சாதிக் கலவரங்கள் ஏதோ சில உணர்ச்சி வசப்படுகின்றவர்களால் ஏற்படுவது, ஆத்திரத்தால் அறிவிழப்பவர்களின் உடனடிச் செயல் என்கிற மழுப்பல்கள் எல்லாம் பொய் என நிரூபித்து இருக்கிறது தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் கலவரம். இத்தகைய கலவரங்கள் சாதி ஆதிக்கத்திற்கான வன்முறை அரசியல்; அதிகாரம் படைத்தவர்களின் ஆயுத ஒடுக்குமுறை என்பதை நெற்றியில் அறைந்து, பறைசாற்றி உள்ளது தர்மபுரி.

இப்பிரச்சினைக்குரிய சாதி மறுப்புத் திருமணம் நடந்து 40 நாட்கள் தாண்டி விட்டது. 40 நாட்களும் இடைவிடாது மணப்பெண்ணின் வன்னிய சமூகம் ஊர்க்கூட்டங்களை தொடர்ந்து நடத்தி உள்ளது. பெண்ணின் தந்தையும், தாயும் ஊர்க் கூட்டங்களில் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இத்தனை அவமானங்களையும் தாங்கிக் கொண்ட பெண்ணின் தந்தை நாகராசன், தான் சார்ந்த சாதி வெறியர்களிடம் தனது மகளும், மகளின் காதல் கணவனும் மாட்டி விடக்கூடாது; மாட்டினால் கொன்று விடுவார்களே என்கிற கவலையோடு இருந்து இருக்கிறார். இதைத்தான் அவரது மனைவியும் தனது மகளிடம் தொலைபேசியில் பேசும்போது தெரிவித்து இருக்கிறார்.

dharmapuri_attack_644

இப்படியான பாசத்திற்குரிய தந்தை நாகராசன் 40 நாட்களுக்குப் பிறகு அவமானம் தாங்காமல் தற்கொலை செய்யத் துணிந்தது ஏன்? இதில் உண்மை என்ன என்பதைப் பேச அவரது துணைவியார் சுதந்திரமாக இல்லை; சாதி வெறி உறவினர்களின் பிடியில் உள்ளார்.

நாகராசன் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் நேரம் மாலை 4.00 மணி. அடுத்த ஒரு மணி நேரமான மாலை 5.00 மணிக்கெல்லாம் மணமகனின் ஊருக்குள் கலவரப்படை புகுந்துவிட்டது. இதற்கு முன் ஊருக்கு வரும் முக்கிய சாலைகள் இரண்டின் நடுவே பெரிய மரங்கள் வெட்டப்பட்டு, தடை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

அடுத்தடுத்த கிராமங்களில் மொத்தம் 268-க்கும் மேலான வீடுகள் தாக்கி நொறுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு குண்டுகள். கிட்டத்தட்ட 400 பெட்ரோல் குண்டுகள் தயாரித்து பத்திரமாக கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றிற்கான பெட்ரோல் பாட்டில்கள், திரிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திற்குள் தயாராகிவிட்டதா?

தாக்குதலில் கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 3ல் 2 பகுதியினர் ஊரைச் சுற்றி பாதுகாவலாகவும், வெளி உதவிகள் வரமுடியாத தடை அரண்களாகவும் இருந்துள்ளனர். இவர்களே மரத்தை அறுத்து தடை ஏற்படுத்தியவர்கள். 15 வயதிற்கு மேல் 35 வயதிற்குள்ளான இவ்வளவு எண்ணிக்கையினர் ஒரே வன்னிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சுற்றுமுற்றிலும் அனைத்து கிராமங்களில் இருந்தும் அணிதிரட்டப்பட்டுள்ளனர். இது கூட ஒரு மணிநேரத்தில் சாத்தியமில்லை.

கலவரம் நீண்ட கால அவகாசத்தில் திட்டமிடப்பட்டது என்பதை அதன் ஒவ்வொரு அசைவும் வெளிப்படுத்துகிறது. தாக்குதல் நடவடிக்கையில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி பருவத்தினரே ஈடுபட்டுள்ளனர். இது போராட்டங்களில் பெண்களை முன்னிறுத்தி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் தந்திரத்தை ஒத்ததாகும். அது போல் உயிருக்கு சேதாரம் விளைவிக்காமல் உடமைகளை கொள்ளையடிப்பது, எரிப்பது, அழிப்பது போன்ற சூறையாடல்கள் மட்டுமே துல்லியமாக நடத்தப்பட்டுள்ளன. இது உயிரிழப்பால் வரும் வழக்கு, சிறை, தண்டனை போன்ற நெடுங்கால நெருக்கடிகளைத் தவிர்ப்பதாகும். நெடுங்கால நெருக்கடிகள் என்பது சம்பந்தப்பட்டவரை தொழில், வேலை முதலான பொருள் இழப்பு, மனஉளைச்சல், விரக்தி, சோர்வுக்கு உட்படுத்தும். இது இச்செயலுக்கு தூண்டிய அமைப்புக்கு அணிதிரட்டும் வாய்ப்பைப் பறிப்பதோடு, அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தும். ஆக இவ்வகை திட்டமிடல்கள் அனைத்தும் ஒரே அரசியல் கட்சியின் பின்னணியைத் தெரியப்படுத்துகிறது.

இவ்வாறு ஒரு வன்னிய ஓட்டுக்கட்சியான பாமக திட்டமிட்டு வழிநடத்த, பல்வேறு கிராமத்து வன்னிய இளைஞர்கள் களமிறங்க நடந்த கலவரம் இது. மாறாக பெண்ணின் தந்தை இறந்ததால் நேர்ந்த ஒரு மணிநேர உணர்ச்சி வசப்படலால் நடந்தது அல்ல. அதே போல் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர் இளவரசனும், ஆதிக்கச் சாதியைச் சார்ந்த திவ்யாவும் செய்து கொண்ட சாதி மறுப்புத் திருமணத்தால் மட்டுமே ஏற்பட்ட கலவரமும் அல்ல.

இது அடக்கப்பட்ட சாதி ஆதிக்கத்தை, அதனால் இழந்த சாதி அதிகாரத்தை மீட்டு நிலைநிறுத்துவதற்கான நீண்ட நாள் காத்திருப்பு. அதற்காக திட்டமிட்டு, நிறைவேற்றப்பட்ட வன்முறை வெறியாட்டம்.

கலவரத்தால் சூறையாடப்பட்ட நத்தம் கிராமம் எல்லோரும் அடையாளப்படுத்துவதைப்போல் தலித் கிராமமல்ல; அது தமிழகப் புரட்சியின் தலைநகரம். ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் யுத்தக்குழுவும், அதன் தொடர்ச்சியான மாவோயிஸ்ட் கட்சியுமே அங்கு மக்களின் பிரதிநிதி. தோழர் பாலனின் காலம் முதல் 2004 வரை கட்சி ஏற்ற இறக்கத்துடன் அங்கு செல்வாக்கு செலுத்தி வந்தது.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஊடாக கட்சி, கிராமம் முழுவதையும் ஒழுங்கமைத்தது. கட்சியே கிராமமாக, கிராமமே கட்சியாக பரிமாணித்தது. தங்கள் கிராமத்தின் மீதான சாதிய அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்தியதோடு, பிற கிராமங்களில் நடக்கும் அநீதிகளையும், நத்தம் கிராம மக்கள் தட்டிக் கேட்டனர்; தடுத்து நிறுத்தினர்.

அருகாமையில் ஒரு வன்னிய கிராமம். கிராமத்தின் பெரும்பான்மையான ஆண்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டனர். நக்சல்பாரி கட்சியாக இருந்த நத்தம், திருட்டில் ஈடுபடும் கிராமத்தினரை அறிவுறுத்தியது; எச்சரித்தது; கேட்காத நிலையில் தண்டித்தது. திருட்டில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை கழுத்தில் 'திருடன்' என்ற அறிவிப்புப் பலகை மாட்டி ஊரைச் சுற்றிவரச் செய்தது. மொத்தத்தில் நத்தம், சுற்றியுள்ள கிராமங்களை ஆட்சி செய்தது.

புரட்சியாளர்களாய், சமூகத்தின் புதிய மனிதர்களாய் நத்தம் கிராமத்தின் மக்கள் இருந்தனர். ஆனால் ஆதிக்க சாதிகளுக்கு அவர்கள் தலித்துகளாகவே தெரிந்தார்கள். புதுமைகள் மலருவதை பழமைவாதிகள் விரும்பவில்லை. வன்னியர் ஆதிக்க சக்திகளால் அதைப் பொறுக்கவே முடியவில்லை. ஆனாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் ஆயுதத்துடன் கட்சி இருந்தது. நத்தம் கிராமமும் ஆயுதபாணிகளைக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் 1990க்குப் பிந்தையப் பொருளாதார சீர்திருத்தம் தமிழகத்தை திருப்பிப் போட்டது. பொருளாதார சீர்திருத்தத்தின் துணை விளைவான ரியல் எஸ்டேட் கொள்ளைத் தொழிலும், கந்து வட்டிக் கொள்ளையும் நத்தம் கிராமத்தை ஆக்கிரமித்தது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோருக்கென வளர்ச்சி அடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆளும் வர்க்கக் கூட்டாளியாகியது. நாடெங்கும் பரவிய அதன் இடைத்தரகர்கள் நத்தத்திலும் தோன்றினர். அரசியல் பேரங்களுக்கு நத்தமும் பலியாகியது.

தமிழகத்தின் பொருளாதாரச் சீர்திருத்தமும், அதனால் ஏற்படும் மாற்றங்களும் அகில இந்தியக் கட்சியான‌ நத்தம் மக்களின் கட்சிக்குப் புரியவே இல்லை. அதன் வேலை முறையால் கட்சி புதிய இடங்களில் வளரவும் இல்லை; இருக்கும் இடத்தில் நிலைக்கவும் இல்லை. இந்நிலையில் ஊத்தங்கரையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு கட்சியினர் கைதானார்கள். இதில் நத்தத்தில் இருந்த கட்சியினரும் பாதிக்கப்பட்டனர். ஊத்தங்கரை கைதுக்குப் பின்னால் கட்சியில் ஏற்பட்ட பிளவு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. மெல்ல மெல்ல கட்சி நத்தத்திலும் காணாமல் போனது.

