கல்விச் சிந்தனைகள் : அம்பேத்கர்

தொகுப்பு : இரவிக்குமார் | பக். 80 | ரூ.40/

தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்சினைகள்பற்றி ஆராய்ந்த அண்ணல் அம்பேத்கர், தனது ஆய்வின் இறுதியில் மூன்று முக்கியமான முடிவுகளை முன்மொழிகிறார். பொதுக்கல்வித் துறையிலும், சட்டத்துறையிலும் கல்வி திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானம், பொறியியலில் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. வெளிநாடுகளின் பல்கலைக்கழகங்களில் உயர்தரக் கல்வி கற்பதென்பது எட்டாக்கனியாக உள்ளது.விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் உயர்தரக் கல்வி கற்பதுதான் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவும்; (ஆனால்) சர்க்காரின் உதவியில்லாமல் இத்துறைகளில் உயர்தரக் கல்வியின் கதவுகள் இவர்களுக்கு ஒரு போதும் திறந்திருக்க மாட்டா...’’ என்கிறார் அம்பேத்கர்.

பாரதியார் கல்விச் சிந்தனைகள்

தொகுப்பு : ந. ரவீந்திரன் பக். 192 | ரூ.95/

அறிவதற்காகக் கற்றல்’, ‘செயலாற்றுவதற்காகக் கற்றல்’, ‘பிறரோடு சேர்ந்து வாழக் கற்றல்’, ‘சுய ஆளுமையுடன் வாழக் கற்றல்ஆகியவை கல்வியின் நான்கு தூண்களாக யுனெஸ்கோ முன்மொழிந்த அம்சங்கள் இவை. தன் காலத்தின் சமூகச் செயல்பாடுகள் அனைத்தையும் குறித்துச் சிந்தித்தவரான மகாகவி பாரதி கல்விச் சிந்தனைகளிலும் தனித்தே உயர்ந்து நிற்கிறார். மேற்கண்ட நான்கு அம்சங்களும் பாரதியின் எழுத்துக்களில் விரவிக் கிடக்கின்றன.

48 துணைத் தலைப்புக்களில், பாரதியின் கட்டுரைகள், கவிதைகளில் பிற படைப்புகளில் இருந்து கல்வி குறித்த சிந்தனைகள் மிகச் செறிவாகத் தொகுத்தளித்திருக்கிறார்.

 

இன்றைய இந்தியக் கல்வி சவால்களும்தீர்வுகளும்

கட்டுரைத் தொகுப்பு | பக். 480 | ரூ.140/

சமச்சீர்கல்வி, கட்டாயப் பள்ளிக் கல்வியும் இந்தியச்சட்டமும், பெண் பள்ளிக் கல்வி குறித்து ஒரு மீள்பார்வை, இட ஒதுக்கீடு மறைக்கப்படும், மறுக்கப்படும் உரிமைகள், நவீன தாராளவாதமும் இந்தியக் கல்வியும், எங்கே இந்தியக் கல்வி என்பன போன்று மொத்தம் 29 தலைப்புக்களிலான கட்டுரைகள் அடங்கிய நூல்.

இவற்றை எழுதியவர்கள் என்சிஇஆர்டி யின் இப்போதைய இயக்குநர் கிருஷ்ணகுமார், முன்னாள் துணைவேந்தரான வசந்திதேவி, கே.என். பணிக்கர், அஸ்கர் அலி என்ஜினியர், முனைவர் ஆர்.ராமானுஜம், துருவ்ரெய்னா, பிரபாத் பட்நாயக், எம்.சிவக்குமார் இப்படியான பல்துறை அறிஞர்களாவர்.

 

கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள்

டி.வி. புருஷோத்தமன் | தமிழில் :மு.ந. புகழேந்தி

பக். 80 | ரூ.40/

ஜான் ஆமோஸ் கொமேனியஸ் (1592 1670)

ஜீன் ஜாக்கஸ் ரூசோ (1712 1778)

ஜோஹான் ஹென்ரிச் பெஸ்ட்டலோசி (1746 1827)

ஃபிரெட்ரிக் வில்லியம்ஸ் அகஸ்ட் ஃபுரோபல்

(1782 1852) ஜான் டுயுயீ (1859 1952)

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (1869 1948)

இவர்கள் 6 பேரும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். வெவ்வேறு சமூகப்பின்னணிகளை உடையவர்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் இயற்கையின் மூலமான கல்வி; மனிதனின் மூலமான கல்வி ; பொருட்களின் மூலமான கல்வி கிடைக்கிறது...’’ இவர்கள் அனைவரும் தாய்மொழி¢ வழிக்கல்வி, செயல்முறைக் கல்வி, உழைப்புடன் இணைந்த கல்வி, பெண்கல்வி, முற்றிலும் இலவசமான கல்வி ஆகிய அம்சங்களை திடமாக வலியுறுத்துபவர்களாக இருந்தவர்கள்!

 

முதல் ஆசிரியர்

சிங்கிஸ் ஐத்மாத்தவ் | தமிழில் பூ சோமசுந்தரம்

பக். 80 | ரூ.40/

இவர்களைப் போன்றே அக்கிராமத்தில் படிப்பறிவற்றிருந்த பல பிள்ளைகளை ஒன்று சேர்த்து ஊருக்கு வெளியே மலைக் குன்றின் மீதிருந்த குதிரைக் கொட்டடியில் அந்த ஊரின் முதல் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கிறார் தூய்ஷன். அவர் பெரிய கல்வியறிஞர் அல்ல.

ஒரு புத்தகமும் இல்லாமல், ஏறத்தாழ எழுத்து வாசனை கூட இல்லாத அந்த இளைஞர் பாலபாடப் புத்தகம் கூடக் கையில் இல்லாமல்தான் அல்டினாய் போன்ற பல பிள்ளைகளுக்கு ஆரம்ப எழுத்தறிவைக் கற்றுத்தர முடிந்தது. காரணம் அவரது உணர்ச்சிகள் தான் அவருக்கு வழிகாட்டி.

 

கல்விச் சிந்தனைகள் : பெரியார்

தொகுப்பு அ. மார்க்ஸ் ரூ. 80

உனக்கு நீயே விளக்குஎன்றவர் புத்தர். அது போல் பெரியார் கல்வியின் பயன்களாக இரண்டு முக்கிய விஷயங்களைக் குறிப்பிடுகிறார். நன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.’’

மக்கள் விடுதலை அடைவதற்கான மார்க்கங்களில் முதலாவதாகஇருக்க வேண்டிய கல்வி நடைமுறையில் அதற்கு எதிராக உள்ளது என்று கருதினார் பெரியார். மக்கள் தொகையில் பெரும்பாலோர் கல்வி வாய்ப்பில்லாமல் உள்ளனர். மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு எல்லோரும் படிக்க வேண்டுமென்பது அறியாமையேயாகும்.

