கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பூ.அர.குப்புசாமி
- பிரிவு: சுற்றுச்சூழல்
காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் 73 திட்டங்களுக்கு மேலாக வகுத்து 465 நூறு கோடிக் கனஅடி (டி.எம்.சி.) நீரை முற்றாகப் பயன்படுத்த விரைந்து செயல் பட்டது கருநாடக மாநிலம். இவை அனைத்திற்கும் ‘காவேரிப் பெருந்திட்டம்’ (காவேரி மாஸ்டர் பிளான்) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவற்றில் பெரும் பாலான வேலைகள் முடிந்துவிட்டன.
பங்காரப்பா முதல்வராக இருந்தபோது, இன்னும் மூன்று ஆண்டுகளில் ‘காவேரிப் பெருந்திட்டம்’ நிறைவேறி விடும் எனக் கூறினார். அந்தப் பெருந் திட்டத்தில் வெங்காலூருக்குக் குடிநீர் வழங்குவது சேராது; சிவசமுத்திரம் அருவிக்குக் கீழே உள்ள நீர்வள மின் நிலையம் சேராது; மேகதாது திட்டமும் சேராது.
இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்குக் கருநாடகம் எந்தச் சட்டத்தையும் ஞாயத்தையும் பார்க்க வில்லை. ஒப்பந்தங்களை மீறியும் தமிழக அரசின் ஒப்புதல் இன்றியும் நடுவணரசின் நீர் ஆணையத்தையும் திட்டக் குழுவையும் நீர்வளத்துறையையும் மீறியும் நடுவணரசின் ஒப்புதல் இன்றியும் தொடர்ந்து தனிநாடு போலச் செயல்பட்டுவருகிறது.
இவற்றைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு செய்த முயற்சி மிகக் குறைவு. இவைபற்றிய உண்மைகளை ஆட்சியாளர் கள் பொதுமக்களுக்குச் சொல்வதில்லை.
கேரளத்தின் பங்கையும் கொடுத்த பிறகு தமிழ் நாட்டில் ஓடும் காவிரி வற்றிப் போகப் பத்து ஆண்டுகளே ஆகும்.
அதன் விளைவுகளைத் தமிழ்நாடு தாங்குமா?
காவிரியில் கருநாடக அரசு நிறைவேற்றிவரும் திட்டங்கள்
தற்போதுள்ளதும் நடைபெற்றுக்கொண்டிருப்பதுமான திட்டங்கள்
எண் |
திட்டத்தின் பெயர் |
ஆயக்கட்டு (எக்தேர். ஆயிரங்களில்) |
பயன்படுத்தும் அளவு (டி.எம்.சி.யில்) |
1 |
அணைக்கட்டுக் கால்வாய்கள் |
77.1 |
57.7 |
2 |
கிருட்டிணராசசாகர் |
79.3 |
61.2 |
3 |
கான்வா |
2.0 |
1.2 |
4 |
பைரமங்கலா |
1.6 |
1.0 |
5 |
மார்க்கோனபள்ளி |
6.1 |
4.0 |
6 |
எப்பகல்லா |
1.2 |
0.4 |
7 |
நுபு |
10.5 |
7.7 |
8 |
சிக்ககோலே |
1.7 |
0.7 |
9 |
மங்களா |
0.8 |
0.6 |
10 |
சுவருணவதி (உறுதிப்படுத்தல்-4034எக்.) |
2.8 |
3.6 |
11 |
குண்டால் (உறுதிப்படுத்தல் - 4064 எக்.) |
4.0 |
1.4 |
12 |
நல்லூர் அமனிக்கரை |
1.3 |
0.3 |
13 |
காமசமுத்திரம் |
3.1 |
0.8 |
14 |
அச்சன கோப்பலு |
2.3 |
0.6 |
15 |
ஏமாவதி |
283.6 |
54.7 |
16 |
ஒட்டகோலே |
7.5 |
2.4 |
17 |
யாகாச்சி |
21.5 |
5.7 |
18 |
கபினி |
87.9 |
85.0 |
19 |
ஏறங்கி |
54.6 |
18.0 |
20 |
சிக்கிடிகோலே |
1.7 |
0.8 |
21 |
மஞ்சனபேலே |
3.8 |
0.8 |
22 |
தரக்கா |
7.0 |
3.2 |
23 |
அருக்கவதி |
8.6 |
3.4 |
24 |
இக்கலூர் |
4.0 |
1.8 |
25 |
தேவராச அர்சு வருணக்கால்வாய் |
32.4 |
10.5 |
26 |
உதுதோரகல்லா |
6.3 |
1.2 |
27 |
கிருட்டிணராசசாகரைப் புதுப்பித்தல் |
2.0 |
- |
28 |
சிறுபாசனத் திட்டங்கள் |
250.6 |
71.3 |
29 |
குடிநீர் வழங்கல் |
- |
28.0 |
|
மொத்தம் |
965.3 |
407.7 |
|
மேலும் கட்டப்படவுள்ள திட்டங்கள் |
||
30 |
இலக்குமணத் தீர்த்தம் |
2.8 |
1.5 |
31 |
கிருட்டிணராசசாகர் விரிவாக்கம் |
45.5 |
8.2 |
32 |
செங்கவாடி |
2.6 |
1.3 |
33 |
உலோகபவானி |
3.0 |
2.0 |
34 |
பூரிகள்ளி ஆற்றுநீரேற்றுப் பாய்சனத்திட்டம் |
2.6 |
1.4 |
35 |
சிறு பாய்சனத் திட்டங்கள் |
- |
22.0 |
36 |
மின் எடுத்தல் |
|
|
37 |
மின்எடுத்தல் நீர்தேக்கச் சேதாரங்கள் |
|
|
|
நீர்வள மின்நிலையங்கள் |
|
|
|
மொத்தம் |
91.2 |
57.3 |
|
மேற்கண்ட இரண்டும் சேர்த்து |
||
|
இப்போதுள்ளதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான திட்டங்கள் |
965.3 |
407.7 |
|
மேலும் கட்டப்பட உள்ள திட்டங்கள் |
91.2 |
