விடுதலையும் வாங்கித்  தருவதாய் ஓங்கி உரைத்தது.

திராவிடத்தின் அரசியல் தளமும், தமிழர்க்கு அரசியல், பொருளியல் சார்ந்த முழு உரிமையைப் பெற்றுத்தந்துத் தமிழுக்கும் தமிழர்க்கும் பொற்கால நல்வாழ்வு படைப்பதாகச் சொல்லி தலைமுறை கோடிகண்ட தலைமொழியாம் தமிழின் புகழ் பாடி, தமிழர்க்குத் தமிழின்ப உணர்வு ஊட்டியது. நூற்றாண்டுப் பெருமை கொண்டாடும் திராவிடத்தின் இரு தளங்களும் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வினைத் தீர்மானிக்கும் மேற்கட்டுமானக் கூறுகளோடு தங்கள் சீர்த்த பணிகளை நிறுத்திக் கொண்டு, அடிக்கட்டுமானக் கூறுகளான தமிழர் அரசியல் விடுதலை, பொருளியல் விடுதலை என்பவற்றில் உளதுபோலக் காட்டி, இலதாக நாட்டும் இரண்டக நிலை கொண்டனர்.”

- என்கிறது இந்த ஆவணம்.

(குறிப்பு: இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மேற்கட்டுமானம், அடிக்கட்டுமானம் என்ற சொற்றொடர்கள் மார்க்சியம் தொடர்பானவை; இதற்கான கலைச்சொல் விளக்கம், என்ன காரணத்தினாலே தரப்படவில்லை.)

•                 பெரியார், திராவிடம் பேசிய தமிழன் அரசியல் விடுதலையை வென்றெடுக்காமல், ‘இரண்டகம்’ செய்து விட்டார் என்பதால், அந்த புரட்சியை வென்றெடுக்க, படை திரட்டிக் கிளம்பியிருக்கும், நாம் தமிழர் கட்சி, தமது அமைப்பில் சேருவோர் “புரட்சிகர” உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

அந்த உறுதிமொழிப் பிரகடனம் இது தான்:

“நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகிய கொள்கைகளின்பால் உண்மையான நம்பிக்கைக் கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி, வலிமைப்படுத்தக் கட்சி உறுதி அளிக்கிறது.”

•                 திராவிடம் இழைத்த துரோகங்களை நேர் செய்யக் கிளம்பியிருக்கும் நாம் தமிழர் கட்சி, இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற மேற்கண்ட ‘மாபெரும் அறைகூவலை’ விடுத்திருப்பதோடு அதன் பொதுக் கூட்ட மேடைகளில் பெரியார் படத்துக்கும் தடை விதித்துவிட்டது.

“கட்சி நிகழ்ச்சிகளுக்கு உரிய பதாகைகளில் நம் வாழ்வியல் வழிகாட்டி திருவள்ளுவர், நம் உரிமை மீட்சியியல் வழிகாட்டி தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் (பெரும்பாகரன்) ஆகிய இருவரின் உருவங்கள் தவிர வேறெந்த உருவமும் பயன்படுத்தக் கூடாது.” - என்றது அந்த ஆவணம்.

Comments

29 comments

29
velayutham
அண்ணன் சீமானின் கொள்கை சாசனத்தை விமர்சிக்கும் அளவுக்கு தமிழகத்தில் அறிவுடையோர் இருக்கிறார்களா? அப்படி யாரும் இல்லை என்ற தைரியத்தில்தானே அண்ணன் கட்சியே ஆரம்பித்தார்! அண்ணன் ஒருவர் தமிழ்நாட்டின் விடிவுக்காக சதா சர்வகாலமும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மற்றவர்களும் யோசித்தால் அது அண்ணனை சிறுமைப்படுத்துவது ஆகாதா? அண்ணன் சொல்படி கேட்டால் போதாதா? தயவு செய்து எல்லோரும் அண்ணன் பின்னாடி வாருங்கள்! அண்ணன் காரில் இருந்து இறங்குபோது, இருபக்கமும் கைகோர்த்து நில்லுங்கள்.. மற்றவர்களை தள்ளு தள்ளு என்று விரட்டுங்கள்.. நிச்சயம் தமிழ்நாடு சுபிட்சமாகும்போது, உங்களுக்கு அண்ணன் இயக்கிய படத்தின் குறுந்தகடு இலவசமாக வழங்கப்படும். அண்ணன் முதல்வர் ஆவதுதான் தமிழ்நாடு சுபிட்சமாக ஒரே வழி என்பது தங்களுக்குத் தெரியும்தானே!
arunanp
பெரியாரை தவிர்ப்பதால் ஒரு நன்மையும் இல்லை.
திமுக, அதிமுகவை விழ்த்த வேற வழியெ தெரியவில்லையா. என் அதிருப்தி கருணாதி, ஜெயா மீது தான், திராவீடம் மீது இல்லலை.
periyarthalam
நாம் தமிழர் கட்சியின் Ayyanathan Kasi Devar கருத்துக்கள் மற்றும் பலரது கருத்துக்களை இங்கே காணலாம்...

