உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை மோடி உயர்த்தி விட்டதாக ஊடகங்களில் தினம் தினம் சங்கிகள் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டிருந்த, சொல்லிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் இந்தியாவின் பெருமையை சங்கிகள் அம்மணமாக்கிக் கொண்டிருந்தார்கள், கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவன் தன்னுடைய எந்த செயலின் மூலம் உலகிற்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றானோ, அந்த செயலைத்தான் அவன் எப்போதுமே பெருமையாக செய்கின்றான். சங்கிகளைப் பொறுத்தவரை முஸ்லிம் வெறுப்பு, கிருஸ்தவ வெறுப்பு, தலித் வெறுப்பு, பழங்குடியின வெறுப்பு, இனப்படுகொலை, பாலியல் வல்லுறவு போன்றவை மட்டுமே அவர்களின் வரலாற்றுப் பெருமித அடையாளங்களாகும். அந்த அடையாளங்களை அவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அவர்கள் படுகொலைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் தங்களின் வரலாற்று எதிரிகள் மீது தினம் தினம் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தங்களின் அரசியல் அடையாளமான சிறுபான்மை ஆதிக்க சாதிகளையும், அந்த ஆதிக்க சாதிகளின் பெரும்பான்மை அடிமைகளையும் மகிழ்ச்சிபடுத்திக் கொண்டே இருக்கின்றார்கள்.

அந்த மகிழ்ச்சியில் அவர்களைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் பெரும்பான்மை ஓட்டுக்களை எப்போதும் உத்திரவாதப்படுத்திக் கொள்கின்றார்கள். இந்தியாவின் ஆன்மாவை அவர்கள் ரத்தம் சிந்த, சிந்த துண்டாக்கி இருக்கின்றார்கள். இப்போது இருப்பது ஒன்றுப்பட்ட இந்தியா என்று யாராது நினைத்துக் கொண்டிருந்தால், அவர்கள் அரசியல் கோமாளிகளாகவே இருப்பார்கள்.protest against manipur violenceஇந்தியா ஒடுக்கும் பெரும்பான்மை சாதிவெறியர்களின் இந்தியாவாகவும், ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் இந்தியாவாகவும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.

ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் ரத்தம் குறுக்கும் நெடுக்குமாக இந்தியா முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதில் மதவெறியர்கள் உற்சாக குளியல் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் எந்த மனித விழுமியங்களும் இல்லை. அவர்களின் அகோரப் பசிக்கு சதைகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக சிறுபான்மை பெண்களின் சதைகள் அவர்களுக்கு மிக விருப்பமானதாக இருக்கின்றது.

நாய்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுவது போல வெறிபிடித்த சங்கி நாய்கள் ஊரே பார்க்க வல்லுறவில் ஈடுபடுகின்றன. தாங்கள் வல்லுறவு செய்ததைப் படம் பிடித்து ஊருக்குப் போட்டுக் காட்டுகின்றார்கள். இதை எல்லாம் நாட்டின் பிரதமர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

கடந்த இரண்டரை மாதங்களாக மெய்தேய் மற்றும் குக்கி சமூக மக்களுக்கு இடையேயான மோதலால் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இதுவரை 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 60000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான தேவலாயங்கள் அழிக்கப்பட்டிருகின்றன.

உச்சபட்ச கொடூரமாக இரண்டு குக்கி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்திருக்கின்றார்கள்.

இந்த கொடூர சம்பவம் கடந்த மே மாதம் 4 தேதியே அரங்கேற்றப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் கடந்த வாரம்தான் பெரிய அளவில் பகிரப்பட்டு பொதுச் சமூகத்தின் மனட்சாட்சியை உலுக்கியது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் காவல்துறையின் துணையுடன், அவர்களின் பாதுகாப்புடன்தான் நடத்தப்பட்டிருக்கின்றன. எப்படி குஜாரத் இனப்படுகொலை சங்கிகள் மற்றும் காவல்துறையின் பாதுகாப்புடன் அரங்கேற்றப்பட்டதோ, அதே போலவே மணிப்பூரிலும் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன.

