09.09.2018 அன்று மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடந்த தோழர் தமிழ்க்குரிசில் படத்திறப்பு நிகழ்ச்சி காலை 10.30 மணியளவில் தொடங்கி யது. தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்க மணி வரவேற்புரையாற்ற திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் நிர்வாகியாக இருந்து செயல்பட்ட வரும் தமிழ்நாடு தாய்த் தமிழ் கல்வி யின் செயலாளராக இருந்தவரும், பெரியாரிய சிந்தனையாளரும், குடிஅரசு வெளியீட்டில் தொகுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தலைமை யேற்று நடத்தியவருமாகிய தமிழ்க்குரிசில் படத்தை பேராசிரியர் கல்விமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் ஏற்பாடுகளையும், உணவு ஏற்பாடுகளையும் மேட்டூர் நகர கழகத் தோழர்கள் செய்தார்கள்.

kolathoor mani at mettur

நிகழ்ச்சியில் நினைவேந்தல் உரையாக கோபி தாய்த் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் குமணன், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் மூர்த்தி, தமிழ்வழி கல்விக் கழகத்தின் சார்பாக வெற்றிசெழியன், பல்லடம் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் இராஜேஷ் கண்ணா, சங்கரன் கோவில் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளி பொறுப்பாளராக இருந்த சங்கரராமன், வடகாடு தாய்த் தமிழ் பள்ளியின் தாளாளர் ராஜா, தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் சின்னப்பா தமிழர், திண்டிவனம் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் தாளாளர் பூபால், புதுச்சேரியைச் சார்ந்தவரும் பிரான்ஸ் பாரிஸ் நகரத்தில் சுயமரியாதை இயக்கம் நடத்தி வந்தவரும் தாய்த் தமிழ்க் கல்வி இயக்கத்திற்கு பெரும் உதவியாக இருந்தவருமான கோபதி, திருப்பூர் பள்ளியின் பொறுப்பாளர் எழில் சுப்ரமணியம், திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மரியஅந்தோணி போன்ற தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்களும், கரூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் கரூர் காமராசு, தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் முன்னாள் மாணவரும் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பில் 496 மதிப்பெண் பெற்று சேலம் மாவட்டத்தில் முதல் மாணவராக வந்தவருமான குறிஞ்சி மலர் ஆகியோருடன், சேலம் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் சூரியகுமார், சேலம் மருத்துவ கல்லூரியின் போராசிரியரும் மக்களுக்கான மருத்துவ சங்கத்தின் தலைவருமாகிய மருத்துவர் லட்சுமி நரசிம்மன், மேட்டூர் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர் ஆசிரியர் பாரி, பொறியாளர் அனுராதா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேட்டூர் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், அருந்ததியர் சாக்கியர் சங்கத்தின் நிறுவனரும், கவிஞருமான மதி வண்ணன், மேட்டூர் முல்லை வேந்தன் - கனகா இணையர் நினைவேந்தல் உரையை நிகழ்த்தினர்.

நிகழ்வின் இறுதியில் தமிழ்க்குரிசில் மகள் செம்மலர், குரிசிலின் உடன்பிறந்தவரான முருகேசன் நன்றியுரையாற்றினர். நிகழ்வில் பல்வேறு தரப்பினரும், கழகத் தோழர்களும், பெற்றோர்களுமான 250 பேர் பங்கேற்றனர்.

பாரூக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி உதவிய தோழர்கள்

மதவெறிக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் குழந்தைகளுக்கான 2018 முதல் பருவ பள்ளிக் கட்டணம் ரூ46,492/- செலுத்தி அவர்களது இரண்டாம் வருடத்திய கல்வியினை துவக்கி வைத்துள்ள வழக்கறிஞர் சிவகுமார், வழக்கறிஞர் கலையரசு ஆகியோருக்கும், கடந்தாண்டு இரண்டாம் பருவ கட்டணம் ரூ. 34000 செலுத்திய மதுரை வழக்கறிஞர் தன பாலாஜி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.

பாரூக் குழந்தைகளை இஸ்லாமிக் பள்ளியில் இருந்து எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு இரண்டு பருவக்கட்டணம் செலுத்த வேண்டும். வாய்ப்புள்ள தோழர்களிடம் உதவி பெற்று செலுத்தி வருகிறோம். வாய்ப்பிருக்கும் தோழர்கள், ஆதரவாளர்கள், பள்ளிக் கட்டணத்திற்கு உதவ விரும்பினால் மகிழ்வோம்.

நேருதாஸ், திராவிடர் விடுதலைக் கழகம் , கோவை மாவட்டம்

Pin It