மரக்கிளைகள்

கூரைகளாய்

மழை பெய்கையில்

கிழிந்த குடைகளாய்

ஒதுங்க இடம் தேடி

அலையும் சாலையோர

மனிதக் கூட்டம்

தலைசாய்த்து வழியனுப்பும்

காக்கையின் கண்களில்

ஈரம்!

-வரத.இராஜமாணிக்கம்

Pin It