சமூக உரிமை போராளி இம்மானுவேல் சேகராரின் நினைவு நாளில் (11.9.13).

1. பட்டியல் இன மக்களின் பிரச்சனைகளும், சவால்களும்.

2. பட்டியல் சாதியினர் தொழில் முதலீட்டு ஆலோசனைக் குழுமங்கள் தொடங்கப்பட வேண்டும் என்கிற தலைப்பில் கலந்துரையாடல் ..

இடம் : கம்பன் உயர் நிலைப்பள்ளி, ONGC எதிர்புறம், சயான், மும்பை | நாள் &நேரம் : 11.9.13 | 7 மணி

***

பட்டியல் சாதியினரின் பொருளாதார வளர்ச்சி, அரசுகளின் ஈடுபாடு இல்லாமல் அறவே முடியாது என்று எண்ணாமல் அரசுகளின் பங்களிப்பு இல்லாமலும் நமது பொருளாதாரத்தை, பட்டியல் சாதியினர் வளர்த்தெடுத்க வேண்டும். தனியார் முனைப்போடு கூட்டு முயற்சியும் தேவை.

ஆகவே பட்டியல் சாதியினர் தொழில் முதலீட்டு ஆலோசனைக் குழுமங்களை உருவாகி பொருளாதார முதலீட்டுச் சிந்தனைகளை வளர்த்தெடுத்து வாய்ப்புகளுக்கு வடிவம் கொடுக்க முயற்சிக்கிறோம்.

முதலீட்டு வாய்ப்புகளுக்கான திட்டக் கருத்துருக்களை வகுத்து வசதி உள்ள பட்டியல் சாதியினரை இதற்கென்ற வழிகாட்டு மய்யங்களுக்கு அழைக்கும்போது, புதிய தொழில் முனைவோர் இனங்காணப்படுவர். தனியராக முதலீடு செய்யக் கூடிய தெம்பு இருந்தாலும், குழுமத் தொழிலாக நடத்தும்போது கிடைக்கும் வாடிக்கை வியாபார வாய்ப்புகள் போல, அது சிறப்பாக அமையாது.

எடுத்துக்காட்டாக:- ஒரு வாகனத்தை வாடகைக்கு விட்டு வாடிக்கை பெறுவது கடினம். ஆனால், பத்து பேர் இணைந்து ஆளுக்கு ஒரு காராக வாங்கி ஒரே குழுமமாக (Travel Agency) உருவானால், பத்து வண்டிகளுக்கும் ஒரே பெரிய நிறுவனத்தில் ஆண்டு குத்தகை ஒப்பந்தம் செய்து கொண்டு சீரான வருவாய் ஈட்ட முடியும்.

எ.கா :-

* அலுவலகப் பராமரிப்புப் பணிகள் * கணினி பராமரிப்பு சேவை * 5 - 10 மருத்துவர்கள் சேர்ந்து ஒரு மருத்துவமனை/சோதனைக்கூடம் (Lab) அமைத்தல் * 5 - 10 ஓய்வு பெற்ற பொறியாளர்கள் கூடி ஒரு கன்சல்டன்சி நிறுவுதல் * 10 பேர் சேர்ந்து ஒரே பெயரில் நகரின் பத்து இடங்களில் துரித உணவகம் பழமுதிர்ச்சோலைகள் நடத்துதல் *10 - 20 பேர் ஆளுக்கொரு செராக்ஸ் வாங்கி ஒரே இடத்தில் பெரிய கடையாக நடத்துதல் * 5 - 10 பொறியாளர்கள் சேர்ந்து கட்டடப் பணி (Building contract) எடுத்தல் * பத்து பேர் சேர்ந்து Real Estate செய்தல்.

இதுபோல் நூற்றுக்கணக்கான தொழில் முனைப்புகளில் பட்டியல் சாதியினர் இறங்க வேண்டும்... அதற்கான முயற்சியே  இந்த பட்டியல் சாதியினர் தொழில் முதலீட்டு ஆலோசனைக் குழுமங்களை அமைக்கும் முயற்சி.

- மும்பை விழித்தெழு இயக்கம்

Pin It