கடந்த 65 ஆண்டுகளில் பாரத ரத்னா விருதைப் பெற்றவர்களில் 48 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் பார்ப்பனர்களாகவே உள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரையில் பாரத ரத்னா விருது பெற்றவர்களில் 80 விழுக்காட்டினர் உயர் ஜாதியினர்கள் மட்டும்தான். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் 20 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர்.

இதுவரையில் பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பெயர்கள் ஆண்டுவாரியாக, அவர்களின் ஜாதியப் பின்புலத்தோடு கீழே காணலாம்.

  1. சி.ராஜகோபாலாச்சாரி (1954) - பார்ப்பனர் (ஓ.சி)
  2. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (1954) - பார்ப்பனர் (ஓ.சி)
  3. சி.வி.இராமன் (1954) - பார்ப்பனர் (ஓ.சி)
  4. பகவான் தாஸ் (1955) - அகர்வால் (ஓ.சி)
  5. விஸ்வேசுவரய்யா (1955) - பார்ப்பனர் (ஓ.சி)
  6. ஜவகர்லால் நேரு (1955) - பார்ப்பனர் (ஓ.சி)
  7. கோவிந்த் வல்லப் பந்த் (1957) - பார்ப்பனர் (ஓ.சி)
  8. தோண்டோ கேசவ் கார்வே (1958) - பார்ப்பனர் (ஓ.சி)
  9. பிதான் சந்திர ராய் (1961) - கயஸ்தா (ஓ.சி)
  10. புருசோத்தம் தாஸ் தாண்டன் (1961) - காத்ரி (ஓ.சி)
  11. இராஜேந்திரப் பிரசாத் (1962) - கயஸ்தா (ஓ.சி)
  12. ஜாகீர் உசேன் (1963) - முஸ்லிம்
  13. பாண்டுரங்க வாமன் காணே (1963) - பார்ப்பனர் (ஓ.சி)
  14. லால் பகதூர் சாஸ்திரி (1966) - கயஸ்தா (ஓ.சி)
  15. இந்திரா காந்தி (1971) - பார்ப்பனர் (ஓ.சி)
  16. வி. வி. கிரி (1975) - பார்ப்பனர் (ஓ.சி)
  17. காமராசர் (1976) - நாடார் (ஓ.பி.சி)
  18. அன்னை தெரேசா (1980) - கிறிஸ்துவர்
  19. ஆச்சாரியா வினோபா பாவே (1983) - பார்ப்பனர் (ஓ.சி)
  20. கான் அப்துல் கஃப்பார் கான் (1987) - முஸ்லிம்
  21. எம்.ஜி.ராமச்சந்திரன் (1988) - நாயர்
  22. அம்பேத்கர் (1990) - மகர் (எஸ்.சி)
  23. நெல்சன் மண்டேலா (1990)
  24. ராஜீவ் காந்தி (1991) - பார்ப்பனர் (ஓ.சி)
  25. வல்லபாய் பட்டேல் (1991) - பதிதார்
  26. மொரார்ஜி தேசாய் (1991) - பார்ப்பனர் (ஓ.சி)
  27. மவுலானா அபுல் கலாம் ஆசாத் (1992) - முஸ்லிம்
  28. ஜே. ஆர். டி. டாட்டா (1992) - பார்சி
  29. சத்யஜித் ராய் (1992) - கயஸ்தா (ஓ.சி.)
  30. குல்சாரிலால் நந்தா (1997) - காத்ரி (ஓ.சி)
  31. அருணா ஆசஃப் அலி (1997) - முஸ்லிம்
  32. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (1997) - முஸ்லிம்
  33. எம். எஸ். சுப்புலட்சுமி (1998) - (சூடிவ ஹஎயடையடெந)
  34. சி. சுப்பிரமணியம் (1998) - கொங்கு வேளாளர் (ஓ.பி.சி)
  35. ஜெயபிரகாஷ் நாராயண் (1999) - கயஸ்தா (ஓ.சி)
  36. அமர்த்தியா சென் (1999) - கயஸ்தா (ஓ.சி)
  37. கோபிநாத் போர்டோலாய் (1999) - பார்ப்பனர் (ஓ.சி)
  38. ரவி சங்கர் (1999) - பார்ப்பனர் (ஓ.சி)
  39. லதா மங்கேஷ்கர் (2001) - பார்ப்பனர் (ஓ.சி)
  40. உஸ்தத் பிஸ்மில்லா கான் (2001) - முஸ்லிம்
  41. பீம்சென் ஜோஷி (2009) - பார்ப்பனர் (ஓ.சி)
  42. சி.என்.ஆர். ராவ் (2014) - பார்ப்பனர் (ஓ.சி)
  43. சச்சின் டெண்டுல்கர் (2014) - பார்ப்பனர் (ஓ.சி)
  44. அடல் பிகாரி வாஜ்பாய் (2015) - பார்ப்பனர் (ஓ.சி)
  45. மதன் மோகன் மாளவியா (2015) - பார்ப்பனர் (ஓ.சி)
  46. நானாஜி தேஷ்முக்த் (2019) - பார்ப்பனர் (ஓ.சி)
  47. பிரணாப் முகர்ஜி (2019) - பார்ப்பனர் (ஓ.சி)
  48. பூபென் ஹசாரிகா - (Not available)

இதுவரையில் பழங்குடியினருக்கு ஒருமுறை கூட பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக முன்னேறிய சமூகத்தினர் 32 பேர் பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ளனர். முன்னேறிய சமூகத்தினரிலும் 23 பேர் பார்ப்பனர்கள் மட்டுமே. ஆறு பேர் முஸ்லிம்கள். ஒருவர் பட்டியலினத்தவர். இருவர் பிற்படுத்தப்பட்டவர்கள். இப்போது பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. நீண்டகாலம் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த வங்காள வைதீகப் பார்ப்பனர். பிறகு காங்கிரஸ் கட்சியில் குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்த பிறகு அதன் விசுவாசியானார். பதவி ஓய்வுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்குப் போய் தனது ‘சங்கிகள்’ ஆதரவை வெளிப்படுத்தினார். அதிகாரத்தில் நீண்டகாலம் அமர்ந்து கொண்டு நாற்காலியைத் தேய்த்ததைவிட இவரது சமுதாயத் தொண்டு சாதனை ஏதாவது உண்டா? மற்றொருவர் ஆர்.எஸ்.எஸ்.காரரான நானாஜி தேஷ்முக்.

பாரத ரத்னாவுக்கு புகழ் சேர்த்த ஒரே பிரதமர் வி.பி.சிங் தான். அவரது ஆட்சியில் தான் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் தென்னாப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலாவுக்கும் பாரத ரத்னா வழங்கி அந்த விருதை கவுரவப்படுத்தினார்.

Pin It