என்னால் முடியாது!

மலம் சுமக்கும்

மனிதன்

இருக்கும் வரை

மலரின் மென்மை பற்றி

கவிதை எழுத.

 2

பக்கத்து இருக்கை

பயணியிடம்

புன்னகை கூட

செய்யாமல்

நீள்கிறது பயணம்.

தூரத்துச் சிறுமி

கையசைத்த  படியே

கற்றுத் தந்தாள்

அன்பை.

-ராசை.கண்மணிராசா
Pin It