ஆசனவாய் சிரைக் குழாய்கள் உப்பிப் பெருப்பதுதான் ‘மூலம்’ எனப்படுகிறது. சாதாரணமாக நம் உடம்பிலுள்ள எல்லா சிரைக் குழாய்களிலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்திற்கு செலுத்துகின்றன. இரத்தம் சிரைக்குழாய்களில் அநாவசியமாகத் தேங்கி நிற்பதைத் தவிர்க்கின்றன. ஆனால், நமது வயிற்றிலிருந்து ஆசன வாய்க்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையிலேயே அமையப் பெறவில்லை. இதனால் ஆசனவாய் சிரைக் குழாய்களில் சிறிது அழுத்தம் அதிகமானால்கூட அவற்றில் ரத்தம் தேங்கி, ஆசன வாயில் சிறிய பலூன் மாதிரி உப்பிவிடுகிறது.

அடிக்கடி மலச்சிக்கல் உண்டானால் ‘மூலம்’ வரும். சிறுநீர்த்தாரை அடைப்பு, பிராஸ்டேட் வீக்கம், கொழுத்த உடல் போன்றவற்றால் ‘மூலம்’ உண்டாகும். வயிற்றில் தோன்றும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் கழலைகள் காரணமாகவும் மூலம் வரும். கர்ப்பிணிகளுக்கு கருப்பையில் வளரும் குழந்தை மலக்குடலை அழுத்துவதால், மூலம் தற்காலிகமாக உண்டாகும். சிலருக்கு பரம்பரை அம்சத்தினால் ஆசனவாய்ச் சிரைக்குழாய் சுவர்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலம் வரலாம்.
.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்