http://www.periyarthalam.com/2012/05/30/naamtamilar-party-india-national/
qwerty
Even if these quotes are taken out of context, clearly the 'Naam Tamilar' rhetoric belies the idiocy of the people who are drafting these documents. Naam Tamilar party needs a serious overhaul and needs guidance from experienced scholars and politicians not internet kathukutties.
valartamizh
தமிழகத்திலிருந்து எப்போதாவது யாரவது சில தமிழ் பிள்ளைகள் திராவிட மாயையை அகற்றத் துணிந்து குரல் கொடுத்தால், உடனே இது போல விமர்சனம் என்கிற பெயரில் பெரியாரை துணைக்கழைத்து தப்பித்துக் கொள்வது "மனவாள்" குணம்..... இப்போதும் அதைத்தான் செய்கிறார் அண்ணன் விடுதலை ராஜேந்திரன்...... தமிழ் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்.... இது அண்ணன் விடுதலை ராஜேந்திரன் அவர்களின் திராவிட ஆதரவுக் குரல் அல்ல,,,, தமிழர் உண்மைகளை உணர்ந்துவிடக் கூடாது என்கிற வடுகரின் தவிப்பு..... சீமானின் பக்கம் உண்மை உள்ளது..... அவர்களின் கொள்கை ஆவணத்தில் சில குறைகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். அதற்காக அவர்களை துரோகிகள் போல் காட்டுவது அப்பட்டமான வடுகர் சதியே அன்றி வேறில்லை!
பாண்டி
சீமான் என்ன கத்தினாலும், விடுதலை ராசேந்திரன் என்ன குதி குதித்தாலும் - எல்லாம் லெட்டர் பேட் அமைப்புகளே. எந்த ஆணியையும் பிடுங்க முடியாது. அதுகளுக்குள்ளே வெட்டு குத்தா? கொடுமை (ராம)சாமி.
nallan
உறுதிமொழிப் பிரகடனத்தில் நாட்டின் ஒருமைப்பாட்டை காப்போம்னு சொல்லி இருக்கோம் ஆனா அது இந்தியானு எப்படி முடிவு பன்னீங்க ஐயா?? அண்ணன் சீமான் வழி நிற்போம்..
ஒரு சந்தேகம் இந்த கொள்கை அறிவிப்பை தோழர்.குணா எழுதி இருப்பாரோ???
Periyasamy
திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்பது தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகம் (மராட்டிய மாநிலத்தையும் சிலர் சேர்த்துக்கொள்வார்கள்) ஆகிய பகுதிகளை ஒட்டுமொத்தமாக குறிக்கும் சொல். திராவிடர் என்பவர்கள் இந்த நிலப்பரப்பில் வாழும் பார்ப்பனர் அல்லாத மக்கள் என்று சொல்லப்படுகிறது. மேற்கண்ட கூற்று உண்மையெனில், திராவிட அல்லது திராவிடர் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அமைப்பின் உண்மையான இலக்கணம் என்னவாக இருக்க வேண்டும்?. தமிழகம் மட்டுமல்லாது மேற்கண்ட மற்ற மாநிலங்களிலும் அரசியலில் ஈடுபட வேண்டும். தேர்தலில் போட்டியிட்டு தொகுதிகளை வெல்ல வேண்டும். முடிந்தால் மாநில ஆட்சியையும் பிடிக்க வேண்டும். இது தான் இலக்கணம். ஆனால் உண்மையில் நடப்பதென்ன? இந்த திராவிட கட்சிகளுக்கு தமிழ்நாடு தவிர்த்த மற்ற தென்னிந்திய மாநிலங்களில் செல்வாக்கு என்று பார்த்தால் ஒரு புண்ணாக்கும் கிடையாது. தமிழகத்தின் எல்லையை தாண்டினால் இந்த கட்சிகளின் தலைவர்களுக்கு நாய்க்கு இருக்கும் மரியாதை கூட இல்லை. கர்நாடகத்தில் கன்னடர்களும் ஆந்திரத்தில் தெலுங்கர்களும் தங்களை திராவிடர்களாக கருதுவதில்லை. கேரளத்தில் போய் திராவிடம் பேசினால் அடிக்க வந்து விடுவார்கள். மொழி வழி மாநிலங்கள் அமைவதற்கு முன்பே மேற்கண்ட மக்களிடம் மொழி சார்ந்த இன உணர்வே இருந்தது. இப்போதும் அப்படியே. பின் எதற்காக தமிழகத்தில் மட்டும் திராவிட மாய்மாலம்?. இங்கே தான் விஷயம் இருக்கிறது. இந்த திராவிட கட்சிகளை வழிநடத்துபவர்களும் இவற்றின் அரசியலால் பலனடைபவர்களும் பெரும்பாலும் தமிழகத்தில் வாழும் ஆந்திர, கர்நாடக மற்றும் கேரள பின்னணி கொண்டவர்களே.
