என்றோ ஒரு நாள்
யாரும் சற்று எதிர்பாராத
நொடிகளில் எங்களை விட்டு
சென்ற அம்மாவை
சுமந்துகொண்ட அந்த குளிர்பெட்டி
இடம்பெயர்ந்ததில்
காயம்பட்டு உடைந்த
பிளாஸ்டிக் குழாயில்
இன்றும் அம்மாவின்
இழப்பு
தழும்பென தங்கிக்கொண்டது

          ***

ஆற்றாமை

இறந்து கொண்ட
உடல்களுக்கு
வெளியில் சேர்ந்து
தீக்குளிக்கிறது ஆக்ஸிஜன்
தன் ஆற்றாமையை எண்ணி

- சன்மது

Pin It