(பெரும்பான்மைவாத அடிப்படையிலான செயல் திட்டங்கள் குறித்து நரேந்திர மோடியின் ஒன்றிய அரசு கவனமாக இருக்க வேண்டும்; ஏன்? - ஹர்ஷ் மந்தர்)
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் புத்தெழுச்சியான, முத்தாரமான முதல் 100 நாள் ஆட்சிக் காலத்தில் நல் எதிர்பார்ப்புடன், அது என்னென்னவெல்லாம் செய்திடக்கூடும் எனக் கேள்விக்குள்ளாக்காது கருத்தாளர்கள் பெரிதும் அமைதி காப்பார்கள்.
கோட்பாடு வழிப்பட்ட முன் அறிகுறிகள் :
2019-இன் கோடைத் தேர்தலில் மோடியின் முத்திரைப் பதித்த வெற்றி குறித்து நான் முற்றிலும் வேறான மனோநிலையில் உள்ளேன். நம்பிக்கையுடன் கூடிய நல்வாய்ப்பிற்கு மாறாகப் பெரும் அமைதியற்ற மனநிலையை உணர்கிறேன். இது மேலும் இந்திய ஒன்றியத்திற்கு உள்துறை அமைச்சர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவு செய்யப்பட்டதை எண்ணும் போது என் அமைதியின்மை அதிகமாகிறது.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை கட்ட விழ்த்துவிடப்படும் பின்னணியில் வேளாண்மைத் துறை யிலிருந்து கால்நடை பாதுகாப்பு, பால் உற்பத்தி ஆகிய வற்றைப் பிரித்துத் தனித்துறையாக ஆக்கப்பட்டு, வெறுப்பு ணர்வை ஊட்டும் பரப்புரை செய்பவர், இந்துத்துவா அரசியல் நிலைபாடு கொண்டவர்களான மூன்று அமைச் சர்கள் பொறுப்பின்கீழ் கொண்டுவருவது எனக்குக் கவலையளிப்பதாக உள்ளது.
இதிலிருந்து இவர்கள் தரும் செய்தி தெள்ளத் தெளி வாகத் தெரிகிறது. எதுவரினும் வரட்டும் என மோடி அரசு பெரும்பான்மை வாதம்சார் வன்மமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்றதைக் காட்டிலும், இன்னும் பெருமளவுக்கு இப்போது வெளிப் படையாகக் காட்டிக் கொள்கிறது. குடியுரிமை அளித்தல், சம்மு-காசுமீர், இந்துத்துவ வன்முறை, இராமர் கோவில், வெறுப்புணர்வைப் பரப்பல் போன்றவை கடுமையான இடர்களுக்கு வழிகோலும் தன்மையுடையவை. இவற்றில் தன் அணுகுமுறை வெவ்வேறு வகைகளில் வெளிப் படையாகக் கையாளப்படும். இந்த அரசு, நாட்டில் வர லாற்றைப் புதிதாகத் திருத்தி எழுதுதல், இடது முற்போக்குடைய பல்கலைக்கழகங்களின் அறி வியல் கண்ணோட்டத்தைக் கைவிடச் செய்தல், இன்னும் கொடுமையாகும். பசுப் பாதுகாப்புச் சட்டங்களைத் திருத்துதல் போன்ற செயல்களை மேற்கொள்ள உரிமை கொண்டதாகக் கருதுகிறேன்.
ஒரு முடியக்கூடிய செயல்முறை :
எனவே இங்கு என் பட்டியல் வேறானது. இந்த அரசு செய்யாது என நம்புகிறேன். ஆனாலும் அதைச் செய்துவிடுமோ என்று பெரிதும் அஞ்சுகிறேன். இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்தை மாற்றிடுவர் என அஞ்சவில்லை. ஆனால் அதன் சிறப் பியல்புகள் அழிக்கப்படும் வேலைகள் செய்யப்படும். வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் பெருகிவிடும் என்பதுதான் மிகவும் அச்சமூட்டுகிறது. மேலும் வன்முறையுடன் கூடிய வெறுப்புணர்வு தூண்டிவிடப்படும். தான்தோன்றித் தனமாகச் சட்டத்திற்கு முரணாகக் கொலை செய்து, குலைத்துவரும் சமூக நல்லுறவின் பகுதியாக ஆகி விடக்கூடாது. அதனால் மேலும் குறைந்த அளவே பயன்பெறும் நிலைமைக்கு இசுலாமியர்களை உள்ளாக்கி அவர்களை நாளும் அச்சத்தில் உறைந்திடும் நிலைக்குத் தள்ளிவிடக்கூடாது.