கடந்த ஐம்பது ஆண்டு கால திராவிட இயக்க அரசியலால் தமிழர்கள் பலனடைந்தார்கள். இன்றைக்கு தமிழர்கள் உச்சத்தில் இருக்கிறார்கள் (உபயம்: திரு கருணாநிதி) என்பதெல்லாம் வெறும் திசைதிருப்பலே ஆகும். உண்மை இதற்கு நேரெதிரானது. மிகவும் கசப்பானது. அப்படியே தமிழ் பேசும் மக்களுக்கு இந்த திராவிட இயக்கத்தினால் ஏதாவது நன்மை விளைந்திருந்தாலும் கேரளா போன்ற மாநிலங்களை வழி நடத்திய இயக்கங்களோடு ஒப்பீடு செய்யும் போது இந்த நன்மை ஒன்றுமேயில்லை என்று தான் அனைவரும் முடிவுக்கு வருவர். ஆனால் தீமை என்று வரும் போது இந்த திராவிட இயக்கம் என்று சொல்லப்படுவது அளப்பரிய தீமைகளை தமிழர்களுக்கு செய்திருக்கிறது. செய்கிறது. இன்னும் செய்யும்.
ஆறுமுகம்
தமிழ் பேசுவோரை தமிழர் என்று சொல்லக் கூடாதென்றால் யாரை தமிழர் என்று சொல்வது. ஈழத்தில் தமிழன் என்பதற்க்காகத்தானே கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். தமிழன் தமிழ் என்று சொல்லி ஓட்டு வாங்கி அதை பார்பன காங்கிரஸ்கார்களுடன் கூட்டு சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை பேவதை விட சீமான் சொல்வது சரி‌ யென்றே உள்ளது. காரணம் கட்டுரையில் எந்த இடத்திலும் எதிர்க்கும் வரிகளுக்கு மறுப்பு இல்லை.
R Nagaraj
//காரில் இருந்து இறங்குபோது, இருபக்கமும் கைகோர்த்து நில்லுங்கள்.. மற்றவர்களை தள்ளு தள்ளு என்று விரட்டுங்கள்..//
இப்போ மட்டும் என்னவாம்.. திராவிடம் பேசுபவரின் கார் கதவைத்தான் தமிழர்கள் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. ஓகோ அது பரவாயில்லை போலும்.. அது திராவிடக் கார் ஆயிற்றே
seyed muhammed
பாவம்!விடுதலை இராசேந்திரன் பெரியார் திராவிட கழக தோழர்கள்.......தங்களின் எதிரி யார்?நன்பன் யார்?தோழன் யார்?என்பதை அறிந்து கொள்ளாமல் அடுக்கு மொழியில் பேச ஆசை ப்பட்டோரை எல்லாம் மேடை ஏற்றியது முழங்க செய்து கை தட்டியதின் விளை பயன் தான் சீமான்!இது சீமானோடு நின்று விடும் என எண்ணாதீர்!ஏற்கனவே பழ.நெடுமாறன் பழ.கருப்பையா தமிழருவி மணியன் வைகோ என பார்ப்பன தயாரிப்புகளின் கூட்டம் நிரம்பி வழிந்தாலும் பெரியாரின் "தொண்டர்கள்"ஏமாறுகிறார்கள் ஏமாறுகிறார்கள் ஏமாந்து கொண்டேயிருக்கிறார்கள்.
தமிழினம் என கூறும் சீமான் இனி வெளியிடயிருக்கும் அடுத்தடுத்த ஆவணங்களில் புதுபுது விளக்கங்களை "தமிழின"த்திற்கு வழங்கலாம்.பார்ப்பனர்கள் தமிழனத்தின் மூத்த குடியாய் அறிக்கை வெளியிடலாம் அதியமோ ஆச்சரியமோ ஒன்றுமில்லை!எல்லாம் சீமானின் பெட்டியை நிரப்பும் சில்லரையை பொறுத்த விஷயம்.அதை பற்றி எனக்கு கவலையில்லை.எனது கவலை எல்லாம் அய்யா பெரியாரின் தொண்டர்கள் இலகுவாக ஏமாறுகிறார்களே என்பது தான்.
ஏகாந்தன்
பெரியசாமியின் கருத்துதான் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களின் கருத்து.பெரியார் தமிழர்களுக்கும்,தமிழுக்கும் மிகப்பெரிய துரோகம் இழைத்தவர் என்பதில் எள்முனை அளவுகூட தமிழர்களுக்கு சந்தேகம் இல்லை.500ஆண்டுகளுக்கு முன் படையெடுத்து வந்து குடியேறிய வடுகத்தெலுங்கர்களையோ அல்லது கன்னடர்களையோ பார்த்து நீங்கள் உங்கள் தாய்மொழிசனியன்களை(தெலுங்கு,கன்னடம்)விட்டுவிட்டு ஆங்கிலமொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றுசொல்லத்துணியாத பெரியார் ,தமிழர்களை பார்த்து உங்கள் தாய்மொழி தமிழை விட்டொழியுங்கள் என்று சொன்னது அயோக்கியத்தனமா அல்லது வடுகவந்தேரி ஆதிக்கவெறியா?இதனை எல்லாம் உணர்ந்ததால் தான் தமிழர்கள் தமிழால் ஒன்றுபட அணிதிரள ஆரம்பிதுவிட்டனர்.இதுதான் திராவிடர்களின்வயிற்றி ல் புளியை கரைக்காஅரம்பித்துவிட்டது.
parthipan
திராவிடம் ஒரு காலும் ஆரியத்தை வெல்லமுடியாது.
ஆரியம் மாயை அல்ல அது உள்ளது.அதுவே மனு என்றும்,
இந்தியா என்றும் உறுதியாக உள்ளது.