அதைப் போல்தான் பெண்களுக்குக் கல்வியும் உத்தியோகமும் கொடுத்தால் ஒன்றும் குடி மூழ்கி விடாது. மாறாக பெண்களின் முன்னேற்றம் அதிகமாகி பிள்ளை குட்டி பெறும் எந்திரம் என்ற கொடுமைக்கு ஒரு முடிவும் ஏற்பட்டு விடும்.

கல்வியில் மதிப்பெண்களைப் பார்த்துத் தகுதி, திறமை குறிப்பது பெரிய முட்டாள்தனமும், மிகப்பெரிய அயோக்கியத் தனமுமேயாகும். நாம் படிப்பது உத்தியோகத்திற்காக மட்டுமல்ல, அறிவிற்காக! நாம் செய்யும் காரியம் அறிவிற்கு ஏற்றதா, உலக நடப்பிற்கு ஒத்ததா என்று பார்க்க வேண்டும். எதையும் நாம் அறிவைக் கொண்டு சிந்தித்து ஏற்க வேண்டும்.

 

கல்விச் சிந்தனைகள் : காந்தி

தொகுப்பு : அண்ணாமலை | பக். 144 | ரூ.70/

மாணவன், தான் வசிக்கும் சூழலை விட்டு விலகித் தனித்து போகாத கல்வி; உடலுழைப்புடன் கூடிய கல்வி; புத்தகச் சுமையற்ற கல்வி, குழுவாய் இணைந்து கற்கும் கல்வி¢; செயல்பாடுகள் நிறைந்த கல்வி; கைத்தொழில்கள் பயிற்றுவிக்கும் கல்வி; மாணவர்களின் பன்முகத் திறன்களுக்கு வாய்ப்பளிக்கும் கல்வி’’ என்பதாக கல்வி குறித்து காந்தி தெரிவித்த நடைமுறைப்படுத்திய கருத்துகளில் உண்மையும் முற்போக்குத் தன்மையும் மிளிர்வதை இன்றைய கல்விச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்; ஒப்புக்கொள்கிறார்கள்’’

ஒரு குழந்தை பள்ளியில் பெறுகிற கல்விக்கும், வீட்டுச் சூழ்நிலைக்கும் இணக்கமான தொடர்பு இருக்க வேண்டும் கல்வி இலவசமானதாகவே இருக்க வேண்டும். ஆரம்பம் முதலே தாய்மொழியில் கல்வி போதிக்கப்பட்டிருந்தால், இப்போது ஆங்கிலம் அறிந்த சிலருக்கு மட்டுமே தெரிந்திருப்பவை, கோடிக்கணக்கான நம் மக்களுக்கும் எட்டியிருக்கும்.

 

முரண்பாட்டை முன்வைத்தல்

கிருஷ்ணகுமார் | தமிழில் : ஜே. ஷாஜஹான்

பக். 64 | ரூ.30/

NCERT என்னும் தேசியக் கல்வி ஆய்வு மையத்தினுடைய இயக்குநர் திரு. கிருஷ்ணகுமார் குழந்தைகளின் கல்விச்சுமை குறித்து ஆய்வு நடத்திய யஷ்பால் குழுவில் உறுப்பினராக இருந்தவர். இன்றைய இந்தியச் சூழலில், கல்வியில் எதிர் கொள்ளுகிற பிரதான முரண்பாடுகள் பற்றி இப்புத்தகம் விவாதிக்கிறது. நமது சமூகத்திற்குப் பொருத்தமாக மாற்றங்களுடன் ஏன் கல்வியைக் கற்பிக்கக் கூடாது?’ என்ற வினாவுக்கான விடையைத் தேடுகிறது. நம் கல்வி நிறுவனங்கள் முரண்பாடுடைய பிரச்சினைகளை முற்றிலுமாகத் தவிர்க்க முயல்கின்றன.

 

தமிழக பள்ளிக்கல்வி

ச.சீ. ராஜகோபால் | பக். 64 | ரூ.30/

கோத்தாரி கல்விக்குழு, தேசியக் கல்விக் கொள்கை, பிற குழு அறிக்கைகள் எல்லாம் பொதுப்பள்ளித் திட்டத்தை வலியுறுத்துகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் மாநில அரசின்

கீழ் 4 வகைப் பள்ளிகள் இயங்குவது ஒரு முரண்பாடு.’’ மக்கள் எதிர்பார்ப்பு, கல்விக்கூடங்களாகப் பள்ளிகளை மாற்றுதல், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், மொழிப்பாடம், தேர்வுகள், தொழிற்கல்வி, சுய கட்டுப்பாடு, கல்வித்துறையின் முதற்கடன் போன்ற தலைப்புக்களில் இராசகோபாலன் முன் வைக்கிற கருத்துகள் நம் அனைவரின் ஆழ்ந்த பரிசீலனைக்கும் உரியவை.

 

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

ஜான் ஹோல்ட் | தமிழில் : அப்பணசாமி |

பக். 272 | ரூ.130/

எப்போதுதான் எழுந்திருக்கப் போகிறாய், அப்பா.... இங்கே பால் கூட இல்லை. எனக்கு ரொம்பப் பசி. எனவே, என்னை, என்னை, என்னை, என்னை என்னைப் பட்டினி போடுவியா? உன் பதில் என்ன’’? நியூயார்க் டைம்ஸில் (ஏப்ரல் 18, 1981) பென் பார்க்கர் என்பவர், தனது மகள் அவர் தூங்கி விழித்தெழுவதற்கு முன்பாகவே எழுதி வைத்திருந்த குறிப்பு என்று மேற்கோள் காட்டியிருந்த வரிகள் இவை. இங்குள்ள ஒவ்வொன்றிலிருந்தும், எதுவுமே இல்லாத போதிலும் கூட மிகப்பெரிய படைப்பைக் குழந்தைகளால் உருவாக்க முடியும் என்பது ஆசிரியரின் கணிப்பு. எல்லாக் கற்றல்களும் இதயத்தில் பதிந்துள்ளன. அதில் தந்திரங்களோ, புதிய தொழில்நுட்பச் சிந்தனைகளோ இல்லை. அந்த அன்பு, நேசத்தின் மூலமாக குழந்தைகள் கற்றலை நிகழ்த்த நாமாகவே அவர்கள் பக்கமாக நெருங்கிச் செல்ல இயலுமா?’’ என்பது ஜான்ஹோல்ட் எழுப்புகிற கேள்வி.

மூன்று முதல் ஐந்து வயதுக் குழந்தைப் பருவத்தில் தான் அவர்களுடைய சிறந்தக் கற்றல் நிகழ்கிறது. வளரும் குழந்தைகளை விட இந்த இளம் குழந்தைகளே சிறப்பாகக் கற்க முடியும். ஏனெனில் அவர்கள் தமது மூளையைத் தனிச்சிறப்பான முறையில் பயன்படுத்துகின்றனர்’’ என்று ஓர் உண்மையை, தனது குழந்தைகளின், மற்றவர்களது குழந்தைகளின் அனைத்து விதமான நுட்பமான கற்றல் முயற்சிகள், விளையாட்டுக்களை எல்லாம் தினசரி கூர்ந்து கவனித்துப் பதிவு செய்திருக்கிறார் ஜான்ஹோல்ட்.