உலகின் எப்பகுதிகளிலும் இல்லாத அளவுக்கு அசாமில் தேசியக் குடிமக்கள் ஆவணம் தயாரிக்கப்படுவது மக்களை நாடற்றவர்களாக ஆக்கிவிடும் என அஞ்சுகிறேன். இந்த நாடற்ற மக்களாகச் சொல்லப் படுபவர்களை வங்க நாடு ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை. எனவே அவர்கள் அசாமில்தான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பர்; தடை செய்யப்பட்டவர்கள் வைக்கப்படும் மய்யம் போன்ற ஏதிலிகள் முகாம்களில் அப்பகுதி மக்களுக்குரிய உரிமை முற்றிலும் பறிக்கப் பட்டவர்களாக இருப்பர். அவர்கள் மயன்மார் ரோகிங்கியா இசுலாமியர் நிலைக்குத் தள்ளப்பட்டு சமூக வன் கொடுமைக்குள்ளாக்கப்படுவதுடன் அரசு ஒடுக்குமுறைக் கும் தொடர்ந்து உள்ளாக்கப்படுவர். இந்தக் குடியுரி மைத் (திருத்த) வரைவு சட்டம் நிறைவேற்றப்பட்டால் விலக்கப்பட்ட வங்காள இந்துக்கள் குடிமக்களாகச் சேர்க்கப்பட்டு இசுலாமியர்கள் மட்டும் குடியுரிமையற்ற வர்களாக ஆக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுவிடும்.
இது பல வகுப்பு மக்களிடையே அச்சத்தை விளை விக்கும்; பிளவை ஏற்படுத்தி நாடு பிரிவினையின் போது இருந்த சீர்கெட்ட நிலைமைக்குத் தள்ளும். மேலும் இது எந்த நம்பிக்கையும் கொண்ட ஒவ்வொரு வருக்கும் சமனான குடியுரிமை என்ற மய்யக் கோட் பாட்டைக் கொண்ட அரசமைப்புச் சட்டத்திற்கு உறுதி யாக சாவு மணியாகிவிடும்.
அசாமில் பல இலக்கக்கணக்கான மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலைமை இந்திய ஒன்றி யத்தின் பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. குறிப்பாக வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவு ஆவணம் மற்றும் குடியுரிமை வரைவுச் சட்டம் ஆகியவற்றின் கொடுமையான இணைப்பு அங்கிருந்து தொடங்கி இந்திய ஒன்றியத்தின் பல இலட்சக்கணக்கான குடி மக்களான இசுலாமியர்களின் எதிர்காலத்தைச் சூறைச் சுழற்சியில் அமிழ்த்தி இரக்கமற்ற, பிளவுப்பண்பு கொண்ட அரசு நிறுவனங்களால் நசுக்கப்படுவார்கள்.
குடியுரிமையையும் சமயத்தையும் போலியாகத் தொடர்புபடுத்தியுள்ளது போன்று (அரசமைப்புச் சட்டத்திற் கெதிராக) சமயத்துடன் பேரச்சத்தைக் கட்டவிழ்த்து விடும் கொடும் செயல்களைப் போலியாகத் தொடர்புபடுத்தி மேலும் கொடுமைகள் நடத்தப்படவுள்ளது. அனைத்து இந்துத்துவக் கும்பல்களும் பேரச்சம் ஏற்படுத்தும் கொடுஞ் செயல்கள் மறைக்கப்பட்டு ஏதும் நடக்காததாகக் காட்டப் படும். அதேவேளை பிரகயாதாக்கூர், கல்பர்கி போன்ற பகுத்தறிவாளர்கள், கவுரி லங்கேசு போன்ற முற்போக்கு ஊடகவியலாளர்கள் ஆகியோரின் கொலையாளிகள் கொலைக்குற்றக் கறையிலிருந்து விடுவிக்கப்படு வதுடன் கொடுஞ்செயல் புரிந்ததாக இசுலாமியர்கள் தடை செய்யப்படுவது இன்னும் அதிகரிக்கும்.
