பொதுவாக இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை எழுதியவர்கள் அனைவரும் இந்தியா என்ற சொல்லைக் கையாண்டுள்ளனர். அரசியல் அமைப் பும் மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா பாரத் என்றழைக்கப்படும் எனச் சொல்கின்றது. வரலாற்றில் நாவலந் தீவு என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆங்கிலேயன் மெட்ராசு, கல்கத்தா, பம்பாய் என்ற மூன்று மாநிலங்களை உண்டாக்கி பிரிட்டிஷ் இந்தியா என்று ஆரம்பத்தில் அழைத்தான்.

ஆனால் நாம் வரலாற்றை நமது இலக்கியத்தில் மூலமாக அறியும் பொது சோழ பாண்டிய சேர முடியரசுகளாகவும் சீறூர் தலைவன் மன்னன் எனவும் பார்க்க முடிகிறது. மேலும் நமது வரலாறு வரலாற்று வழியில் அறிய முடிகின்றது. தமிழ் சமூகம் வரலாற்று வழியில் பல கட்டங்களை கடந்து வந்ததையும் பண்பாட்டில் வளர்ச்சிதை மாற்றங்களுடன் நடந்துள்ளதை பல வரலாற்று பேராசிரியர்கள் எழுதியுள்ளனர். ஆக இந்த நாவலந் தீவு ஒரு ஒற்றையாட்சி எனும் நடைமுறைக்கு ஆங்கிலேயன் வழி வந்துள்ளதை வரலாறு படிக்கும் யாரும் தெரிந்து கொள்ளலாம். நவீனத்தின் வரவே இதை உருவாக்க அடிப்படையாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் மக்களுடைய நாடுகளில் உருவானதை இங்கு மெல்ல மெல்ல ஆங்கிலேயனால் புகுத்தப்பட்டதே வரலாறு.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுற்று பிரிட்டிஷ் பாராளுமண்டதுடன் அவனால் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் இந்தியா இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டுப்பாட்டில் வந்தது. இங்கிருந்த முன்னேறிய வகுப்பு மெல்ல மெல்ல சட்டபூர்வமான வழிகளில் தங்களை அமைப்பாக்கிக் கொண்டு வந்தன. ஆங்கில அதிகாரி ஒருவனால் இது கவனிக்கப்பட்டதுடன் அவனே முன்வந்து உருவாக்கியதுதான் இந்தியா தேசிய காங்கிரஸ், இவ்வமைப்பு மெதுவாக ஆங்கில ஆட்சியுடன் தனது கோரிக்கைகளை வைத்து நிறைவு செய்து கொண்டன. இந்த அமைப்பு மிதவாத தீவிரவாத ஆட்சிகளுடன் பயணித்து வந்தது. முடிவில் 1947ல் தனது அதிகாரத்தை சுதந்திரம் என்ற பெயரில் பெற்றுக் கொண்டது. முஸ்லீம்களும் சமகாலத்தில், தங்களை அமைப்பாக்கிக் கொண்டு காங்கிரசுடனும் தனித்தும் சேர்ந்தும் தனது நடவடிக்கைகள் மூலம் தனி நாடு அடைந்தது. வரலாற்றில் மொழி வழி தேசம் அதாவது மாநிலம் அமைக்க இங்கொன்றும் அங் கொன்றுமாக கோரிக்கைகள் எழுந்தன. அவை கண்டு கொள்ளப் படவில்லை. ஏன் காங்கிரஸ் தனது கட்சி அமைப்புகளான மொழி வழியிலே பின் நாட்களில் அமைத்துக் கொண்டது வரலாறு.