 

கல்விச் சிந்தனைகள் : பெட்ரண்ட் ரஸல்

தமிழில் : சி.சுப்பாராவ் | சாமி | கி. ரமேஷ்

பக். 192 | ரூ.95/

புதிய ஞானமே இப்புவியை நடத்தும். அறிவின் தேக்கம் அதனை அசைவற்று போகச் செய்து விடும்..’’ என்று திட்டவட்டமாக அறுதியிட்டுச் சொன்னவர் பெட்ரண்ட் ரஸல். இயற்கைச் சக்திகளின் ஆதிக்கத்திலிருந்தும், அழிவிற்கு அடிகோலும் உணர்ச்சிகளில் இருந்தும் விடுபட அறிவே சிறந்த கருவி. அறிவின் துணையின்றி நமது நம்பிக்கைகளைத் தாங்கிய கனவுலகைப் படைத்திட முடியாது’’ என நம்பியவர் அவர். ஒரு புதிய உலகை முதலில் தமது நம்பிக்கைகளின் ஊடேயும் பின்னர் ஒளிமிக்க எதார்த்தமாகவும் காணப் போகிறார்கள்.’’ என்று தீர்க்கதரிசனத்துடன் சொன்னார் ரஸல், ஆனால், ‘தெளிவாகத் தெரியும் அந்தப் பாதையில் நமது குழந்தைகள் பயணிப்பதற்கு நாம் கனிவுடன் அனுமதிப்போமா? அல்லது நம்மைப் போன்றே அவர்களும் சிரமங்களையும், சித்திரவதைகளையும் அனுபவிக்க விரும்புவோமா?’ என்று கேட்கிறார்.

 

ஓய்ந்திருக்கலாகாது (கல்விச் சிந்தனைக் கதைகள்)

தொகுப்பு: அரசி ஆதிவள்ளியப்பன் | பக். 144 | ரூ.70/

சமகாலக் கல்வி சார்ந்து இரண்டு முக்கியப் பிரச்சனைகள் நம்மிடையே உள்ளன. ஒன்று கல்விக்கூடங்கள் இயங்கும் முறை. மற்றது கற்றுத்தருவதில் உள்ள பிரச்சனைகள். அநேகமாக இந்த தொகுப்பில் உள்ள கதைகள் இதையே பிரதானமாக முன் வைக்கின்றன. ஆரம்ப பள்ளியில் பயில்வதற்கான சிரமங்கள், கற்றுத்தருதலில் ஏற்படும் புரியாமை, வகுப்பறைக்குள்ளும் எதிரொலிக்கும் சாதியகூறுகள், தண்டனை தரும் பயம் என்று நமது கல்வி சூழலின் வலி நிறைந்த பெற்றோர்களை விடவும் ஆசிரியர்கள் சொல்வதையே குழந்தைகள் அதிகம் நம்ப கூடியவர்கள். அதிலும் ஆசிரியர் தன்னோடு எப்படி பழகுகிறார்கள் என்பது குறித்து ஒவ்வொரு குழந்தையும் அதீத ஏக்கம் கொண்டேயிருக்கிறது. இதுபோன்ற கல்விச் குறித்த பிரச்சனைகளை சொல்லுகிற கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

 

கல்விச் சிந்தனைகள் : தாகூர்

தொகுப்பு : ஞாலன் சுப்பிரமணியன் |பக். 128 | ரூ.60/

மகாத்மா காந்தியடிகளாலேயே குருதேவர்என்றழைக்கப்பட்டவர் மகாகவி இரவீந்திரநாத தாகூர். தமது 31 வது வயதில் 1892 ல் கல்வியில் பொருத்தமற்ற நிலைஎன்ற வெளியீட்டின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விமுறையைக் கூர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். இது வெளியான 10 ஆண்டுகளில் அவர் சாந்தி நிகேதனில் பிரமச்சரிய ஆசிரமத்தை அமைத்தார். புதிய அறிவுப்பரவலும் ஏற்பும் தாய்மொழிக் கல்வியால் மேம்படும்; ஆங்கில பாணியைத் திறனற்ற முறையில் தழுவ முயன்றால் வெகு சிலருக்கு அது அரைகுறைக் கல்வியைத் தரும்என்பதே தாகூரின் அப்போதைய கருத்து.கல்லூரிக்கல்வியையும், தேசத்தின் வாழ்க்கையையும் இணைப்பது; வெறும் அந்நியப் புத்தகங்களைப் படிப்பதோடு நின்று விடாமல் தமது நாட்டையும், தமது மக்களையும் படித்தறிய வேண்டுமென்றுதாகூர் தம் உரைகளிலும், கட்டுரைகளிலும் வலியுறுத்தினார்’’ கல்வி மூலமாக அன்னிய மேலாதிக்கம் நிலைநாட்டப்படுவதை ஏற்கமுடியாது; நமது கட்டுப்பாட்டில் கல்வியைக் கொண்டு வர வேண்டும்; அன்னியக் கல்வியை அச்சுப்பிசகாது நாம் அப்படியே பின்பற்றினால் நமக்கு மனவளமோ, பலன்களோ இரண்டுமே கிடைக்காது’’ என்றார்.

 

வாசிப்பு மற்றும் தேர்வுமுறையின் அரசியல்

முனைவர் பாலாஜி சம்பத்

தமிழில் : எம். காயத்ரி | பக். 32 | ரூ.20/ படிக்கிற குழந்தைகளுக்குப் பரீட்சைஎன்றாலே பயம், கவலையால் மனச்சோர்வு, தேர்வில் சரியாக மதிப்பெண் பெறவில்லை என்ற கவலையால் தற்கொலை வரைக்கும் கூட சிலர் போய் விடுகின்றனர். தேர்வுஉண்மையிலேயே தேவைதானா? தேர்வு இல்லாவிட்டால் யாரும் படிக்க மாட்டார்களா?

பல கேள்விகள் எழுகின்றன தேர்வுபற்றி நாம் நம்பிக் கொண்டிருக்கிற பல விஷயங்கள் உண்மையல்ல என்கிறது இச்சிறு நூல். தேர்வு முறைகளில் உள்ள ஆழமான பிரச்சினைகளை அலசி எடுத்து வைக்கிறது. பரீட்சைகளை ஒட்டுமொத்தமாக நீக்கி, பதிலாக ஒரு மாற்று வழி முறையை அமைக்க வேண்டும்என்கிறது. இந்த மாற்று முறை, குழந்தைகளின் தன்னம்பிக்கையை உடைக்காமல், குழந்தைகளிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்காமல் கற்றலை மட்டும் மதிப்பிடும் ஒரு முறையாக இருக்க வேண்டும் என்கிறார். புத்தகத்தின் லே அவுட் வித்தியாசமானது. கார்ட்டூன் படங்கள் நிறைந்தது. வாசிக்க மிக எளிதான நடை. சிந்தனைகளோ ஆழம் மிக்கவை!