ஆனால் திராவிடம் என்பது என்ன?
அது ஒரு கருத்தியல்! பெரியார் அதை மொழிந்து தானே
அதை கருவியாக பயன்படுத்தி இம் மண்ணில் சிருபான்மையரை உள்ளடக்கிய ஓர் அமைப்பை உருவாக்கி
தான் இருக்கும் வரை உருதியாக அந்த எல்லோர் விடுதலைக்கும் வழிகாட்டினார்.

அனால் அவர் இருக்கும் காலத்தலேயே அதை பறிகொடுத்தும்
விபத்தாக அதுவே பார்பனியத்தின் அரனாக மாறும் காட்சியையும் கண்டே இரந்தும்விட்டார்.
அதன் சீரிய சாட்ச்சியே அ.தி.மு.க, தி.மு.க. இதை விடவும்
வேறு சாட்சி வேண்டாம்.

அ.தி.மு.க, தி.மு.க இரண்டும் தமிழ் இணத்திர்க்கு பேர் அழிவு செய்த இந்தியத்தின் கூட்டாளிக்ள். திராவிடத்தை உயர்த்தும் பெரிய சத்திகள். உண்மையில், வேறுவத்தில்
இவர்களின் எதிர் வடிவமாக ( நன்மையின் வடிவமாக)
மட்டுமே தி.கா, பெ.தி.கா. ம.தி.மு.க போன்ற கட்ஷிகள்
சமூகதில் பிரதிபலித்து மறைமுகமாக அ.தி.மு.க, தி.மு.க
போன்ற பெரிய சத்திகலுக்கு வலு சேர்த்து தமிழுக்கு எதிர் நிலையில் உள்ள் சமசுகிரததின் வெளிவடிவமான இந்திய கட்டமைப்புக்கு உதவுகின்ரது என்பது உன்மை.

