நாடாளுமன்ற நிலைக் குழு அம்பலப்படுத்துகிறது

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸில் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) சாதி வெறி தலைவிரித்தாடுகிறது என்று நாடாளு மன்றக்குழுவின் விசாரணையில் அம்பல மாகியுள்ளது. இதனால் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தொடர்ந்து தங்கள் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்திருக்கிறார்கள். எஸ்.சி மற்றும் எஸ்.டி, நலனுக்கான நாடாளு மன்றக்குழுவின் தலைவரான பாஜகவைச் சேர்ந்த கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி இருக்கிறார். எய்ம்ஸ்சில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவது பற்றிய ஆய்வின் முடிவில் இந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனத்திலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. விண்ணப்பதாரர்கள் மீது சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“எஸ்.சி மற்றும் எஸ்.டி. மாணவர்களை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் தோல்வியடையச் செய்துள் ளார்கள் என்று எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இத்தனைக்கும் தீவிரமான முயற்சிகளை அந்த மாணவர்கள் மேற்கொண்டும் பாகுபாடு காரணமாக தோல்வி யடைந்துள்ளனர். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற பிறகும் செய்முறைத் தேர்வுகளில் தோல்வி அடைந்த தாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களுக்கு எதிரான போக்கு இருந்ததை இது தெளிவாகக் காட்டுகிறது. அதோடு, தேர்வை நடத்துபவர்கள் மாணவர்களின் பெயர்களைக் கேட்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் எஸ்.சி அல்லது எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தவர்களா என்பதைத் தெரிந்து கொள்கிறர்கள். வருங்காலத்தில் இதுபோன்ற நேர்மையற்ற வேலைகள் நடக்காமல் இருக்கக் கடுமையான நடவடிக்கைகளை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரை செய்கிறது.

பெயர்களைக் குறிப்பிடாமல் ஒரு அடை யாள எண்ணை வைத்துத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்த வேலைகளைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடு இருத்தல் அவசியமாகும். எஸ்.சி மற்றும் எஸ்.டி. மாணவர்கள் தேர்வு எழுதினால் அது குறித்த ஒரு அறிக்கையை குறிப்பிட்ட வரம்புக் காலத்திற்குள் எய்ம்ஸ் தேர்வுகளுக்கான முதல்வர் வழங்க வேண்டும்” என்று நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. எய்ம்ஸில் நடந்து வரும் சாதிரீதியான அவலங்களை ஆவணப்படுத்தி வரும் குரீந்தர் ஆசாத், “நிறுவனத் தீண்டாமை” என்று இந்தக் கொடுமைகளை அழைக்கிறார். தவறு செய்த பேராசிரியர்கள் மற்றும் தேர்வுக் குழுவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படுகிறது என் பதுதான் அடிப்படையான கேள்வியாகும். இத்தகைய பாகுபாடுகள் இனிமேல் நடக்கா மல் இருப்பதற்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன? இதற்கு முன்பும் எய்ம்ஸில் நடக்கும் சாதி வெறிப் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு குழு ஆய்வு செய்தது. சுக தியோ தோரத் தலைமையிலான அந்தக்குழு, பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலிட்டது. சமவாய்ப்பு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

ஆசிரியர் பணியிடங்கள் : எய்ம்ஸில் மொத்தம் 1,111 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில் 92 பேராசிரியர்கள் மற்றும் 275 துணைப் பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஏன் நிரப்பப்படவில்லை என்ற கேள்விக்கு, பொருத் தமான நபர் கிடைக்கவில்லை என்று கிளிப் பிள்ளை சொல்வது போன்று அரசு தொடர்ந்து சொல்லிக் கொண் டிருக்கிறது. நிரப்ப வேண்டிய பணியிடங் களில் எஸ்.சி மற்றும் எஸ்.சி. பணியிடங்கள் எவ்வளவு என்று சொல்ல மறுக்கிறார்கள். எஸ்.சி மற்றும் எஸ்.டி. பணியிடங்களை நிரப்புவதற்குத் தனியாக தேர்வுக்குழு அமைக்க வேண்டும் என்று நாடாளு மன்றக்குழு பரிந்துரைத்துள்ளது. அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் எஸ்.சி மற்றும் எஸ்.டி. வகுப்பினராக இருக்க வேண்டும். காலியாக இருக்கும் அனைத்துப் பணியிடங்களும் மூன்று மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும். இடஒதுக்கீடுப் பணியிடங்கள் ஆறு மாதத்திற்கு மேலாகக் காலியாக இருக்கக்கூடாது என்றும் குழு கூறியுள்ளது. அதேபோல், சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் நாடாளுமன்றக்குழு, தற்போது அதில் இடஒதுக்கீடு முறையில் இடங்கள் தரப் படுவதில்லை என்று தெரிவித்துள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It