தலித் மக்கள்& சிறுபான்மையினர் எழுச்சி நாளில் உரையாற்றிய எழுச்சித் தமிழர் திருமாவளவன், “ராமர் கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டினார்கள், எனவே அதனை இடித்துவிட்டு நாங்கள் மீண்டும் ராமர் கோயில் கட்டுவோம் என்று மதவாதிகள் பேசுகின்றனர். அவர்கள் வாதப்படி பார்த்தால், தமிழகத்தில் பல சிவன் கோயில்களும், வைணவ கோயில்களும் சமண, பௌத்த விகாரைகளை இடித்துவிட்டுக் கட்டப்பட்டவையே. ஆதலால் அவைகளை இடித்துவிட்டு, மீண்டும் அங்கே பௌத்த விகாரைகளைக் கட்டலாமா?” என்று கேட்டுள்ளார்.

இதனைத் திரித்து, திருமாவளவன், இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவர் “கச்சடாத்தனமாகப்” பேசுகிறார். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார், பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா. டாக்டர் கிருஷ்ணசாமியைப் போலச் சமூகப் பணியாற்றாமல் (?) இப்படி நடந்து கொள்ளும் திருமாவளவனைக் கண்டிக்கிறேன் என்றும் சொல்லியுள்ளார்.

திருமாவளவன் பேச்சுக்கு ஆதரவாக வரலாற்றாசிரியர்கள் பலர் ஏற்கனவே கருத்து சொல்லியுள்ளனர். அப்படி இருக்க, அவர் பேச்சைத் திரித்து, அமைதியைக் குலைக்கும் வகையில் ஒரு கலவரத்தை ஹெச். ராஜா தூண்டி வருகின்றார். எனவே அவரை உடனே கைது செய்து, கலவரங்கள் ஏற்படாமல் தடுக்குமாறு தமிழக அரசைக்  கேட்டுக் கொள்கிறோம்!   

Pin It