சீமான் கொள்கை விளக்க புத்தகம் தான் போட்டார்! அதில் உள்ள குறைகளை விமர்சிக்களாம்! தவறில்லை!
திராவிடத்தின் பேரால் நடக்கும் தமிழ் நிலம் சார்ந்த மக்கள் சார்ந்த சுரண்டல்களையும் சமனிளை சார்ந்து இயன்கும் தலமாக இருந்து ஒரு போதும் இந்த திராவிட இயக்கஙகள்
இருந்ததில்ளை. இருக்கவும் முடியாது.

சிருபான்மை பார்பான் எல்லோரையும் அடக்கி ஆள்வது மட்றும் குற்றம். அதையே திராவிடம் என்ற பேரால் தமிழ்னாட்ல சேய்தா நியாயம்? அதை சுட்டி காட்னா
தெரியாத போல வேற பேச ஆரம்பிகின்றது?

முதலில் திராவிடம் என்ற பெயரை மாற்றுங'கள்.
உடனே இட ஒதுக்கீடு அது இதுனு டபாய்காதீர்கள்.
qwerty
'Naam Tamilar' & Seeman are setting themselves up for miserable failure by creating bogeymen out of Tamil-speaking Telugus & Kannadigas. Paarpaniyam must be happily clapping its hands as this demagogy of Seeman & Co will hopefully distract Tamils from the real enemies. If Seeman & Co. really think that by sucking up to parppaniyam and using anti-Telugus-Kannadigas rhetoric, they can achieve Tamil-mobilization &nationhood, it shows how immature they are. You want to alienate 15-20 % of the Tamil population for no ostensible reason but for imagined short term political gain. It is simply idiotic to say the least.

Anyways, can anyone kindly elaborate on specifics of how Telugus & Kannadigas prevented us the 'pure-blooded Tamils' from getting enlightened? Surely, these people are as poor and ignorant as Tamils: Both MK and JJ are as Tamil as one can get and in fact, only because of M Ramachandra Menon's support for Eelam that Tamil nationalism got a second lease of life. I, as a Tamil, am very grateful to EVR for his contributions. The charge that he promoted Dravidianism at the expense of Tamil nationlism is simply ridiculous. It again shows the superficiality in understanding the Dravidian movement. Dravidian movement is/was simply a Tamil national movement and suggestions it is something else is support by the facts. What is dravidian mayai? whom did it exactly affect and how? For example, did EVR ask Tamils to compromise their interests to Mallu/Telugu/Kannadas for Dravidian solidarity and importantly Tamils followed EVR on such requests? Did the other dravidas in TN cheated Tamils for their own benefit or their 'homelands'? What on earth are you guys complaining about, I truely can not understand?
Additionally, If you think DMK & ADMK came to power based on dravidian (Tamil national) ideology only, think again. The village in which I grew up, people knew only MGR and MK not dravidians/aryans/paarpans/India/Tamil Nadu/anti-Hindi etc..,

This level of dishonesty in the political discourse of 'Naam Tamilar' movement is definitely worrying even if it is only tactical purposes. The gloassary just fits into this complete disregard for any honesty and even insults the intelligence of the readers.

Who are these suppresed 'Tamils' anyways?: Vellalas claim that they migrated to TN with Sanskritic Agathiyar from Gujarat. Vanniyars mostly likely came along with Pallavas, Yadavas are a pan-Indian tribe and the coastal Nadars and fisherman folks and dalits are likely to be aborigines who have been absorbed by the proto-dravidian Neolithic pastoral-agriculturalists.