 

குழந்தைகளை கொண்டாடுவோம்

ஷ. அமனஷ்வீலி | தமிழில்: இரா. பாஸ்கரன்

பக். 160 | ரூ.80/

இந்நூல் ஆசிரியர் பிரபல விஞ்ஞானியாகவும், மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவரும் ஆவார். குழந்தைகளின் மீதான அன்பும் குழந்தைகளின் மென்மையான இதயத்தின் நுட்பமான அணுகுமுறை ஆகியவைகளால் இந் நூலை எழுத முக்கிய காரணம் என்கிறார் ஆசிரியர்.

நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில் ஆறு வயது குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரும் அனுபவத்தை இந்நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

 

காலந்தோறும் கல்வி

என். மாதவன் | பக். 96 | ரூ.45/

அனைவருக்கும் உன்னதகல்விஎன்பதை விட படிநிலையை உருவாக்கும் முறையாக அமைந்துவிடுகிறது. தேர்வுகள் வழியில் படிக்க இயலாதவர்கள் என ஒரு சாரார் ஒதுக்கப்பட்டு கீழ்நிலைப் பணிஎன கருதப்படும் பணிக்கு ஒதுக்கப்டுகிறார்கள்’’ என்று இன்றைய சல்லடையாக சலித்து எடுக்கும்கல்வி முறையை விமர்சிக்கிறார் அவர்.

கல்வி, பள்ளிகளின் பரிணாமம், இந்தியாவில் கல்விப்பரவல், தீர்வின் திசைவழியில் ஆகிய நான்கு பகுதிகளாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

 

கதை சொல்லும் கலை

ச. முருகபூபதி | பக். 24 | ரூ.10/

தமிழின் நவீன நாடக வல்லுநர்களுள் ஒருவர் ச. முருகபூபதி. கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல். குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும்.

வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாசாரம் என பல்துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும், சுயசிந்தனை உள்ளதாகவும் மனதில் எளிதில் பதியக்கூடியதாகவும் இருக்கும்..’’ என்கிறார் முருகபூபதி. அவர்கள் அறிந்த தாவரங்கள், பறவைகள், மிருகங்கள், என இயற்கையின் படைப்புகளைப் பற்றியக் கதைகள்.

வருடம் தோறும் நிகழும் ஊர்த் திருவிழாக்கள், கோயில் பண்டிகைச் சடங்குககளைப் பற்றியக் கதைகள்.இவ்வாறு இன்னும் சாத்தியமான எல்லாக் கதைகளையும் சேகரிப்பது; வகைப்படுத்துவது; நாடக வடிவங்களின் துணை கொண்டு கதை சொல்லல் முக்கியமானது. பாவைக் கூத்து, பொம்மலாட்டம் மற்றும் பல்வேறு இசைக்கருவிகளின் துணை கொண்டு கதை சொல்லலை பல்வேறு நிலைகளுக்குக் கொண்டு செல்லுவது பற்றி இந்நூல் ஆழமாக விவாதிக்கிறது.

 

இருளும் ஒளியும்

ச. தமிழ்ச்செல்வன் | பக். 160 |ரூ.80/ தமிழகக் கலாசார வரலாற்றில் அழுத்தமான சுவடுகளைப் பதித்த அறிவொளி இயக்கம் எப்படி நடந்தது? என்ன சாதித்தது? என்பது குறித்த முதல் தகவல் அறிக்கையாக... தன் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளத்தில் நின்று இன்றைய கல்வி முறை குறித்த ஆழமான கேள்விகளை முன்வைத்து படித்தநம் ஒவ்வொருவரின் மனசாட்சியை நோக்கியும் நேரடியாகப் பேசுகிறது இப்புத்தகம்.

 

கல்விச் சிந்தனைகள் : லெனின்

தொகுப்பு : ஏ.ஜே. பெனடிக்ற் | பக். 144 | ரூ.40/

புதியதொரு சோஷலிஸ சமுதாயத்தைக் கட்டமைக்கப் பாடுபட்டவர் மாமேதை லெனின். அவரது கல்விச் சிந்தனைகளில் அடங்கியுள்ள மூலதாரக் கல்விக் கோட்பாடுகள் பின்வருவன: கல்வி சமூக அமைப்பு முழுமையின் பிரிக்க முடியாத ஓர் இணை கூறு. நான்கு இயல்களில் இந்நூல் லெனினது கல்விச் சிந்தனைகளின் விரிந்த உள்ளடக்கத்தை விவரிக்கிறது. சமூக அமைப்பும் கல்வியும்’ , ‘சமூக வர்க்கங்களும் கல்வியும்’, ‘உற்பத்தி உழைப்பும் பல்தொழில்நுட்பக் கல்வியும்’, ‘கல்வியும் பண்பாடும்ஆகியவை அந்த இயல்களாகும்.சோஷலிஸப் புரட்சிக்கு முன்னைய ருஷியாவில் 75 சதமானோர் கல்வியறிவு அற்றவர்கள். ஆனால் லெனின் தலைமையில், அவரது நெறியாள்கையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சோவியத் அரசு பதினைந்தாண்டுகளில் கட்டாய ஆரம்பக்கல்வியைச் சாத்தியமாக்கி நிறைவேற்றி முடித்தது. சோவியத் ஒன்றியத்தைப் போல் கல்விக்கு அதி முக்கியத்துவம் அளித்த நாடு எதுவும் உலகில் இல்லை. நாகரிக வரலாற்றிலே கல்வி பெறுவதில் உள்ள சகல பொருளாதாரத் தடைகளையும் அகற்றிய நாடு இதுவாகும்.’’ என்று தரவுகளுடன் நிரூபிக்கிறார் ஆசிரியர்.

 

டேஞ்சர் ஸ்கூல்

தொகுப்பு : ஐடிஏசி உறுப்பினர்கள்

தமிழில் : அப்பணசாமி | பக். 104 | ரூ.70/

கல்வி நிலையங்கள், மாணவர்களின் கல்வித்திறன்களை மேம்படுத்தி உயர்நிலையடையச் செய்கின்ற பட்டறைகளாகவே பொதுவாகக் கருதப்படுகின்றன. எனினும், தவறான அணுகுமுறைகளும், இளம் உள்ளங்களில் வலிந்து திணிக்கப்படும் அதீதமான பாடச் சுமைகளும், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் போட்டியின் முதலிடங்கள் குறித்த நெருக்குதலும் சேர்ந்து குழந்தைகள் பள்ளிகளையே வெறுக்கின்ற நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

