கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஜாதி பஞ்சாயத்துக்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

அரியானா மாநிலத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரை வன்முறை மூலம் அச்சுறுத்தி, திருமணங்களைத் தடுப்பது; பிரித்து வைப்பது போன்ற வேலைகளைச் செய்யும் கட்டப் பஞ்சாயத்துகளைத் தடை செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் ஒரு தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு முன் வழக்கு கடந்த பிப்.5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹீடா கட்டாயப் பஞ்சாயத்து செயல்பாடுகளை நியாயப்படுத்தி வாதிட்டார். வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே நடக்கும் திருமணங் களை கட்டப் பஞ்சாயத்துக்கள் எதிர்ப்பது இல்லை என்றும், வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்களைத் திருமணம் செய்து கொள்வதைக்கூட எதிர்ப்பது இல்லை என்றும், காலம்காலமாக பின்பற்றப்படும் ஒரே கோத்திரங்களுக்கிடையே நடக்கும் முறைகேடான திருமணங்களையும் சகோதர சகோதரி உறவு முறைகள் கொண் டோரிடையே நடக்கும் திருமணங்களையும் தான் எதிர்க்கிறது என்றும் , பண்பாட்டைக் காக்க மனசாட்சிக் காவலர்களாக செயல்படுகிறது என்றும் வாதிட்டார். இந்த வாதங்களில் திருப்தியடையாத தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ சமூகத்தின் காவலர்களாக உங்களை நியமித்தது யார்? அல்லது மனசாட்சியின் காவலர்களாக உங்களை நியமித்தது யார்? அந்த உரிமையை நீங்களே எடுத்துக் கொள்ளா தீர்கள். எங்களுக்கு சம்பிரதாயம், கோத்ரம் பார்த்து, சமூகத்தால் தடை செய்யப்பட்ட உறவுகளுக்கிடையே நடக்கும் திருமணங்கள் பற்றி எல்லாம் கவலை கிடையாது. சட்டத்தின் படி ஒரு திருமணம் நடக்கவில்லை என்றால் அதை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும். திருமணம் சட்டப்படியானதா என்பதைக் கண்காணிக்கும் உரிமை கட்டப் பஞ்சாயத் துகளுக்கு இல்லை என்று தலைமை நீதிபதி கூறினார்.

(The court asked, “who has appointed you as guardians of society or its conscience keeper? Do not assume that role. We are not concerned about tradition, gotra, spainea or prohibited degrees of relationship. If a marriage is not permissible under law, then there are courts to annul it. Khaps have no business determining the legality of marriage.”)

இவ்வாறு கூறியதோடு, மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் அலட்சியம் காட்டி செயல்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார். கூடுதல் அரசு வழக்கறிஞர் பிங்கி அனந்த், ஜாதி மறுப்பு, மத மறுப்பு, கோத்ரா மறுப்பு திருமணங்களைக் காட்டி நடக்கும் வன்முறைகளைத் தடுக்க அரசிடம் என்ன திட்டமிருக்கிறது என்பதை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க மேலும் இரண்டு வாரம் கேட்டபோது தலைமை நீதிபதி அரசின் அலட்சியத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.