It is sad that 'Naam Tamilar' instead being inclusive and uniting Tamils is becoming a force that is exclusive and ends up dividing Tamils.
manithan
today those who r speaking as tamilan or dravidan / both are useless ........nobody work for real freedom and upliftment for man and mankind.....even today people are dying due to proverty.none of policticians will care about people.....
பெரியார்குயில்
சீமானின் சமகால அரசியல் போக்கு எதை நோக்கிச்செல்கிறது என்பதில் பல கருத்துகள் இருந்து வருகிறது. ஏனெனில் அவர் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு பெரியாரின் கொள்கை பேசி, தனது இணையம் முதல் அனைத்திலும் பெரியாரின் பொன்மொழியை பரப்பி வருகிறவர். அவரிடம் அருகில் இருந்து பலவிடயங்களை பார்த்த அனுபவத்தில் சொல்கிறோம் ஒரு விடயத்தை ஆழ்ந்து கவனித்து, நீண்ட விவாதத்திற்குள் அலசி ஆராய்ந்து பேசுவர் அல்ல. (எடுத்துக்காட்டு-அவருடைய மேடைப்பேச்சுகள் பல உள் முரண்பாடுகளுடன் இருக்கும்) எதார்த்த பேச்சும், எதிரியை வேருடன் பிடிங்கி எறியும் ஆற்றலும் கொண்ட பேச்சு அவருடையது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தத்துவச்சறுக்கல் என்றுமே அவருக்கே உரித்தானது. பாவாணர் அவர்களின் தொண்டர்கள் இன்று சீமானை சுற்றியிருக்கிறார்கள். அவ்வளவே! இதில் பார்ப்பன கூட்டமும் உண்டு. இவர்கள் சொல்வது போல் சீமான் இல்லை என்பதே நிஜம். எப்படியாவது பாவாணரின் தத்துவத்தை அரசியல்படுத்தி பெரியார் தத்துவத்தை தற்காலிகமாவது அப்புறப்படுத்தி, பெரியாரின் மனித விடுதலைக்கும், தமிழ்தேசிய விடுதலைக்கும் உள்ள முரண்களை கூர்மைப்படுத்தி குளிர்காய பாவம் யார்யாரோ ஆசைப்படுகிறார்கள். சீமான் விழிக்காவிட்டால், விரைவில் நாம் தமிழர் கட்சியில் பேரா.தீரன் இடத்தை துக்ளக்.சோ பிடிக்கலாம். திற விழி! திருப்பு முகம்!!
chandran
*** *** *** *****

தமிழன்னு சொன்ன உடம்புல பச்ச மிள்காய் அரைச்சு பூசுனது மாதிரி இருக்கு உங்களுக்கு....

எனது தாய் மொழி தமிழ் -- திரவிடம் அல்ல...
எனது தந்தை மொழி தமிழ் -- திரவிடம் அல்ல...
எனது அன்னன் (பிரபக்ரன்)மொழி தமிழ்-- திரவிடம் அல்ல...
என்னை திரவிடனாக இருக்க சொல்ல நீங்கள் யார்?

சீமான் கெட்டவராகவே இருந்தாலும் அவரோடு சேர்ந்தே பயனிப்பொம்.. அவர் தமிழர்..