இவை எல்லாமுமாய்ச் சேர்ந்து குழந்தைகளிடம் நரம்புத் தளர்ச்சியை உருவாக்குகிறது. உள் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்கிறது. அவர்களை நிரந்தர பதட்டத்தில் வைத்திருக்கிறது. தலைவலி, செரிமானக் கோளாறு, குடல் அழற்சி, நெஞ்செரிச்சல் மற்றும் தோல் நோய்கள் போன்றவை மீண்டும், மீண்டும் ஏற்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் விடுமுறைக் காலத்தில் மாயமாய் மறைந்து விடுகின்றன. எனவே குழந்தைகளுக்குப் பதற்ற நிலை நீடிக்கும் ஒவ்வொரு நாளும் நரம்பு மண்டலம் மேலும் பாதிப்படைகிறது. தொடர்ந்து உடல் உறுப்புகளில் வளர்ச்சியின்மை, மந்தநிலைமை, சவலைநோய், உள் உறுப்புகள் சிதைவு போன்றவை ஏற்படலாம். புதிய சவால்களை சமாளிக்கும் திறனும் குறையும்...’’ இத்தகைய விளைவுகளைப் பற்றிப் படிக்கையில் இவை மிகைப்படுத்தப்பட்டவையோ என்ற ஐயம் கூட ஏற்படலாம். ஆனால், ஆய்வுகளில் இவை நிரூபணம் ஆகின்றன. பள்ளியை அபாயம்என்று எச்சரிக்கிற ஒரு நூல் அனேகமாக இதுவாகத்தான் இருக்கக்கூடும்.

 

கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி

பக். 144 | ரூ.50/

மனிதர்களது பழக்கவழக்கங்கள், சிந்தனை, பகுத்தறியும் உணர்வு, சுபாவம் போன்றவைகளை ஆறு வயதிற்குள் குழந்தைகள் கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேல் படிப்புகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஆரம்பகல்வி கொடுக்கப்படுவதில்லை.

கல்வி மூலம் நேர்மையான, துணிச்சல்மிக்க மனிதர்களை உருவாக்க இந்நூலாசிரியர் எடுத்த முயற்சிகளும், அனுபவங்களும் நமது சமூகத்திற்கும், செயல்பாடுகளுக்கும் உதவியாக அமையும் விதத்தில் எழுதப்பட்டுள்ளன.

 

பொதுக்கல்வி எதிர்நோக்கும் சவால்கள்

வீரேந்தர் சர்மா தமிழில் : எஸ். காமராஜ் பக். 16 ரூ.5/

தொகுப்பு : தமிழ்நாடு அறிவியல் இயக்கக்

நிதித்துறையின் சார்புநிலை, உயர்கல்விக்கான செலவு, கல்வி வியாபாரத்தை நோக்கிய அரசின் முயற்சி இவை பற்றிய புள்ளிவிவரங்களை விவரிக்கிறது. கலை மற்றும் நிகழ்த்து கலை சம்பந்தமான பாடங்கள் தவிர்த்த மொத்த உயர்கல்வியும் தனியார் வசம் மட்டுமே இருக்க வேண்டும்; படிப்பிற்கான அத்தனை செலவினங்களும் மாணவர்களிடமிருந்து மட்டுமே வசூலிக்க வேண்டும்’’ என்று கல்வி, மருத்துவம், கிராம வளர்ச்சி ஆகியவற்றில் தனியார் முதலீடு குறித்த கொள்கையை வரையறுக்க முந்தைய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்த நிபுணர்களான முகேஷ் அம்பானியும் குமாரமங்கலம் பிர்லாவும் சிபாரிசுசெய்திருக்கிறார்களாம்! இது போன்ற பல நெருடுகிற உண்மைகளை குறுகத்தரித்த குறட்பாக்கள்போலச் சொல்லுகிற சிறு நூல்!

 

மலர்ந்தும் மலராத......

குழுவினர் | பக். 80 |ரூ.40/

விடலைப் பருவத்தினருக்கான வழிகாட்டி உடலும் மனமும் வளர்ந்து இன்னும் முழுமையான பக்குவமடையாத காலகட்டம்தான் விடலைப் பருவம். வளர்ச்சியின் வேகம் கேள்விகளை எழுப்பும். இந்தப் பருவத்தினரின் கேள்விகளுக்கு முடிந்த அளவு முறையான,. சரியான விடைகளைத் தந்தால்தான் அவர்களது வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். எளிமையாகவும், அதே நேரம் தெளிவாகவும் விடலைப் பருவத்தினருக்கு நுட்பமான விஷயங்களை விளக்கும் இந்நூல் சமுதாயத்திற்கு மிகவும் தேவை.....’’ என்று பிரபல மனநல மருத்துவர் டாக்டர். ருத்ரன் முன்னுரையில் பாராட்டியிருக்கிறார். விடலைப் பருவம், உடல் மனநிலை மாற்றங்கள் , மன இயல்புகள், சுய சிந்தனை, தன்னம்பிக்கை, விளம்பர யுகத்தில் வளரிளம் பருவத்தினர் நிலை என்பன உள்ளிட்ட பல தலைப்புக்களில் ஆண் பெண் இருபாலாரின் வளரிளம் பருவத்துக்கேயுரிய உடல் மனநலம் குறித்த உண்மைகள் மிக எளிமையாகத் தரப்பட்டிருக்கின்றன!

 

கல்விச் சிந்தனைகள் : விவேகானந்தர்

பேரா. அ. கருணானந்தன் பக். 64 | ரூ.30/

விவேகானந்தரின் கண்ணோட்டத்தில் கல்வியைப் பற்றிய சிந்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந் நூலில் மதமும், கல்வியும் யாருடைய கல்வி: தேசப்பக்த பார்வையில், மேனாட்டுக்

கல்வியும் இந்து ஆன்மிகமும், பெண்கல்வி, மற்றும் கல்வி பற்றிய விவேகானந்தரின் சமூக வரலாற்றுப் பார்வை ஆகிய தலைப்புகளில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் கல்வி பற்றிய இன்னொரு பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது. தொகுப்பு:

 

நூலகங்களுக்குள் ஒரு பயணம்

கமலாலயன் | பக். 24 | ரூ.5/

உலகின் முதல் நூலகம் எங்கிருந்தது ? இந்தியாவில் முதல் நூலகம் ? தமிழகத்தில்? என்கிற வரலாற்றுக் கேள்விகளுடன் தன் பயணத்தைத் துவங்கும் இப்புத்தகம் மிகப்பெரிய நூலகங்களான நாகார்ச்சுன வித்தியாபீடம் மற்றும் நாளந்தா பல்கலைக்கழக நூலகம் பற்றி விரித்துப் பேசுகிறது. நூலகத்துறை என ஒன்றைத் முதலில் நிறுவியது பரோடா சமஸ்தானம். நூலகத்துறை பற்றி இந்தியாவில் வந்த முதல் இதழ் லைப்ரரி மிசலேனியையும் பரோடா சமஸ்தான நூலகத்துறையே வெளியிட்டது. இன்றைய நவீன நூலக இயக்கத்தின் முன்னோடிகளான ஆந்திரத்தின் அய்யங்கி வெங்கட்ட ரமணய்யா பற்றியும் தமிழகத்தின் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன் (ஷி.ஸி. ரெங்கனாதன்) பற்றியும் குறிப்பிடும் புத்தகம் உலக நூலக இயக்கத்துக்கே பயன்படும் கோலன் பகுப்பு முறையை உருவாக்கிய ரங்கநாதனின் பணிகளை விரிவாகப் பேசுகிறது

 

எது நல்ல பள்ளி

த. பரசுராமன் | பக்: 16 | விலை ரூ.5/

பள்ளிக்கூடங்களில் எது நல்ல பள்ளி, எது தரமான பள்ளி என்று நாம் அறிந்து கொள்ள ஒரு பள்ளிக்கு தேர்ச்சி விழுக்காடு மட்டும் போதுமா அல்லது பாடத்திட்டமும், ஆங்கிலத்தில் பேசினால் போதுமா? அல்லது இசை, ஓவியம், ஆய்வுக்கூடம், நூலகங்களை பயன்படுத்தினால் போதுமா? என்று ஆராயப்படுகிறது இந்த நூலில்.

