தாருகா வனத்தில்
ரிஷிபத்தினிகளை வன்புணர்ந்த சிவனை வணங்கி,
பாலியல் வழக்கிலே போராளிகளைக் கைது செய்!

நெருப்பிலே சுட்டு, நெய்யிலே வதக்கிய,
சிவந்த சுவையான பசுவின் இறைச்சியை உண்ட
இராமனை வணங்கி,
மாட்டிறைச்சி உண்ட இசுலாமியனை அடித்துக் கொல்!

சீனாவுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும்
மோடியை சிலாகித்துக் கொண்டே,
மாடுகளை ஏற்றிச் செல்லும் வியாபாரிகளைப் படுகொலை செய்!

கழகங்கள் இல்லாத தமிழகம் படைக்கக்
கழகங்களோடு கூட்டணி வை!

இந்தியாவின் முதல் குடிமகனைக்
கோவிலுக்குள் விடாதே!
ஆயினும், தலித் வீட்டில் உணவருந்து!

துறவறம் பேசிக் கொண்டே
கள்ள உறவுகளோடு காதல் செய்!

தன்னைத்தானே தாக்கிக் கொண்டு
இசுலாமியன் தாக்கியதாய்ச் சொல்!

சட்டையில் தேசியக் கொடி ஏற்று
சட்டத்தை மதிக்காதே!
நீதிமன்றத்தில் மன்னிப்பு கேள்!
மக்கள் மன்றத்தில் மார்தட்டு!

"முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால்"
"அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித்தெழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானனுக்கே சங்கற்பித்துக் கொடுத்தேன் "
எனக் காமம் வெளிப்படுத்திப் பாடிய
ஆண்டாளைத் தெய்வம் என்று சொல்!
பெண்ணுரிமை பேசுவோரை வேசி என ஏசு!

தலித் மக்களை தீண்டத்தகாதவன் எனச்சொல்!
இந்துக்களே ஒன்றிணைவோம் என முழங்கு!
சாதிக்கொரு சட்டமியற்று!

பிரிட்டிஷாருக்குச் சேவை செய்!
ஹிட்லரின் கை வலுத்தால் ஜெர்மன் படி!
சுதந்திரம் கேட்டானா? காட்டிக் கொடு!
ஆனால், சூத்திரனுக்கு தேசபக்தி கற்றுக்கொடு!

பிரதமர் அலுவலர்கள் நம்மாளு,
உயர் பதவிகள் நம்மாளு,
நீதிபதிகள் நம்மாளு,
IAS, IPS நம்மாளு,
கவர்னரெல்லாம் நம்மாளு,
இந்தியத் தூதர்களெல்லாம் நம்மாளு,
நம்மாளு என்றால் பூணூலு!
இருந்தாலும் ஏழையென்று நீ சொல்லு!

இட ஒதுக்கீட்டை எதிர்த்து நில்லு!
ஆனா,
10% கேட்டு துள்ளு!

தமிழை நீசபாஷைனு தள்ளிவை!
நாங்களும் தமிழரேன்னு திராவிடத்துக்குக் கொள்ளிவை!

போலோ "ஜெய் ஶ்ரீராம்"!!!

Pin It