கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணா நிதியின் குடும்ப ஆதிக்கமும், திமுக தலை வர்களின் அதிகாரக் கெடு செயலும் வன் முறையும்,அராஜகங்களும் மக்களிடையே கடும் வெறுப்பை ஏற்படுத்த இதிலி ருந்து மீள எப்படா வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருந்தது போல் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுக வை பெருவாரியான வாக்கு கள் வித்தி யாசத்தில் வெற்றி பெறச் செய்ததோடு தனிப் பெரும் பான்மை பலத்தோடு அதை ஆட்சியிலும் அமர்த்தினர்.
அப்போதே, அரசியல் நோக்கர்கள் தேர்தல் முடிவுகளின் மதிப்பீட்டாளர்கள் பலரும் அதிமுகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகளில் கணிசமான பகுதி அவை அதிமுக ஆதரவு வாக்கல்ல. மாறாக அவை திமுக எதிர்ப்பு வாக்குகள். திமுக வுக்கு எதிராக வேறு எந்த மாற்று சக்தியும் இல்லாத நிலையில் வேறு வழியின்றி மக்கள் அதிமுகவுக்கு வாக்களித் துள்ளனர். எனவே, இதை உணர்ந்து ஜெ. நல்லாட்சி தரவேண்டும், இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தி ருந்தனர். இத்துடன் கடந்த கால அனுப வங்களிலிருந்து பாடம் கற்று ஜெ. தன்னி டமுள்ள விரும்பத் தகாத பண்பு களைக் களைந்து பக்குவத்தோடு ஆட்சி நடத்து வார் செயல்படுவார் என்றும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் எதிர்பார்க்கத் தேவையில்லை. நான் பழையஜெயலலிதாதான்.நான் எப்போதும் அப்படியேதான் இருப்பேன். அப்படி யேதான் நடந்து கொள்வேன் என்பது போல சொல்லாமல் சொல்லி செயல்பட்டு வருகிறார் ஜெயலலிதா.
மே 16 அன்று பொறுப்பேற்றவர் முதன் முதலாக தேர்தல் வாக்குறுதி சார்ந்த சில ஆவணங்களில் கையப்பமிட்டு விட்டு, 22ஆம் தேதியே அமைச்சரவை யைக் கூட்டி அதன் முடிவாக சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்தி வைப்ப தாக அறிவித்தார். இந்த ஆணையை எதிர்த்து சிலர் நீதிமன்றம் போக, அதை சந்திக்கும் நோக்கோடு ஜூன் 7ஆம் நாள் சமச்சீர் கல்வித் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
அதே வேளை இதன்மீது மக்கள் கவனம் குவியாமல் திசை திருப்பவும், தமிழீழச் சிக்கல் மீதான தனது அக்க றையை வெளிப்படுத்தவும், ராஜ பக்ஷே வைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிற தீர்மா னத்தை தமிழக சட்ட மன்றத்தில் அடுத்த நாள் 08.06.2011 அறிவிக்க, அதற்கடுத்த நாள் 09.06.2011 கச்சத் தீவை மீட்க வேண்டும் என்கிற தீர்மானத்தையும் கொண்டுவந்தார்.
சமச்சீர் கல்விச் சிக்கலில் கல்வி யாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்துப் பகுதி மக்களிடமும் அதற்கான எதிர்ப்பு கிளம்பி, நாடெங்கும் போராட்டங்கள் வெடிக்க, உயர்நீதி மற்றும் உச்சநீதி மன்றங்களும் தமிழக அரசுக்கு சவுக்கடி தீர்ப்பு தந்து சமச்சீர்க் கல்வியைப் பாதுகாக்க அதில் அம்மை யாருக்கு பெரும் சறுக்கல் நேர்ந்தாலும், அடுத்த இரு தீர்மானங்களும் தமிழின உணர்வாளர்கள், மனிதநேயப் பற்றாளர்கள் மத்தியில் ஜெ.வைப் பற்றி நன் மதிப்பை ஏற்படுத்தியது. கருணாநிதி தன் ஆட்சிக் காலத்தில் செய்யாத சாதனையை ஜெ. செய்து காட்டியிருக்கிறார் என, உலக முழுவதுமுள்ள தமிழர்கள் அனைவராலும் பாராட்டப் பெற்றார்.
இத்தீர்மானங்களால் உடனடிப் பயன் ஏதும் இல்லை, விளையும் வாய்ப் பும் இல்லை என்ற போதிலும், இது ஒட்டு மொத்தத் தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு தீர்மானம் என்கிற அளவில், கருணாநிதியின் தமிழினத் தலைவர் அரிதாரத்தைக் கலைத்து அவரை நிராயுத பாணியாக ஆக்கியது என்ற வகையிலும், இதைக் கெண்டு வந்து நிறைவேற்றிய பெருமைக்குரியவராக ஜெ. விளங்கினார்.
