மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரைப் பவுர்ணமி நாள் விழாவில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு முன்னிலையில், “வன்னிய சாதிப் பெண்களை எவராது கலப்பு திருமணம் செய்தா தொலைச்சுப்புடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.

ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் தனக்கான உரிமைகளைக் கோரும்போது இப்படி சாதி வெறி பேசுவது மிக மோசமான பார்ப்பனியத்தை உறுதிப்படுத்தும் பேச்சாகும். மக்கள் தொலைக் காட்சி ஒளிபரப்பிய அந்த நேரடி நிகழ்ச்சியில் குருவின் பேச்சை பலரும் கேட்டார்கள். ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையும் (மே 13) இவ்வாறு வெளியிட்டுள்ளது:

“நம் இனத்துப் பெண்களைப் பலாத்காரம் செஞ்சு கலப்புத் திருமணம் செய்றாங்க. நாம எச்சரிக்கையா இருக்கணும். நம்ம சாதியில்தான் நாம கல்யாணம் செய்யணும். எவன்டா சாதிய ஒழிச்சான்? நான் வன்னியர் சங்கத் தலைவர் சொல்றேன். யாராவது எங்க பொண்ணுங்களுக்கு கலப்புத் திருமணம் செஞ்சு வைச்சா... தொலைச்சுப் புடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.”

காடுவெட்டி குருவின் பேச்சு, மருத்துவர் ராமதாசுக்கு உடன்பாடுதானா என்று கேட்க விரும்புகிறோம்.  இதுதான் மருத்துவர் பேசிவரும் தமிழினத்துக்கான அடையாளமா? இப்படிப்பட்ட சாதிவெறிக் குரல்கள் தமிழகத்தில் தலைதூக்குவது சமூகத்தை எங்கே கொண்டுபோய் சேர்க்கும்?

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு பழ. கருப்பையா என்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினர் அதே சாதியில் தான் திருமணம் செய்ய வேண்டும். அந்த சாதிக்கென்று சில தனித்த பண்புகள் உண்டு. அதைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசினார்.

ஒவ்வொரு சாதியும் அந்த சாதியின் தர்மத்தைக் கட்டிக் காப்பதையே கொள்கையாகக் கொண்டிருந் தால் இந்த சமூகத்தினர் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் வந்திருக்க முடியுமா என்று கேட்க விரும்புகிறோம்.

மருத்துவர் ராமதாசு, பழ கருப்பையா போன்றவர்கள் திராவிட இயக்கம் தான் நாட்டைக் கெடுத்தது என்று பேசி வருகிறார்கள். திராவிட எதிர்ப்பு என்பது, சாதி, சாதிச் சடங்கு, சாதி தர்மப் பாதுகாப்பில்தான் அடங்கியிருக்கிறதா?

திராவிடர் இயக்கம் எதிர்த்துப் போராடிய சாதி பார்ப்பனிய இழிவுகளை மீண்டும் கொண்டுவரத் துடிக்கிறார்களா?

இவை நவீன ‘மனுதர்மக்குரல்’ தான். மனுதர்ம சிந்தனைகளுக்கு எதிராக மனுதர்ம நூலின் பரப்புரைக்கு தடை போடக் கூறி அதற்குத் தீயிடும் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

அப்போராட்டத்தின் நியாயங்களையும் அவசியத்தையும், காடுவெட்டி குரு, பழ. கருப்பை யாவின் பேச்சுகள் உறுதிப்படுத்துகின்றன. ‘தமிழினப் போராளி’யாக போற்றப்படும் மருத்துவர் ராமதாசு இத்தகைய கருத்துகளை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இது குறித்து தனது கருத்தை விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