ஒரு ரகசிய கட்சியின் பலவீனத்தை வெளியில் இருப்பவர்களால் உணர முடியவில்லை. அதனால் வன்னிய ஆதிக்கர்கள் வாளாட்டத் தொடங்கவில்லை. ஆனால் அண்மைக் காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் அவர்களுக்கு நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டன.

வட்டித் தொழிலும், ரியல் எஸ்டேட் மோசடியுமாக ஒரு சமூக விரோதி நத்தத்தில் தலையெடுத்தான். அவனது தவறான நடவடிக்கைகளுக்காக மக்கள் அவனை தண்டித்து கிராமத்தில் இருந்து அடித்து விரட்டினர். விரட்டப்பட்டவன் ஆதிக்க சக்திகளுக்கு நிலைமையை படம்போட்டுக் காட்டி விட்டான். ஆதிக்க சக்திகளுக்கு துணிவு வந்து விட்டது.

இழந்த தங்களது அதிகாரத்தை நிலைநாட்டுவதோடு, இத்தனை நாள் தங்களது ஆதிக்கத்தை தடுத்ததற்கும், தகாத செயலில் தாங்கள் ஈடுபட்டபோது தண்டித்ததற்கும் பழிவாங்கத் துடித்தனர். தக்க தருணத்திற்காக எதிர்பார்த்துக் கிடந்தனர். இளவரசனும் - திவ்யாவும் காதல் மணம் புரிந்தது, அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாறி விட்டது. திட்டமிட்டு பெருங்கலவரத்தை நடத்தி முடித்துள்ளனர்.

கட்சியை இழந்ததற்காக நத்தம் கிராம மக்கள் கண்ணீர் விடுகின்றனர். கலவரத்தால் அவர்கள் இழந்த பொருட்களின் மதிப்பும் அதிகமாகும். குருவி சேர்த்தது போல் சேர்த்த செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டது சோகம் தான். அந்த இழப்பை விட, கட்சியை இழந்ததை அவர்கள் பேரிழப்பாகக் கருதுகிறார்கள். தாங்கள் மீண்டும் அடிமைகளாக்கப்பட்டு விட்டோம் என்பதை அவர்களால் தாங்கவே முடியவில்லை. தங்களை மனிதனாக நிமிர்த்தி, நிறுத்திய கட்சியை இன்று ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறார்கள்.

appu_balan_statues_640

தோழர்கள் அப்பு, பாலன் நினைவுச் சின்னத்தில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு வாசகங்கள்:

நக்சல்பாரிகளே தேசபக்தர்கள்!
தமிழக அரசினால்
படுகொலை
செய்யப்பட்ட
புரட்சித் தியாகிகள்
தோழர் அப்பு -தோழர் பாலன் சிலைகள்

ஆனால் மக்களை இழந்து விட்டதாக கட்சி உணருகிறதா எனத் தெரியவில்லை. மக்களின் வேதனையை அவர்களின் கண்ணீரில் உணரலாம். கட்சியின் நிலையை அவர்களின் நிலைபாட்டில் மட்டுமே உணர முடியும்.

மாவோயிஸ்ட் கட்சி மட்டுமல்ல. தமிழகத்தின் புரட்சிகர கட்சிகள் அனைத்துமே எந்த பிரச்சனைகளில் இருந்தும் மக்களைப் பாதுகாக்கிற நிலையில் இல்லை. அதுவும் சாதிய சிக்கலை கையாள முடிவதில்லை.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட, ஒடுக்கப்பட்ட மக்களிடம் மட்டுமே கட்சி கட்டினால் போதாது. அதற்கு ஆதிக்க சாதியில் உள்ள மக்களையும் அணிதிரட்ட வேண்டும். அப்படி அணி திரட்டப்படுகிற உயர்சாதி மக்கள் மூலம் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அவர்களிடையே விரல் விட்டு எண்ணுகிற அளவிலான தோழர்கள் என்கிற நிலையைத் தாண்டி குறைந்தபட்ச அமைப்பு பலம் பெற வேண்டும். இந்த நிலையில் தான் சாதிய வன்முறைகளை நிகழ்த்த ஆதிக்க சக்திகள் துணிகிறபோது அவர்களின் சொந்த சாதியில் உள்ள நமது அணிகள் மூலம் தடை ஏற்படுத்த முடியும். இப்படி இல்லாத நிலையில் சாதிக் கலவரங்கள் நடப்பதும், அதன் பிறகு என்ன செய்வதெனத் தெரியாமல் கட்சிகள் திகைப்பதுமான காட்சிகள் நத்தத்திலும் நடந்தது.

தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நாகராசுவின் உடலை வைத்துக் கொண்டுதான் கலவரம் நடத்தப்பட்டது. அதே உடலை மருத்துவப் பரிசோதனை முடித்து, அரசு கொடுக்கும்போது வாங்க முடியாதென மறுத்தனர் ஆதிக்கவாதிகள். அதன் மூலம் பதட்டம் நீடித்துக் கொண்டேயிருந்தது. சில இயக்கங்களின் பொறுப்பாளர்கள் அப்பகுதியின் மண்ணின் மைந்தர்கள். கூடுதலாக ஆதிக்க சாதி மக்களின் சமூக உறவினர். இவர்களால் ஆதிக்க சாதியினர் எவர் ஒருவரிடமும் பேச முடியவில்லை. நிலைமையை சீராக்க முடியவில்லை. இவர்கள் தங்கள் இயலாமையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்ற இயக்கத்தவர்களாலும் எதிர்த்தரப்பு மக்கள் எவரையும் சந்திக்க முடியவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் சட்டத்தின் மூலமே நிறைவேற்றுகிற‌ பணியில் இருந்தனர். ஓரிருவர் இருதரப்பு மக்கள் மூலமாக பிரச்சனையைத் தீர்ப்பதுதான் சரி என்றும், தற்போது ஆதிக்க சாதியில் உள்ள சனநாயக சக்திகள் யாரையாவது சந்திக்க முடியுமா எனவும் ஆசைப்பட்டனர். அதன் மூலம் உடலை வாங்கி அடக்கம் செய்யவும், பதட்டத்தைத் தணிக்கவும் விரும்பினர். சொந்த பலமில்லாத அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இவை எல்லாம் இயக்கங்களுக்கு உணர்த்துவது என்னவெனில் சாதியச் சிக்கலை கையாள்வதற்கு குறிப்பிட்ட பகுதியானாலும் சரி, நாடு முழுவதுமானலும் சரி அங்குள்ள அனைத்து மக்களிடமும் இயக்கம் செல்வாக்கு பெற்றிருக்க வேண்டும். அதே போல் சாதிக் கலவரங்களை தடுக்க வேண்டும் என்றால் ஆதிக்க‌சாதி மக்களை அணிதிரட்டி, சாதி எதிர்ப்புப் போரட்டங்களை நடத்த வேண்டும். இதை இயக்கங்கள் உணர்ந்தால் மக்களிடம் செல்வாக்கு பெறலாம்.

இயக்கங்களை விட அரசு தெளிவாக உள்ளது. அரசின் அரசியல் எவ்வளவு கூர்மை என்பதை நத்தம் நமக்கு உணர்த்தியது.

கலவரம் நடந்த நாய்க்கன் கொட்டாய் பகுதி மட்டுமல்ல, கலவரத்தால் பாதிக்கப்பட்ட நத்தம் கிராமமும் அல்ல, ஒட்டு மொத்த தருமபுரி மாவட்டம் முழுவதும் அரசின் கண்காணிப்பில் உள்ளது; உளவுத்துறையின் ஆதிக்கத்தின் கீழ்தான் உள்ளது. நீண்ட காலம் திட்டமிடப்பட்ட இக்கலவரம் அரசுக்கு முன்பே தெரியும். தெரிந்தும் இதை நடக்கட்டும் என விட்டுவிட்டது. இதன் மூலம் நக்சல்பாரிகளாக இருந்த நத்தம் கிராமத்து மக்களை அச்சத்தில் மூழ்கடிக்க நினைத்தது. எனவே கலவரம் முடியும் வரை அமைதியாக இருந்தது.

காரியம் முடிந்ததும் காவல்துறை குவிந்தது. கலவரத்தை நடத்தியவர்களில் சிலர் கைது செய்யப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் உடனடியாக அளிக்கப்படுகிறது. சட்டமும், காவலும் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் என அதிகாரிகள் மக்களிடம் உரையாற்றுகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பதில் தாக்குதல் நடத்தவோ, அரசுக்கு எதிராக போகவோ (இது புரட்சிகர இயக்கங்களில் சேரக் கூடாதென்ற பொருளில்) கூடாது என அன்பாக எச்சரிக்கப்படுகின்றனர்.

காவல்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் வன்னிய மக்களிடம் எதிர்நிலையை உருவாக்கினால், அதை சரி செய்வதற்கு அரசுக்கு அவகாசம் இருக்கிறது. அது தேவையான நேரத்தில் சில அதிகாரிகளின் இடமாற்றத்தைக் கொண்டு சாதித்து விட முடியும். ஆக சாதிக் கலவரங்கள் தடுக்க முடியாதது என்கிற நிலையையும், அதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் அடங்கி, ஒடுங்கித்தான் போக வேண்டும் என்கிற நிலையையும், பாதிக்கப்பட்டாலும் அரசுதான் பாதுகாவலன் என்கிற நிலையையும், ஆகவே அரசு எதிர்ப்பு-புரட்சி எல்லாம் கூடாது என்கிற நிலையையும் அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சாதி ஆதிக்கத்துக்கும் - சாதி ஒழிப்புக்குமான போராட்டத்தில் நாய்க்கன் கொட்டாய் பகுதிக்கு பல சிறப்பு நிலைமைகள் இருப்பதை நாம் உணர முடிகிறது. ஆனால் இந்த சிக்கல் நாடு தழுவியது. இனி இது தமிழகம் எங்கும் நிகழக்கூடும். அப்படி நிகழ வேண்டும் என்றே கொடிய எண்ணத்தை ஆதிக்க சாதி அமைப்புகள் மாநாடுகள் நடத்தி அறைகூவல் விடுகின்றன.