கால்நடை பராமரிப்பு அமைச்சர்களாக உள்ள மூவரும் பசுவதைக்கு எதிராக இன்னும் கெடுபிடியானதும், கொடுந் தண்டனைக்குரியதாகவும், சான்றுத் தரங்கள் நீர்த்துப் போவதாகும் வகையில் சட்டங்களை வடிவமைப்பார்கள். இதைக் கொண்டு பசுக் காவல் கும்பல்களால் இசுலாமியர்கள், தலித்துகள் மேலும் அச்சுறுத் தப்பட்டுத் துன்புறுத்தப்படுவதுடன் தான்தோன்றித் தனமாக தண்டனைக்குள்ளாக்கப்படுவர்.
மேவாட் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் பால் பண்ணைகள் நடத்தி வறுமையில் வாடும் இசுலாமிய விவசாயத் தொழிலாளிகள் அத்தொழிலை விட்டகலும் நிலைக்குத் தள்ளப்பட்டு வேறு வகையில் வாழ வகை யற்றவர்களாக ஆக்கப்படுவர். மாட்டுத் தோல் உரித்தல் வேலையின்றி பிற வேலைகளைத் தேடுவதற்கு இடரு றுவர். வேளாண் பொருளாதாரம் மேலும் சரிவுறும். பழங்குடி, தலித், இசுலாமிய வகுப்பு மக்கள் அவர்களுக் குப் புரதச் சத்து கிடைக்கக்கூடிய எருமை மாட்டிறைச்சி உண்ணக் கூட இயலாதவர்களாகி நலிந்த ஏழை மக்களாகும் துன்ப நிலைக்குத் தள்ளப்படுவர்.
காசுமீர் பள்ளத்தாக்கில் போராட்டங்களுக்கு எதிராக இன்னும் கொடுமையான (இராணுவ) படைத்துறை ஒடுக்குமுறை கொழுந்துவிட்டெரியும். அரசமைப்புச் சட்டத்தின் காசுமீருக்கு சிறப்பு நிலை அளிக்கும் விதி 370-ஐயும், அது தனக்கென்ற குடிமகன் பண்பு கொண்ட ஓர் அரசமைப்பாக நிலைத்து நிற்க வழிகோலும் விதி 35ஏ-ஐயும் வஞ்சகமாக நீக்கிட முனையும் ஒன்றிய அரசின் திண்ணமான நடவடிக்கைகளுக்கெதிராக எழும் மக்கள் போராட்டங்கள் தீப் பிழம்பாய் வெடித்தெழும்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே இராமர் கோவில் கட்டுவதற்கு ஒன்றிய அரசு சட்ட வழிமுறைகளையே பின்பற்றலாம். வகுப்பு வாதத்துடன் இணைத்தே இச்செயலை மேற்கொள்வது வறண்ட காடுகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்று, 1992இல் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டதை அடுத்து இசுலாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையான ஒடுக்குமுறைகளும், அவர்கள் சமுதாயத்திற்கெதிராக அவர்கள் பண்பாடு இழிவாக்கப் பட்டதும் நாட்டில் எல்லா மூலைகளிலும் பரவிடும்.
ஒரு வரலாற்று மீள்பார்வை :
இராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் அதன் தன்மை யிலான இந்திய வரலாறை நாடெங்கிலுமுள்ள பாடநூல் களில் அடிபிறழாமல் திருத்தி பல இலக்கக்கணக்கான மாணவர்களின் மனங்களில் பதித்திடுவதற்கு ஒரு மிகப் பெரும் திட்டம் உருவாக்கப்படும். 21ஆம் நூற்றாண்டு வரையிலான அறிவியல் கண்டுபிடிப்புகளனைத் தையும் எதிர்நோக்கி பண்டை இந்தியா ஏற்கெனவே கண்டுபிடித்திருந்தது எனச் சொல்லி அதைப் பொற்காலம் என்று கூறும். தலித்துகளுக்கும் புத்த சமயத்தினருக்கும் இழைக்கப்பட்ட பார்ப்பனிய வன்கொடுமைகள் முற்றும் மறைக்கப்படும். இடைக்கால இந்தியாவில் இசுலாமிய ஆட்சியாளர்கள் பாதுகாப்பற்ற இந்து குடிமக்களைக் கொடுமைப்படுத்தினர்; அவர்கள் சமயத்தை இழிவு படுத்தினர் அதை இருள் நீக்கப்படாத ஒருமுகப்பட்ட காலமாக மாற்றப்படும்.
