உன்னை மொழிபெயர்க்கும்
கணங்கள்தோறும்
கைவந்து விடுகிறது
இறந்தகாலத்தை நிகழ்காலமாக்கும் யுக்தி
கசப்பு மருந்துக்குப் பின் தரும் இனிப்பென
உயிர் உறங்கும் மாயமும்
இரவுகளை உறங்கச் சொல்லும் இரகசியமும்
உன்னைத் தீட்டும் வரிகளால் ஆனவை
எழுத்துக்குள் கசிந்துருகி
நம்மீதான ஏக்கங்களை
பிரசவிக்கும்
உயிர் போகும் வலியில்தான்
இருக்கிறதென்
உயிர் வாழும் வழியும்
இவையெதையும்
அறியாமல்
எளிதாக கேட்டுவிடுகிறார்கள்
ஒரு காதல் கவிதையை.
- ந.சிவநேசன்