சிலம்பும் நீதியும்

“கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரிப்பதே மெய்”

என்பதுதான் கண்ணகிக் காப்பியமான சிலப்பதிகாரத் தின் வழக்குரை காதையின் சாரம். தீர விசாரணை செய்யாததால்தான் கோவலன் கொலை! கோவல னுக்குத் தவறான தீர்ப்பு அளித்த அதிர்ச்சியால் பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் தானே உயிர் துறக்கிறான். கணவனை இழந்த திடீர் அதிர்ச்சியில் அரசி கோப் பெருந்தேவியும் தானே மடிகிறாள்! மதுரை மூதூரைத் தீக்கிரையாக்குகிறாள் கண்ணகி!

இந்தச் சிலப்பதிகார வழக்குரை காதை அடிப்படை யில்தான், இப்போது குற்றவியல் வழக்குகளில் சான்றுரைச் சட்டத்தை (Evidence Act)) அடிப்படையாகக் கொண்டு விசாரித்துத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

மேலும், குற்றம் என்பதை நியாயமான எல்லா அய்யத்திற்கும் அப்பாற்பட்டு மெய்ப்பிக்கப்பட்டால் ஒழிய, தண்டனை வழங்கப்படுவதில்லை. அதனால் தான், ‘99 குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்டால்கூட, ஒரே ஒரு குற்றமற்றவர் கூடத் தவறாகத் தண்டிக்கப்படக் கூடாது’ என்பதும் நீதி வழங்கும் நடைமுறையில் ஒரு அடிப்படையாக உள்ளது.

குற்றம் என்றால் என்ன?

குற்றம் எந்தச் சூழலில் நடைபெறுகிறது?

நன்னடத்தைச் சட்டம் என்றால் என்ன?

அந்தச் சட்டம் எப்படிப் பயன்படுகிறது?

என்று முன் கட்டுரையில் கண்டோம்.

நன்னடத்தையின் பேரில் விடுதலைக்கு

ஒரு குற்றவாளியை நன்னடத்தைச் சட்ட அடிப் படையில் ‘விடுதலை’செய்ய நீதிபதி முடிவு செய்து விட்டால், அந்தக் குற்றவாளி நீதிமன்றம் கூறும் தொகைக்கு ஒரு உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். இந்தக் குற்றவாளிக்காக இதேபோன்ற உறுதிமொழிப் பத்திரத்தை இரண்டு பிணையாளரும் எழுதிக் கொடுக்க நீதிபதி ஆணையிடலாம்.

இதே குற்றவாளியும், பிணையாளர்களும் இந்த நீதிமன்ற எல்லைக்குள் நிலையான முகவரியில் வசிக்க வேண்டும். குற்றவாளி நன்னடத்தையுடன் தன் வாழ்வுக்குப் போதிய வருவாயை நேரிய முறையில் ஈட்டுபவராக இருக்க வேண்டும். மேற்கூறிய கட்டுப் பாடுகளை 3 ஆண்டுகளுக்கு மிகாத கால எல்லையில் குற்றவாளி கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவராவார். இந்த 3 ஆண்டுக்கால எல்லைக்குள் குற்ற வாளி மேற் கூறியவற் றை மீறினால், அவர் எந்தக் குற்றத்திற்காக நீதிமன்றம் வந்தாரோ அதே குற்றத்திற்காக மீண்டும் சிறைத்தண் டனை பெற வேண்டிய நிலைமை வரும்.

நன்னடத்தை அலுவலர்

நன்னடத்தைச் சட்ட அடிப்படையில் ஒரு வழக்கை முடிவு செய்யும் நேரத்தில், குற்றவாளியின் நன்னடத் தை பற்றிய முன் விசாரணை அறிக்கையை நன்ன டத்தை அலுவலர் மூலம் பெற்று, அந்த அறிக்கை யினைப் பரிசீலித்து நீதிபதி தீர்ப்பு எழுதுவது பொதுவான நடைமுறை. இப்படி நன்னடத்தைச் சட்ட அடிப்படையில் குற்றவாளியை ‘விடுதலை’ செய்யும் நீதிபதி, குற்ற வாளியை ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை நன்னடத்தை அலுவலரின் மேற்பார்வைக்கு உட்படுத் தலாம். இந்த மேற்பார்வை என்பது குற்றவாளியின் நலன் மற்றும் சமுதாய நலன் கருதிச் செய்வதாகும். இந்த மேற்பார்வைக் காலத்தில் குற்றவாளியின் நன்னடத்தை மேம்பட-அவர் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடாமல் இருக்க நன்னடத்தை அலுவலர் தொடர்ந்து முயற்சி செய்வார்.

இழப்பு ஈடு

குற்றவாளியின் குற்றச் செயலால், பாதிக்கப்பட்ட வரின் பாதிப்பு, இழப்புகட்கு ஏற்ப, இழப்பு ஈட்டைக் கொடுக்குமாறு நீதிபதி குற்றவாளிக்குக் கட்டளை இட முடியும்.

