அண்மையில் நடந்து முடிந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் யாரோடு கூட்டணி வைக்கலாம் என்ற கருத்து திமுக உறுப்பினர்கள் மத்தியிலி ருந்து வந்தபோது உறுப்பினர்கள் சிலர் பாஜகவோடு கூட் டணி வைக்கலாம் என கருத்து சொல்ல... அதற்கு பதிலளிக் கும் வகையில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, “பாஜக ஒரு மதவாதக் கட்சி. பாபரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் கலவரங்கள் போன்றவை மீண்டும் வேண்டுமா?'' எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

“கருணாநிதியின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது. குஜ ராத்தில் இஸ்லாமியர்கள் கூட மோடியை ஏற்றுக் கொள்கி றார்கள்...'' எனப் பேசியிருக்கி றார் பாஜகவின் தமிழக முன் னாள் தலைவர் இல. கணேசன்.

இஸ்லாமியர்கள் மோடியை ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற தோற்றத்தை வட மாநில பாஜ கவினர் ஏற்படுத்த முயல்கின்ற னர். அதையே இங்கு பிரச்சார மாக முன் வைக்கிறார் இல. கணேசன். ஆனால் குஜராத் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறு பான்மையினருக்கு நரேந்திர மோடியின் மீதான வெறு ப்போ, கோபமோ இன்னும் குறையவில்லை என்பதை குஜ ராத் ஏடுகள் வெளியிடும் செய் திகள் தெளிவுபடுத்துகின்றன.

கோத்ராவில் உண்ணாவிரத நாடகமாடி முஸ்லிம்களின அபிமானத்தைப் பெற, “இந்து - முஸ்லிம் சமுதாயத்திற்கு இடையே நல்லிணக்கம் என்ற பாலம் அமைப்பேன்...'' என்று மேலும் பேசியதை குஜராத் முஸ்லிம்கள் ரசிக்கவில்லை. "சாத்தான் ஓதும் வேதம்' என்றே மோடியின் பேச்சை அவர்கள் எடுத்துக் கொண்டனர்.

ஆனால், மோடியை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்ற பிரச்சாரத்தை இல. கணேசன், சோ போன்றவர்கள் குற்ற உணர்வில்லாமல் இங்கே சொல்லி வருகின்றனர்.

இவர்கள் தரையில் புரண்டு அழுதாலும் மோடியை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவோ, பிறசமய நடுநிலை மக்கள் நல்லவர் என்றோ ஒருபோதும் சொல்லப் போவதில்லை. நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக மோடி யின் பெயர் நீதிமன்றங்களின் விமர்சனத்தால கெட்டு வருகிறது.

மோடி இன்றுவரை முஸ்லிம் விரோதத்தை கடை பிடித்து வருகிறார் என்பதற்கு குஜராத் கலவரத்தில் இடிக்கப் பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு இழப்பீட்டை தர மாட்டேன் என்று பிடிவா தம் காட்டி வருவதே சான்று!

சமூக ஆர்வலர்கள் நீதிமன் றத்தில் வழக்குத் தொடர்நது, இழப்பீட்டைத் தர மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினால்... "இது அரசி யல் சாசனத்திற்கு எதிரானது' என்கிறார் மோடி.

இப்படி பட்டவர்த்தனமாக முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தும் மோடி எப்படி நல்லவராக இருப்பார்? அவரை முஸ்லிம் சமுதாயம் அவரை எப்படி ஏற்றுக் கொள்ளும்?

தங்களின் பிரச்சாரம் உண் மைப்படுத்தப்பட வேண்டும் என்று இல. கணேசன், சோ வகையறாக்கள் ஆசைப்பட் டால் முஸ்லிம்களின் வழிபாட் டுத்தலங்களை மோடியே முன் னின்று புனர்நிர்மானம் செய்து தர வேண்டும் என்று மோடிக்கு கோரிக்கை வைக்கட்டும். அதை விடுத்து - உண்மையை எடுத் துச் சொல்லும் கருணாநிதி போன்றவர்களின் மீது பாய் வது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

Pin It