மதுரை மேலூரில் தேவர் பேரவை, கவுண்டர் பேரவை, வன்னியர் பேரவை என ஆதிக்க சாதிகள் அனைத்தும் கூடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை எதிர்த்தும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றின. இதை கோவையில் கொங்கு முன்னேற்றக் கழக மாநாடும் பின்பற்றியது. இங்கே சாதி மறுப்புத் திருமணம் புரிகிறவர்களைக் கொல்ல வேண்டுமென முழக்கங்கப்பட்டது. இதையே தஞ்சை செங்குட்டுவ வாண்டையார் என்ற சாதியத் தலைவனும் பத்திரிக்கையில் பகிரங்கமாக அறிவிக்கிறார். வன்னிய சாதியின் அனைத்துப் பிரிவு அமைப்புகளும் தீர்மானமாக நிறைவேற்றுகின்றன.

ஆக சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராகப் புனிதப் போர் நடத்தப் போவதாகவும், கௌரவக் கொலைகள் செய்வது தங்கள் சமூக கடமை எனவும் சாதி ஆதிக்க சக்திகள் அறிவிக்கின்றன. இன்று நத்தம், நாளை தமிழகத்தின் எந்த மூலையில் வேண்டுமானலும் என ஆதிக்க சாதியினரின் வெறியாட்டம் தொடரும்.

காரணம், பெற்றோர் செய்து வைக்கும் கட்டாயத் திருமணங்கள், திருமணத்துக்கான இயல்பான தேர்வு உரிமைக்கு எதிரானது. மனதுக்கேற்ற, உடலுக்கேற்ற, படிப்புக்கேற்ற, வாழ்க்கைக் கேற்ற என்கிற தகுதிகளை கட்டாயத் திருமணங்கள் வழங்கவில்லை. இன்றைய சமூக நிலைமைகள் ஆதிக்க சாதிகளின் பொருளாதார வளர்ச்சியை கூடுதலாக்கியுள்ளது. இதன் காரணமாக ஆதிக்க சாதிகளின் ஆண்கள் பள்ளிப் படிப்பை முடித்ததும் தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பெண்களை கல்லூரி, மேல் படிப்பு எனப் படிக்க வைக்கிறார்கள். எனவே ஆதிக்க சாதிகளில் அதிகமாகப் படித்தப் பெண்களும்- குறைந்த படிப்பு ஆண்களுமாக இளவயதினர் உள்ளனர். சாதியிலும், பணத்திலும் சமமானவர்கள் என்று இவர்களிடையே கட்டாயத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது. இதற்கு எதிராக தனக்குத் தகுதியானவரை ஒரு ஆணோ, பெண்ணோ தேர்வு செய்ய முனைவது இனி அதிகரிக்கத்தான் செய்யும்.

இது போலவே இன்றைய உலகமயமாக்கலும், உடன் விளைவான நகரமயமாக்கலும் கூட சுயத் தேர்வு திருமணங்களை – காதல் திருமணங்களையே முன்னிலைப்படுத்தும். பெரு நகரங்களின் கட்டுமானத் தொழில், பஞ்சாலை, ஆயத்த ஆடை நிறுவனங்கள், பெரு வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு துறைகளும் ஆண்கள், பெண்கள், படித்தவர், படிக்காதவர் என அனைவரையும் உள்வாங்குகிறது. ஒரு காலத்தில் படித்தவர்கள் தான் பட்டணம் போவார்கள் என்ற நிலைமாறி குடும்பம், குடும்பமாக கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறுவது அதிகரிக்கிறது. இது அனைத்து சாதியினரும் நெருங்கி - இணக்கமாக வாழும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. எனவே சாதிய கட்டாயத் திருமணங்களுக்கு மாறான சுயத்தேர்வு – காதல் திருமணங்கள் அதிகரிக்கும். இதுவே இயல்பானதும், முற்போக்கானதுமாகும்.

பழைய முறைகளை மீறுவதற்கும், மாற்றுவதற்கும் துணிச்சல் மிக்க முன்மாதிரிகள் எல்லாவற்றுக்கும் தேவைப்படும். அது காதல் மணம் புரிவோருக்கும் தேவைப்படும். அப்படி முன்மாதிரியாக இருக்கிற கலகப் பிரிவினரும் இன்று அதிகரித்துள்ளனர்.

dharmapuri_attack_645

அடிதடிக்கும் அஞ்சாத, சாதி-சமூக கட்டுப்பாட்டுக்குப் பணியாத, போலியான மண வாழ்க்கையை மதிக்காத கலகக்காரர்களையும் நகரமயமாக்கல் அதிகரிக்கச் செய்துள்ளது. கட்டுமானத் துறைக்கு தேவையான செங்கல் சூளைகளில், கல் குவாரிகளில், ஹாலோ ப்ளாக் நிறுவனங்களில் என இம்மக்களின் கூட்டம் கூடி வருகிறது. கோவை மாவட்டத்தில் தடாகம் முதல் ஆனைகட்டி வரையிலான 10 கி.மீ. தொடர்ச்சியான நிலப்பரப்பில் அமைந்துள்ள செங்கல் சூளைகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பணிபுரிகிறர்கள். தாலி, சாதி, மதம் என்ற எந்த பிற்போக்கையும் கருத்தில் கொள்ளாத இக்கலகக்காரார்களுக்கு ஒரு காலத்தில் திரையரங்குகள், உணவகங்கள், கொத்தடிமை தொழில்முறைகள் என குறுகிய வாய்ப்பே இருந்தது. இன்று இவர்களுக்கான சமூக வாய்ப்புகள் விரிவாகியுள்ளது. இவர்களிடம் சட்டம்-ஒழுங்கு எனும் அடக்குமுறைகள் கூட எளிதாக எடுபடாது. இவ‌ர்க‌ள் இய‌ல்பாக‌ வேற்று சாதி, வேற்று ம‌த‌த்த‌வ‌ரை ம‌ண‌ம் செய்துகொள்கிறார்கள்; ஒத்துவ‌ராத‌ ம‌ண‌வாழ்க்கையைத் துணிச்ச‌லாக‌த் தூக்கி வீசுகிறார்கள்; திரும‌ண‌ம் தொட‌ர்பாக‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைத்திருக்கும் அனைத்து விதிக‌ளையும் உடைத்தெறிகிறார்க‌ள்.

போலி வாழ்க்கை முறையை உடைக்கும் இவர்களின் துணிச்சல்தான் மற்றவர்களுக்கு முன்மாதிரி. அதே நேரத்தில் சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் படித்த – நாகரீக இளைஞர்கள் மிக முக்கியமான ஆதரவாகும். இந்த வாய்ப்புகள் இன்று பெருகியுள்ளன. எனவே சாதிய சமூகம், காதல் மூலமாக தொடர் கலகத்தை சந்திப்பது தவிர்க்க முடியாதது.

கூடவே சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் வன்முறையாளர்களுக்கும் தொடர் வாய்ப்பாக மாறும். காரணம் சாதி மறுப்புத் திருமணங்கள் ஆதிக்க சாதிகளின் சொத்தையும் பலவீனப்படுத்துகின்றன.

பெண்களின் நீண்ட காலப் போராட்டத்தின் மூலமாக கிடைத்த சொத்துரிமையும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கான சட்ட உரிமையும் ஆதிக்க சாதியின் நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்க மேல் தட்டுப் பிரிவினரின் சொத்தைப் பலவீனப்படுத்துகிறது. ஒரு மேல் சாதிப் பெண், சாதிமறுப்புத் திருமணம் புரிந்து ஒடுக்கப்பட்ட மணமகனோடு செல்லும் போது தனது சொத்தையும் பிரித்துக் கொண்டுப் போகும் சாத்தியம் இருப்பதால், இது மேல் சாதிப் பெண்ணின் குடும்ப ஆண்களை அச்சுறுத்துகிறது.

குடும்பச் சொத்து என்கிற போர்வையில், கார், பைக், கழுத்துச் சங்கிலி, கை வளையம், கடை, வியாபாரம் என சலுகை பெற்றுக் கொண்டிருக்கிற இளைஞர்களின் வெட்டி வாழ்க்கைமுறை கேள்விக்குள்ளாகிறது. இவர்களின் பொருளாதார வகையிலான கொடுக்கல் - வாங்கல் தடைப்படுகிறது. சாதி தாண்டிய கொடுக்கல் - வாங்கல் இவர்களுக்கு இன்னும் சாத்தியப்படவில்லை. என்னதான் ஒரே சாதியாக இருந்தாலும் கொடுக்கல் - வாங்கலுக்கு ஒருவரின் பொருளாதாரப் பின்புலமே நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. இந்நிலையில் சாதிமறுப்புத் திருமணத்தின் மூலம் ஒரு பெண் சொத்தைப் பிரித்துக் கொண்டுப் போகும் வாய்ப்பிருப்பதை, அப்பெண்ணின் குடும்பத்து ஆண்களால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. குறிப்பாக உடன் பிறந்தவர்கள், வீட்டின் மூத்த மாப்பிள்ளைகள், பங்காளிகள் என்ற இளவட்டங்களால் தாங்க முடிவதில்லை. இவர்களே எளிதாக கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ள். என‌வே இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் குடும்ப‌ப் பெண்க‌ள் சாதிம‌றுப்புத் திரும‌ண‌ம் செய்வ‌தை அனும‌திப்ப‌தே இல்லை.

இவர்கள்தான் சாதி ஆதிக்க சக்திகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இயல்பான பின்புலமாக அமைகிறார்கள். ஆதிக்கவாதிகளும், அரசியல்வாதிகளும் இவர்களை நன்கு பயன்படுத்துகின்றனர். பணபலமும், அதிகாரப் பலமும் கூட்டு சேர்ந்து அப்பாவி - ஏழை மக்களை ஆயுதங்களாக்குகின்றன.

எனவே சாதி மறுப்பு சுயத்தேர்வு திருமணங்கள் தவிர்க்க முடியாதது என்பதும், அது சமூக மாற்றத்தைக் கோருகிறது என்பதும் உண்மையே. அதே நேரத்தில் இத்திருமணங்கள் சாதி ஆதிக்க சக்திகளின் வன்முறை வெறியாட்டத்துக்கு சாதகமாக மாற்றப்படுகிறது என்பதும் உண்மையே.

