1) நூல்கள், சுயபடைப்பாக இருக்க வேண்டும்.

2) நூலில் © என்ற அடையாளத்தில் ஒரு காப்புரிமை அறிவிப்பை இட வேண்டும்.

3) காப்புரிமைச் சட்டம் 1957-ன் 19-வது பிரிவின் படி, காப்புரிமை ஒப்படைப்புக்கான ஒரு வர்த்தக ஏற்பாட்டை காப்புரிமை உரிமையாளருடன் செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.

4) எந்த வகையிலாவது நிகழும் காப்புரிமை மீறலுக் கான சட்டப்பொறுப்பு நூலின் ஆசிரியருடையதாக இருக்கும் வகையில் உடன்பாட்டில் விதிப்பிரிவு ஒன்றை சேர்க்க வேண்டும்.

5) காப்புரிமைப் பதிவு கட்டாயமில்லை என்றாலும், பதிவு செய்து கொள்வது நலம் பயப்பதானது; ஏனென்றால், நீதிமன்றத்தில் ஒரு திட்டவட்டமான சாட்சியாக தாக்கல் செய்ய முடியும்.

6) உரிமை மீறலோ உரிமை மீறிய வெளியீடோ இருக்கும் பட்சத்தில் சாத்தியமானால், நடுவர் தீர்ப்புக்கு விவகாரத்தை எடுத்துச் செல்வதில் வர்த்தக அமைப்புகளிடம் விவகாரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

7) விதிமீறல் நிகழும் பட்சத்தில் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும்.

8) உங்களுடைய காப்புரிமையில் மீறல் நிகழும் பட்சத்தில் நிலைமைக்கு ஏற்ப, சிவில் வழக்கு ஒன்றையோ அல்லது கிரிமினல் புகார் ஒன்றையோ தாக்கல் செய்ய வேண்டும்.

9) வேறொரு புத்தகத்திலிருந்து வரைபடத்தையோ அல்லது ஏனைய விஷயங்களையோ மறுபதிப்பு செய்வதற்கான அனுமதியைப் பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி அடிப்படையிலான படிவம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

10) இறுதியாக குறிப்பிட்டாலும் முக்கியமான விஷயம் என்னவெனில், உங்களுடைய பிரச்சினையின் தன்மைகளை தீர்மானிப்பதற்கு இத்துறையில் நிபுணத்துவம்மிக்க சட்ட ஆலோசகரை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதாகும்.

Pin It