ஆடு ந்னையுதேனு ஓனாய் அழுத கதயாக இந்த திராவிடர்களூக்கு ஏன் இவ்வள்வு அக்கரை...
இனி திராவிடதை வித்தை காட்டி ஒரு பயலும் பிழைக்க முடியது.... போதும் உங்கள் திராவிட விளையாட்டு.. உஙகள் முக திரை ஏற்கன்வெ கிழிந்துவிட்டது..
Periyasamy
பார்ப்பனர்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் செய்த தீமைகளை விட அதிக தீமைகளை இந்த திராவிடம் அறுபது ஆண்டுகளில் தமிழ் பேசும் மக்களுக்கு செய்தது. இன்னும் செய்யும். உச்சகட்டமாக ஈழத்தமிழர் எதிர்கொண்ட பேரழிவை சொல்லலாம். அந்த நேரத்தில் திராவிடம் தில்லியில் தன் குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு பேரம் பேசிக்கொண்டு இருந்தது. இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார்களாம். வதவதவென்று மருத்துவ மற்றும் இஞ்சினியரிங் பட்டதாரிகள் கறிக்கோழிகளை போல் உருவாக்கப்படுகிறார்கள். உலக அளவில் பேர் சொல்லும்படியான ஒரு புத்திஜீவி கூட இவர்கள் இடஒதுக்கீட்டு அரசியலால் உருவாகவில்லை. தமிழகத்தில் இருக்கும் புத்திஜீவிகள் பார்ப்பன மற்றும் மலையாள பின்னணி கொண்டவர்கள். தேசிய அளவிலான IIT, IIM, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்ப் பின்புலம் கொண்ட மாணவர்கள் மிகவும் சொற்பம். IAS அதிகாரி போன்ற பதவிகளிலும் இதே நிலை தான். மத்திய அரசு நிறுவனங்களில் (அவை தமிழகத்தில் இருந்தாலும்) இதே லட்சணம் தான். இந்த இட ஒதுக்கீட்டு அரசியல் காரணமாக துறை சார்ந்த நுண்ணறிவு, அந்த துறையில் வேலை செய்ய தேவைப்படும் தகுதி ஆகியன பின் தள்ளப்பட்டு ”என் சாதியினர் இத்தனை சதவீதம் இருக்கிறார்கள். அதனால் இத்தனை சதவீதம் ஒதுக்கீடு செய்” என்று வெட்கமே இல்லாமல் கேட்கும் நிலை. இதனால் தமிழகத்தில் சாதிகளுக்கு இடையே உரசலும் பிணக்கும் வேறு. தேசிய மற்றும் சர்வதேசிய அரங்குகளில் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டுக்காகவும் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவும் வாதாடவும் தகுந்த புத்திஜீவிகளை இந்த இடஒதுக்கீடு உருவாக்கவேயில்லை. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் இதற்கு ஓர் உதாரணம். இந்த அணை விவகாரம் பற்றி ஜப்பானிய பத்திரிக்கைகளில் கட்டுரை எழுத கேரளத்தில் ஆட்கள் உண்டு. இங்கே யார் உண்டு?. இங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் எடுபிடிகளும் கைத்தடிகளும் தான். தமிழ்நாட்டில் இருக்கும் வரை நானும் தமிழன் தான் என்று சொல்லிக்கொள்வது. எல்லையைத்தாண்டினால் நான் தமிழன் இல்லை என்று காண்பித்துக்கொள்வது. கடைசியில் கர்நாடகத்திலும் கேரளத்திலும் இருந்து அடி வாங்கிக்கொண்டு தமிழ் நாட்டுக்கு அகதியாக வருபவர்கள் எந்த வகையிலும் தமிழ் அடையாளத்தை துறக்க முடியாதவர்கள் தான். இது தான் திராவிட கலாச்சாரம்.
Guhan
It was Periyar DK's biggest mistake that they gave stage for raising Seeman.
chandran
எங்களூக்கு நீங்கள் திகட்டும் அள்வுக்கு திராவிடதை போதித்ததால் தமிழன் என்ற் வாந்தி மட்டுமே வருகிற்து. எங்களூக்கு திகட்டும் அள்வுக்கு திராவிடதை போதித்தது போதும்.......முல்லை பெரியாருக்காக உம்மன் சான்டியிடமும், அச்சுதானந்தனிடமும் நீங்கள் திராவிடதை போதித்ததால் தமிழன் மகிழ்ச்சி அடைவான். காவிரிக்காக எட்டியுரப்பாவிடமும், எசு.எம்.கிருசுணாவிடமும் நீங்கள் திராவிடதை போதித்ததால் தமிழன் மிக மிக மகிழ்ச்சி அடைவான். பாலாற்றிக்காக ரெட்டிகளிடமும், ராவ்களிடமும் நீங்கள் திராவிடதை போதித்ததால் தமிழன் மிக மிக மிக மகிழ்ச்சி அடைவான். ** *** *** ******* ******* ******** ********* ***** *****
naamtamizharchandran
நாம் தமிழர் ஆவணத்தில் பெரியாரை புறக்கணித்துவிட்டனர் என்று பெதிக கட்டுரையில் திரிக்கபட்டுள்ளது என்பதை நிருபிக்கும் நாம் தமிழர் ஏற்கும் குமுகாய (சமுதாய) வழிகாட்டிகள்..

