நாள்: 01-05-2013,புதன் கிழமை மாலை 6 மணி
இடம்: கம்பன் உயர் நிலைப்பள்ளி , ஒ.என்.ஜி.சி எதிர்புறம், சியோன், மும்பை

|ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலக தொழிலாளர்களுக்கான தினமாக, மே முதல் நாள் அடையாளப்படுத்தப்பட்ட பிறகு, தொழிலாளர்கள் நலன் தொடர்பான சட்டங்கள் கொண்டுவருவதற்கான விவாதங்கள் உலக நாடுகள் பலவற்றிலும் முன்னெடுக்கப்பட்டன. இந்தியாவில் அப்படியான சட்டங்கள் கொண்டுவருவதற்கும், ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டங்களில் தொழிலாளர் நலன்கள் சார்ந்து புதிய பிரிவுகளைக் கொண்டு வருவதற்கும் மிகப்பெரும் பங்கு வகித்தவர் அண்ணல் அம்பேத்கர்.!

தலைப்பு :-

1. இந்திய தொழிலாளர்களுக்கான சட்டங்களில் அண்ணல் அம்பேத்கரின் பங்கு

2. சர்வேதச தொழிலாளர் தினம்

3. உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள்

4. தனியார் துறையில் இட ஒதுக்கீடு (சம பங்கீடு)

5. மும்பை (தமிழ் வழி) மாநகராட்சி பள்ளி தனியார் மயமானால், அதனால் விளையும் பாதிப்பு.

மேலே குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

ஒருங்கிணைப்பு :- சிரிதர், விழித்தெழு இயக்கம், மும்பை

தொடர்புக்கு : து. சிரிதர் -09702481441, தங்க பாண்டியன் -9821072848 , பன்னிர் செல்வம் 9619888966

Pin It