அதோடு மட்டுமல்ல, அடுத்த டுத்து காவல்துறை தொடுத்த வழக்கு களில், முன்னாள் அமைச்சர்கள், மாவட் டச் செயலாளர்கள் என தனக்கு அடுத்த நிலையில் உள்ள உடன் பிறப்பு களெல் லாம் கைதாகி உள்ளூர் சிறைகளில் அடைபட, பாசமிகு மகள் திகார் சிறை யில் வாட எனக் கருணாநிதி திணறிக் கொண்டிருந்த நிலையில், மூவர் உயிர்க் காப்புத் தீர்மானத்தைச் சட்டமன்றத்திலே நிறைவேற்றி கருணாநிதியை கதி கலங்க வைத்தார் ஜெ.
ஜெ.வின் இந்த நடவடிக்கைள் பலவும், பரவாயில்லை, ஜெ கருணா நிதியை வீட்டுக்கு அனப்பியதோடு மட்டுமல்ல் அவர் அதிகாரத்திலிருந்து கீழே இறக்கப்பட்டால் அப்போது எடுத்துக் கையாளும் போர் ஆயுதங் களையும் ஒவ்வொன்றாகப் பறிமுதல் செய்து வருகிறார் இனி கருணாநிதி வகையறாக்களின் எதிர்காலம் கேள்விக் குறிதான் என்று பலரும் நினைத் திருந்த தருணத்தில்தான் அப்படி யெல்லாம் ஒன்றும் நீங்கள் என்னிடம் நம்பிக்கை வைக்கத் தேவையில்லை. நான் பழைய அதே ‘குணபேதகி’ ஜெய லலிதாதான் என்று மூவர் கருணை மனு சிக்கலில் தமிழக சட்டமன்றத் தீர்மானத்திற்கு நேர் எதிர்நிலை எடுதது அம்மூவர் மனுவையும் தள்ளுபடி செய்யக்கோரி உயர்நீதி மன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்து தன் பேதைமையையையும் சணடித் தனத்தை வெளிப்படுத்தி கருணாநிதிக்குத் தெம்பூடடி வருகிறார் ஜெ.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றி நுங்கம்பாக்கம் அனுப்பி அக்கட்டிடத்தை குழந்தைகள் நல மருத்துவ மனையாக ஆக்கப் போகிறோம் என்று அறிவித்தார். இதற்குப் பரவலாக எதிர்ப்பு கிளம்பியதோடு மட்டுமல்ல, இதன் மீது வழக்கும் தொடுக்கப்பட நீதிமன்றம் இதற்குத் தடையாணையும் பிறப்பித்துள்ளது.
ஏற்கெனவே சமச்சீர் கல்வி வழக்கில் நீதிமன்றத்திடம் மொத்து வாங்கி அனுபவத்திலிருந்து ஏதும் பாடம் கற்காமல், எதையும் முன் யோசனையோடு செய்யாமல் கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்குவதிலேயே குறியாய் இருந்த ஜெ. இதுவெல்லாம் கருணாநிதிக்குப் போது மானதாக இருக்காது என்று 13ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆணையைப் பிறப்பிக்க, அதற்கும் தற்போது நீதிமன்றம் தடை யாணை பிறப்பித்துள்ளது.
இவர் ஆட்சிக்கு வந்த கையோடே புதிய தலைமைச் செயலகத்துக்குப் போகாமல் பழைய இடத்திலேயே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் இயங்கும் என்றார். அப்படியே இயங்கியும் வருகிறார். ஆனால் தேர்தலுக்கு முன்பிருந்தே ஏதோ தேர்தல் வாக்குறுதி போல இதைச் சொல்லி வந்தார் என்பதால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.ஆனால் அண்ணா நூற்றாண்டு நூலக இடம் மாற்றம் குறித்தோ, மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் குறித்தோ தேர்தலுக்கு முன் ஜெ ஏதும் பேசினாரா, ஆட்சிக்கு வந்தபின் அதிரடி நடவடிக்கைகளாகத் தானே இவற்றை எடுத்து வருகிறார். இதனால் அதிமுக கட்சிக்கோ, தமிழக அரசுக்கோ, ஜெயலலிதாவுக்கோ என்ன லாபம், பயன்? ஏதுமில்லை. இதில் கருணாநிதி எதிர்ப்பு என்கிற மன அரிப்புத் தீனி போடும் அந்த அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் சண்டித்தனம் தவிர ஏதுமில்லை.