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு நான் மட்டுமே பிரதிநிதி என காங்கிரசும் காந்தியும் கொண்ட உரிமையானது அனைத்து மொழி வாழ் மக்கள் தங்களுக்கென ஒரு தேசம் அமையாத நிலை எய்தினார். இவர்கள் அனைவருக்கும் பொது எதிரியாக இருந்தது ஆங்கில ஏகாதிபத்தியமே. ஆனால் வளர்ந்து வந்து கொண்டிருந்த வட இந்தியா வணிக தரகர்கள் பொருள் உற்பத்தியிலும் பங்கு கொண்டனர். இது 1825 வாக்கிலே நடக்கத் துவங்கியது. இவர்கள் புதிய உற்பத்திப் பொருட்களை இந்தியாவெங்கும் பரப்பவும் வணிகர்களாகவும் வளர்ந்து வரும் புதிய வங்கித் தொழிலில் சார்பாளர்களாகவும் ஆங்கிலே யனுக்கு தேவைப்படும் கச்சாப் பொருள் சேகரிக்கும் தரகர்களாகவுமே இருந்தனர். இவர்களே பின் நாட்களில் தொழில் முதலாளிகளாக உருவாகினர்.

இவர்கள் ஆங்கில முதலாளிகளுடன் மோதல் போக்கையும் உறவாடியும் தங்களை வளர்த்துக் கொண்டனர். இவர்களே காங்கிரஸ் கட்சியின் திசை வழியைத் தீர்மானித்தனர். உள்நாட்டில் தங்களை இந்துக்களின் பிரதிநிதியாகவும் விடுதலை வேட்கை உடையவர் களாகவும் மக்களின் போராட்டங்களுக்கு தலைமை ஏற்கும் பாத்திரத்தை மிகத் திறமையாக காங்கிரசை தங்களின் முகமாக்கினர்.

இவர்களின் உள்நாட்டுப் பங்காளியான முஸ்லீம் வகுப்பாரது அச்சத்தை மோதலாக்கி இந்த நிலப் பரப்பிற்கு தீராத தலைவலியையும் உண்டாக்கினார். மக்களது போராட்டங்களுக்கு தலைவணங்கி ஆங்கிலேயன் தவணை முறையில் அதிகாரங்களை பரவலாக்கி முடிவில் 1935 அரசியல் அமைப்புச்சட்டத்தை உருவாக் கினான். இதில் தனது நலனை மிக எச்சரிக்கை உணர்வுடன் பாதுகாத்துக் கொண்டான், தனது கடந்த கால அனுபவங்களை கொண்டு இந்த துணைக்கண்டம் தனது கட்டுப்பாட்டில் என்றென்றும் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் உருவாக்கிய இதே சட்டங்களை தங்களது நலனுக்கு ஏற்ற வகையில் 1950ல் இந்திய அரசியல் அமைப்புச்சட்டமாக்கிக் கண்டதே இந்தியப் பெருமுதலாளிகளது வெற்றி. இதை காங்கிரஸ் கொடுத்து போராடிய மக்களுக்கு இன்று வரை சரியான மாற்று கிட்டவில்லை.

இன்று இருக்கக் கூடிய சிக்கல்கள் ஏராளம். ஆனால் ஆளுநருக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கும் நடக்கும் போராட்டங்கள் தேவையா? இந்த அதிகாரக் குவியல் எப்படி ஒன்றியத்திற்கு கிட்டியது? ஒரு துணைக் கண்டத்தை ஒற்றைத் தன்மையுடனே பார்க்கும் போக்கு யாரால் ஏற்கப்படுகிறது? அனைத்து மொழிவழி மக்களுக்கும் தங்களது இறையா ண்மையுடன் ஒரு கூட்டமைப்பில் செயல்படாது போவது எப்படி?

இந்த கேள்விக்கு விடை வடநாட்டு பெரு முதலாளிகள் இந்தியாவை தங்களது நலத்திற்காக இடமாக பார்த்து நாடு விடுதலை அடைந்தாலும் தங்களது நலன்கள் பாதிக்காத வகையில் குடியரசு ஆட்சியை அமைத்து கொண்டனர். இதற்கு ஏற்றார் போல் இந்தியா அரசியல் அமைப்பும் அமைக்கப்பட்டது. இதை வரும் தொடர்களில் பார்ப்போம்.

-  முத்து முருகன்