கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இரண்டாயிரம்
பேர்மீது வழக்கு

கை கால் உடைந்து
சிகிச்சை எடுப்போரும்
கலவரக்காரர்களாம்

காவல்துறையைத்
தாக்க முயற்சித்ததாய்
முப்பதுக்கும் மேற்பட்ட
வழக்குகள்

அப்படியெனில்
ஏழு பேரைச்
சுட்டுக் கொன்றவர்கள்மீது
என்ன வழக்கு?

உங்கள் வழக்கில்
பதியாததை
வரலாற்றில்
பதிந்துகொள்கிறோம் நாங்கள்

சட்டத்தைச்
சரிசெய்கையில்
சமூக ஒழுங்குமட்டுமல்ல
வரலாறும்
ஒழுங்கு செய்யப்படும்
ஓர்நாள்.

- ச.கௌதமன்