எவ்வளவு முடியுமோ அவ்வளவு
தொலைவாய்
ஞாபகங்களைத் தூரவீசு...
என்னை நினைவூட்டும்
எச்சங்களின் மிச்சங்களை
நெருப்பிட்டுக் கொளுத்து...
வெறுப்பின் சுவரெழுப்பி
நேச சன்னல்களை இறுக மூடு...
எல்லாம் முடிந்த
பின் கதவு திறந்து
வெளியே பார்...
உனைக் கண்டதும்
வாலாட்டும் குட்டிநாய்க்கு அருகே
அமர்ந்திருக்கும்
எனை என் செய்யலாம் என இப்போது முடிவெடு.
- இனியவன் காளிதாஸ்