மாநில ஆளுநரால் சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட ஜெகநாதன் முறைகேடுகள் மற்றும் சாதிய வன்கொடுமை அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். ஆளுநரின் விரலசைவில் செயல்படும் இவர், கைது செய்யப்பட்ட உடனேயே பிணையிலும் வந்துவிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்த ஆளுநர் ஆர். என். ரவி, இப்போது கைதான ஜெகநாதனைத் துணை வேந்தர் பதவில் இருந்து ஏன் நீக்கவில்லை?

11-1-2024 அன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சென்றபோது தி.மு.க, கம்யூனிஸ்ட், ம.தி. மு. க. உள்ளிட்ட கட்சியினரும், மாணவ அமைப்பினரும் ஆளுநருக்கு எதிராகக் கருப்புக் கொடியேந்திப் போராட்டம் நடத்திக் கைதாகி உள்ளார்கள்.

காரணம், கைதாகி ஜாமினில் இருக்கும் ஜெகநாதனை ஆளுநர் ரவி சந்திப்பது சட்டவிரோதம். மேலும் ஜெகநாதனுக்கு எதிரான ஆதாரங்கள், சாட்சிகள் அழிக்கப்படும் வாய்ப்புகளும் இருக்கும் என்பதால்.

அதுமட்டுமல்ல, ஆளுநர் இன்றும் ஜகநாதனுக்குப் பக்கத் துணையாக இருக்கிறார் என்பதை இது உறுதி செய்யும்.

சனாதனத்தைப் பேசுவது, தமிழ்நாட்டிற்கு எதிராகச் செயல்படுவது, தமிழ்நாடு அரசுக்கு எதிர்மறையாக அரசியல் செய்வது என்று அரசியல் சட்டத்திற்கு மாறாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கும் ஆர்.என்.ரவி, ஆளுநர் பொறுப்பில் இருந்து விரைவில் விலக வேண்டும்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It