Comments

5 comments

5
ஜெயபால்
இது போன்ற பேச்சுகள் சாதி வெறியை தான் தூண்டி விடுமே ஒழிய, சகோதரத்துவத்தை வளர்த்தெடுக்காது. மருத்துவர் ராமதாஷ் தமிழர் நலன் குறித்து, வன்னியர் ஆள்வது குறித்து பேசி வரும் இந்த சூழலில் அரசியலில் சமூக பொறுப்புகளோடு இயக்கத்தை வழி நடத்துவது தேவையாகிறது.
R.THAMIL SELVAN
நல்லவர்கல்லம் சாஷிகல் 2 ஒன்ட்ரு மனசாக்ஷி ஒன்ட்ரு
திய்வ்தின் சாக்ஷி அம்மா...
vinayagam
பா ம க தேர்தல் கட்சியாக மாறிய பின் கூட்டணிக்காக தகிடுதத்த வேலைகளையும் நிலைபாடுகளையும் முன்னெடுப்பதுதான் அதன் வரலாறாகிபோனது.அதாவது ஓட்டுக்காக சாதியும் மற்ற கட்சிகளோடு கூட்டணி நேரத்தில் தமிழ் தேசிய கொள்கைகளையும் முழக்கமிடுகிண்றனர் .ஆக பா ம கவும் ...ராமதாசும் சராசரியான அரசியல் தான் நடத்துகிண்றனர் .அதன் வெளிப்படை தளபதி தான் காடுவெட்டி குரு .இதில் ராமதாசின் சிந்தனைக்கும் நடைமுறைக்கும் மாறாக அக்கட்சியில் யாரும் எதையும் வெளிப்படுத்தமுடியாது ,தலைமையின் கண் அசைவில் தான் எல்லாம் நடக்கிறது.....இது சிதம்பர ரகசியம் ..தோழர்.விடுதலை ராசேந்திரன் அவர்கள் இன்னும் பாமகவையும் அதன் தலைவர்களையும் நம்புவது தேவையற்றது.இத்தனையும் பட்டவர்த்தனமாக தெரிந்த பிறகு அவர்களை நாம் நம்பினால் ஏமாறப்போவது நாம் தான் ....அக்கட்சி தனது கொள்கையில் மிகவும் தெளிவாக உள்ளது.
Guest
இதில் என்ன இரகசியம் இருக்கிறது? வன்னியர்களின் பிந்தங்கிய நிலையை மாற்றப் போவதாக சொல்லிக்கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த பாமக, அதிகாரத்தைச் சுவைத்தவுடன் வன்னியர்களுக்குத் துரோகம் செய்து தனது வாக்கு எண்ணிக்கைப் பலத்தை இழந்தது. அதனை மீட்டெடுக்க இப்போது வன்னியர்களைப் பற்றி மீண்டும், நிறைய பேசுகிறார்கள். மற்றபடி, இன்றைய சமூகத்தினை மாற்றுவதை நோக்கமாகக் கொள்ளாமல் மக்களை, தமது சொந்தம் என்று சொல்லிக்கொள்கின்ற வன்னிய மக்களை ஏமாற்றுவதையே நோக்கமாகக் கொண்ட கட்சி பாமக. இன்றைய நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற புதிய வடிவமே சாதியம் என்ற பழைய அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது என்பது அனைவரும் இரகசியம்தானே?
Karthik
தமிழகத்தில் சாதி என்பது மாற்றப்பட முடியாதது..சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லித்தரும் பள்ளியில் தான் சாதி சான்றிதல் இல்லையென பிள்ளைகளை கேட்கிறார்கள்..இப்பொது இருக்கிற தலைவர்கள் எல்லாரும் வளர அவர்களுக்கு ஊட்டசத்து சாதி மட்டுமே.. அதான அம்மா பள்ளியிலே சான்றிதல் வழங்க ஆணை இட்டுள்ளார்.அந்த பிஞ்சு மனதில் சாதியை விளைவிப்பது பின் சாதிகளை ஒழிப்போம் என்று வெட்கமில்லாமல் பேசுவது..அரசியல்வாதிகளுக்கு முக்கியமான தகுதி மானம்,வெட்கம் இது இருக்ககூடாது..சாதியை வெளிபடையை பேசுபவனுக்கு தணடனைகள் இல்லை *** *** ********** ***********

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.