புதிதாக ஒரு இந்திய விடுதலைப் போராட்டம் புனையப்பட்டு, எவராலும் அறியப்படாத இந்துத்துவப் பற்றாளர்கள் மற்றும் சர்தார் பட்டேல், லால் பகதூர் சாஸ்திரி-ஏன் மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் இந்துத்துவ முன்னோடி புனிதர்கள் ஆக்கப் படுவர். இந்து-இசுலாமிய ஒற்றுமைக்கான காந்தியின் வாழ்நாள் முழுவதுமான போராட்டமும், அதற்காகவே இந்துத்துவா கோட்பாட்டாளர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டதும் வரலாற்றிலிருந்து நீக்கப்படும்; அழிக் கப்படும்.
பல்கலைக்கழகங்களில் முற்போக்குச் சிந்தனைகளும் மாற்றுக் கருத்துக்களும் காவு கொடுக்கப்படும். மாற்றத் திற்கான சமூக இயக்கங்கள், சமூக நல நிறுவனங்கள், நிதி ஆதாரமற்றவையாகவும் குற்றமற்றவையாகவும் மாற்றப்படும். உயர்நிலைக் குடிமைப் பணிகள் உள்ளிட்ட பொது நிறுவனங்கள் (இடைநிலை நுழைவு முறைகளும்) லோக்பால், இந்திய ஒன்றிய மய்யப் புலனாய்வுத் துறை, தேசியப் புலனாய்வு நிறுவனம், ஏன் உச்ச, உயர் அறமன்றங்களும் இந்துத்வா ஆதரவாளர்களைக் கொண்டு மொத்தமாக நிரப்பப்படும். ஆயுதப் படைகளும் இந்தப் (பாதுகாப்புத் துறை) போக்கிலிருந்து தப்பிவிட முடியாது.
தொழிலாளர்கள், நிலம் கையகப்படுத்தப்படுதல், சுற்றுச்சூழல் சட்டங்கள், வங்கி ஒழுங்குமுறைகள் அனைத் தும் ஒரு குறிப்பிட்ட பெரிய வணிக வர்த்தகக் குழுக் களாகத் திருத்தியமைக்கப்படும். மேலும் பொது நிலைப் பாடு கொண்ட பண்பாளர்களை நீக்கிவிட்டு அரசை மகிழ்விப்பவர்களைக் கொண்டதாகவும், பெரும்பான்மை வாதம் மற்றும், வணிகம்சார் கொள்கை கொண்ட ஊடகமாக ஆக்கப்படும்.
இவ்வளவு பெருமளவு வாக்காளர்கள் என்ன காரணங்களுக்காகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறித்து விரிவாக நாம் விவாதிக்கலாம். இந்தத் தேர்தல் வெற்றி பா.ச.க.வின் கோட்பாட்டு முன்னவரான இராஷ்டிர சுயம்சேவக் சங்கத்தின் மூலத் திட்டத்தை நிறைவேற்றி இந்திய ஒன்றியத்தைக் காலத்திற்கும் மாற்றியமைப்பதற்காகத் தரப்பட்டது என மோடியும் பா.ச.க. கட்சியும் கருதுவர் என்பதில் எவ்வித அய்யமு மில்லை.
நிலைமை இப்படியிருக்க, இந்தப் புதிய அரசு என் விருப்பப் பட்டியலில் உள்ளவற்றை செய்ய வேண்டு மென்பதல்ல. ஆனால் இது எதைச் செய்யக்கூடாது என்பதுதான் நரேந்திர மோடி, அமித்சா அரசு இவற்றில் சிலவற்றை அல்லது எல்லாவற்றையும் நிறைவேற்று மெனில் நாம் விட்டுச் செல்லும் நாடு நம் வருங்கால மழலைச் செல்வங்களுக்கு விடுதலை, அறநெறி அல்லது குறைந்த அளவிலாவது இயல்பான அன்பு டைமை கொண்ட நாடாக தொடர்ந்து இருக்காது. எனக்கு இதில் மிகச் சிறிதளவுதான் நம்பிக்கையுள்ளது. இருப் பினும் என் கணிப்பு தவறு என்றாகுமெனில் நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தவனாவேன்.
நன்றி : ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், 13.6.19
தமிழில் : இரா.பச்சமலை