இதைத் தடுப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்களிடம் மட்டுமே அமைப்பு கட்டி, புரட்சி பேசுவது போதாது. ஆதிக்க சாதி மக்களிடமும் அமைப்பு பலம் பெற வேண்டும். அம்மக்களிடம் சாதிய பிற்போக்குத் தனங்களுக்கும், வெறியாட்டத்துக்கும் எதிரான போராட்டங்களை கட்டவிழ்த்து விட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களிடமும், ஒடுக்குகிற பிரிவின் உழைக்கும் மக்களிடமும் ஒற்றுமைக்கான தளங்களை உருவாக்க வேண்டும். இதைத்தான் சாதியக் கலவரங்களின் படிப்பினை, புரட்சிகர சனநாயக இயக்கங்களுக்கு கடமையாகச் சொல்கிறது. மாறாக சட்ட பாதுகாப்புப் பணிகளை செய்து கொடுப்பதும், உண்மையறியும் சம்பிரதாய நடவடிக்கைகளை மேற்கொள்வதும், மீண்டும், மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் மட்டுமே அமைப்பு கட்ட முயற்சிப்பதுமான வேலைமுறைகள் மட்டும் எதையும் மாற்றிவிடப் போவதில்லை என்பதை வலியுறுத்துகிறது.

- குணா, தேசிய முன்னணி இதழ் குழு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

15 comments

15
New Tamilan
இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து என்றார் பொரியார். மனம் மாறுங்கள், மகத்தான சமத்துவம் சுவாசிங்கள்...,
Anand
இதையும் முழுமையாக படிக்கவும்.

http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/
Suthir Marx
"ஆதிக்க சாதி மக்களிடமும் அமைப்பு பலம் பெற வேண்டும். அம்மக்களிடம் சாதிய பிற்போக்குத் தனங்களுக்கும்"

இப்படி‍ அனைத்து‍ தர மக்களும் இணைந்து‍ தான் சாதியத்தை ஒழிக்க முடியும் என்று‍ ஒப்பு கொண்டதனால், வர்க்க ரீதியான திரட்டல்தான் சாதியத்தையும் இன்னபிற பிற்போக்குதனத்தையும் ஒழித்துக் கட்ட முடியும் என்று‍ கட்டுரையில் கூறியுள்ளது‍ குறிப்பிடத்தக்கது‍ என்றாலும் அதை நோக்கிய இயக்கம் என்பது‍ நடத்த என்ன திட்டம் உள்ளது‍ என்று‍ கூறவில்லையே.........................
NAAN TAMIZHANALLA
மக்களீன் நலன் சார்ந்து இயங்கியிருந்தால் கட்டுரையாளர் கூறூம் கட்சி மக்களீடம் இன்றூ செல்வாக்கு பெற்றீருக்கும்.ஆதிக்க் சாதி என குறீப்பிடும் வன்னியர்களூம் பெரும்பான்மையாக ஒடுக்கப்பட்டவர்கள் தான்...கட்டுரையாளரின் கட்சியின் புத்தியெ பைத்தியம் பிடித்துல்லது. இவருடைய கட்டுரையில் தமிழ், தமிழினம்..என்ற வார்த்தையெ தீண்ட தகாத வார்த்தையாகிவிட்டது. இவர்கள் பேசும் கொள்கையும்,திராவிடக் கொள்கையும் ஒன்றே ...இவர்களீன் இந்திய தேசியம் எங்களூக்கு வேண்டாம்... குடும்பத்தில் எப்படி சச்சரவுகல் இயல்போ...அதுபோல் தமிழ்சமூகத்திலும் ...இயல்பு...
elango
ஒரு தரப்பு வாதம்
ARULRAJ
அனைத்து சாதிகளிலும் கலககாரர்களை உருவாக்குவோம்
Guest
ஒரு தலைவன் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரவேண்டும் அதைவிடுத்து அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா? வன்முறை தூண்டும் வசனம் கட்சி கொள்கையா?
asad
உன் மீது ஆதிக்கம் செலுத்தினால் அடங்கமறு,மீறி அடக்க நினைத்தால் அத்துமீறு. உன்னை எழ விடாமல் தலையில் கால் வைத்தால் திமிரி எழு, அடிக்க நினைத்தால் திருப்பி அடி...இது சரி தானே அனானிமஷ்
Mani
உண்மையான மானுட பற்றாளன் சாதியை ஒரு போதும்
விரும்பமாட்டான். அனால் அதே வேலையில் குறைந்தபட்சம் பொருளியல் மற்றும் கல்வியில் அல்லது அதைவிட குறைந்தபட்சம் வாழ்கை பண்பாட்டில் ஒத்த ஒருவனுக்கு மட்டுமே தான் உறவு கொள்ள முனைவான். அப்படி பார்க்கும்போது வன்னியர் மட்டுமல்ல, எந்த சாதிகாரனும் இது பார்ப்பான் அல்லது பொருந்தும். இப்படி பட்ட விடயங்களை ஆராயாமல் வன்னியர் என்றாலே சாதி வெறியனாக சித்தரிக்கும் உங்களை போன்றவர்களுக்கு சமூகத்தில் இணக்கம் கான தெரியவில்லையா?
வழி இருந்தால் அதை பற்றி எழுதவும் . வன்னியர் அரசியலே எல்லா வகையிலேயும் துணையாக தலித்/தலித் அரசியலுக்கு இருந்து வருகின்றது. இதை மறந்து ஒதுக்குவது விலக்குவது என்பது பிதற்றுவதற்கு ஒப்பாகும்.
Guest
சில நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் வன்முறை சம்பவங்களை விமர்சித்து, தங்களை சமூக புரட்சியாளர்களாகவும், சீர்திருத்த சிந்தனையாலர்களாகவும் காட்டிக்கொள்ள நினைக்கும் அனைத்து கத்துக்குட்டிகள் மற்றும் நுனிப்புல் மெய்பவர்களுக்கும் ஒரு சின்ன விளக்கம்.மேற்படியான சம்பவம், திடீரென்று நடந்த நிகழ்ச்சியல்ல. ஒரு சராசரியான குடும்பத்தின் தலைவராக இருந்து, தினசரி தேவைக்கும் குடும்பத்தின் தேவைக்கும் பிள்ளைகளின் அல்லலும் பகலும் சொந்த ஆசைகளை தியாகம் செய்து கொண்டு ஒரு கிராமத்தில் இருக்கும் ஒருவர் தனது சக்திக்கு மீறி தன்னுடைய மகளுடைய எதிர்காலத்தை மனதில் கொண்டு ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறார். தனது வருமானத்தின் பெரும் பகுதியை மகளுக்காக செலவுசெய்து, அவள்தான் தனது எதிர்காலம், சொத்து என நினைத்து உயிராய் இருக்கிறார்.
ஊரை கடந்து போகும் வழியில் இருக்கும் சேரியை கடந்துதான் பள்ளிக்கு போகவேண்டும். 15 அல்லது 16 வயது இருக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும் நல்லது கெட்டது தெரியாது இந்த சூழ்நிலையில் தனது வாழ்க்கையில் புதிதாக கிடைக்கும் ஒரு ஆணின் நட்பு அந்த பெண்ணுக்கு நல்லதா கெட்டாத என்று கூட தெரியாது.இது போன்ற சூழ்நிலைகளில் "கவுண்டன் பொன்னை காடு, படையாச்சி பொன்னை கட்டு" என்று மேடை போட்டு புலம்பி வரும் திருமாவளவன் போன்ற நபர்கள் தங்களது இளைஞர்களை தவறாக வழி நடத்தி வருகின்றனர். வாழ்க்கையில் விரைவில் செட்டில் ஆகிவிட ஒரு பணக்கார பெண்ணை தேடி திருமணம் தேய்த்து கொண்டால் பொது என்று நினைக்கும் பல இளைஞர்களை பார்த்திருக்கிறேன். அது போன்ற ஒருவன் அந்த பெண்ணை மயக்கி , ஆசை வார்த்தைகள் பேசி வீட்டை விட்டு ஓடி வர செய்து திருமணம் செய்து கொண்டு தன வீடிற்கு கொண்டு போய்விடுவான். ஓடிப்போன பெண்ணை நினைத்து அழுதுஅழுது செய்வதறியாது திகைத்து போயிருக்கும் அந்த பெற்றோகளுக்கு ஊரில் மற்றும் உறவுகளுக்கு மத்தியில் தலை காட்ட முடியாத நிலை.அடுத்து அடுத்து உள்ள பெண்களுக்கு எதிர்காலம் மற்றும் கல்வி கேள்விக்குறிதான்.கொண்டு போன பெண்ணையாவது ஒழுங்காக வைத்துக்கொள்ளாமல், பெண் கர்ப்பமான பிறகுஅடித்து , படுத்தி பிறந்த வீட்டுக்கு அனுப்பி பணம் நகை வாங்கிகொண்டு வா என அனுப்பிவைப்பான். இது கற்பனையோ கதையோ இல்லை . தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்துகொண்டு வருவது. இந்த தலித்துகளை நாங்கள் ஒருபோதும் கொடுமை படுத்தியதும் இல்லை, ஒதுக்கி வைத்ததும் இல்லை. பண்ணையில் வேலை செய்பவர்களை எங்களில் ஒருவராகத்தான் நடத்துகிறோம். எதனை கிராமங்களில் தலித்துகளும் மற்ற சாதி முதலாளிகள் இல்லை நிலதுக்காரகளும் ஒன்றாக அமர்ந்து உணவருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டு நிகழ்சிகளுக்கு எவ்வளவு உதவி செய்திருக்கின்றனர் உண்மையான விசுவாசமிக்க எந்த ஒரு தலித் இனத்தை சேர்ந்த பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள். விதிவிலக்கு அனைத்திலும் உண்டு. தலித்துகள் சில பகுதிகளில் கொடுமை படுத்தபடுவது உண்மைதான். தலித் இனத்தின் "மண்டேலா" போல தன்னை நினைத்துக்கொண்டு மேடையில் தன்னுடை பிழைப்புக்காக அலறி வரும் திருமாவளவன் போன்றோர் தலித்துகள் மனதில் தவறான செந்தனையை வளர்த்து விடுகின்றனர். அவன் பேச்சை கேட்டு கொண்டு சிறுத்தை என்று தன்னை நினைத்துகொண்டு, தலைவன்(?) சொல்லை வேதமாக எண்ணி பெண்ண பிடிக்கும் வேளையில் இறங்கும் ஒரு கூட்டம். மற்றொன்று இத்தனை ஆண்டுகளாக தன்னையும், தன தாத்தன் மற்றும் தகப்பனுக்கு படியளந்து அரவணைத்து கொண்டு மாற்றும் சாதிக்காரகளை வெட்டுவோம், உனது பெண்ணை திருமணம் செய்வோம் என்று, சாதிகளை ஒழிப்போம் என கிளம்புவதுதான் சாதிகலவரங்களுக்கு முதல் படி. இவர்களுக்கு ஆதரவு "வன் கொடுமை தடுப்பு சட்டம்" மற்றும் பரபரப்பு தேடி ஓடும் ஊடகங்கள்.தமிழகத்தில் "தராசு" பத்திரிக்கைக்கு பிறகு எல்லா பத்திரிக்கைகளும் மஞ்சள் பத்திரிக்கை போலவே செயல் படுகின்றன.
ஓடிபோய் திரும்பி வந்த பெண்ணால்,அவமானம் தாங்காமல் கொடும்பதுடம் தூக்கில் தொங்கிய குடும்பகளை பற்றி என்றாவது இந்த சிந்தையாளர்களோ , மீடியாகளோ கவனம் செலுத்தி இருக்குமா? பெண்ணை திருப்பி வீட்டுக்கு அனுப்ப நடக்கும் திரைமறைவு பேரங்களை பற்றி எவனாவது எழுதி இருப்பானா? வன்னியர்களும் இதர சாதிகாரக்ளும் சிறுபான்மையினராக இருக்கும் இடத்தில தங்களின் வீரத்தை காட்டும் சிறுத்தைகளுக்கு, மதுரை திருநெல்வேலி போன்ற இடத்திற்கு சென்று புரட்சி செய்ய துணிவு இருக்கிறதா? அட மூடர்களே, எங்க உங்களை ஒடுக்குரான்களோ அங்க போய் உங்க புரட்சியை தொடங்குங்க.அப்பாவி படையாச்சி பிள்ளைமார் பொண்ணுகளை கல்யாணம் கட்டிக்கிட்டு வச்சி வாழ வழி தெரியாம , பெண்ணோட பெற்றோர்களிடம் பேரம் பேசுவது சமூக சீர்திருத்தம் அல்ல. சாதியை ஒழிக்கணும்னு முழங்கும் நீங்கள் முதலில் அருந்ததியினரை சமமாக நடத்துங்கள். அவங்க பெண்ணகளை திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு பாதிப்பு எங்கேயோ அங்கே சென்று போராடுங்க. அங்க எல்லாம் போன என்னவாகும்னு உங்களுக்கே தெரியும்.
அதைவிட்டுவிட்டு திரும்ப திரும்ப செய்த தவறை திரும்ப செய்தால் பிறகு பாதிப்பு எல்லோருக்கும் தான்.
kannan
வன்னியர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்க்கு எதிரானவர்களாக சித்தரித்து வேற்றுமையை பறைசாற்றினால், இன்னும் அதிமுக-வும், திமூகவும் மட்டுமே தமிழகத்தை ஆண்டு சுடுகாடு ஆக்கிவிடுவார்கள். நாம் அனைவரும் தமிழராக இணைவோம், அனைத்து தமிழின மக்களும் ஒருங்கிணைந்த்து நமக்கான அரசியல் வழிமுறை காண்போம்.
Marudhupandian
Dear so called revolutionaree,
why dont you focus the attention in paramakkudi - madurai sinthamani padukolai?
elango
கட்டுரயாலரின் கருத்து ஒரு நல்ல புனயப்பட்ட கதை. அதே பகுதியை சேர்ந்த அனைவருக்கும் தெரியும். யார் அவமானப்படுத்தியது என்ரு . தவிர அந்த நத்தம் காலனி மக்கல் ஒன்ரும் ஒடுக்கப்பட்ட்வர்கல் அல்ல என்பதை அனைவரும் தெரிந்து கொல்ல வேன்டும். அப்பகுதியில் அனைத்து கட்ட பஞாயத்துகலும் அவர்கல் தலைமயில்தான் நடக்கும். அவர்கல் வைத்ததுதான் சட்டம் என திரிந்தவர்கல். அனைத்து விஷயஙலிலும் அவர்கலின் தலயீடும் அடாவடிக்கும் பேர்போன மக்கல். இந்த சம்பவம் அந்த பின்புலத்திலே பார்க வேன்டிய விஷயம்.
Raavanan
கருணாநிதி ,,,, வைக்கோ ,,,, தா.பாண்டியன் ,,, ராமகிருஷ்ணன் ,,, வீரமணி இன்னும் பல ஜாதி ஒழிப்பு போராளிகள் இதற்க்கு என்ன சொல்ல போறீங்க ??? நவீன நெற்றிக்கண் - முழு கட்டுரை
-----------------------------------------
பெண்கல்வியை வலியுறுத்தி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. பெண்கல்வியைப் போற்றிப்பாடாத கவிஞர்கள் இல்லை. பெண்கல்வியில் அக்கறை கொள்ளாத தேசத்தலைவர்கள் இல்லை.

‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை சிலை போல ஏன் அங்கு நின்றாய் நீயும் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்’ தன் புதல்விக்கு சொல்வது போல பெண்கு
ழந்தைகளுக்குக் கல்வி எவ்வளவுமுக்கியம் என்பதைப் போதிக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.

இப்படி எல்லோராலும் வலியுறுத்தி சொல்லப்படும் பெண்களின் கல்வி முன்னேற்றத்தை அழித்து ஒழிக்கும் எமனாகிக் கொண்டிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகளால் வளர்த்துவிடப்பட்ட ஒரு அநாகரீகக் கும்பல்.

பெண்கல்வி முன்னேற்றத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் எப்படி தடையாக இருக்கிறார்கள்? பள்ளிக்கு செல்லும் பணக்கார மாணவிகளைத் தேடித் தேர்ந்தெடுத்து தலித் மாணவர்கள் பின்தொடர வேண்டும். அந்த மாணவிகள் திட்டினாலும்; காரித்துப்பினாலும்; செருப்பால் அடித்தாலும்; அதுபற்றிக் கவலைப்படாமல் அவளைத தொடர்ந்து காதல் மொழி பேசி தொல்லை கொடுத்தால் அவள் மனம்மாறி அவன் வலையில் விழலாம். விழும்வரை தொடர வேண்டும்.

அப்படி சிக்குபவர்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டால் அதன்பிறகு அந்த மாணவனுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம். பண உதவியும் செய்கிறோம் எனச் சொல்லி விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அக்கட்சியின் அறிவு ஜீவிகளும்; அக்கட்சியின் நிர்வாகிகளாகவே செயல்படும் காவல்துறை தலித் அதிகாரிகளும் பயிற்சி மையங்களே நடத்துகிறார்கள்.

இதன் காரணமாக- கிராமப்புறங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை வழிமறித்து வம்புக்கு இழுப்பது; கையை; சடையைப் பிடித்து இழுப்பது; கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பேசி பாலியல் தொல்லைகள் கொடுப்பது; அப்படியும் மசியாத பெண்களின் பெற்றோர் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்ப் பொய்ப் புகார் கொடுத்து தொல்லை தருவது போன்ற அநாகரீகச் செயல்களைச் செய்வதற்கு என்றே ஒரு கும்பலை வளர்த்துக் கொண்டிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு.

இதன் காரணமாக- வயதுக்கு வந்த தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு கிராமத்துப் பெற்றோரும் இந்த மிருகங்களினால் தங்கள் பெண்ணுக்கு என்ன நேருமோ; ஏது நேருமோ என்ற அச்சத்தோடு ஒவ்வொரு நாளும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதைப் போல பதைத்துக் கிடக்கிறார்கள். பள்ளிக்குப் புறப்படும் போதே எந்த வெறிநாய்கள் எங்கே வந்து எப்படி வழிமறித்து விரட்டுமோ என்ற மிரட்சியோடும் பீதியோடும்தான் கிராமப்புறங்களில் மாணவிகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்தப் பொறுக்கிக் கும்பலின் தொல்லை தாங்காமல் மனச்சிதைவுக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளும் இருக்கிறார்கள்.

பெரிய பாதுகாப்பு பின்னணி இல்லாத வசதி வாய்ப்புள்ள சில மாணவிகளை வலுக் கட்டாயமாகக் கடத்திக் கொண்டு போய் ஒருவாரம் இருவாரமென தலைமறைவாக வைத்திருந்தபின்; பெற்றோருக்கு தொலைபேசி மூலம் ஒரு லட்சம் கொடு; ரெண்டு லட்சம் கொடு உன் பெண்ணை விட்டுவிடுகிறேன் என பிளாக் மெயில் செய்கிறார்கள். வசதி வாய்ப்புள்ளவர்கள் கடனோ உடனோ வாங்கி தங்கள் குழந்தைகளை மீட்கிறார்கள். முடியாதவர்கள் மனமொடிந்து கொஞ்சம் கொஞ்சமாக சாகிறார்கள்.

இந்த செய்திகளைக் கேட்டு ஆறாவதோ ஏழவதோ படிக்கும் தங்கள் பெண்பிள்ளைகளைப் படித்தது போதும் என படிப்பை பாதியில் நிறுத்திவிடும் பெற்றோர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேறுசில பெற்றோர்களோ எதற்கு இந்த தொல்லைகள். வளர்த்து ஆளாக்கி படிக்கவைத்து; படிப்பை பாதியில் நிறுத்தி கஷ்டப்படுவானேன் என்று பெண்குழந்தை பிறந்தவுடன் சிசுக் கொலை செய்கிற கோர முடிவுக்கும் வந்து விடுகிறார்கள்.

