kolathoor mani at ambedkar birthday functionகழகம் எடுத்த அம்பேத்கர் விழா எழுச்சி

15.4.2022 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மேற்கு மாவட்டம் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் மாலை 6.00 மணியளவில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா சாதி மறுப்பு இணையர்கள் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கொளத்தூர் நகரச் செயலாளர் பா. அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராசு, கொளத்தூர் நகர தலைவர் சி.இராமமூர்த்தி, பெரியாரிய அம்பேத்கரிய உணர்வாளர் தீன ரட்சகன் ஆகியோர் முன்னிலை வகிக்க கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் தலைமை ஏற்றார்.

தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் சந்தோஷ் உரையை தொடர்ந்து ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் ப.பா. மோகன், வழக்கறிஞர் கார்த்திகேயன், பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பார்த்திபன் மற்றும் கொளத்தூர் பகுதியில் சாதி மறுப்புத் திருமணங்களை முன்னின்று நடத்திவரும் காவை ஈஸ்வரன் மற்றும் சாதி மறுப்பு இணையர்கள் செல்வன் - இளமதி, கோகுலக்கண்ணன் - பிரேமா, அருண்பாண்டி - குமுதா, டேவிட் - நந்தினி, கிருஷ்ணன் - மணிமேகலை, சிரிதர் - தேவிபிரியா ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் வழங்கினர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு பற்றிய விவரங்களை வழக்கறிஞர்கள் பார்த்திபன், கார்த்திகேயன் ஆகியோர் உரையாற்றினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரின் சிறப்புரையை தொடர்ந்து கழக கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சுதா நன்றியுரை கூற கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு குமார் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் மாட்டுக்கறி அசைவ உணவு வழங்கி சிறப்பித்தார்.

கூட்டம் தொடங்குவதற்கு முன் புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார் பற்றிய வீடியோ தொகுப்பு காட்சிகள் மற்றும் நடந்த கதை குறும்படம் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. சிறப்புரையாளர்கள் பேச்சை தொடங்கும் முன் அவர்களைப்பற்றிய வீடியோ தொகுப்பும் ஒளிபரப்பப்பட்டு பேச அழைக்கப்பட்டனர்.

விழாவின் புகைப்படங்கள் மற்றும் காணொளி ஆகியவற்றை கொளத்தூர் கபிலன் ஸ்டுடியோ இளவரசன், கபிலன் அவர்கள் சிறப்பாக பதிவு செய்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு தோழர்கள் காவை.ஈசுவரன், இராஜேந்திரன், செல்வேந்திரன், விஜய்குமார், ளுஆகூ சுரேஷ், இராமமூர்த்தி, அறிவுச்செல்வன், இராஜா, மாரிசெட்டி, குமார், ஆட்டோ செல்வம் ஆகியோர்.

பொதுக்கூட்ட களப்பணியில் செயல்பட்ட தோழர்கள் கார்த்திக், அகிலன், பிரவின்குமார், தீனா, சத்தீஸ்வரன்.. லிங்கேஸ்வரன்... புவனேந்திரன்... பிரவீன், சூர்யா, ஜீவா, விஜய் சூர்யா ஆகியோர் சிறப்பாக செயல் பட்டனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு தோழர்கள் காவை. ஈசுவரன், இராஜேந்திரன், செல்வேந்திரன், விஜய்குமார், SKT சுரேஷ், இராமமூர்த்தி, அறிவுச் செல்வன், இராஜா, மாரியண்ணன், குமார், ஆட்டோ செல்வம் ஆகியோர்.

பொதுக்கூட்ட களப்பணியில் செயல்பட்ட தோழர்கள் கார்த்திக், அகிலன், பிரவின்குமார், தீனா, சத்தீஸ்வரன், லிங்கேஸ்வரன், புவனேந்திரன், பிரவீன், சூர்யா, ஜீவா, விஜய் சூர்யா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

சென்னையில் : ஏப். 14, காலை 9 மணியளவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு 14.02.22 அன்று காலை புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு சென்னை மாவட்டக் கழக சார்பில் மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இந்நிகழ்வில் கழக முன்னணி பொறுப் பாளர்களும் தோழர்களும் பெருந்திரளாய் பங்கேற்றனர்.

நிகழ்வில், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், அன்பு தனசேகர், மாவட்டத் நலைவர் வேழவேந்தன், மயிலை சுகுமார், இராவணன் ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒட்டி, நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” மண்டல மாநாட்டிற்கான தொடக்கக் கூட்டம், நடேசன் சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகில் 14.04.2022 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக, கழகத் தோழர் நாத்திகன், அருள்தாசு ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். தொடர்ந்து, தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி , நமக்கான அடையாளம் திராவிட மாடல் -யை விளக்கி உரையாற்றினார்.

