எலக்ட்ரோபதி ஓர் அறிமுகம் :

எலக்ட்ரோபதி என்பது ஒரு தாவரவியல் மருத்துவமாகும்.  எலக்ட்ரோபதி மருத்துவத்தின் மருந்துகள் வேறு எந்த வேதியியல் கலப்பும் இன்றி தாவர இனத்திலிருந்து மட்டுமே தயாரிக்கப் படுகிறது.  இந்த மருத்துவம் 1865-ஆம் ஆண்டு Dr.Count Ceaser Mattei என்பவரால் இத்தாலி நாட்டில் பொலக்னா என்ற இடத்தில் கண்டறியப்பட்டது.

தாவர இனத்திலிருக்கும் உயிர் மின் சக்தியை (od Force Bio-electric Power) பிரித்து எடுத்து அதை வீரியப்படுத்தி, மருந்துகள் தயார் செய்யப்படுவதால் இந்த மருத்துவத்திற்கு “எலக்ட்ரோபதி” என்று பெயரிடப் பட்டுள்ளது.

எலக்ட்ரோபதி மருந்துகளின் தயாரிப்பு முறை (Scientific preparation of medicine)  இதர மாற்று முறை மருந்துகளின் தயாரிப்பு முறையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது.  எலக்ட்ரோபதி மருந்துகள் Cohobation எனும் அறிவியல் முறையில் தயாரிக்கப்படுகிறது.  என்பது தாவரங்களில் உள்ள அணு மூலக்கூறுகளை பிரித்து சுத்திகரித்து மீண்டும் ஒருங்கிணைப்பதன் முழுமையே ஆகும்.

Cohobation முறைப்படி சுத்திகரிக்கப்படும் மருந்துகள் முழுமையாக தாவர நச்சுகள் (Plant toxin) அகற்றப்பட்டு வீரியமாக்கப்படுவதால் இம்மருத் துவத்தின் மருந்துகளால் பக்க விளைவுகளே ஏற்படாது என்று கூறினால் அது மிகையாகாது.

எலக்ட்ரோபதியின் சிறப்பு பண்புகள் :

தாவர இனத்திலிருந்து மட்டுமே பிரித் தெடுக்கப்படுவதாலும், தாவர நச்சுகள் (Plant toxin) அகற்றப்படுவதாலும் இது 100% பக்கவிளைவுகளற்ற மருத்துவம் எனும் சிறப்பை பெறுகிறது.

கூட்டு நோய்களை குணப்படுத்தும் விதமாக மருந்துகள் யாவும் கூட்டு கலவைகளாக வருகின்றன.

எல்லா நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறப்பு அதிவீரிய மருந்துகளால் நிரந்தர குணமடையச் செய்யப்படுகிறது.

மருந்துகளை திரவமாக (dilution) வில்லைகளாக (Globules) மாத்திரைகளாக, (Diskets) Syrup, களிம்பு (Ointment),Capsules,Liniments என்று பலவிதங்களிலும் தர முடியும்.

குறைந்த காலத்தில் எலக்ட்ரோபதி மருந்துகள் நோயின் வீரியத்தை கட்டுபாட்டிற்குள்                   கொண்டுவரும்.

குறிப்பிட்ட தாவரங்களிலிருந்து அதன் மருத்துவ தன்மை நிறைந்த பகுதியை மட்டுமே பயன்படுத்துவதால் நோயின் அறிகுறிகள் உடனடியாக குணமடைகிறது.

இந்தியாவில் எலக்ட்ரோபதி :

இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளை கடந்து பல மாற்றங்களுக்குட்பட்ட இந்த மருத்துவமானது 1920 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான Father Muller -ஆல் மங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து இந்தியா வின் எல்லா மாநிலங்களிலும் எலக்ட்ரோபதி மருத்துவம் மிகப்பெரிய வளர்ச்சியடைந்து வருகிறது.