கண்ணுக்குக் கண் - பல்லுக்குப் பல்

ஒருவன் குற்றவாளி என மெய்ப்பிக்கப்பட்டால் குற்றத்திற்கு ஏற்பத் தண்டனை அனுபவிப்பதுதானே ஞாயம்! நீதி! குற்றவாளியின் குற்றத்திற்குத் தண்டனை இல்லை என்றால் பிறகு குற்றம் செய்ய யார் பயப் படுவார்? நாட்டில் அமைதி எங்கே நிலவும்? என்று சாதாரணமாக எல்லோருக்கும் கேட்கத் தோன்றும். “கண்ணுக்குக் கண் - பல்லுக்குப் பல்” என்ற பழைய தண்டனைத் தத்துவம்தான் - பக்குவம் இல்லாத மன நிலைதான் குற்றம் செய்யக் காரணம். குற்றவாளி யைச் சிறையில் அடைப்பதன் மூலம், குற்றவாளியால் ஏற்பட்ட இழப்பு மீண்டும் வரப்போவதில்லை.

தண்டனையின் விளைவு

குறிப்பிட்ட குற்றவாளியைச் சிறையில் அடைப்ப தன் மூலம், மேலும் பல குற்றவாளிகள், சமூக விரோதிகள் ஏற்படவும், அவர்களால் மேலும், மேலும் பற்பல குற்றங்கள் சமுதாயத்தில் நடைபெறவும் கூடாது என்பதுதான் நன்னடத்தைச் சட்டத்தின் மிகவும் ஆழமான அடிப்படை.

மேலும் பல குற்றவாளிகள் எப்படி உண்டாக முடியும்?

குடும்பத்தில் குடும்பத் தலைவனாக இருக்கும் ஒருவன் அன்றாடக் கூலியாகவோ மாத ஊதியமாகவோ பெற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். இவன் சார்ந்த கட்சி, தொழிற்சங்கம் இவற்றுக்கிடையே ஏற்படும் போட்டி காரணமாகவோ - இவனுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு காரண மாகவோ இவன் மீது உண்மையாகவோ பொய்யா கவோ குற்றம் சுமத்தப்படலாம். குற்றம் செய்த தொழிலாளி தண்டனை பெறவும் கூடும். ஆனால், இதுபற்றி எதுவும் தெரியாத - எந்தக் குற்றமும் செய்யாத - இவனது வருமானத்தை நம்பியே வாழ்க்கை நடத்தும் குடும்பத்தின் நிலைமை - நிலை தடுமாறும்.

பொருள் இல்லார்க்கு

1.வீட்டில் உள்ள வயது முதிர்ந்தோரின் மருத்துவச் செலவுக்குக்கூடப் பணம் இருக்காது.

2.வெளியில் சென்று உழைத்துப் பணம் சம்பாதிக்கும் தகுதி இல்லாத மனைவி துன்பம் அடைவாள்.

3.பிள்ளைகளின் படிப்பு தடைபடலாம்.

4.வாங்கிய கடனுக்காக அசையும் சொத்து (பணம்’, நகை) அசையாச் சொத்துக்கள் ஏலத்திற்கு - விற் பனைக்கு உட்படலாம்.

5.குடும்பத்தைக் காக்கும் பொறுப்பில் உள்ள குடும்பத் தலைவி - வேறு வழியே இல்லாத நிலையில் - மானம் இழந்து நடத்தை கெட்டு வாழவும் நேரிடலாம்.

6.இந்த மானம் இழந்த நடப்பை - சிறையில் இருக்கும் குற்றவாளி விடுதலை பெற்று வந்தவுடன் அறிந்து நொந்து சாவதும் உண்டு - கோபம் கொண்டு மனை வியைக் கொலை செய்து மீண்டும் தண்டனை பெறுவதும் நடக்கும்.

7.திருமண வயதில் பெண்ணின் திருமணம் தடை படலாம். திருமண உறுதி செய்யப்பட்ட பெண்ணின் திருமணம் நடைபெறாமல் போகவும் கூடும்.

8.திருமணம் ஆகாத பெண் - தடம் மாறலாம்.

9.படிப்பு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சமூக விரோதிகள் கண்ணில் பட்டுக் கைகளில் சிக்கித் திருட்டு, போதைப் பொருள் விற்றல் - கடத்தல் போன்றவற்றில் ஈடுபடக் கூடும்.

பொருளீட்டும் ஒருவன் சரியாகவோ, தவறாகவோ சிறைப்படும் காலத்தில் அவனது குடும்பம் சிதைந்து - உடைந்து - சின்னாபின்னம் ஆகிறது. இந்தச் சீரழிவு தெருவை, ஊரை, நாட்டையே பாதிக்கும்.

தவறான நடத்தை கொண்ட பெண்ணால் பல ஆடவர்கள் தடம் மாறலாம். குற்றச் செயலில் ஈடுபடும் பள்ளிச் சிறுவன் - இளைஞன் அவனை ஒத்த வயது டைய பல இளைஞர்களின் நட்பு காரணமாக அவர் களையும் கெடுப்பான். காலம் செல்லச் செல்ல இவர்கள் மிகப் பெரிய குற்றவாளிகளாக மாறுவர்.