 

நாடு சுயசார்பு உயர்கல்வி

பிரபாத் பட்நாயக் | தமிழில்:பேரா.வ. பொன்னுராஜ் பக். 5 | ரூ.5/

ஒரு சமூகத்தில் உயர்கல்வி வீழ்ச்சியுறுமானால்

அச்சமூகம் தன் சிந்தனைக்குப் பிறரைச் சார்ந்திருக்க நேரிடும். அவ்வாறு ஒட்டுண்ணியாக வாழும் சமூகம் நீண்ட நாட்களுக்கு விடுதலை பெற்ற சமூகமாக இருக்க முடியாது...’’ என்கிறார் பிரபாத் பட்நாயக். தனியார் மயம், தாராளமயம், உலகமயம் இந்த மூன்றினாலும், மதவெறி அடிப்படை வாதம் ஆகியவற்றினாலும் இந்தியாவில் உயர்கல்வித்துறை அடைந்திருக்கிற சீரழிவுகளை விவரிக்கிறது இந்நூல்.

தீர்வுகளையும் இச்சிறு நூலே முன் வைக்கிறது என்பது மற்றொரு சிறப்பம்சம்!

 

ஆயிஷா

இரா.| நடராசன் | பக். 32 | ரூ.10/

இந்தக்கதையில் வரும் ஆயிஷா அவ்வளவு சுலபமாக எதையும் நம்பிவிட மாட்டாள். கேள்விகளைக் கேட்டு பூரணமாக விளக்கம் தேடுபவள். ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலைத்தான் ஊட்டுகிறது.

தாகம் இருந்தாலும் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள் எத்தனையோ அவர்களுக்கும் இந்தக் கதையில் வரும் ஆசிரியை போன்ற உறுதுணை கிடைக்க வேண்டும்.

 

நாகா

இரா.நடராசன் | ரூ. 60

விறைப்பான சீருடைக்குள் சிறுவர் சிறுமியர், அதிகாலை எழுந்து உடற்பயிற்சி, விதவிதமான விசில், விதவிதமான முடிச்சுகள்... சுனாமி வருகிறது. அதனை சாரணர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதே நாகா எனும் சாரணன். ஆயிஷாமூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட இரா. நடராசனின் எழுத்தில் சாரண சாரணியர் கையேடாகவும் இந்நூல் விளங்குகிறது.

 

ரோஸ்

இரா. நடராசன் | பக். 64 | ரூ.20/

நம் அன்றாட வாழ்வில் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் வன்முறையைப் இக்கதையில் சொல்லப்படுகிறது. மத்தியதர வர்க்கத்தில் வீட்டில் வேலைக்குச் செல்லும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இப்புத்தகத்தை வாசித்து நம் மனசாட்சியுடன் பேச வேண்டிய புத்தகம்.

 

மலர் அல்ஜிப்ரா

இரா.நடராசன் | ரூ. 25

ஒரு கண்டுபிடிப்புக்காக நோபல் விருது (கற்பனையாக) பெறுகிறார் ஒரு விஞ்ஞானி. அவரது விருது ஏற்புரையிலிருந்து விரிகிறது இக்கதை. ஒரு சிறுமியின் கதாபாத்திரம் வழியாக கணிதவியல் சூத்திரங்களையும் அதன் கண்டுபிடிப்புகளையும் கதை வடிவில் சொல்லும் முதல் முயற்சி.

 

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை

பாவ்லோ ஃப்ரையிரே | தமிழில்:

இரா.நடராசன் பக். 176 | ரூ. 95

இன்றைய கல்விமுறை என்பது எடுத்துச் சொல்வது என்ற நோயால் அவதியுறுகிறதுஎன்று பாலோ ஃப்ரையிரே இந்த நூலில் அறிவிக்கிறார். எடுத்துச் சொல்வதுஎன்பதே வகுப்பறை கல்வியின் ஒரே அம்சம். இந்த உறவு அடிப்படையில் எடுத்துச்சொல்வது ஒரு மனிதரையும் (ஆசிரியர்), பொறுமையோடு கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு பருப்பொருளையும் இன்றைய கல்வி உள்ளடக்கமாக கொண்டுள்ளது. ஆசிரியர் என்பவர் சகல அதிகாரமும் படைத்தவர். யதார்த்தத்தை அசையாத தன்மை கொண்ட இருக்கமடைந்த மாற்றமுடியாத ஜடப்பொருளாக (பாடமாக) தனித்தனிப் பெட்டிகளாய் உடைத்து இலக்காக பாவித்து முன்வைப்பதைக் காண்கிறோம். பாடப்பொருள் மாணவர்களின் அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ஆசிரியரது வேலையே மாணவர்களை, யதார்த்தத்திற்கு ஒவ்வாத அவர்களது நேரடித்தொடர்பு ஏதுமற்ற ஆனால் மிகமிக முக்கியம் என அவர்கள் கருத வேண்டியவைகளால் இட்டு நிரப்புவதே ஆகும். வங்கி சேமிப்பு போல நடக்கும் கல்விமுறையில் அறிவு என்பது தாங்கள் தகவல்களாக அதிகம் சேமித்து வைத்திருப்பதாய் கருதும் சிலரால், ஒன்றுமே தெரியாது என்று கருதப்படும் பலருக்கு பரிசாகவழங்கப்படும் ஒன்றாய் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் ஃப்ரையிரே.

 

கணிதத்தின் கதை

இரா.நடராசன் | ரூ. 50

நூற்றுக்கும் மேற்பட்ட கணிதவியல் அறிஞர்களின் வரலாறும், கண்டுபிடிப்பும் இந்நூலில் விரவிக் கிடக்கிறது. இதுவரையில் யாரும் தொகுக்காத கணிதத்தின் வரலாறு என்பது மனிதகுலத்தின் அறிவியல் வளர்ச்சியின் வரலாறு ஆகும். இந்தப்புத்தகம் தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது.

 

பூஜ்ஜியமாமம் ஆண்டு

இரா.நடராசன் | ரூ. 30

கோலாகலமான அறிவியல் உலகிற்குள் கைகோர்த்து உங்களை அழைத்துச் செல்லும் 1000 அறிவியல் கண்டு பிடிப்புகளை சத்தம் இல்லாமல் சந்தடி தெரியாமல் குழந்தைகளின் மனதில் புகுத்தும் அபூர்வ நாவல்.

