0 23.02.2012 தேதி அன்று அதிகாலை சென்னை வேளச்சேரியில், இரண்டு வங்கி கொள்ளைகளில் தொடர்புடையதாக குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்கள் ஐந்து பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.  இந்த மோதல் கொலைகளை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த போதிய வாய்ப்புகள் இருந்த நிலையில், காவல் துறையின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் ஒரே நோக்கில் இப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளது.  இந்த வகையான கொலைகளை நீதிமன்றத்தின் அதிகாரத்தில் அத்துமீறி தலையிடும் காவல் துறையின் போக்காகக் கருத வேண்டியுள்ளது. 

பல முறை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இந்த மாதிரியான மோதல் கொலைகளை தவிர்க்க போதிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ள போதிலும் அவற்றை நிராகரித்து காவல் துறையே தண்டனை தரும் அதிகாரத்தை கையில் எடுப்பது ஜனநாயகப் பண்புகளுக்கு எதிரான போக்காக உள்ளது.

மனித உரிமை, ஜனநாயக இயக்கங்கள் மோதல் சாவுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக அல்ல. அரச வன்முறை சமூகத்தின் ஜனநாயகத்தை சிதைத்துவிடும் என்ற கவலையின் காரணமாகவே ஆகும். 

எனவே மேற்கண்ட மோதல் சாவில் தொடர்புடைய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும. எதிர்காலத்தில் மோதல் சாவுகளை தவிர்க்க போதிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வேண்டுகிறது.

முனைவர் வி.சுரேஷ்(PUCL)                                                                                                           ச.பாலமுருகன்(PUCL)
மாநில தலைவர்                                                                                                                                  மாநில செயலர்
கைபேசி-94442-31497                                                                                                                          கைபேசி-94432-13501

Pin It