எந்த அரசியல்வாதிகளும் விடுதலைச் சிறுத்தைகளின் அராஜகங்களைக் கண்டிக்க முன்வராததற்கு என்ன காரணம்? இந்த அராஜகங்களைத் தட்டிக்கேட்க எந்த அரசியல்வாதியும் முன்வருவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

தன் பெண்பிள்ளைகளையும்; தன்வீட்டு பெண்களையும் இந்த பொறுக்கிக் கும்பல் நெருங்கமுடியாத பாதுகாப்பில் வைத்திருப்பதால் – இதுபற்றி கண்டுகொள்வது இல்லை என்பது முதல் காரணம்.

நாளை தேர்தல் வரும்போது இந்தக் கும்பலோடு கூட்டணி வைத்தாக வேண்டும் என்பதும்; இவர்களிடம் போய் ஓட்டுக் கேட்டாக வேண்டுமே என்பது இரண்டாவது காரணமாகும்.

அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால் இந்த அராஜகங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை என்ன செய்கிறது? வேலியே பயிரை மேயும் கதையாக – இவர்களுக்கு பயிற்சி மையங்கள் நடத்தி இந்த அராஜகங்களுக்குப் பண உதவியும் செய்து ஊட்டி வளர்ப்பவர்களாக இருக்கிறார்கள் தலித் அதிகாரிகள்.

பிறசாதி காவல்துறை அதிகாரிகள் இந்தப் பொறுக்கித் தனங்களுக்கு எதிராக – நடவடிக்கை எடுக்க முன்வந்தால் அந்த அதிகாரிகள் மீதே தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பொய்ப்புகார் கொடுத்து மிரட்டுகிறார்கள். இதற்குப் பயந்து நேர்மையான அதிகாரிகள் கூட தலித், அம்பேத்கார் என்ற பெயர்களைக் கேட்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்கிறார்கள்.

இப்படியும் நடக்குமா என சந்தேகப் படுபவர்கள் தெளிவு பெறுவதற்காக- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவூரில் நடந்த அராஜகங்கள் அதைத் தொடர்ந்து நடத்திய கொலைகளையும்; கம்பைநல்லூரில் நடந்த பொறுக்கித் தனங்களையும்; அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட கொலைவிபரத்தையும், சுருக்கமாகப் பட்டியலிடுகிறோம்.

திருவூரில் நடத்தப்பட்ட பாலியல் அராஜகங்களும் கொலைகளும்:

சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 2 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவூர். இந்த ஊர் காலனியில் 1500 தலித் குடும்பங்களும்; ஊரில் வன்னியர் 150 குடும்பங்களும்; கோனார்; செட்டியார்; ஐயர்; நாயுடு குடும்பங்கள் என சுமார் 50ம் உள்ளன.

திருவூரில் தலித்துக்கள் அதிகம் உள்ளதால் சுவர் விளம்பரங்கள் செய்யும் உரிமை தங்களுக்கே என்றும்; அம்பேத்காருக்கு மட்டுமே சிலை என்றும்; கள்ளச்சாராயம் விற்கும் உரிமையும்; கூவம் ஆற்றில் திருட்டு மணல் அள்ளும் உரிமையும் தங்களுக்கு மட்டுமே உண்டு என்றும்; பிற சாதியினர் எல்லாம் தங்கள் அடிமைகள் என்றும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எப்படியோ ஒழியட்டும் என்று தலித் அல்லாத பிற சாதியினர் பொறுத்துக்கொண்டு ஒதுங்கியே இருந்தனர்.

ஆனால், பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறிப்பது; கையைப் பிடித்து இழுத்து சட்டைக்குள் மணலைப் போடுவது; சடைçய் உடையைப் பிடித்து இழுப்பது; கெட்ட கெட்ட வார்த்தைகளைச் சொல்லி சேஷ்டைகளைச் செய்வது;- வேலைக்குச் செல்லும் பெண்களிடம் பாலியல் தொல்லைகள் தருவது; தூக்கிக் கொண்டுபோய் விடுவோம் என மிரட்டுவது என – தன்மானத்தைக் குத்திக்கிளறும் அராஜகங்கள் வளர்ந்தபோது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்க்கத்தொடங்கினார்கள்.

இந்த எதிர்ப்புகளுக்குத் தூண்டுகோலாக இருந்த வன்னியரான முன்னாள் ராணுவ வீரர் பொன்னுசாமியை வீடுபுகுந்து வெட்டி; மாடியிலிருந்து கீழே தூக்கி வீசி; கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்தவரை, கீழே நின்ற கும்பல் உயிர்போகும்வரை வெட்டிசாய்த்துவிட்டு; சுற்றி நின்று டான்ஸ் ஆடினார்கள் – விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளைச் சேர்ந்த அரக்கர்கள். மேற்கண்ட அதே திருவூரில் – பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சுகுமார்; ரமேஷ் என்ற 20 வயது கூட நிரம்பாத இரண்டு வன்னிய இளைஞர்களை 1.2.2003 அன்று வெட்டிச் சாய்த்தது இந்தக் கொலைகாரக் கும்பல்.

இந்தப் பொறுக்கிக் கும்பலோடு சண்டைபோட்டு வாழமுடியாது என அஞ்சிய அனைத்து சமூகத்தவரும் தங்கள் பெண் குழந்தைகளை 5ஆம் வகுப்புக்குமேல் பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்திவிட்டார்கள். இந்த அக்கிரமங்கள் குறித்து -2003 மே திங்கள் அச்சமில்லை இதழில் விரிவான செய்திகளை வெளியிட்டு திருவூரில் பெரும்பான்மையாக இருப்பதை வைத்து தலித்துகள் 3 வன்னியர்களை வெட்டிக் கொல்லலாம் என்றால் – மற்ற சாதிகள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களில் தலித்துகளை வெட்டிக்கொல்வது நியாயம் என்று ஆகிவிடாதா? என்று கேட்டிருந்தோம்.

இன்றுவரை அந்த மூன்று வன்னியர்களை வெட்டிக்கொன்ற கொலைகாரன் எவனையும் – காவல் நிலையமோ நீதிமன்றமோ தண்டிக்கவில்லை.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பொறுக்கித்தனங்களும் கொலையும் கம்பைநல்லூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பொறுக்கிக்கும்பலின் அராஜகங்கள் குறித்து 11.11.2009 நாளிட்ட நக்கீரன் இதழ் வெளியிட்ட செய்தியைப் படிக்கிற மான ரோசமுள்ள யாருக்கும் ரத்தம் கொதிக்கும். இந்த வெறிநாய்களை ஊரில் எப்படி நடமாட அனுமதிக்கலாம் என்று கோபம் கொப்புளிக்கும். மாணவிகளின் பள்ளிப்படிப்பை எப்படி எல்லாம் அழித்து ஒழிக்கிறது இந்தக் கும்பல் என்பதை அறிகிற எந்த நாகரீக சமூகமும் இந்தப் பொறுக்கிகளின் முகத்தில் காரித் துப்பும். நக்கீரன் இதழ் வெளியிட்ட சம்பவங்களை பட்டியலிடுகிறோம் படியுங்கள்.

சம்பவம் 1.

+2 படிக்கும் மாணவி ஒருவர் தன் பள்ளி ஆசிரியரோடும்; ஊராட்சி மன்றத் தலைவரோடும்; சக மாணவ மாணவிகளோடும் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். கோழி முட்டைகள் இரண்டை இரண்டு கைகளிலும் வைத்தக் கொண்டு எதிரேவந்துகொண்டிருந்த வாலிபன் ஒருவன் – அந்த +2 மாணவியை வழிமறித்து உசந்த சாதி உசந்தசாதி என்கிறார்களே இதை உடைத்தால் உடையுமா பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அந்த மாணவியின் மார்பில் அழுத்தி முட்டைகளை உடைக்கிறான்.

திகைத்துப் பதறிய அந்த மாணவி அடநாயே என்றபடி செருப்பைக் கழட்டி அடிக்கிறார்.
அதைத் தடுத்துவிட்டு அவர் சடையைப் பிடித்து இழுத்து குனியவைத்து உதைத்துவிட்டு ஓடுகிறான். இதற்காக அந்த இளைஞனைக் கண்டித்தால – பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் பொய் வழக்குத் தொடுத்துவிடுவார்கள் என்று மனம் புழுங்கினார்கள் ஊராட்சித் தலைவரும் ஆசிரியரும்.

சம்பவம் 2.

ஜெ.பாளையம் பி.ஆர் சாதி (பறையர் சாதி) இளைஞர்களால் பாதிக்கப்பட்ட மாணவி விஜயாவைச் சந்தித்தோம். ஈவ் டீசிங்கிலிருந்து இன்னமும் மீளாத விஜயா முன்னாடி பின்னாடி உரசினான், காலை மிதிச்சான், ஜடையைப் பிடித்து இழுத்தான், அசிங்கம் அசிங்கமா பேசினான், இத்தனையும் பஸ்சுக்குள்ளேதான் நடந்தது, பஸ்சுல எல்லாரும் தலையைக் குனிஞ்சிக்கிட்டாங்க. தினமும் இதேமாதிரி. பொறுக்கமுடியாமல் வீட்டிலே அண்ணனுங்ககிட்டே சொன்னேன். அடுத்தநாள் (20.10.2009) என் அண்ணனுங்க வந்தாங்க. அப்பவும் இப்படியே செய்தான். அவன அடிச்சி போலீஸ் ஸ்டேசனுல ஒப்படைச்சாங்க.

அந்த பஸ் ஜே.பாளையம் போனதும் அவங்க சாதிக்காரங்க பஸ்சை வழிமறிச்சு கண்ணாடிகளை உடைச்சாங்க. என்னாடி பன்னிட்டான் எங்க பையன்? அவனை ஏன்டி போலீசுல புடிச்சுக் கொடுத்தேன்னு என்னையும் அடிச்சு.. கேவலமா பேசி.. தொடர்ந்து சொல்ல முடியாமல் முகத்தை மூடித் தேம்பினார் விஜயா.

இந்த சம்பவத்திற்கு காரணமான மணி என்பவனை விட்டுவிட்டு அவனைக் கண்டித்த காரணத்திற்காக 14 பேர்மேல தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்திலே வழக்கு போட்டுட்டாங்க… கண்டிச்ச மாதையன் என்பவரின் பிணம் மறுநாள் கிணற்றில் கிடந்தது. இதுக்கு காரணமானவர் சுதாகர் என்ற தலித் எஸ்.பி.தான். மாதையன் சாவு பற்றி சரியான விசாரணை கூட இல்ல.. இதுதான் நீதியா… விஜயாவின் உறவினர் ஒருவர் நம்மிடம் குமுறினார்.