மே 3ஆம் தேதி 800 முதல் 1000 பேர் வரை உள்ள மெய்தெய் குழுக்கள் ஆயுதங்களுடன் தௌபால் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தில் தாக்குதல் நடத்தியதோடு கொள்ளையடித்துவிட்டு கிராமத்திற்கு தீ வைத்திருக்கின்றார்கள்.

அப்போது பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்ற வந்த ஒரு பெண்ணின் தந்தை மற்றும் இன்னொரு பெண்ணின் 19 வயதே ஆன அவரது சகோதரர் ஆகியோரை அந்தக் கும்பல் அடித்தே கொன்றிருக்கின்றது.

இவ்வளவும் காவல் துறையின் பாதுகாப்புடன் நடந்திருக்கின்றது. ஆனால் காவல்துறையோ “தாங்கள் இந்தப் பெண்களை காப்பாற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும், ஆனால் காவல் நிலையத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன்பே அந்த கும்பல் தங்களைத் தடுத்து அந்தப் பெண்களை இழுத்துச் சென்றதாகவும்” சொல்கின்றது.

கும்பல் வன்முறை நடக்கும் போது சில காவல்துறையினர் மட்டும்தான் கலவரப் பகுதிக்குப் போனார்கள் என்பதும், கலவரக் கும்பல் தடுத்ததும் பெண்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு அதற்கு மேல் எந்த நடவடிக்கையையும் காவல்துறையால் எடுக்கா முடியாமல் போனது என்பதும் அயோக்கியத்தனமான பொய்யாகும். இதில் இருந்தே இது சங்கிகளாலும், காவல்துறையாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெட்கக்கேடான சம்பவம் என்பது உறுதியாகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் “இது போல 100 சம்பவங்கள் இங்கு நடக்கின்றன. ஒரு வீடியோ மட்டுமே இணையத்தில் பரவியுள்ளது. இதனால்தான் மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது.” என கூச்சமே இல்லாமல் சொல்கின்றார்.

சங்கி வீட்டுப் பெண்களை யாராவது இப்படி பாலியல் வல்லுறவு செய்து வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தால் இந்த மானங்கெட்ட முதல்வர் இப்படித்தான் சொல்வாரா? என்று மக்கள் காறித் துப்புகின்றார்கள்.

மேலும் இது பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள், “இந்த சம்பவம் வெட்கக்கேடானது. நாடு அவமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தாய்மார்களையும், சகோதரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றும், “குற்றவாளிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது ஒருபோதும் மன்னிக்கப்படாது” என்றும் கூறி இருக்கின்றார்.

இரண்டரை மாதமாக மணிப்பூரில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறையை பற்றி வாயே திறக்காத மோடி அவர்கள் இன்று உலகமே இந்தியாவைப் பார்த்து காறித் துப்பிய பின், தன் கள்ள மெளனத்தைக் களைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என கபட நாடகமாடுகின்றார்.

அதே போல இரண்டரை மாதமாக மணிப்பூர் என்ற மாநிலம் இந்தியாவில்தான் உள்ளது என்றோ, அங்கு இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருகின்றது என்றோ தெரியாத உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், “இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும்,

“இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இச்சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இது அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாகும்” என்று கூறியிருக்கிறார்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 2004ஆம் ஆண்டு 32 வயது பெண் ஒருவரை துணை ராணுவப் படையினர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதற்கு எதிராக, தங்கள் ஆடைகளைக் களைந்து போராடிய மெய்ரா பைபிஸ் அமைப்பை சேர்ந்த மெய்தெய் இனப் பெண்கள்தான் இன்று குக்கி இனப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த பாலியல் அத்துமீறலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எவ்வளவு பெரிய முரண்.

சங்கிக் கும்பல் மணிப்பூரில் ஆழமாகக் காலுன்றும் வரை அங்கு வாழும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே பெரியதாக எந்தப் பிரச்சினையும் ஏற்படவிலை. எப்போது தன்னுடைய வெறுப்பு அரசியலின் மூலம் மணிப்பூரில் பாஜக காலூன்றியதோ, அப்போதிருந்தே அங்கு மத ரீதியான மோதல்கள் ஏற்படத் தொடங்கின.

