இந்தியாவின் ஏமாளிகள் வாழும் பகுதியாக இப்பொழுது தமிழ்நாடு மாறிவருகிறது. பல மாநிலத் தவர்கள் தமிழ்நாட்டில் வந்து வாழ வழிவகுத்து வாழும் வழிகளை வக்கனையாகப் பேசி ஏமாற்றி விட்டனர்.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயம் கொடிகட்டிப் பறந்தது. கோவணம் கட்டியவன் கைப்பட்ட பொருட் களையும், பாலையும் உண்ட துரோகிகள் “பேஷ்! பேஷ்”! என்று கூறி உண்டனர். அக்கறை காட்டாத நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடி ஏமாற்றி விவசாய மக்களின் வாக்கை வாங்கிக் கொண்டு விவசாயி களைப் படுகுழியில் தள்ளிவிட்டனர். இனி விவசாயிகள் வாழமுடியாது. இரசாயனக் கழி; விவசாயிகளைத் தின்றுவிடும்.

அனைத்து ஏரிகளையும் ஆட்சியாளர்களே கூறு போட்டு விற்றுவிட்டனர். நீதித்துறையும் நியாயம் மறுத்தது. நீதியின் பக்கம் செல்ல, ஆட்சியாளர்களின் அடிமைகளாக சம்பளக் காரனாக வேலை செய்து கொண்டு உள்ளது. சட்டமியற்றினால் அதைக் காப்பது நீதியின் கடமை; இயற்றியவனைக் காப்பதற்கு அல்ல, விவசாய நிலங்களை மனை நிலங்களாக மாற்றிய தால் பல ஆண்டுகளாக அவை உற்பத்தி இல்லாமல் கிடக்கின்றன. விவசாய நிலத்திற்கு வேலிபோட வக்கில்லை. அரசுகள் இனி இனாம் கொடுத்துவிட்டு வாக்கு வாங்கி அரசியல் கூத்தாட முடியாது.

தமிழகத்தை ஒரு விவசாய குடும்பத்தினர் ஆண்டிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்கள் போடும் வேடங்களை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். இனாமாகக் கொடுத்த தொலைக்காட்சியால் உழைப்பவர் நேரம் வீணாய்ப் போனது. அதில் முழு நேரமும் விவ சாயத்தை பற்றி-மொழி உணர்வைப் பற்றி வளர்ச்சி யைப் பற்றி-கல்வியைப் பற்றிக் காட்டத் தவறிவிட்டது. அதனால் வளர்ச்சி விகிதம் குறைந்து விட்டது.

நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் பேரில் விற்பனைவரி உள்ளது. காட்டாக சோப்பு, சீப்பு, துணிமணிகள், பட்டன், குளிர்பானம், உணவு விடுதி களில் விற்கப்படும் உணப்பு பண்டங்கள், கைக்கடி காரம் போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை வரிகளுக்கு உட்பட்டவை. வரியை ஏமாற்றுகின்றனர்.

நூறுநாள் வேலை திட்டத்தால் ஒருநாளைக்கு கூலி ரூ.100/- என்று கூறிவிட்டு, கூட்டணிக்கும்பல், ரூ.10 முதல் 40 வரை பிடித்துக் கொண்டு கொடுக் கின்றனர். வேலை செய்யாமல் கிடைக்கின்றதே என்று எண்ணிக்கொண்டு, தன்னையும் தன் சொந்த நிலத்தில் வேலை செய்ய முடியாத சோம்பேறியாக்கி விட்ட வீணடித்த திட்டம்தான் நூறுநாள் வேலைத் திட்டம். இத்திட்டத்தால் கிடைக்கும் பணம் வீட்டுக்குப் போவதில்லை. இரவு பத்து மணிக்கு மதுக்கடை மூலம் 70ரூ வசூலித்து விடுகின்றனர். (30ரூ) பெண்கள் பெறும் கூலி மட்டும்தான் குடும்பத்திற்குப் பயன்படுகின்றது). நல்ல கல்வி, நல்ல மருத்துவம் உழைப்பதற்கு வேலை கொடுத்தல், நல்ல சிந்தை யுடன் மக்கள் வளர்ச்சி பெறுவார்கள். விவசாயத்தை மறந்த நாடு என்றும் வளராது. தமிழ்நாட்டைக் கை விட்டுவிட்டது. இந்திய அரசும், தமிழக அரசும். எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை ஆட்சியாளர்களின் கண்முன்னேயே நடக்கின்றன. திரைக்கூத்து போல் உள்ளது. ஒரு தலைவர் ஒரு இடத்துக்குப் போகும் முன்பே, பலர் பார்க்குமளவுக்குத் திசைதிருப்பு நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றனர். அவர்களுடைய ஆட்களைவிட்டே செருப்பைத் தன்மீது எறியச் செய்வது, முட்டைகளை வீசச் செய்வது போன்ற ஏமாற்று வேலைகளைக் கேட்பாரற்று கட்சித் தலைவர்கள் செய்யும் செயலாக உள்ளது.

விவசாயமே தெரியாதவனுக்கு வேளாண் விஞ்ஞானிப் பட்டம், ஆய்வே செய்யாதவர்களுக்கு அறிஞர் பட்டம். சபலபுத்தியுள்ளவர்களை “சுவாமிகள்” என்பது; பணம் வாங்கிக் கொண்டு பள்ளிகூடம் நடத்துபவ னைக் “கல்வி வள்ளல்” என்பது; சாராயக் கடை வருமானத்தை கொண்டு ஆட்சி செய்பவர்களைச் சாதனை ஆட்சியாளர்கள் என்பது எல்லாம் தமிழக மக்கள் உணராமல் இல்லை. தமிழகத்தைத் தமிழ் நாட்டு விவசாயி எப்பொழுது ஆள்கின்றானோ அப்பொழுதுதான் தமிழன் தலைநிமிர்வான்.

Pin It