அடுத்ததாக, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பாஜகவின் மாநில உரிமை பறிப்பு, மதவாத திணிப்பு, கல்வி உரிமை தடுப்பு ஆகியற்றிற்கு தீர்வு திராவிட மாடலில் அடங்கியுள்ளது. பா.ஜ.க. ஏழை எளிய இந்துக்களை வதைத்து பார்ப்பன - பனியா பெருமுதலாளி இந்துக்களையே கொழுக்க வைக்கிறது என்பதை சான்றுகளுடன் விளக்கினார். நிகழ்வை மாவட்ட செயலாளர் உமாபதி தொகுத்து வழங்கினார்.

இறுதியாக, சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி கூற, தோழர்கள் தொடர்ந்து கூறி உறுதிமொழி எடுத்தனர்.

சேலம் : ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள் மற்றும் இளம்பிள்ளை பகுதி தோழர்களும் நங்கவள்ளி பகுதி தோழர்களும் சேலம் நகர பகுதி தோழர்களும் கலந்து கொண்டனர்.

மேட்டூரில் : 14.04.2022 காலை 10.00 மணியளவில் மேட்டூர் அச்சங்காடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் சூரியகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் அ.சக்திவேல்,மேட்டூர் நகர அமைப்பாளர் தோழர் பாஸ்கர் ,மேட்டூர், மேட்டூர் சுளு, காவேரி கிராஸ் ஆகிய பகுதிகளில் இருந்து பொறுப் பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் : புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 14.04.22 அன்று காலை விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழத்தின் சார்பில் கண்டமங்கலத் தில் கொள்கை முழக்கம் மற்றும் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்குடியில் : காரைக்குடியில் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் நடைபெற்றது. காலை 10.30 அளவில், காரைக்குடி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருப்பூரில் : புரட்சியாளர் அம்பேத்கரின் 131ஆவது பிறந்த நாள் விழா 14.04.2022 வியாழன் காலை திவிக சார்பாக பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கருத்துரை வழங்கியோர் பொருளாளர் சு.துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் தலைவர் வி சிவகாமி, துணை பொதுச்செயலாளர் விசிக துரை வளவன், மாவட்டத் தலைவர் முகில் ராசு.

கலந்து கொண்டோர் : மாவட்ட அமைப்பாளர் அகிலன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தெற்குப்பகுதி கழக செயலாளர் இராமசாமி, மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, தனகோபால், வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, சரசு, முத்து லட்சுமி, அய்யப்பன், விஜய், சிரிஜா, திலகவதி, இராஜ சிங்கம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் மகிழவன், ஈழமாறன், கனல்மதி, பெரியார் பிஞ்சு, அமுதினி, யாழிசை, யாழினி, பிரபன்யா அசுவின், மெல்வின்.

ஆத்துப்பாளையம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா திமுக அலுவலகத்தில் திவிக மாநகர தலைவர் தோழர்.வீ.தனபால் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்கள் : தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாவட்ட அமைப்பாளர் திவிக சங்கீதா, மாநகர அமைப்பாளர்முத்து, தனகோபால், விஜய், மதன் மளிகை, பிரபு திருப்பூர், ஸ்ரீஜா, மாரிமுத்து, வேலம் பாளையம் பகுதி பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம், கனல்மதி-யாழினி, தமிழ்நாடு மாணவர் கழகம் பெரியார் பிஞ்சுகள்- யாழிசை பிரபன்யா ஆகியோர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அறிவித்த சமத்துவ நாள் உறுதிமொழியை யாழினி வாசித்தார். தோழர்கள் அனைவரும். உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

கலந்து கொண்டவர்கள் : திமுக 10வது வார்டு வட்டக் கழக செயலாளர் சாமிநாதன், 10-வது வார்டு வட்ட கழக பொறுப்பாளர் தோழர் மணிமாறன், 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் கோட்டா பாலு, திருப்பூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் ஆர்.ரங்கசாமி, திமுக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அய்யப்பன், மணிகண்டன், பூபதி (திமுக), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பொறுப் பாளர் ஆத்துப்பாளையம் சந்தோஷ், இசைப்பிரியன், அம்பேத்கர் நகர்அன்பழகன் (திமுக), இறுதியில் பரந்தாமன் நன்றி உரையாற்றினார்.

உடுமலையில் : புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி 14.04.22 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கொழுமம் ஆதி, செல்லமுத்து, சுந்தர்ராஜன், சாதிக் பாட்சா, திராவிட மணி மூர்த்தி, பாண்டியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடு: உடுமலை திராவிடர் விடுதலைக் கழகம்.

பேராவூரணியில் : புரட்சியாளர் அம்பேத்கரின் 132ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 14.04.2022 அன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம், பேராவூரணி ஒன்றிய அமைப்பாளர் மருத.உதயகுமார் ஆகியோர் கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

கோவையில் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு 14.04.22 அன்று காலை காந்திபுரம் பெரியார் சிலை முன்பு ரஞ்சித் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. புரட்சித் தமிழன் கொள்கைப் பாடலை பாடினார்.

Pin It