கொஞ்சம் கூச்சம்தான். வேறு வழியில்லை. எல்லோருக்கும் தெரிந்த சல்லாபிக்கின்ற விசயம். ஸ்திரி சங்கர, மன்னிக்கவும், ஸ்ரீசங்கர மடம் ஒட்டிய செய்தி.
“வேஸ்யாதர்சனம் புண்ணியம்
ஸ்பர்ஸிவனம் பாப நாசம்
சம்பனம் சர்வ தீர்த்தானாம்
மைதுனம் மோக்ஷ சாதனம் ”
இதன் பொருள் “வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம். அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசம் ஆகும். அவர்களுக்கு முத்தம் கொடுத்தால் சர்வ, அதாவது அனைத்துப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம். அவர்களோடு உடலுறவு வைத்துக் கொண்டால் நேரடியாக மோட்சத்துக்குப் போய்விடலாம்”.
இந்துக்களுக்குச் சாஸ்திரரீதியாகப் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுக்கும் தேவபாஷை - தேவநீதி இது! இந்த தேவ நீதியை தவறாமல் கடைப்பிடித்த ‘ஸ்ரீலசீலை’ மன்னிக்கவும், தடும ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியின் கைகளினால் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட காஞ்சி மச்சேஸ்வரர் கோயிலின் அக்ரஹார குருக்கள் தேவநாதன், அப்படியே அவரின் குரு சங்கராச்சாரியைப் பின்பற்றி மைதுன மேக்ஷ சாதனம் நடத்தி இந்து மதப் பெருமையை நிலை நாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதப் பார்ப்பன குருக்கள், பூ விற்கும் பெண்கள் உள்பட ஏறத்தாழ 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி சாமியின் கருவறைக்குள்ளே, சாமியின் முன்னாலேயே கரு உண்டாக்கும் காம லீலைகளை நடத்தியிருக்கிறான். ஒரு பெண்ணிடம் ‘உன்னைக் கருவறையிலேயே சாமி தரிசனம் செய்துவைக்கிறேன்’ என்று சொல்லி அப்பெண்ணை இவர் ஆலிங்கன தரிசனம் செய்துகொண்டார்.
இன்னொரு பெண்ணிடம் ‘கருவறையில் சல்லாபிச்சா ஆண்டவனின் அணுக்கிரகம் முழுசாக் கிடைக்கும்’ என்று சொல்லி குருக்கள் அணுக்கமாக அந்த அப்பாவிப் பெண்ணை அணுக்கிரகம் செய்து கொண்டார். எழுதவே கூச்சமாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் கருவறையைப் பார்க்கக் கூட அனுமதி மறுக்கும் இந்து தர்மம், இப்படிப்பட்ட சல்லாபங்களுக்கு எந்தப் பெண்ணையும் அனுமதிக்கிறதே! அது எப்படி? பாலியல் வன்கொடுமைச் சல்லாபங்களை கருவறைக்குள் அரங்கேற்றும் பார்ப்பன குருக்களும், இந்து மதமும் தாழ்த்தப்பட்ட சாதிகளை மட்டும் கோவில் வாசலில் கூட நுழைய விடமாட்டார்கள்.
இந்திரன் அகலிகையை சல்லாபித்தான். சிவன் அருந்ததியின் சல்லாப உடலைப் பூரணமாகப் பார்த்தான். விஷ்ணுவும் - சிவனும் ‘ஹோமோ’ சல்லாபங்கள் செய்ததை எல்லாம் இந்து மதம் அங்கீகரிக்கும் போது, மன்மதலீலை தேவநாத குருக்களை ஏற்காமலா போகும்.
இதை வேதைனையோடு தான் சொல்கிறோம். தமிழ்ப் பெண்களே! அவர்களின் கணவர்களே கோயில் இனியும் வேண்டுமா?
சிந்தியுங்கள், பகுத்தறிவோடு சிந்தியுங்கள்!