உலகப் பொருளாதார மன்றத்தின் பாலினச் சமத்துவ இடைவெளியைக் குறைக்கும் 2022ஆம் ஆண்டறிக்கை பெண்களின் பொருளாதாரம், கல்வி, உடல் நலம் மற்றும் அரசியல் பங்கேற்புக் குறித்து ஆராய்கிறது. 145 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் இடம் 136. பொருளாதாரப் பங்கேற்பில் 143ஆவது இடத்தில் கடைசியிலிருந்து மூன்று இடங்களுக்கு மேலே இருக்கிறது.

  • பெண்கள் உடல்நலன் பேணுவதில் பெண்களுக்கு கடைசி இடம். இதுதான் சனாதனம் - மதவாதம் பேசும் பா.ஜ.க. ஆட்சியின் “சாதனை”.
  • திராவிட ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் மட்டும் நிலைமை முற்றிலும் வேறு. தேசிய அளவிலான மெக்கன்சே ஆய்வு (2015), பாலினச் சமத்துவத்தைப் பேணுவதில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டையும், கேரளாவையும் குறிப்பிடுகிறது.
  • 32 சதவீதப் பெண்கள் தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்கின்றனர். இது அகில இந்திய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகம் - இதுதான் திராவிட மாடல்.
  • உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை வீதம் 49 சதவீதம். அகில இந்திய அளவில் இது 25 சதவீதம் மட்டுமே. - இது தான் திராவிட மாடல்.
  • இந்தியாவில் உற்பத்தித் துறையில் ஈடுபடும் 100 பெண்களில் 43 பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். (ஹnரேயட ளுரசஎநல டிக ஐனேரளவசநைள - 2019-2020)
  • குடும்பக் கட்டுப்பாடு சாதனங்களைப் பெறுவது, பேறுகாலத்துக்கு முந்தைய பராமரிப்பு, மருத்துவமனையில் பிரசவங்கள் (வீடுகளில் அல்ல) ஆகிய குறியீடுகளில் - தமிழ்நாடு முதலிடம்.
  • பெண் விடுதலைக்கு உரத்துக் குரல் கொடுத்த பெரியார் சிந்தனைகளை தி.மு.க. ஆட்சி தொடர்ந்து அமுல்படுத்தி வருகிறது.
  • சுயமரியாதைத் திருமணச் சட்டம் (1967) அண்ணா கொண்டு வந்தார். 1975இல் கலைஞர் கைம்பெண் மறுமணத் திட்டம் கொண்டு வந்து, கைம்பெண்களுக்கு இழப்பீடு வழங்கியதோடு அவர்கள் மறுமணத்தையும் ஆதரித்தது.
  • கலைஞர் தான் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து, பெண் களுக்கு சமபங்கு சொத்துரிமையில் வழங்கினார். தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் வந்த பிறகுதான் நாடாளுமன்றத்தில் இந்தியா முழுமைக்கும் சட்டம் வந்தது.
  • எட்டாவது படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.5000/ வழங்கும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் 1989இல் கொண்டு வரப்பட்டது. இதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
  • பெண் பட்டதாரிகளின் உயர்கல்விக்கு உதவி செய்யும் நாகம்மையார் திட்டம் கொண்டு வரப்பட்டது.
  • கருவுற்ற தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் முத்துலட்சுமி அம்மையார் திட்டம் கொண்டு வரப்பட்டது.
  • வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை கலைஞர் ஆட்சி வழங்கியதால் பெண்கள் அதிகாரத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டவர்களாக மாறி னார்கள் என்று ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் நடத்திய ஆய்வு கூறியது.
  • மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான கொள்கைத் திட்டம் விரிவாக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பதிவு பெற்ற வேட்பாளர் களாக மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் வழங்க தமிழ்நாடு அரசின் இக்கொள்கை வலியுறுத்துகிறது.
  • அரசுப் பணிகளில் உள்ள பெண்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலே இது தான் அதிகம்.
  • உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு.
  • பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்.
  • அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயில வரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000/- உதவித் தொகை.
  • தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகை.

திராவிட மாடலின் இந்தப் பெண்ணுரிமைத் திட்டங்கள் சனாதனத்துக்கு மனுசாஸ்திரத்துக்கு பார்ப்பனியத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சனாதனத்தை புதைகுழிக்குள் அனுப்பும்போது தான் சமூகத்தின் விடுதலை சாத்தியமாகும்.

சனாதனத்துக்கும் திராவிடத்துக்கும் எதிரான போராட்டத்தைக் கூர்மைப்படுத்துவோம்.

சனாதனத்தை பார்ப்பனியத்தை வீழ்த்த உறுதி எடுப்பதே கழகம் நடத்தும் சேலம் மாநாடு (ஏப். 29, 30).

தோழர்களே, தயாராவீர்!

ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி: ‘ராசி’ மீது எனக்கு நம்பிக்கை இல்லை - உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எனக்கு ராசி மீது நம்பிக்கை இல்லை; உழைப்பின் மீது தான் நம்பிக்கை” என்று கூறினார்.

முன்னதாகப் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “2019ஆம் ஆண்டிலிருந்து கடந்த 5 தேர்தல்களாக நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்து வருகிறது. அதற்கான ‘ராசி’ என்னிடம் இருக்கிறது” என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி, “எனக்கு ராசி மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. அண்ணன் ஆர்.எஸ். பாரதிக்கு நம்பிக்கை இருக்கும் என்றால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் தலைவர், கழகப் பொறுப்பாளர்களின் கடும் உழைப்பு; ராசி அல்ல” என்று மேடையில் பதிலடி தந்தார் உதயநிதி.

- விடுதலை இராசேந்திரன்