18.4.2010 அன்று த.மு.எ.க.சங்கத்தின் நாமக்கல் மாவட்டக் குழு, மாநிலக் குழு உறுப்பினரும், மாவட்டத் தலைவருமான கோ.தெய்வசிகாமணி தலைமையில் கூடியது. அதில் மாநிலக்குழு உறுப்பினரும், மாவட்டச் செயலருமான பா.ராமமூர்த்தி வேலை அறிக்கையினை சமர்ப்பித்தார்.

மாவட்டக் குழுவின் விவாதத்தில் கவிஞர் லீனா மணிமேகலை அவர்களின் இரு கவிதைகள் பற்றிய கருத்து வந்தது. மாவட்டக் குழுவினர் அனைவரும் இரு கவிதைகளையும் படித்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். கீழ்க்கண்ட தீர்மானத்தை மாவட்டக் குழு ஏகமனதாக நிறைவேற்றியது:-

கவிஞர் லீனா மணிமேகலையின் இரண்டு கவிதைகளும் மிகவும் தரம் குறைந்தும், உலக சமதர்ம சமூகம் அடைய பாடுபட்ட புரட்சியாளர்களையும் கம்யூனிஸ்டு தலைவர்களையும் மிகவும் தரம் குறைந்த பாலியல் வார்த்தைகளால் கேவலப்படுத்தி எழுதியிருப்பதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ள்து.

த.மு.எ.க.சங்கம் இதுபோன்ற நச்சுக் கலை இலக்கியங்களுக்கும், ஆபாசத்திற்கும் எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. லீனாவின் கவிதைகள் மிகவும் கீழ்த்தரமான, ஆபாசமான அருவருக்கத்தக்க முறையில் மோசமான கடும் வார்த்தைகளைக் கொண்டு உலக பொதுவுடைமை தலைவர்களையும், புரட்சியாளர்களையும் இணைத்து எழுதியிருப்பதை இம்மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அதற்காக கவிஞர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன் அக்கவிதைகளை திரும்ப்ப்பெற வேண்டும் எனவும் மாவட்டக் குழு கருதுகிறது.

- பா.ராமமூர்த்தி (மாவட்ட செயலாளர்)

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்/கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச)-நாமக்கல் மாவட்ட குழு

அனுப்பியவர்: விமலா வித்யா, மாவட்ட பொருளாளர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

5 comments

5
Surendran
நம்ம ஆளுங்க் கொஞ்சம் லேட் பிக்கப்-னாலும் சரியா முடிவு எடுப்பாங்கய்யா... நெத்தியடி அடிச்சாங்கல்லே
vimalavidya
1.லீனாவின் கவிதைகள் மீதான விமர்சன உரிமையை தக்கவைத்துக் கொள்வது என்பதும்
2.அவரது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ளது என கூறி அச்சுறுத்தலைக் கண்டிப்பதும் தனி தனி விஷயங்கள்.
@ "வினவு "நாமக்கல் மாவட்ட குழுவின் தீர்மானத்தை (1) பிரசுரிக்கும் போது எழுதிய கமெண்ட்ஸ் ஏற்புடையதல்ல.
@ அது கேலியாகவும், அமைப்புக்கு எதிராக திருப்ப முயலுவதாகவும் இருக்கிறது---விமலா வித்யா
vinavu rasigan
From vinavu article..

தம் மீது தொடுக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம், உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன் வரை யாரிடம் படும் அடியையும் வசவையும் தனிப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் எடுத்துக் கொள்வதில்லை. சாமியாடுவதும் இல்லை. தங்களுடைய பொதுவாழ்க்கையின் மீதும், அதனை வழிநடத்தும் கொள்கையின் மீதும், சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படும்போதுதான் அவர்கள் கோபம் கொள்கிறார்கள்.

அற்பர்களுக்கோ அவர்களை குண்டூசியால் லேசாக குத்தினால் போதும். உடனே “ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று வீறு கொண்டு கிளம்புகிறார்கள். இதுக்குப் பேரு படைப்பாளியின் உரிமையாம். தெரியாமத்தான் கேக்குறோம். படைப்பாளின்னா என்னா கோயில் மாடா? உழைக்காம ஊர் மேஞ்சிட்டு, தனது படைப்பாக சாணி போட்டுக் கொண்டே போனால், அதை கண்ணுல தொட்டு ஒத்திகிட்டு வாசகர்கள் பின்னாலயே வரணுமா?
R. Kanthasamy
Thaamu ee Saa
did your views ratified by the Thamilselvan.

Beware
vimalavidya
Leena talking like a democrate>> I posted two comments (My dt committee resolutions and opinion on Vinavu comments) in her blog.. Till date she did not publish the comments. But she SAID in her new article that YAMUNA RAJENDREN didnot publise her comments in their blog... what a hypocrisy ? Leena manimehalai has no intellectual honesty.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.