ஆனால் கருணாநிதி எதிர்ப்பு என்பதன் பேரால் எடுக்கப்படும் இந் நடவடிக்கைகள், தனக்கோ தன் கட்சிக்கோ, தன் ஆட்சிக்கோ எந்த நற்பயனையும் விளைவிக்காது என்பது மட்டுமல்ல, மாறாக இது கருணா நிதியின் கரத்தையே வலுப்படுத்தும், நிராயுத பாணியாக நொந்து நிற்கும் அவரை உற்சாகப் படுத்தவும், அவர் ஜெவுக்கு எதிரான யுத்தத்தில் இவற்றைப் போர்க் கருவிகளாக ஆக்கிக்கொள்ளவும் மட்டுமே பயன்படும் என்பதை ஜெ. உணர வேண்டும். மக்கள் எதற்காக எந்த நிலையில் என்ன எதிர்பார்த்து தனக்கு வாக்களித்தார்கள் என சிந்தித்துப் பார்த்து அதை நிறைவேற்ற மக்களின் நன்மதிப்பைப் பெற அதற்கான நல்லாட்சி தரும் வகையில் ஜெ தன் நடவடிக் கைகளை மாற்றிக் கொள்ள, திருத்திக் கொள்ளவேண்டும்.
பந்தாடப்படும் மக்கள் நலப் பணியாளர்கள்
இந்த மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் முதன் முதலாக 02.07.1990இல் திமுக ஆட்சிக் காலத்தில் மாதம்ரூ200 சம்பளத்தில் நியமிக்கப்பட்டவர்கள். அடுத்து வந்த ஜெ அரசு இவர்களை 13.07.1991ல் பணி நீக்கம் செய்தது. அடுத்து வந்த திமுக அரசு 15.09.1996இல்இவர்களை ரூ500 சம்பளத்தில் மறுபடி பணியில் அமர்த்தியது. அடுத்து வந்த ஜெ 31.05.2001 அன்று இவர்களை வீட்டுக்கு அனுப்பிளார். மீண்டும் வந்த திமுக அரசு 27.06.2006அன்று இவர்களை 1000 சம்பயளத்தில் பணியில் அமத்தியது.தற்போது 08.11.2011அன்று ஆணையிட்டு ஜெ இவர்களை மறுபடியும் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
இப்போது உடனடியாக இந்த 13 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேவை என்ன வந்தது. இதுதான் தற்போது நாட்டில் உள்ள மிக முக்கியமான, உடனடிப் பிரச்சினையாகும். இவர்கள் பணியில் இருப்பதுதான் தமிழக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாய் இருக்கிறதா?
வேண்டுமானால், ஒரு வாதம் வைக்கலாம். இவர்கள் அனைவரும் திமுக காரர்கள். கருணாநிதியின் அபிமானிகள் எனலாம். அப்படி ஒரு கணிசமான பகுதி இருந்தால்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் என்ன, அதற்காக கருணாநிதியின் மீதுள்ள கோபத்தை இவர்கள் மீது காட்டுவானேன்.
இவர்களுக்கு ஏதும் வேலையில்லை. கொடுப்பது எல்லாம் சும்மா தண்டச் சம்பளம் என்பதாகவே வைத்துக் கொண்டாலும், அவர்களுக்கு மாதம் தரும் 2000 ரூபாய் இந்தக் கால விலைவாசிக்கு எந்த மூலை? அப்படியே அவர்கள் தண்டச் சம்பளம் வாங்குவதாகவே வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு வேறு ஏதாவது வேலை சாட்டி, அவர்களது உழைப்பைப் பெற, அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டுமே அல்லாது அவர்களை வீட்டுக்கு அனுப்பி அந்தக் குடும்பங்களை நிராதரவாய் நிறுத்துவதால் என்ன பயன்? இதில் ஜெ. என்ன மகிழ்ச்சியைக் காணப் போகிறார்?
நீதியின்பால் கருணாநிதியின் திடீர்க் கரிசனம்
கருணாநிதியைப் பொறுத்த வரை தமிழக முதல்வர் நாற்காலி என்பது விக்கிர மாதித்தன் கதையில்வரும் சிம்மாசனம் போல. சிம்மாசனத்திற்கு வெளியே தமிழ்ப் பாசம் பொங்கும். நீதி, நேர்மை, கருத்துரிமை, சனநாயகம் பற்றியெல்லாம் அதியற்புத சிந்த னைகள் எல்லாம் பிரவாகம் எடுக்கும். ஆனால் சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டாலோ, எல்லாம் மறந்துவிடும். தானும் தன் குடும்ப ரத்த சொந்தங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிவார்கள்.
