நாகரீகத்தில் சிறந்து விளங்கிய சீனர்களின் நிலை வரவரத் தாழ்மை யுற்று வருகின்றது. இந்தியர்களைக் காட்டிலும் கீழ்நிலை அடைந்து வருகின் றார்கள். தங்கள் நாட்டில் சுதந்திரமில்லாது அந்நியர்களால் மிருகங்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்களது நிலையைக் கூறுங்கால் உள்ளம் துடிக்கின்றது. என்று முதலாளிகளின் எதேச்சாதிகாரம் உலகினின்றும் ஒழியுமோ அன்றே உலகிற்கு விடுதலை. ஏழைகள் புத்துயிர் பெற்று இன் புறுவார்கள். ஜப்பான் உட்பட இருபது அந்நிய நாட்டினர் சீனத் தேசத்தினின் றும் மூலப்பொருள்களை சுரண்டுவதில் குந்தகம் ஏற்படுமோ? என்கிற பயத்தால் சீன மக்களைப் பல அட்டூழியங்களுக்கு ஆட்படுத்தி வருகின்ற னர். அக்கொடுமைகளைச் சொல்லவேண்டுவதில்லை. சீனத் தொழிலாளர் களை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். இவர்கள் தங்களது நாட்டைக் காட்டிலும் சீன தேசத்தில் அதிகம் உரிமை பெற்றிருக்கின்றனர். இந்நிலையில், சீனர்கள் ஆட்படும் கொடுமைகளை அறியாது, அவற்றைக் களையவும் வழி தேட ஆற்றல் இல்லாத பர்க்கன் ஹெத் பிரபு சீன மாணவர்கள் மீது பாய்கிறார். ஏழை மாணவர்கள் கொடுமை செய்கின்றனரா? இரக்கமற்ற எதேச்சாதி காரமே உருவாய்த் திரண்டு விளங்கும் இம்முதலாளிகள் கொடுமை செய் கின்றனரா? என்பதை அம் முதலாளிக் கூட்டத்தைச் சேர்ந்த பர்க்கன் ஹெத் பிரபு அறிவது கடினமே. இனம் இனத்தைத்தான் சேரும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.08.1925)

Pin It