 

சர்க்ஸ் டாட் காம்

இரா. நடராசன்

புறப்படு.... திருக்குறளுக்குள் ஒரு சாகசப் பயணம்,.... கோலாகலமான அறிவியல் உலகிற்குள் உங்களை கைகோர்த்து அழைத்துச் செல்கிறது.

 

நீ எறும்புகளை நேசிக்கிறாயா?

தமிழில்: இரா.நடராசன் ரூ. 25

உலகின் பிற பகுதிகளின் குழந்தைகள் சந்திக்கும் வாழ்ககைகளை நமக்கு அறிமுகம் செய்கின்றன. மொழி பெயர்ப்பின் இடறல்கள் ஏதுமின்றி இலகுவாக நம் மனவெளிக்குள் பயணம் செய்யும் இக்கதைகள் குழந்தைகளும் குழந்தைகளோடு வாழ்கின்ற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

 

எளிய வேதியியல் சோதனைகள்

இரா.நடராசன், ரூ. 15

அறிவியலின் முப்பரிமானங்களின் வழி சிறுவர்கள் வேதியியல் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்.

 

எளிய இயற்பியல் சோதனைகள்

இரா.நடராசன் ரூ. 15

அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்.

 

எளிய உயிரியல் சோதனைகள்

இரா.நடராசன் ரூ. 15

அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியல் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்.

கலீலியோ இரா.நடராசன் ரூ. 15

கலீலியோ வாழ்க்கை வரலாற்றை

நாடகமாக கூறும் நூல்.

 

விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்

இரா.நடராசன் ரூ. 40

சர்க்கரை நோய், போலியோ, வெறிநாய்கடி, மலேரியா, மாரடைப்பு, புற்றுநோய், வந்தால் என்ன செய்ய வேண்டும்? இதற்கெல்லாம் மருந்து கண்டுபிடித்தவர் யார் ? எப்படி? கூறும் நூல்.

 

சார்லஸ் டார்வின்

இரா.நடராசன் ரூ. 10

சார்லஸ் டார்வின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக கூறும் நூல்.

 

மேடம் கியூரி

இரா.நடராசன் ரூ. 10

மேடம் கியூரி வாழ்க்கை வரலாற்றை நாடகமாக கூறும் நூல்.

 

கல்வியில் நாடகம்

பிரளயன் | பக். 64 | ரூ.30/

தமிழின் மிகச்சிறந்த நவீன நாடகக் கலைஞரான பிரளயன் தனது பட்டறிவையும் படிப்பறிவையும் சரியான விகிதத்தில் கலந்து தந்திருக்கிற நூல் இது. சிறுவர்கள் நிகழ்த்து கலைஞர்களாக முதன்முதலில் அறியப்பட்ட வரலாற்றில் தொடங்கி சிறுவர்களின் மன உலகம்குறித்து ஆராய்கிறது இந்நூல். தனி மனித உணர்வுகளை, தனிமனிதக் கண்ணோட்டங்களைத் தீவிர விசாரிப்புக்குள்ளாக்குகிற ஒரு கலை இலக்கியப் போக்கை விவரிக்கிறது. சிறுவர் மன உலகம் பற்றிய புரிதலைப் பரவலாக்க விழைவோர், நமது கல்விமுறை, நோக்கு, போதனா முறை, பாடத்திட்டங்கள் ஆகிய அனைத்தையும் பற்றி ஆராய வேண்டியுள்ளது. சமூகத்தின் பொதுப் புத்தியோடு முதலில் மோதியாக வேண்டியிருக்கிறதுஎன்கிறார் பிரளயன்.

ஆதாரக் கல்விமுறை சிறுவர் அரங்கு பற்றி விவாதிக்கிற ஆசிரியர் தனது நீண்ட நெடிய அரங்கியல் பட்டறிவைக் கொண்டு மாணவச் சிறுவர்களையே அவர்களுக்கான சொந்த நாடகங்களை உருவாக்கிய மேடையேற்றிய அனுபவங்களை விவரிக்கிறார். கல்வியில் நாடகத்தின் பங்கு பற்றிய புரிதலை ஆழமாக்குகிற நூல்.

 

பூக்கதைகள்

யூமா வாசுகி | ரூ. 10

அம்மா, அப்பாவைப் பங்குபோட இன்னுமொரு பாப்பா போட்டிக்கு வந்தால்... சண்டை, கோபம்; கைகளில் கிடைப் பவையெல்லாம் உடைபடும், கிழிபடும், காணாமல் போகும். இங்கும் ஒரு பாப்பாவிற்கு அழகான குட்டித் தம்பி. வழக்கம்போல பாப்பாவிற்கு கோபம், அம்மா மீதும், அப்பா மீதும், பாட்டி மீதும். யார் அவளை தேற்றுவது? செம்பருத்திப் பாட்டி! செம்பருத்திப் பாட்டியா? ஆமாம்!

 

மின்மினிக்காடு

யூமா வாசுகி | ரூ. 10

விலங்குகள் பேசுமா? பேசினால்...? மின்மினிக் காட்டிற்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள். பேசும் முயல், யானை, குரங்கு, புலி, மான், கரடி, காக்கை, மரங்கள் எல்லாம் சேர்ந்தால்... காட்டை காப்பாற்ற அவர்கள் நமது நாயகர்களுடன் எடுக்கும் முயற்சி...ஒரு குமிழின் கதை சோப்புக் குமிழ், விளையாட, ரசிக்க; குமிழ் வெடித்து தெறிக்க, சிலிர்க்க... என எல்லோருக்கும் பிடிக்கும். குமிழுக்குள் மாட்டிக் கொண்டால்?

 

பூமிக்கு வந்த விருந்தினர்கள்

யூமா வாசுகி ரூ. 25

லீவ் விட்டாச்சு, வெளியூர் போகலாம், வெளிநாடும் போகலாம். இங்கே, சிலர் வெளிகிரகம் போய்வருகிறார்கள். நம்மை போலவே வெளிகிரகத் திலிருந்து யாரேனும் லீவிற்கு பூமிக்கு வந்தால்?

 

ஆண்பிள்ளை யார்? பெண்பிள்ளை யார்?

யூமா வாசுகி | ரூ. 15

குழந்தைகள் புத்திசாலிகள். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல இயலாது. அதுவும் நாம் பதில் சொல்லக் கூடாது என தீர்மானிக்கிற விஷயத்தை ஆராய்ந்து, நம்மை அதிர வைப்பதில் குழந்தைகள் எப்போதுமே கெட்டிக் காரர்கள். நம் சங்கடங்களை தீர்க்க வந்த புத்தகம்.