57.3 |
|
மொத்தம் |
1056.5 |
465.0 |
குறிப்பு : மேலுள்ள குறிப்புகள் அனைத்தும் கருநாடக அரசின் நீர்ப்பாசனத் துறை வெளியிட்டுள்ள ‘காவேரி நீர்த் தகராறு’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை (பக். 40-42)
தமிழ்நாட்டில் இதுபோல் ஏதேனும் திட்டம் உண்டா என்பதை எண்ணிப் பாருங்கள். இப்படியே போனால் காவிரி வற்றிப் போவதைத் தடுக்க முடியுமா?
(கட்டுரை: 'முதன்மொழி' - ஏப்ரல் 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
வற்றாத வளம்கொண்ட கடலின் பெருமை அதை நம்பி வாழும் மீனவர்களுக்கு நன்றாகத் தெரியும். ‘கடல் அம்மா’ என்றுதான் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை அழைக்கிறார்கள். கடல் மீனவர்களுக்கு மட்டுமே வாழ்வாதாரம் இல்லை. மனிதகுலத்தின் வாழ்வாதாரமே கடல்தான் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. புவிக்கோளத்தின் முக்கால் பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கடல்தான் நம்முடைய வானிலையைத் தீர்மானிக்கிறது. மனிதர்களின் செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் கால்பகுதியை கடல்நீர்தான் உறிஞ்சிக்கொள்கிறது. இதனால் புவி வெப்பமடைவது தடுக்கப்படுகிறது.
ஆனால் மனித வாழ்க்கையில் இப்போது தொழிலகங்கள் பெருகிவிட்டன. கார்பன் டை ஆக்சைடின் அளவு காற்றில் அதிகரித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடல்நீரின் CO2 உறிஞ்சு திறன் குறைந்துபோயிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘Nature’ தன்னுடைய நவம்பர் 19 ஆம் தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 2.3 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடை கடல் உறிஞ்சிக்கொண்டது. ஆனால் 2000ம் ஆண்டில் இருந்த கடல் நீரின் CO2 உறிஞ்சு திறன் 10 சதவீதம் குறைந்துபோயிருப்பதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்தக்கணிப்பு முன்னரே செய்யப்பட்டிருந்தாலும், இதுபற்றிய அளவீடுகளும் புள்ளிவிவரங்களும் இப்போதுதான் சேகரிக்கப்பட்டுள்ளன.
“காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீரின் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சு திறன் குறைகிறது” என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானி சாமர் காட்டிவாலா என்பவர். வளிமண்டலத்தில் தொழிலக கார்பனின் அளவை 1765 ஆம் ஆண்டு முதல் 2008 வரை காட்டிவாலா குழுவினர் ஆய்வு செய்தனர். 1950 ஆம் ஆண்டுவரை எல்லாம் சீராக இருந்தன. ஆனால் 2000 ம் ஆண்டில் கடல் நீரின் CO2 உறிஞ்சுதிறன் கணிசமாக குறையத் தொடங்கியிருந்தது. 1990ம் ஆண்டைக் காட்டிலும் இன்று நாம் கடல்நீரின் மீது 150 பில்லியன் டன்கள் கூடுதலான CO2 வை திணிக்கிறோம்.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/11/091118143211.htm
தகவல்: மு.குருமூர்த்தி (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
புவிக்கோளம் வெப்பமடைவதைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சி CCS என்றழைக்கப்படும் CARBON CAPTURE AND STORAGE தொழில்நுட்பம் ஆகும். எண்ணெய், கரி போன்ற படிம எரிபொருட்களை அதிக அளவில் எரிக்கும் தொழிலகங்களில் இருந்து வெளிப்படும் புவியின் வெப்பநிலை உயர்விற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடித்து, புவிக்கு அடியில் சேகரித்து வைக்கப்படும் தொழில் நுட்பமே CCS எனப்படும். உலகின் பல பகுதிகளில் CCS தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தொழிலகங்கள் உள்ளன. CCS முறை முற்றிலும் பாதுகாப்பானது அல்ல. சிறைபிடித்த கார்பன் டை ஆக்சைடை கடல் நீருக்கடியில் சேமித்துவைப்பதால் கடல் நீரின் அமிலத்தன்மை கூடிப்போக வாய்ப்புண்டு.. நிலத்திற்கடியில் சேமித்து வைத்தால் வாயுக்கசிவினால் அது மீண்டும் வளிமண்டலத்தில் கலந்துவிட வாய்ப்பு உண்டு.
