கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சாத்தப்பாடி தெற்கு தெருவில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் மாசிமகத் திருவிழா 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டாடக் கூடிய ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது. இத்தகைய நிலையில் இந்த ஆண்டு திங்கள் (06/0 3 /2023) அன்று சாலக்கரை மாரியம்மன்கோயில் கன்னிசாமிக்குக் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். புவனகிரி வழியாகப் பரங்கிப்பேட்டை புதுக்குப்பம் கடற்கரைக்குப் பகல் 1 மணியளவில் கடற்கரைக்குச் சென்று படையல் இட்டுத் திரும்ப 3 மணி அளவில் புறப்பட்டனர். அப்போது டிராக்டரில் சாமி பாடல் போட்டபடி சாத்தப்பாடி கிராமத்தார் கிராம இளைஞர்கள் சாமியோடு வந்துள்ளனர்.
இது பிடிக்காத அந்தப் பகுதியில் வாழ்ந்த மேலமானகுடியைச் சேர்ந்த சாதி வெறியர்கள் சாத்தப்பாடி ஆதிதிராவிட இளைஞர்களைச் சரமாரியாக வழிமறித்து 20 பேர் இருசக்கர வண்டியில் வந்து தாக்கியுள்ளனர். சண்டை 6. 45 மணிக்கு நடந்துள்ளது. சாதி வெறியர்கள் கழி, கட்டை, கருங்கல்லால் 20க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சாத்தப்பாடி ஆதிதிராவிட மக்களைச் சரமாரியாக தாக்கியுள்ளனர். பறப்பசங்களுக்கு சாமி ஊர்வலம் கேக்குதா, பற தேவிடியா பசங்கள என்றும் கெட்ட வார்த்தைகளால் திட்டி, கொன்னுப்போடுங்கடா என்றும் அடித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான சாத்தப்பாடி கிராம மக்கள் திரிவூர்தியி(ஆம்புலன்சி)ல் மருத்துவமனைக்குப் போகும் போது மேலமானக்குடியைத் தாண்டி தெற்குத் திட்டையில் (ஆதிதிராவிடப் பெண் ஊராட்சி மன்ற தலைவரைத் தரையில் அமர்த்திய ஊர்) போய்க் கொண்டிருக்கும் போது மேலமானக்குடியை சேர்ந்த சாதி வெறியர்கள் இருசக்கர வண்டியில் திரிவூர்தியை (ஆம்புலன்ஸை) மறித்து 10 பேர் வண்டியைத் தட்டி மறித்து நிறுத்தி ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளான சாத்தப்பாடி ஆதிதிராவிட இளைஞர்களையும் பெண்களையும் சாதி வெறியர்கள் மீண்டும் வண்டி உள்ளேயே தாக்கியும் கீழே இழுத்துப் போட்டுத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
புவனகிரி காவல்துறை பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் இளைஞர்கள் ஐந்து பேரிடம் சிதம்பரம் RMMCH மருத்துவமனையில் வாக்குமூலம் வாங்கி கொண்டது. சிதம்பரத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். .கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சாத்தப்பாடி சிற்றூரில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களை மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் சந்தித்து, வன்கொடுமை குறித்துக் கேட்டறிந்தனர்.
காவல்துறையின் அச்சுறுத்தும் போக்கின் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்; ஊர் வெறிச்சோடியுள்ளது .புவனகிரி வட்டம், சாத்தப்பாடு சிற்றூரில் பாதிக்கப்பட்ட, தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி இளைஞர்கள் மீது புவனகிரி காவல் நிலையத்தார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். புவனகிரி காவல் நிலையத்தார் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை நேர்மையான விசாரணை நடத்திப் பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்களை இவ்வழக்கில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பின் சார்பில் 15.3.23 இன்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அமைப்புகளையும் சார்ந்த சேர்ந்த தோழர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். .
- தயாநிதி