 

மரகத நாட்டு மந்திரவாதி

யூமா வாசுகி | ரூ. 50

பிள்ளைகளின் கனவுகளில் எல்லாம் மந்திரக் கோல் வந்து போகும். ஓஸ் நகரத்து மாயாவிஎன உலக மொழிகள் பலவற்றில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய கதை, தகர மனிதன், சோளக்கொல்லை பொம்மை என விசித்திர கதா பாத்திரங்களுடன் மரகத நாட்டு மந்திரவாதி வருகிறார்.

 

கடவுளைப் பார்த்தவனின் கதை

லியோ டால்ஸ்டாய் | ரூ. 20

கடவுளைப் பார்த்த ஒருவனின் கதை. எந்தக் கடவுளை? யார் கடவுள்? எது கடவுள்? உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் இதற்குச் சொன்ன பதில் என்ன?

 

தயா

எம்.டி.வாசுதேவன் நாயர் | ரூ. 25

மலையாளத்தின் மிகமுக்கியமான சிறுவர் நாவல் இது. குழந்தைகளுக்குத் தேவையான ஆர்வமூட்டும் கதையாடல். திருப்புமுனைகள், புத்திசாலித்தனமான கதாபாத்திரங்கள், அன்பு நேசம் விசுவாசம் குரோதம், பேராசை, ஏமாற்றம், அறியாமை, விரோதம், அறிவுக்கூர்மை, வெற்றி என எல்லா குணாதிசயங்களையும் சித்தரிக்கிற கதாபாத்திரங்கள். குழந்தைகளின் புனைவுத்திறனை, நல்லுணர்வுகளை தன்னம்பிக்கையை வளர்க்கின்ற நாவல்.

 

தாத்தா பாட்டி சொன்ன கதை

கழனியூரான் | ரூ. 50

கதைகளை சுவாரசியமாக சொல்வதில் கழனி யூரான் கைதேர்ந்தவர். அதிலும் தாத்தா பாட்டிகள் கதை என்றால்? குழந்தைகளுக்காக தாத்தா பாட்டிகளை அழைத்து வருகிறார்.

 

நிலாவும் குரங்குகளும்

செ. யோகநாதன் | ரூ. 10

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை நிலாவும் குரங்கும். மிகச்சிறந்த எழுத்தாளரான செ. யோகநாதன் குழந்தைகளுக்கென நிறைய கதைகளை தொகுத்துள்ளார். அவற்றிலிருந்து சில கதைகள்.

 

வாயும் மனிதர்களும்

அபிமன்யூ | ரூ. 5

குட்டிக் கதைகள் சொல்லும் சுட்டி அபிமன்யு, மலையாளத்தில் பல பதிப்புகள் கண்ட நூலின் ஆசிரியர். அபிமன்யுவின் குட்டிக் கதைகள் யதார்த்தமானவை; எளிமையானவை அதே நேரத்தில் புதிய கோணத்தில் முடிபவை.

 

ஐந்து சீன சகோதரர்கள்

கூத்தாலிங்கம் | ரூ. 10

நாம் நினைத்தவுடன் நம் கால்கள் நீண்டு கொண்டே போனால்? மூச்சடக்கி 30 நிமிடங்கள் இருந்தால்? அதிசய சக்திகளுடன் ஐந்து சகோதரர் கள் அரசனிடம் இருந்து தப்பிக்கும் கதை இது.

 

மேகம் கருக்குது

த.வி.வெங்கடேஸ்வரன் | ரூ. 10

மழை தந்து, குளிர்விக்கும் மேகம். மேகம் எங்கிருந்து வருகிறது? எங்கே போகிறது? ஓயாமல் அலைந்து திரியும் மேகத்தின் வரலாறு. ஒரு கருத்த மேகத்தின் அறிவியல்பூர்வமான கதை. பல படங்களுடன் எளிமையாய்.

 

கதை சொல்லும் கை

த.வி.வெங்கடேஸ்வரன் | ரூ. 5

கை மட்டும் இல்லையென்றால்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். காலை முதல் இரவு வரை கை இல்லாமல் நம் உலகம் எப்படி இயங்கும்? கையின் வேதியியல், இயற்பியல், உயிரியல், உடலியல் வரலாற்றை கதையாக கையே சொல்கிறது.

 

நெல்சன் மண்டேலா (படக்கதை) ரூ. 25

மண்டேலாவை தெரியுமா? வரலாற்றில் மட்டுமல்ல புவியியலிலும் இடம் பிடித்தவர். ஆப்பிரிக்காவை தெரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் மண்டேலாவை தெரிந்து கொள்ள வேண்டும். அழகிய படங்களுடன் குட்டி மண்டேலா முதல் அதிபர் மண்டேலா வரை.

 

உயிர் குரல்

மு. முருகேஷ் | ரூ. 5

குட்டி வேப்பமரம் பேசினால் என்ன பேசும்? ராசாத்திக்கு வேப்பமரத்தின் மீது இவ்வளவு பாசமா? மரம் வளர்க்கும் குழந்தைகளின் கதையை உயிர்குரலாக தந்திருக்கிறார் மு. முருகேஷ்.

 

வெள்ளை ஒட்டகக் குட்டி

பெய்ஷெனலியேவ் | ரூ. 10

நமக்கெல்லாம் பரிசாக என்ன கிடைக்கும்? நமது குட்டி பொம்மை, பொம்மைக்கார் விளையாட்டுப் பொருட்கள். நமது குட்டிப் பையனுக்கு என்ன பரிசு கிடைத்தது தெரியுமா? வெள்ளை ஒட்டகக் குட்டி. தாத்தாவும் பாட்டியும் வெள்ளை ஒட்டகக் குட்டியை பரிசாக தந்த கதை..

 

அதிசயப் பூண்டும் அறிவாளித் தம்பியும்

ஜீவசுந்தரி | ரூ. 10

பட்டு கண்டுபிடித்த சீன அரசியின் கதை, அதிசயப் பூண்டின் கதை என பலநாட்டு சிறுகதைகள்

 

கடற்கரையோரம் ஒரு நடைபயணம்

த.வி.வெங்கடஸ்வரன்

கடற்கரை உலகில் எல்லோருக்கும் பிடித்த இடம். அதில் ஒரு நடைபயணம். கடற்கரையோர உயிரினங்கள் பற்றி படங்களுடன் அருமையான விளக்கங்கள் அடங்கிய புத்தகம்.

 

ஏலகிரியில் சிறுத்தை வேட்டை

கென்னத் ஆண்டர்சன் | ரூ. 80

மனிதனால் துன்புறுத்தப்பட்ட புலிகள், சிறுத்தைகள் பாவம் வெறிபிடித்து அலையும், வெறிபிடித்து அலையும் சிறுத்தைகளை வேட்டையாடி கெனத் ஆண்டர்சன்’’ என்ன செய்கிறார்.

 

உலகம் சுற்றலாம் வாங்க

பேரா.மோகனா | ரூ. 20

ஊர் சுற்ற யாருக்குத்தான் பிடிக்காது. உலகம் முழுக்க சுற்றிப் பார்க்க எல்லோருக்கும் வாய்க்காது. உலக நாடுகளை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்கிறார். சோ. மோகனா.