கீற்றில் தேட...

காற்றிலும், மழையிலும் காணாமல் போயினர் நம் மீனவ உறவுகள்! கண்ணீரில் தவிக்கும் கன்னியாகுமரி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதற்குக் கூட, தமிழக முதலமைச்சருக்கு நேரமில்லை. மீனவ நண்பன் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா எடுப்பதில் மும்முரமாக இருக்கிறார். மத்திய அரசோ, அறைக்கூட்டம் போட்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்னும் கணக்கே அரசிடம் இல்லை. அல்லது அதனைத் திட்டமிட்டு மறைக்கிறது. 97 பேர் மட்டும்தான் காணவில்லை என்று முதலில் கூறினார். இப்போது 500க்கும் மேல் என்று தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

குமரியில் தொடங்கிய போராட்டம் இப்போது சென்னைக்கும் பரவியுள்ளது. சென்னையில் 25 கிராம மக்கள் ஒன்றுகூடிப் போராடியுள்ளனர். மீனவர்களின் தலைவர்கள்,  முதலமைச்சர், மீன்வளத் துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

செயலற்ற இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.