கந்தன் மலை திரைப்படத்தின் சிலசில காட்சிகள் ரீல்சாக வெளியவந்துள்ளன. அந்தக் காட்சித் துண்டுகளில், படு அபத்தமான வசனங்களோடு முழுக்க முழுக்க சங் பரிவாரங்களின் வன்ம அரசியலைப் பேசுகிறார்கள். ஒரு காட்சியில் எச் ராஜா, தென்னிந்திய பார்வர்டு பிளாக் திருமாரன் நடித்த காட்சியைப் பார்க்க நேர்ந்தது. காதல் திருமணம் பற்றி ஆணாதிக்கச் சிந்தனையோடு பேசக்கூடிய அபத்தமான காட்சி அது.

kandhan malaiஅதில் திருமாறன் பேசுகிறார், ‘இப்படித்தான் உடுமலைப்பேட்டையில் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வச்சீங்க. திரும்ப அடுத்தடுத்து செஞ்சு வச்சீங்க. ஒரு பொண்ணுக்கு ஆயிரம் தடவையா திருமணம் செய்து வைப்பீங்க’ என்று பேசுகிறார். யாரை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ள காட்சி என்பது அனைவருக்கும் தெரியும். தோழர் உடுமலை கெளசல்யா அவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசும் காட்சிஅது.

ஒரு பெண் தனக்கு ஏற்ற துணைவரைத் தேடுவது என்ன தவறு? அது அவளுடைய உரிமை. கணவர் சாதி வெறியாதால், சாதி வெறியால் படுகொலை செய்யப்பட்ட பிறகு, மறுமணம் செய்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? கெளசல்யாவின் திருமணங்கள் குறித்துப் பேசும் திருமாரனும், எச்.ராஜாவும், ஆண்கள் எத்தனைப் பேர் பலதார மணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பேசத் தயாராயி? திருமாரன் மதிக்கக் கூடிய பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த திரு. பி.கேமூக்கையாத்தேவர் எத்தனைத் திருமணங்கள் புரிந்தார் என்ற வரலாறு தெரியுமா? பலதார மணம் செய்ததனால் நாம் மூக்கையாத்தேவரை இழிவாகப் பேசி விட முடியுமா? ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதியா?

திருமணம் என்பது அவரவர் விருப்பிரிமை சார்ந்தது. உங்கள் சாதி சமய சம்பிரதாயங்களை பெண்களுக்கு மட்டும் தான் இணைத்துப் பார்ப்பீர்களா? நீங்கள் வழிபடும் திரெளபதி அம்மன் எத்தனை ஆடவர்களைத் திருமணம் செய்தாள் என்று புராணத்தில் நீங்கள் அறிந்ததில்லையா? ஐவரைத் திருமணம் செய்து கொண்ட திரெளபதியைப் பற்றி எச் ராஜாவும், திருமாரனும் பேசுவார்களா? கோபியர்களோடு கொஞ்சிக் கூடிக் குலாவிய கண்ணனின் லீலைகள் குறித்து காட்சி அமைப்பாளர்களா?

ஒருவர் சட்டப்படி மனமுறிவு பெற்றுக் கொண்டு மறுமணம் செய்து கொள்ளலாம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமை. அதை ஆண்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம், பெண்கள் பயன்படுத்தினால் மிகக் கேவலமாகப் பேசுவார்களாம். இப்படிப்பட்ட காட்சிகளுக்காகவே, இந்த மாதிரியான படங்களைத் தடை செய்ய வேண்டும்.

இந்து ரத்தம் ஓடுகிற கள்ளர் மறவர்களே ஒன்றிணைந்து வாருங்களாம்! அட முட்டாள் சங்கீப் பயலே!

இரத்தத்தில் ஏ பாசிடிவ் , பி பாசிடிவ் என பல்வேறு வகைகள்தாம் இருக்கிறதென்று அறிவியல் கூறுகிறது. இந்த முட்டாள்பயல் மாணிக்கவேல் ‘இந்து ரத்தம்’ என்று உளறுகிறான்.

நாமெல்லாம் ஒரே சாதி, நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறுபவர்களே!

ஏழை இந்து கள்ளர் மறவர்களுக்கு, எந்தப் பணக்கார கள்ளர் மறவர் பெண் கொடுத்து, பெண் எடுக்கிறான். உசிலம்பட்டி மதுரை இராமநாதபுரத்தில், திருநெல்வேலி பகுதிகளில் இருக்கிற ஏழை தேவர் சமூகத்தைச் சேர்ந்த குப்பனுக்கும் சுப்பனுக்கும் சேதுபதி வீட்டிலேயோ, சிவகங்கை சமஸ்தானத்திலேயோ அல்லது புதுக்கோட்டை தொண்டைமான் குடும்பத்திலேயோ அல்லது சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்திலேயோ பெண் கொடுத்து பெண் எடுப்பார்களா? உக்கடை தேவர் வீட்டிலும், பூண்டி வண்டையார் வீட்டிலும் ஏழைத் தேவர்மர்கள் சம்பந்தம் முடித்து விட முடியுமா? இருவரும் ஒரே சாதி தானே. ஒரே இந்து ரத்தம் தானே. ஏன் கொடுக்க மறுக்கிறார்கள்?