எலக்ட்ரோபதியின் வளர்ச்சி :

ஒரு மருத்துவத்தின் வளர்ச்சியென்பது அம்மருத்துவம் மக்களிடம் சென்றடையும் விதத்தை பொறுத்தே அமைகிறது.  அவ்வாறு எலக்ட்ரோபதி மருத்துவத்தின் வளர்ச்சி NEHM என்ற மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட குழுமத்தால் கல்விமுறை சான்றிதழ் பயிற்சியும் எலக்ட்ரோபதி மருத்துவ பயிற்சியாளர்களால் செய்முறை பயிற்சியாகவும் வளர்ந்து வருகிறது.  மேலும் இம்மருத்துவத்தில் மருந்துகளானது நீண்டகால நோய்களுக்கு ஒரு சவாலாக அமைந்து அந்நோய்களை குணப்படுத்துவதின் மூலம் பெருவளர்ச்சியடைந்துள்ளது.

NEHM பற்றி :

NEHM (National Electrohomoeopathy Medicos of India) என்பது எலக்ட்ரோபதி மருத்துவத்தை இந்தியாவில் வளர்ச்சியடைய செய்வதற்காக மத் திய குடும்ப நல அமைச்சகத்தால் ஆதரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும்.  சஉஏங இந்தியா முழுவதும் சில கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்து எலக்ட்ரோபதி மருத்துவத்தில் திறன் மேம்பட்ட கல்வி பயிற்சியை அளித்து வருகிறது.  பயிற்சிக்குப் பின் NEHM -ஆல் வழங்கப்பட்ட சான்றிதழைப் பயன் படுத்தி இந்தியாவின் எந்த பகுதியிலும் எலக்ட்ரோ பதி மருந்துகளை பயிற்சி செய்ய முடியும்.

சட்டத்தின் பார்வையில் எலக்ட்ரோபதி :

எலக்ட்ரோபதி மருத்துவம் நேரடியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை எனினும் எலக்ட்ரோபதி மருத்துவத்தின் (Practice) பயிற்சி சட்ட ரீதியான உரிமையாக்கப்பட்டிருக் கிறது.  எலக்ட்ரோபதி அதன் வளர்ச்சி பாதையில் பல தடைக்கற்களை தாண்டியுள்ளது என்பதை விளக்கும் விதமாக பின்வரும் இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்கள் வழங்கிய அனுமதி ஆணை உங்களின் பார்வைக்காக தரப்பட்டுள்ளது.

1) உச்சநீதிமன்றம்  SLP No:11262 / 2000, Dt : 22-11-2000 (Union of India vs NEHM of India)

2) புதுடெல்லி உயர்நீதிமன்றம் FAO No: 205 / 92 Dt : 18-01-1998 (Director of Health Service Vs NEHM of    India)

3) அலகாபாத் உயர்நீதிமன்றம் W.PNo: 18699 of 32 Dt : 28-09-1992  W.PNo. 22271 / 93  Dt : 09-07-2003

4) Delhi High Court  FAO No: 215 / 92  Dt : 13-11-1998

5) Order issued by Ministry of Health and Family Welfare  order no: V / 25011 / 276 / 2009 –HR Dt :   05-05-2011

6)  Order Issued by Ministry of Health and Welfare order no:C. 30011  / 22 / 2010 – HR Dt : 21-06-2011

7)  20/6/2003 அன்று Directorate of Health Service,Govt of NCT of Delhi தனது   அறிக்கையில் (F-7 (512) / 2003 / DHS / HQ /CC / AQC / 8115) NEHM of India –வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்கள் இம்மருத்துவத்தில் எந்தவித   குறுக்கீடும்  இல்லாமல் பயிற்சி செய்ய முடியும் என அறிவித்துள்ளது. மற்றும் இந்தியாவின் மற்ற சில மாநில உயர் நீதி மன்றங்களிலும் எலக்ட்ரோபதி மருத்துவத்தின் பயிற்சிக்கான ஆணை பெறப் பட்டுள்ளது.

8) எலக்ட்ரோபதி மருத்துவ பயிற்சி செய்பவர் களின் உரிமைகள் Article 19 (1) (G),Constitution of India கீழ் பாதுகாக்கப்படுகிறது.

இறுதியாக பல்வேறு தரப்பிலிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எலக்ட்ரோபதி சம்பந்தமாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அரசு தரப்பு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Pin It