‘ஸ்டெம் செல்’ ஆராய்ச்சி இன்று மனிதனின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடக்கூடிய திசையில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு தாவரத்தின் செல்லை குறிப்பிட்ட செயற்கை ஊடகத்தில் வளர்த்து முழு தாவரத்தையும் பெற முடியும். ஆனால், மனித உடலின் எந்த செல்லுக்கும் இப்படிப்பட்ட திறன் இல்லை.
தந்தையின் விந்து செல், தாயின் அண்டசெல்லோடு இணைந்து கருமுட்டை உருவாகி, அது பல கருச்செல்களைக் கொண்ட கருக்கோளமாக மாறும். இந்தக் கருக்கோளத்திலிருந்தே உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் உருவாகி சிசுவாக கருப்பையில் வளர்கிறது. கருக்கோளத்திலுள்ள கருச்செல்களை ‘இளம் வளர்கருச் செல்கள்’ என்று அழைக்கின்றனர். இந்த நிலையிலுள்ள செல்களைப் பிரித்து நமக்குத் தேவையான உறுப்புகளை உருவாக்க முடியும். அது மட்டுமல்ல, பல்வேறு மரபியல் நோய்களுக்குத் தீர்வாக இந்த செல்களைப் பயன்படுத்தவும் முடியும்.
2007 ஆம் ஆண்டின் ஆராய்ச்சிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியைக் கருதலாம். மனிதனின் மரபணு எந்த விதத்தில் மற்ற உயிரினங்களின் மரபணுக்களிலிருந்து வேறுபட்டது என்ற ஆராய்ச்சி முன்னர் நடந்து வந்தது. தற்போது மனிதர்களிலேயே ஒவ்வொருவரின் தனித்தன்மைக்குக் காரணமான மரபணுக்கள் எவை என்ற ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். பல தனி மனிதர்களின் மரபணு வரிசைகள் ஏற்கனவே தொகுக்கப்பட்டு விட்டன. மரபணு ரீதியாக ஒருவரை புற்று நோய், ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்கள் தாக்குவதற்கக் காரணம் எதுவெனக் கண்டறிந்து அதை நீக்கும் வகையில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.
தோலின் செல்களுடன் சில மரபணுக்களைச் சேர்த்து மறு சீரமைப்பு செய்தாலே, கருக்கோளத்திலுள்ள ஸ்டெம் செல்களை உருவாக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். எதிர்காலத்தில் ஒரு நியூட்டனையோ, ஐன்ஸ்டீனையோ உருவாக்க நினைத்தால் அதை விஞ்ஞானிகள் சாதித்து விடுவார்கள் என்று நம்ப இடம் இருக்கிறது. வக்ரமனம் கொண்ட ஒரு விஞ்ஞானி மீண்டும் ஒரு ஹிட்லரையோ, போல்பாட்டையோ உருவாக்கிவிடக் கூடும் என்ற ஆபத்தும் இதற்குள் இருக்கிறது.
ஆனால் ஒரு ‘ராமனை’யோ - ‘பிரம்மா’வையோ - மட்டும் உருவாக்க முடியாது; காரணம் - அப்படி எவரும் இருந்ததில்லை!
தமிழர் விழா பொங்கல் ஒன்றுதான் - பெரியார்
பொங்கல் நாள் ஒன்றுதான் தமிழர் நாள்; மற்ற பண்டிகைகளெல்லாம் பெரிதும் தமிழருக்கு அவமானம், கேடு, தமிழர்களைக் கொலை செய்த, செய்யும் நாள்.
தமிழர்களுக்கென்று தமிழர்களின் பண்பு, நாகரிகம், கலாச்சாரம், பழக்க வழக்கம் இவைகளைக் கொண்டதாக ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்குத் தமிழிலேயே பெயர் இருக்க வேண்டும். ஆனால் வடமொழியில் இருக்குமானால் அவை எப்படித் தமிழர்களுக்குண்டான பண்டிகை என்று கூற முடியும்? பொங்கல் பண்டிகை என்று கூறும் முறையில் அது தமிழ்ப் பெயராரக இருப்பதும் அன்றி நம் மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் இருக்கிறது.
தமிழர்கள் கொண்டாடும் மற்ற பண்டிகைகளுக்கு எல்லாம் தமிழனுடையது என்று சொல்ல ஆதாரம் இல்லை; பார்ப்பானுடையது என்பதற்குக் கதைகள் எழுதி வைத்து இருக்கின்றனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இப்படி ஒன்றும் கூற வழி இல்லை; என்றாலும் இதற்கும் மற்ற பண்டிகை போலக் கதை கட்டிவிட முனைந்துவிட்டார்கள்.
நான் 35 வருடங்களுக்கு முன் இந்தப் பொங்கல் தான் அறிவுக்கு ஒத்தது, தமிழர்களுக்கான பண்டிகை; தமிழர்கள் இதைத் தான் தங்களின் விழாவாகக் கொண்டாட வேண்டும். இதைத் தவிர்த்துப் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்பட்டுவரும் மதப் பண்டிகைகள் எல்லாம் முட்டாள்தனமான காட்டுமிராண்டித் தன்மையோடு மூடநம்பிக்கை நிறைந்தவைகளே ஆகும்; இது ஒன்று தான் மூட நம்பிக்கை, முட்டாள்தனமற்ற அறிவிற்குப் பொருத்தமான விழாவாகும் என்று சொல்லி வருகின்றேன்.