இப்படித்தான் அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றம் குறித்து ஜெ. அறிவித்தவுடன் ‘இதைத் தமிழக அறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என தமிழறிஞர்கள் மீது கரிசனம் காட்டுகிறார்.ஆட்சிக்கு வந்த கையோடு நூலக ஆணைக் குழு நூலகத்திற்கு எடுக்கும் நூல் பிரதிகளின் எண்ணிக்கை 200லிருந்து 1000ஆக உயரும் என அறிவித்தவர், தன் ஆட்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக எந்த நூலக ஆணையும் வழங்கவில்லை எனப் பதிப்பாளர்கள் குமுறுகிறார்கள். பதிப்புலகம் வாழாமல் நூல் எப்படி வாழும்? நூலாசி ரியர்கள், அறிஞர்கள் எப்படி வாழ்வார்கள்?
இதே போலத்தான் கனிமொழிக்கு பிணை கிடைக்காததைக் கண்டு மனம் பொருமி ‘நீதி செத்துவிட்டது’ ‘உரிமை பறி போய்விட்டது’ ‘காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியில்லவா ’ எனப் புலம்புகிறார்.இவர் ஆட்சியில் இருந்தபோது மூவர் உயிர் காக்க மனு தந்தோமே, அப்போது இந்த நீதி, நேர்மை, மனித உரிமை கண்ணுக்குத் தெரியவில்லையா. அப்போது இந்த மூவர் உயிர் கண்ணுக்குத் தெரியவில்லையா. அது அப்போது என்ன கிள்ளுக் கீரையாக இருந்ததா?
இந்த மூவர் உயிருக்கு ஒரு நீதி, தன் மகள் பிணைக்கு ஒரு நீதியா. ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால் ஒரு பேச்சா.இப்போது இந்த மூவர் உயிரைக் காப்பாற்ற அறிக்கை விடுபவர், அதைத் தான் ஆட்சியில் இருந்து இந்த உயிர் களைக் காக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தாரே, அப்போது ஏன் செய்ய வில்லை. இப்போது எதற்காக இந்த நீலிக் கண்ணீர்.இந்த மூவர் உயிர்ப் பிரச்சினையைப் பொறுத்த மட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஒன்று சொல்லத் தோன்றுகிறது. தயவு செய்து இந்த மூவர் உயிர் குறித்து நீங்கள் வாய் திறக்காதீர்கள். நீங்கள் வாய் திறக்காமல் இருப்பதே அவர்களது உயிரைக் காப்பதற்கு சமம்.
ஏனென்றால் நீங்கள் எதைச் செய்யச் சொல்கிறீர்களோ, அதற்கு எதிராகவே எதையும் செய்பவர் ஜெயலலிதா. நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது மூவர் உயிரைக் காக்க மறந்தீர். ஜெ. ஆட்சிக்கு வந்து மூவர் உயிரையும் காக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் நீங்கள் மூவர் உயிரையும் காக்கவேண்டும் என்று அறிக்கை விட்டதுமே, அடுத்து வந்த நிகழ்வில் உயர்நீதி மன்றத்துக்கு அளித்த பதில் மனுவில் இம்மூவர் மனுவையும் தள்ளுபடி செய்யவேண்டும். அதாவது தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி எதிர் நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது என்னனவோ மனம் மாறி இம்மூவருக்குத் தண்டனைக் குறைப்பு வழங்கவேண்டும் எனறு உயாநீதி மன்றத்தில் மனுத்தாக்க்ல் செய்தருக்கிறார்.
நீங்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழர்கள் சிங்களர்களை ஆத்திரமூட் டாதவகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம். ஆகவே உங்களுக்குப் புண்ணியமாய் போகட்டும். இனி மேலாவது இந்த மூவர் உயிர் பற்றி முடிந்தால் நீங்கள் தில்லியில் உங்க ளுக்குள்ள செல்வாக்கைப் பயனிபடுத்தி தில்லி அரசை தண்டனைக்குறைப்பு செய்யச் சொல்லுங்கள் இல்லாவிட்டால் ஜெ அரசை நோக்கி எந்தக் கோரிக்கையும் வைக்காமல் அதுபற்றி வாய் திறக்காமல் பேசாமல் இருங்கள் அதுவே இம்மூவர உயிர் காக்கவும் நீங்கள் செய்யும் பேருபகாரம் இருக்ககும என்பதே தமிழ உணர்வாளர்களின், தமிழக மக்களின் வேண்டுகோள்.