தொடர் விளைவு

இதுபோன்ற இளைஞர்கள் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கும், இராமர் கோயில் கட்ட செங்கல் சுமந்து செல்லவும் எளிதில் கிடைப்பர். இராமர் பாலம் இருப்பதாக நம்பும் இராம பக்தர்களின் விருப்பப்படி அங்குக் கடல் மேல் இராமர் கோயில் கட்ட முதல் ஆளாகக் காவி உடையுடனும், கையில் திரிசூலத்துடனும் இவர்கள் அணிவகுப்பர்.

தண்டனை பெறும் குற்றவாளி - அவனது குடும்பம் மட்டுமன்று - சமுதாயத்தின் நிலை எப்படி, எப்படி மோச மாகிறது என்பதை எண்ணிப் பார்த்துக் குற்றவாளியைச் சிறைக்கு அனுப்பாமல் சீர்திருத்தும் நோக்கில்தான் நன்னடத்தைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குற்றச்செயல் பயிற்சிக்கூடம்

முன்பெல்லாம் சிறையென்றால் மக்களுக்கு ஓர் அச்சம் இருந்தது. சிறைக்குச் செல்வது இழிவாகவும், அவமானமாகவும் கருதப்பட்டது. சிறைக்கு வெளியில் இருக்கும் வரையில்தான் இதெல்லாம். உள்ளே சென்றுவிட்டால் எல்லாம் ஓடிவிடும்.

ஒரு சாதாரணக் குற்றவாளி முதன்முறையாக சிறைக்குச் சென்றால், அங்குப் பலமுறை தண்டனை பெற்ற சிறைப் பறவைகளிடம் (துயடை bசைனள = கறுப்புக் குல்லாய்) நன்கு பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. புதிய சிறைவாசி அவர்களிடம் ‘சிறப்புப் பயிற்சி’ பெற்று ஒரு முழுமையான ‘தகுதி’, ‘திறமை’ உடைய பெரிய குற்ற வாளியாக வெளியே வருவான். எதற்கும் பயமில்லாமல் பெரிய, பெரிய குற்றங்களை அவன் செய்வான்.

சிறைக்குள்ளேயே பீடி, சிகரெட், கஞ்சா விற்பது - சிறைக்குள் இருந்தே வெளியில் உள்ள ‘தோழர்களுடன்’ செல்பேசி மூலம் களவாணித் ‘தொழில்’ சிறப்பாக நடைபெற வழிமுறைகளை, உத்தரவுகளை இடுவது இன்று சாதாரணமாக நடைபெறுகின்றன. இந்தத் தொழில் வளர்ச்சிக்குச் சிறை அலுவலர்களே உடந் தையாகச் செயல்படுவது “வேலியே பயிரை மேயும் நிலை”தான். இந்தத் தொழிலை அனுமதிக்காத சென்னை நடுவண் சிறை அலுவலர் திரு. செயக்குமார், 17.11.1999 அன்று காலை சுமார் 9 மணியளவில் எல்லோரும் பார்த்திருக்கப் பழைய காகிதங்கள் இருந்த அறையில் தள்ளப்பட்டு பெட்ரோல் ஊற்றிப் பச்சைப் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் போராடிய சிறைக்காவலர் திரு. நடராசனும் மருத்துவ உதவி பயன்படாமல் சில நாள்களில் உயிர்நீத்தார். சிறைக்குள்ளேயே இந்த நிலை.

மறுமலர்ச்சி

குற்றம் செய்த ஒருவனைச் சிறைக்கு அனுப்பித் தண்டிப்பதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத் திற்கும், அந்தக் குடும்பம் மூலம் சமுதாயத்திற்கும் ஏற்படும் கேடுகளை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு நல்ல படிப்பு, சிறுவயது முதலே நல்ல நீதிபோதனை, திறமையை வளர்க்கத்தக்க பயிற்சி, திறமைக்கேற்ற உழைப்புச் செய்ய வாய்ப்பு, உழைப்புக் கேற்ற ஊதியம் இவையெல்லாம் நடந்திட நல்லோரின் ஆட்சி, நிருவாகம் இருந்தால் குற்றங்கள் வெகுவாகக் குறையும்.

மிகவும் திட்டமிட்டு மிகத் தீவிரமான குற்றங்களைச் செய்தவருக்கு இந்த நன்னடத்தைச் சட்டத்தைப் பயன் படுத்துவதில்லை.

குற்றவாளிகளை அவர்களுடைய குற்ற மனப்போக்கி லிருந்து விடுவித்து நாட்டில் உள்ள நல்லோர்களைப் போலத் திருத்தி வாழவைக்கவே நன்னடத்தை அலுவலர்களின் பணி பயன்படுகிறது. நன்னடத்தைச் சட்டத்தின் மூல நோக்கமும் அதுவே.

Pin It