பிறவியின் அடிப்படையில் இலவசமாகக் கிடைத்தது ஜாதி.

இந்த ஜாதியால் பயன் அடைந்தவர்கள் அதைக் கொண்டாடினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கொடுமைகளை அனுபவித்தார்கள்.

ஜாதி சமூகத்தை வளர்க்கவில்லை; மாறாக சமூகத்தைப் பிளவுபடுத்தியது; சமூக ஒற்றுமையையும் அது கட்டிக் காக்கவில்லை.

இன்றைக்கு அரசியலில், அதிகாரத்திலும், சமூக உறவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும், முரண்பாடுகளும் மோதல்களும் வெடித்துக் கொண்டு இருக்கின்றன.

"பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று நடக்கும் அதிகார சண்டை என்பது ஜாதி அரசியலில் மோசமான தோல்வி!" சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி ஒரு காலத்தில் முற்போக்கு பாதையில் பயணித்தது உண்மை; பிறகு 35 வயதில் தனது மகனை இராமதாஸ்அமைச்சராக்கிய பிறகு அது திசை மாறியது.

மருத்துவர் ராமதாஸ் அது நான் செய்த பெரும் தவறு என்று இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். சமூக நீதி அரசியலை சமூகத்திற்காகப் பயன்படுத்தாமல் பதவிகளுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு கூட்டணிகளை மாறி மாறி ஏற்படுத்திக் கொண்டு சுயநலப் பாதையில் அதிகாரத்திற்காக பயணித்தவர்கள், அந்த முரண்பாடுகளை இப்போது சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஜாதி என்னும் நோய்க்கு மருந்து தான் சமூக நீதி. ஆனால் அந்த நோயை உணவாக மாற்றிக்கொண்டு அரசியல் நடத்தியதன் விளைவை இப்போது பாட்டாளி மக்கள் கட்சியில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அரசியலிலும் ஜாதி ஓர்மையை உருவாக்கவில்லை, சமூகத்திலும் அது ஒடுக்கு முறையைத்தான் திணிக்கிறது ஆக ஜாதி என்பது அழித்து ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய் என்பதையே இந்த நிகழ்வுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

 - விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.