தஞ்சை பெசன்ட் அரங்கில் 10.7.2005 அன்று மாலை 6 மணியளவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய ‘பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம்’ நூல் அறிமுகமும் கருத்தாய்வும் நடந்தது. தோழர் கி.முருகேசன் தலைமையில் தோழர்கள் பனசை அரங்கன், அன்புத் தென்னரசு, குப்பு. வீரமணி, இரத்தினகிரி, முனைவர் இராமலிங்கம், முனைவர் இராம. சுந்தரம், பேராசிரியர் விருத்தாசலனார், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் நூல் பற்றி கருத்தாய்வுகளை வழங்கினர். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நீதிமன்றத் தடை காரணமாக அவரால் பேச முடியவில்லை.
முதல் நாள் 9 ஆம் தேதி குடந்தையில் பேராசிரியர் ஜெயராமன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.