ஓ. பண்ணீர்செல்வமும், வைம்மான் முத்துராமலிங்கமும் மறவர்கள் என்பதற்காக அல்லது இந்துக்கள் என்பதற்காக, ஏழை இந்து மறவர் வீடுகளில் மண உறவு வைத்துக் கொள்வார்களா? ஏழை இந்து கள்ளர் மறவர்களை வாட்ச்மேன் வேலைக்குக் கூட எடுக்க மாட்டார்கள்.

எனக்குத் தெரிந்து கோவையிலே ஒரு பிரபலமான வக்கீல், கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர், என்னிடம் ஒருமுறை பேசும்போது கூறினார், ‘என் தகுதி அந்தஸ்துக்குக் கள்ளர் இனத்திலேயே பெண் இல்லை’ என்று. எங்கே போயிற்று உன் சாதியும் மதமும்?

எத்தனையோ தேவர்மர்கள் கூலித் தொழிலாளியாகவும், மூட்டை சுமப்பவர்களாகவும், ஹோட்டல் சர்வர்களாகவும், காய்கறி விற்பவர்களாகவும், ஏழை விவசாயிகளாகவும், தினக் கூலிகளாகவும் இருக்கிறார்களே. அவர்களும் உங்கள் சாதி தான்; அவர்களும் உங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். உங்கள் பாஷையிலே சொன்னால் அவர்களுக்குள் ஓடுவது இந்து இரத்தம்தான். ஒரே சாதியாக இருந்தாலும் ஒரே மதமாக இருந்தாலும் நீங்கள் பணக்காரர்கள்; அவர்கள் ஏழைகள். உங்கள் வசதிக்குத் தகுந்த இடத்தில்தான் உங்கள் எல்லா உறவுகளும். ஆனால் ஏதாவது கலவரம் செய்ய வேண்டும் என்றால், காரியமாக வேண்டுமென்றால் உடனடியாக ‘நான் உன் சாதிக்காரன்! உன் மதத்துக்காரன்’ என்று கூறையப் போயக கத்துகிறீர்கள்.

ஒரே சாதிக்குள்ளேயே ஏழைப் பணக்கார என்றத்தாழ்வுகள், வேறுபாடுகள் அவற்றைக் கணக்கில் கொண்டு தானே உங்கள் உறவுகள் எல்லாம் இருக்கிறது. பின் என்ன வெங்காய மயிருக்கு சாதி, மதம்?

இந்து என்று சொல்லிக் கொண்டு வரும் எச்.ராசா பார்ப்பான், ஒரு மறவர் வீட்டிலேயோ அல்லது கள்ளர் வீட்டிலேயோ அல்லது பறையர் வீட்டிலேயோ பெண் கொடுத்து பெண் எடுப்பாரா?

நயினார் நாகேந்திரன்களும், அண்ணாமலைகளும், வானதி சீனிவாசனாகளும், தமிழசைகளும் அவரவர் சாதிக்குள்ளே இருக்கின்ற அவரவர் மதத்துக்குள்ளே இருக்கின்ற ஏழை எளியவர்களின் வீடுகளில் மண உறவு வைத்துக் கொள்வார்களா? வைத்துக்கொள்ளவே மாட்டார்கள். தங்கள் தகுதிக்கு அந்தஸ்துக்கு உரிய இடங்களைத்தான் தேர்வு செய்வார்கள். எனில் இவர்களின் சாதி மதப் பற்று எங்கே போயிற்று?

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வோம். நாம் வேறு அவர்கள் வேறு. நாம் ஏழை எளிய பாட்டாளி வர்க்கம். அவர்கள் அதிகாரம் படைத்த, வசதி படைத்த பணக்கார வர்க்கம். என்னதான் கூழைக்கும்பிடு போட்டு குட்டிக்கரணம் அடித்தாலும், உங்களை நாய் போல்தான் நடத்துவார்கள். உங்களோடு எந்தக் காலத்திலும் மண உறவு கொள்ள மாட்டார்கள். உங்களைத் தன் சாதிக்காரனாகவோ அல்லது தன் மதத்துக்காரனாகவோ நினைக்கவே மாட்டார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது நீயும் நானும் ஒரே சாதி, ஒரே மதம் என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

இதேபோல் இன்னும் எத்தனையோ மாணிக்கவேல்கள் வந்து சாதி மதங்களைக் கூறிக்கொண்டு, உங்களை அடியாட்களாகப் பயன்படுத்த நினைக்கிறார்கள்! இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

மனிதத்தை நேசியுங்கள், துயர் வரும் காலத்தில் நம் துன்பத்தைத் துடைப்பவர்கள், நமக்கென்று ஏதாவது கஷ்டம் வந்தால் கண்ணீர் வடிப்பவர்கள், எந்தச் சாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் மட்டுமே நமது உறவினர்கள். அவர்கள் மட்டுமே நமது சொந்தக்காரர்கள்.

சாதி மதங்களைக் கூறி நம்மைப் பிரிக்க நினைக்கும் சதிகாரர்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

- மருது பாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.