வள்ளலார்
அத்திவாக்கம் வேங்கடாசலம்
புரட்சி பெரியார்
சிவகங்கை சு இராமசந்திரனார்
பட்டிவீரன்பட்டி சௌந்திரபாண்டியன்
அறிஞர் அண்ணா
அயோத்திதாசப்பண்டிதர்
இரட்டைமலை சீனிவாசனார்
அண்ணல் அம்பேத்கார்
ஒண்டிவீரன்
சமவுரிமைப் போராளி அய்யன்காளி
தோள் சேலைப் போராளி அய்யா வைகுண்டர்
இமானுவேல் சேகரன்
இதழியத் தந்தை சி.பா.ஆதித்தனார்
கண்ணியமிக்க காயிதே மில்லத் இசுமாயில் சாகிபு
இராமசாமி படையாச்சி..
Guest
திரு சாமான் அவரகலெ உன்கல் பெயர் டமில் வார்தையா ?
raja
Seeman establish his party with the core subject of CONGRSS (Even Kumariananthan,Gnanadesikan,E.V.KS.Elangovan,Nedumaran(congrss Supporte he apposed only Malaliy in Foreign Ministry) all are ready to join with Seeman.
But seeman not interested or believe in those peoples.So he himself ready to oppose Karunanidhi as Dravida Slogam.
And one more Jaya never tell her party as Dravida party so Seeman has a clear path of his politicas.
sp.maragathaselvam
Ambedkar, aiyankaali, pondra thalaivargal, tamilargal illai, mr,chandran
tharanitravels
சீமான் ஒரு போலியானவர்,மும்பையில் தேர்தல் பிரசாரம் சிவசேனாவிர்க்கு செய்தபோதே அவர் கொள்கை அம்மனம் ஆகிவிட்டாட்,இப்போது பெரியாரை தொட்டுவிட்டார் கெட்டு[அழிந்து]போவார்.
மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன்
திராவிடம் ஆரியம் இரண்டையும் முழு மூச்சாக அண்ணன் சீமான் ஆதரித்த வரலாறு அனைவருக்கும் தெரியும் இப்போது எதிர்க்கிறார் நாளை ஆதரிப்பார் என்று சொல்ல தோனுகிறது ஹ்ம்ம்ம் கொஞ்சம் தடுமாறி நிற்கிறார் அரசியல் களத்தில்
ramachandran
பெரியார் மட்டும் நமக்கு இல்லாவிட்டால், தமிழர்களாகிய நாம் நிச்சயம் பன்றிகளாகத்தான் இன்றும் இருந்திருப்போம். நம்மிடையே, புரட்சி வேட்கையை உருவாக்கியவர் பெரியார். அவரைப் பழிப்பது தாயை பழிப்பதைவிட கேவலமானது என்பதை மனசாட்சியுள்ள தமிழர்கள் உணர்ந்தால் போதும். தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் கைக்கூலிகள் உணராமல் போனால் கவலையில்லை.
THAMIZH MATHI.
We are niether INDIAN nor DIRAAVIDAN.Proudly say, we are THAMIZHAR.This single identy is enough for Thamizh peaple.Every one of us known this fully.Really,I dont know about Seeman's concept.Certainly Viduthalai Erasendiean realised the truth, one day,that he is a Thamizhan.
ஆறுமுகம்
தொடர்ந்து இந்திய தேசியத்தை எதிரக்கும் திமுகவுக்கு ஆதரவு தந்து இந்திய தமிழர்களையும் படுகொலை செய்யுங்கள். உங்களுக்கு பதவி வேண்டும் என்றால் தமிழன் பதவி போனால் ”சோற்றால் அடித்த பிண்டங்கள்” - பிண்டங்கள் என்பதால்தானே கொலையை கூட மாநாடு நடத்தி மறைத்த உத்தமர்கள் உங்களுக்குதான் ஆதரவு தரவேண்டும். நீரோ மன்னன் ”பிடில்” வாசித்தது கூட எதோச்சையாக நடந்தது என்றும் நகிழச்சியை கண்டு வாசிக்க வில்லை என்று கூறுவதுண்டு ஆனால் திராவிடத்தின் பெயரில் கட்சி நடத்தும் தமிழின் தலைவன் ... ? அவரை தானே ஆதரிக்கிறீர்கள் ... ஆதரித்தால் உங்களுக்கு பதவி பணம் ... ஆதரித்து தானே ஆக வேண்டும. ஆட்சி மாறினால் இருக்கவே இருக்கு ஏதாவது ஒரு வீராங்களை பட்டம் .. பிழைப்பு நடத்த ...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.