'பில்லி சூன்யம்’ பிடித்துள்ளவர்களாக பெண்களை சித்திரவதைக்குள்ளாக்கும் மூடநம்பிக்கையாளர்கள் - மந்திரவாதிகளைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்டம் ஒன்றை சட்டீஸ்கர் மாநில அரசு கொண்டு வர இருக்கிறது. அடுத்த வாரம் துவங்கும் மழைக்காலக் கூட்டத் தொடரில், இந்தச் சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டீஸ்கர் சட்ட அமைச்சர் பிரிஸ் மோகன் அகர்வால் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாது,

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களையும், பேய் பிடித்திருக்கிறது என்று கூறி, ‘சித்திரவதை வைத்தியம்’ செய்வோரும் இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Pin It