என் கட்டுப்பாட்டில் இல்லை
எனக்கு
வாழ்க்கைப்பட்டவளைத் தவிர...!
அவளுக்கு
அதுவும் இல்லை...!
2
ஏசுவின் அன்பு
மதமானது...!
புத்தரின் ஜென்
மார்க்கமானது...!
மார்க்ஸின் பொதுவுடமை
அரசியலானது...!
சங்கரரின் அத்வைதம்
தத்துவமானது...!
காந்தியின் அஹிம்சை
வெறும் சரித்திரமானது...!
3.
கால்கள் கட்டப்பட்டு
தலைகீழாக தொங்கவிடப்பட்டு
மிதிவண்டியின் கைப்பிடியில்
பயணிக்கும்
கோழிகள் அறியாது
தன் இறுதிப்பயணத்தை...!
- ரவி சுவாமிநாதன் (