1958ஆம் ஆண்டில், இந்தியா அரசு மணிப்பூர் மீது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திணித்தது. இந்த சட்டத்தின் படி பாதுகாப்பு வீரர் ஒருவர் தவறுதலாக அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒருவரைக் கொன்றுவிட்டால் அவரை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அப்பாவிப் பொதுமக்கள் பலரை இந்த சட்டத்தைப் பயன்படுத்தி இந்திய இராணுவம் கொன்று குவித்தது. இதன் மூலம் தேசிய இன விடுதலைக்கான அந்த மக்களின் போராட்டம் அழித்தொழிக்கப்பட்டது.

1979 முதல் 2012ஆம் ஆண்டு வரை பாதுகாப்புப் படையினரால் போலி என்கவுன்டர்கள் மூலம் 1,528 பேர் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டனர். ஆனால் இன்றோ அந்த மக்கள் தங்களைக் கொன்று குவித்த ராணுவத்துடன் கை கோர்த்து குக்கி இன மக்களை வேட்டையாடி வருகின்றார்கள்.

இதன் மூலம் தங்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது குக்கி இன மக்களை மலைப்பகுதியில் இருந்து வெளியேற்றிவிட்டு அவர்களின் நிலங்களை அபகரிக்கும் கீழ்த்தரமான போராட்டம் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் மெய்தெய் இன மக்கள் பெரும்பான்மையாக கிருஸ்தவ மதத்தை கடைபிடிக்கும் குக்கி இன மக்களின் மேல் இத்தனை ஆண்டுகளாக வன்மத்தோடு இருந்திருக்கின்றார்கள். அந்த வன்மத்தை ஆர்.எஸ்.எஸ் தூபம் போட்டு வளர்த்திருக்கின்றது.

எண்ணிக்கையில் 64 சதவீதம் இருக்கும் மெய்தெய் மக்களிடம் 10 சதவீத நிலங்கள் மட்டுமே உள்ளன என்பதையும், ஏறக்குறைய 30 சதவீதம் உள்ள பழங்குடியின மக்களிடம் 90 சதவீத நிலங்கள் உள்ளன என்பதையும் பார்க்கும்போது, குக்கி இன மக்களுக்கு எதிரான மெய்தெய் இன வன்முறை கும்பல்களின் மூர்க்கத்தமான கொடூரத் தாக்குதலின் பின்னணியை நாம் புரிந்து கொள்ளலாம்.

மெய்தெய் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்களின் நிலங்களை சட்டப்படியே பிடுங்கிக் கொள்ளவும், அவர்களை மலைப்பகுதியில் இருந்து அடித்து விரட்டவும் மாநிலத்தை ஆளும் பிஜேபி அரசும் அதன் கைக்கூலியான மணிப்பூர் நீதிமன்றமும் திட்டம் தீட்டி வருகின்றன.

தேசிய இனப் போராட்டம் எல்லாம் தேவையில்லை, குக்கி இன கிருஸ்தவ மக்களை வேட்டையாடுவதன் மூலமே மணிப்பூரை மெய்தெய் இந்துக்களின் மாநிலமாக மாற்றிவிட முடியும் என சங்கிகள் மெய்தெய் மக்களை நம்பவைத்து, குக்கி இன பழங்குடி இன மக்களுக்கு எதிராக மனித குலமே வெட்கித் தலை குனியும் வகையிலான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு இருக்கின்றார்கள்.

இன்று இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளாலும், ஜனநாயக சக்திகளாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சங்கி கும்பலுக்கு எதிரான கருத்தியல் போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

மணிப்பூர் பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் பிஜேபியை ஒரு அருவருப்பான கட்சியாக மக்கள் பார்க்கத் தொடங்கி இருக்கின்றார்கள். மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு அடைகின்றார்கள் என்பது சங்கிகளுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டதைத்தான் காட்டுகின்றது.

- செ.கார்கி

Pin It