நாகரிகவாழ்க்கை என்னும் பெயரில் அளவிற்கு அதிகமான படிம எரிபொருட்களை பயன்படுத்திவரும் மனிதனின் இன்றைய நிலை பரிதாபகரமானது. கடப்பாரையை விழுங்கிய மனிதன் அதனை செரிக்கவைக்க சுக்கு கஷாயம் குடித்த கதைதான் இந்த முயற்சியெல்லாம். இருந்தாலும் அறிவியல் உலகம் சும்மா இருப்பதில்லை. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடித்து அடைத்துவைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் வெளியாகி உள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் நுண்ணியிரிகளைக் கொண்டு கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடிக்க இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு தற்செயலாக நிகழ்ந்துள்ளது.
இதுபோன்ற சிக்கல்களை தீர்த்துவைக்க எப்போதும்போல் நமக்கு நுண்ணியிரிகளே துணை நிற்கின்றன. மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த J.A. டோஸல் என்னும் விஞ்ஞானியின் அறிக்கை இந்த நல்ல செய்தியை அறிவித்துள்ளது. மரபணு பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நுண்ணியிரிகளைக் கொண்டு கார்பன் டை ஆக்சைடை கைப்பற்றும் பொருட்களை உருவாக்கமுடியும் என்கிறார் டோஸல்.
இந்த மூலக்கூறின் வடிவத்தை இவர் கணினியின் உதவியால் மாற்றியமைத்து ஆராய்ந்துள்ளார். இவருடைய ஆய்வின் பலனாக இந்த மூலக்கூறுகள் தொழிலகங்களில் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிகளாக பயன்படும் நாள் தொலைவில் இல்லை. இந்த ஆய்வின் மூலம் நுண்ணியிரின் செல்சவ்வுகளுக்குள் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை சேமிக்கும் வழி கண்டறியப்பட்டுள்ளது.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/07/090715101441.htm
தகவல்: மு.குருமூர்த்தி (
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: சுற்றுச்சூழல்
மில்லியன் கணக்கில் மனிதர்கள் வாழும் நகரங்களில் ஏற்படும் சுற்றுச்சுழல் சீர்கேட்டின் அளவை சொல்லி முடியாது. எத்தனை கார்கள், எவ்வளவு மின்சாரம், எத்தனை கழிவுகள்...?
எல்லாருடைய வீட்டின் கூரைகளையும் பசுமையாக்கினால் ஆண்டுக்கு 55000 டன் கரியமில புகையை காற்றிலிருந்து பிடித்து நீக்கலாம் என்று மிச்சிகன் ஸ்டேட் பல்கலை ஆசிரியர் தெரிவிக்கிறார்.
வீட்டுக் கூரையில் புல்தரை விரிப்பது, செடிகளை வளர்த்தால் அது அழகுக்கு அழகையும், பில்டிங்கை குளிர்ச்சியாகவும் வைக்கும். இதனால் குளிர்சாதனங்களின் மின்சாரம் சேமிப்பாகும். மழை நீர் வீணாகமல் பயன் அடையும். காய்கறிகளை வளர்த்தால் பணம் மிச்சமாகும். மருந்தடிக்காத காய்கறியும் கிடைக்கும். ஒரு வேளை மழை அதிகம் கிடைத்தாலும் கிடைக்கும். செய்தால் என்ன?
- முனைவர் க.மணி
- நியூட்ரினோ ஆய்வகம் - வரமா? சாபமா?
- பட்டாசு வெடிக்கலாமா?
- சமையல் அறையிலும் சூழலை காக்கலாம்
- அணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்
- அவசரக் கத்திரி - அறிவியல் அநீதி
- அழிவின் விளிம்பில் பவளப் பாறைகள்
- BPA என்னும் நஞ்சு
- பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
- உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!
- ஆல்கா பெட்ரோல்
- வளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக் காடுகள்
- சாகிறதா சாக்கடல்?
- கொள்ளை போகும் தண்ணீர்
- சூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்
- காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் - தர்மசங்கடமான உண்மைகள் சமரசங்கள் தீர்வைத் தருமா?
- எலும்புகள்
- இணையத்தை துண்டித்த கேபிள் இணைப்பு
- உடல் பருமனாகிப் போவதற்கு காரணம் என்ன?
- நீரில் இருந்து நிலத்திற்கு.
- வேளாண்மையின் பகைவன்