சம்பவம் 3.

அவனுங்க நடந்துகிட்டதை பேசுனதை இப்ப நெனைச்சாலும் ஒடம்பு கூசுதுங்க அண்ணா… அவ்வளவு அருவெறுப்பு என்று சொல்லும் கலா தன் 10ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டுவிட்டார்.

சம்பவம் 4.

கம்பைநல்லூர் பழநியையும் அவரது மகள் ரஞ்சிதாவையும் அவர்கள் வீட்டில் சந்தித்தோம். காலை 7 மணி இருக்கும். மிளகா வாங்கிக்கிட்டு கடையிலிருந்து வரும்போது சுப்பிரமணிங்கிறவன் அசிங்கமா வார்த்தையைச் சொல்லிக்கிட்டே என் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து என் தாடையில் கடிச்சுப்புட்டான். ஊர் சனங்கதான் அவனை அடிச்சு விரட்டினாங்க என்றார் ரஞ்சிதா. புகார் கொடுத்ததற்காக, எங்கமேலயே தீண்டாமை கேசு போட்டு வதைக்கிறாங்க என்றார் பழநி.

சம்பவம் 5.

இருட்டினபிறகு எந்த பொண்ணும் வெளியில நடக்க முடியாது. தெருமுனையில நின்னுகிட்டு லவ் பாட்டு பாடிக்கிட்டே பேண்ட்டைக் கழட்டிடுவானுங்க. பிரண்ட்ஸ்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு நடந்துக்குவானுங்க அண்ணா.. +2 மாணவி காமாட்சியின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.

சம்பவம் 6.

கம்மைநல்லூர் ஸ்டேசன் ஏட்டு சாகுல் செரீப். அவரது மகளையும் விட்டு வைக்கவில்லை. இதை தடுக்க அந்த ஊர் ஸ்டேசன் ஏட்டாலகூட ஒண்ணும் செய்ய முடியல. ஜின்னா தெருவிலிருந்து தங்கவேல் தெருவுக்கு வீடுமாற்றி தன் பெண்ணைக் காத்துக்கொண்டார் என்கிறார் கம்யூனிஸ்ட் தோழர் மாது.

சம்பவம் 7.

கம்மைநல்லூர் பேரூராட்சிக்கு தலித் சமூகத்தைச சேர்ந்த கிருஷ்ணன் தான் தலைவர். அவரிடம் இந்த ஈவ் டீசிங் பற்றிக் கேட்டோம். ஏதோ 10 பொறுக்கிப் பசங்க செய்யுறானுங்க அதுக்காக இங்கே இருக்குற 2500 தலித் குடும்பங்களையும் குறைசொல்லக் கூடாது என்றார். காவல்துறை மாணவிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கணும் இல்லேன்னா சட்டத்தை நாங்கள் கையில் எடுப்போம் காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ இல்லையோ… மாணவிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கனுணும். இல்லேன்னா சட்டத்தை நாங்கள் கையில் எடுப்போம் என தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த மக்களின் மனநிலையை வெளிப்படுத்தினார் வகுராப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் மாரியப்பன்.

விடுதலைச்சிறுத்தைகளால் ஊருக்கு ஊர் வளர்த்துவிடப்பட்டுள்ள இந்தப் பொறுக்கிக் கும்பலுக்கு எதிராக – சட்டத்தை கையில் எடுக்கும் மனோநிலைக்கு மற்ற சமூகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என நக்கீரன் பத்திரிகை எழுதி இருப்பது தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கொடுத்திருக்கும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் கூட- மாணவிகளுக்கு எதிராக அந்தப் பொறுக்கிக் கும்பலால் அரங்கேற்றப்படும் பாலியல அராஜகஙகளைத் தடுக்கவோ; அந்தப் பொறுக்கிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்வோ; மாதையன் கொலையாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவோ அப்போதைய கருணாநிதி அரசும் அவர் கையில் இருந்த காவல் துறையும் முன்வரவில்லை என்பது – கருணாநிதி அரசே ஒரு பொறுக்கி கும்பலின் அரசாக இருந்தது என்பதற்கான அடையாளமாகும்.

இதனால் தருமபுரி பகுதியில் விடுதலைச் சிறுத்தைப் பொறுக்கிக் கும்பலின் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அராஜகங்களுக்கு எதிராகப் புகார் கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்காது என்பதாலும்; வீணாக தங்கள் பெண்ணின் வாழ்வும் தங்கள் குடும்ப மானமும் போவதுதான் மிஞ்சும் என்பதாலும் – பாதிப்புக்கு உள்ளானவர்களே இத்தகைய செய்திகளை வெளியே சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். செய்தி தெரிந்து நேரில் சென்று விசாரித்தாலும் தங்கள் பெண்ணின் பெயரோ தங்கள் பெயரோ வெளியே தெரியக்கூடாது என நிபந்தனை விதித்தே பேசுகிறார்கள். இதுவே இந்தப் பொறுக்கிகளுக்கு கவசமாகி விடுகிறது.

பழைய தருமபுரியில் தருமபுரிக்கு அருகில் உள்ள பழைய தருமபுரியைச் சேர்ந்த ஒரு மாணவி – அந்த ஊர் விடுதலைச் சிறுத்தை இளைஞனின் தொல்லையைத் தாங்கமுடியாமல் பள்ளிக்குப் போவதையே நிறுத்திவிட்டார். இதற்குப் பிறகும் வீடுதேடிவந்து அவன் கொடுத்த தொல்லையைத் தாங்க முடியாமல் பூச்சிமருந்தைக் குடித்துவிட்டார். இதுதெரிந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச சென்று காப்பாற்றியிருக்கிறார்கள். செய்தி தெரிந்து ஆறுதல் கூறியபின்; அவன்மீது புகார் கொடுங்கள் எனச் சொன்னவுடன்; எங்கள் மானம்தான் போகும்; வேறு ஒன்றும் நடக்காது; எங்களை விட்டுவிடுங்கள் பட்டதெல்லாம் போதும் என கையயடுத்துக் கும்பிட்டத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

கெங்கனாபுரம்

கெங்கணாபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அராஜகத்தால் தற்கொலை செய்து கொண்ட பெண் நல்லாம்பள்ளியிலிருந்து சேலம் செல்லும் வழியில் 3வது கிலோமீட்டரில் இருக்கிறது கெங்கனாபுரம் என்ற ஊர். அங்கு வருவாய்த்துறையில் அரசுப்பணியில் இருக்கும் ஒருவரின் மகளைத் தொல்லை கொடுத்து இழுத்துக்கொண்டுபோய் தாலி கட்டிக் குடும்பம் நடத்தியபின் – உன் அப்பனிடம் போய் 3லட்சம் பணம் வாங்கியாடி என விரட்டியிருக்கிறான். அது சிறுபான்மைச் சமூகமான செட்டியார் குடும்பம். அந்தப் பொறுக்கியைத் தட்டிக்கேட்கும் பின்னணி இல்லாத நிலை.

நடைபிணமாக வீட்டுக்கு வந்த பெண்ணைப்பார்க்க வந்த உறவினர்கள் கேவலமாகப் பேசிக் கண்டித்ததைத் தாங்க முடியாமலும்; தன்னால் தன் பெற்றோர் படும் அவமானத்தைச் சகிக்க முடியாமலும் – பத்து பதினைந்து நாட்கள் சாப்பிடாமலேயே கிடந்து செத்துப்போனாள் அந்தப் பெண். அந்தப் பெண்ணை அரசு அதிகாரியாக இருக்கும் அவரது அப்பாவே கொன்றுவிட்டார். அவர்மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என- மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?

நல்லாம்பள்ளி

நல்லாம்பள்ளிப் பகுதியிலேயே இதே நல்லாம்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒரு மாணவியைக் கடத்திக் கொண்டுபோய் வைத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் பேரம் பேசியது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல். அந்தப் பெண்ணின் பெற்றோர் ஆட்கொணர்வு சட்டத்தின்கீழ் வழக்குப்போட்டு தங்கள் பெண்ணை மீட்டிருக்கிறார்கள்.

இது குறித்து காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இந்தப் பொறுக்கி கும்பலைத் தண்டிக்குமானால் – ஊருக்கு ஊர் இவர்களால் பாதிக்கப்பட்டபெற்றோர்களிடமிருந்து புகார்கள் குவியும். வெறும் பேச்சாக இல்லாமல் – உண்மையிலேயே பெண்கல்வி முன்னேற்றத்தில் இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் இவர்களைத் தண்டிக்க வேண்டியதுதான் அரசின் முதல் கடமையாக இருக்கும்.

இப்படி எல்லாம் அராஜகங்கள் செய்தால்தான் சாதிகளை ஒழிக்கமுடியுமென தன் தொண்டர்களுக்கு மேடைக்குமேடை பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார் புதிய பெரியாராக அவதாரம் எடுத்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரான திருமாவளவன்.

அருந்ததியர் மீதான வன்முறை

இந்த சாதி ஒழிப்பு சூரப்புலிகள் – அருந்ததிய மக்கள் மீது எத்தகைய தீண்டாமை வன்கொடுமையைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும்; எத்தகைய சாதிமேலாதிக்கம் செய்கிறார்கள் என்பதற்கும் – ஆதாரமாகச் சில செய்திகளைத் தருகிறேன்.

அருந்ததியருக்கு எதிராக மூன்றாவது குவளையைக் கொண்டுவந்த பறையர்கள் அருந்ததிய மக்களின் பிரச்சனைகளைப் பதிவு செய்வதற்காக வெள்ளைக்குதிரை என்ற இருமாத இதழ் ஒன்று வெளிவருகிறது. மேட்டூரில் 20.2.2011 அன்று முதல் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. பெரியார் தி க தலைவர் கொளத்தூர் மணி அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சின் ஒரு பகுதி;

“பெரியார் திராவிடர் கழகம் சார்பாக எங்கள் தோழர்கள் கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களின் தேனீர்க்கடைகளில் கையாளப்படும் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க இயக்கம் நடத்திக்கொண்டிருந்தபோது – மருதமலை செல்லும் வழியில் உள்ள தேனீர்க் கடைகளில் 3 குவளைகள் இருப்பதைக் கண்டனர். அருந்ததியர் தேனீர் குடிக்கும் குவளையில் நாங்கள் தேனீர் குடிக்கமாட்டோம் என்று பிற தலித் சாதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் – அருந்ததியர் தேனீர் அருந்துவதற்கு என்று மூன்றாவது குவளை நடைமுறைக்கு வந்ததென கடைக்காரர்கள் கூறினார்களாம்”

இந்த சாதி ஒழிப்பு சூரப்புலிகள்தான் சாதியை ஒழிக்க – மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்களாம். எனக்குத் தெரிந்து நிறைய தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பிராமணப் பெண்களை மணந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் சாதி ஒழிந்துவிட்டதா? தலித் சமூகத்தைச் சேர்ந்த சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் காணாமல் போனதுதான் மிச்சம்.

ஈழ பெண்கள் கொடுமைக்கு நிகரான கரடிசித்தூர் சம்பவம்

பறையர் சமூகப் பெண் ஒருவர் அருந்ததிய ஆணுடன் திருமணம் செய்து கொண்டதற்காக அருந்ததியப் பெண்களை பறையர்கள் கற்பழித்துச் செய்த கொடூரம் சாதி ஒழிப்பு பேசும் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தில் ஒரு அருந்ததியப் பையன் – ஒரு பறையர் பெண்ணோடு ஓடிப்போனதற்காக அருந்ததிய மக்கள் மீது எத்தகைய வன்கொடுமை ஊழிக் கூத்தாடினார்கள் என்ற விபரத்தைத் தருகிறேன்.

இரா.அதியமான்; எழில்.இளங்கோவன்; பேராசிரியர் கல்யாணி; தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன்; கவிதாசரண் இதழாசிரியர் கவிதாசரண்; பேராசிரியர் அ.மார்க்ஸ் போன்றோர் அடங்கிய உண்மையறியும் குழு கள ஆய்வு செய்து தந்த அறிக்கையின் சில பகுதிகள்:

கரடிசித்தூரில் பறையர் குடியிருப்பில் 1500பேர்கள் இருக்கிறார்கள். ஆதிதிராவிடர் குடியிருப்பை ஒட்டி உள்ள ஊர் கோடியில் நான்கு அருந்ததியர் குடும்பங்கள் உள்ளன.

2004ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ஆம் தேதி – வீரன் என்ற அருந்ததியர் இளைஞன் பரிமளா என்ற பறையர் பெண்ணோடு திருமணம் செய்யும் நோக்கோடு ஓடிவிட்டார். ஆகஸ்டு 9ஆம் தேதி – பரிமளா குடும்பத்தினர் இன்னும் 3 நாட்களுக்குள் இருவரையும் ஒப்படைக்கா விட்டால் அருந்ததியர் வீடுகளை ஏலம் விட்டு ஊர்ப்பொதுவுக்கு எடுத்துக்கொள்வோம்; உங்களை ஊரை விட்டே துரத்தி விடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள்.

ஆகஸ்டு 10ஆம் தேதி அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர்களான கோவிந்தராசு; வீரனின் அப்பா பெரியசாமி; சித்தப்பா சின்னையன் ஆகியோர் சென்னைக்குத் தேடப் புறப்பட்டுவிட்டனர். நீங்கள் வருவதற்குள் உங்கள் பெண்களை நாசம் பண்ணிவிடுவோம் என மிரட்டியும் இருக்கிறார்கள்…

சொன்னபடியே 12ஆம் தேதி இரவில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்; செந்தில் முனுசாமி; மாரி; கோபி; மாரியாபிள்ளை ஆகிய ஆறு பறையர் இளைஞர்கள் நன்கு குடித்துவிட்டு அருந்ததிய வீட்டுமுன் போய் ஆபாசமாகத் திட்டியுள்ளனர். கதவு திறக்காததைக் கண்டு அருகிலிருந்த வண்டி நுகத்தடியைக் கழட்டி – வீட்டுக்கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து நுகத்தடியால் பெண்களைத் தாக்கி இருக்கிறார்கள். மாயவன் மகள் நதியா (17) என்பவரை, இவதான்டா அழகா இருக்கா முதலில் இவளைப் புடிங்க என்று சொல்லிக்கொண்டே அவரைக் கீழே தள்ளி அவர் மீது பாய்ந்து ; ஆடைகளைக் கிழித்து ; பாலியல் உறுப்புகளைக் கடித்து; கசக்கி நாசப்படுத்தியுள்ளனர். சில நிமிடங்களுக்குள்ளேயேஅந்தப் பெண் மயக்கமடைந்துள்ளார்.

அங்கிருந்த வீரனின் தங்கை கோவிந்தம்மாளை (16) நிர்வாணப்படுத்தி மார்பகங்களைக் கடித்துள்ளனர். வீரனின் தம்பி மனைவியான கர்ப்பிணிப் பெண் கலா (19)வையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சமீபமாக குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டவரும் பறையராகிய பாலமுருகனைத் திருமணம் செய்துகொண்ட அருந்ததியப் பெண்ணான வெள்ளையம்மாளை (29) அந்தப் பெண்ணின் கணவரைத் தூணில் கட்டிப்போட்டுவிட்டு அந்தப் பெண்ணின் பெற்றோர் முன்னிலையில் – நுகத்தடியால் வயிற்றிலும் இடுப்பிலும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி; படுத்த படுக்கையாகி; கண்பார்வை இழந்து ஒருமாத காலத்திற்குள் வெள்ளையம்மாள் இறந்து போயிருக்கிறார்.

பள்ளர்; பறையர் முதலான தலித் பிரிவினர் அருந்ததியர் மீது தீண்டாமைக் கொடுமையை இழைத்து வருகின்றனர். பரமக்குடியில் பள்ளர்களால அருந்ததியப் பெண்ணான கருப்பி கொல்லப்பட்டதும்; சூலூரில் கொல்லப்பட்ட இந்திராணியும் சில உதாரணங்கள்.

பண்ருட்டிப் பகுதியில் இதேபோல் பறையர்களின் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர் அருந்ததியர்.
இதர ஆதிக்க சாதியினர் பறையர்களிடம் எவ்வாறு நடந்துகொள்வார்களோ – அவ்வாறே பறையர்கள் அருந்ததியினரிடம் நடந்துகொள்வதை நாங்கள் கவனித்தோம் (இந்த அறிக்கையை ஏப்ரல் – 2004 அச்சமில்லை இதழில் வெளியிட்டுள்ளோம்)

மானப்பிரச்சனை என்பது பறையருக்கு மட்டும் தானா? மற்ற சாதியினருக்குக் கிடையாதா?
பறையர் பெண்ணை அருந்ததியர் ஒருவர் இழுத்துக்கொண்டு ஓடினால் அது பறையர்களுக்கு இழிவு – மானப்பிரச்சனை. பறையர்கள் மற்ற சாதிப் பெண்களை இழுத்துக்கொண்டு ஓடினால் அது மற்ற சாதிகளுக்கு இழிவு இல்லையா? மானப்பிரச்சனை இல்லையா?

மற்றசாதிப் பெண்களை பறையர்கள் இழுத்துக்கொண்டு ஓடினால் அதற்கு பெயர் முற்போக்கு, புரட்சி; சாதி ஒழிப்பு எனப் போலி வேசம் போடும் தலித் தலைவர்களே- கரடிசித்தூர் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த நதியாவுக்கும்; கோவிந்தம்மாளுக்கும் நீங்கள் செய்த பாலியல் கொடுமைகளையும்; வெள்ளையம்மாளைக் கொன்ற கொடூரத்தையும் – மற்றசாதிப் பெண்களைப் பறையர்கள் இழுத்துக்கொண்டு ஓடும்போது மற்ற சாதியினர் தலித் பெண்கள் மீது நிகழ்த்தினால் -நதியாவை; கோவிந்தம்மாளைப் போல் கெடுக்கப்படாத தலித் பெண்கள் எந்த ஊரிலாவது இருக்க முடியுமா?

வெள்ளையம்மாளைப் போல ஒரு பாவமும் செய்யாத பறையர் பெண்களின் கொலைகள் ஊருக்கு ஊர் நடக்காதா? எங்களுக்கு மட்டும்தானே தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் இருக்கிறது? வன்னியனுக்கு ஏது? செட்டியாருக்கு ஏது? சாகுல் செரீப்புக்கு ஏது? முதலியாருக்கு ஏது? என்ற தைரியமா? தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் தலித்துகளுக்குக் கிடைத்த வரம்! அதைச் சாபமாக மாற்றிக் கொண்டு அழிந்து போகாதீர்கள்… தீண்டாமையை ஒழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு தீண்டாமையை மேலும் கெட்டியாக வளர்த்துவிடாதீர்கள்.

இறுதி எச்சரிக்கை
ஒரு கட்டம் வரைக்கும்தான் இந்த தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் உங்களுக்குப் பாதுகாப்புக் கேடையம்! உங்கள் அராஜகங்கள் எல்லைமீறிப் போகிறபோது- பாதிக்கப்பட்ட எல்லா சமூகங்களும் ஒருங்கிணைந்து நக்கீரன் இதழ் எழுதியிருப்பது போல் சட்டத்தைக் கையில் எடுத்தால்தான் தங்கள் மானம் மரியாதையைக் காத்துக்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தபின்பு “மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்” என்ற பாரதி வழியில் துணிவு கொள்ள ஆரம்பித்தால் வரமாக வந்த வன்கொடுமைச் சட்டமே உங்களுக்கு சாபமாகிவிடும் என்பதைப் புரிந்துகொண்டு திருந்துங்கள்… அப்போது உங்கள் மீதான இழிவைத் துடைக்க எங்கள் நேசக்கரங்களும் நீளும்.

# நன்றி: திரு. பிரபாகரன் - அச்சமில்லை இதழ்
kongu
என்னப்பா புரட்ஷியாலர்கலெய் அச்ஷமில்லைக்கு பதில் எலுத தெரியலையா நக்சல்பாரிகளே

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.