கனத்த மனதோடு மன்னிப்பு கேட்கிறோம். மன்னித்து விடு ஆசிபா. கையாலாகாத உடல் வலிமையை பெற்ற உன்னைப் போல் என்றோ ஒரு நாள் காமக்கொடூரர்களால் மடியும் நேரத்தை எண்ணி, பயந்து வாழ்க்கை நடத்தும் அக்காமார்கள் மன்னிப்புக் கேட்கிறோம். மன்னித்து விடு ஆசிபா.

1. நாங்கள் மன்னிப்புக் கேட்பது முதல் முறையல்ல. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மொட்டுக்கள் உதிரும்போதும் மன்னிப்புக் கேட்டுதான் கடக்கிறோம். ஆனால், உனது கொடூரக் கொலையை எங்களால் அவ்வளவு எளிதாக கடக்க முடியாது. உறக்கத்தில் எழுப்பி எங்களை கேள்வி கேட்கிறாய், நான் என்ன தவறு செய்தேன்? என்று, வீதியில் நடக்கும்போது பிஞ்சு குழந்தைகள் எல்லாம் எங்களை காரி உமிழ்கிறது என்று எங்களுக்கு இந்த நிலை வருமோ? என்று கேள்வியோடு பதில் சொல்ல முடியாமல் நகர்ந்த போது எங்களை அறியாமல் கோவில்களைப் பார்த்து காரி உமிழ்ந்து, கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி தான் என்று பகிரங்கமாகச் சொல்லி நகர்கிறோம்.

2. தவறு செய்தது யார்? எங்கள் ஆசிபாவிற்குத் தெரியாது அவளுக்கென்று தனிப்பட்ட பெண் உறுப்புகள் இருக்கிறது என்று எங்கள் ஆசிபாவிற்குத் தெரியாது, பெண் என்பவர் குழந்தையாக இருந்தாலும் சரி சிறுமியாக இருந்தாலும் சரி தனியே இந்த இந்திய வீதிகளில் நடக்கக் கூடாது என்று, எங்கள் ஆசிபாவிற்குத் தெரியாது இங்கே காமக்களியாட்டங்கள் நடக்கிறது என்று எங்கள் மொட்டுக்குத் தெரியாது. ஆணாதிக்க வர்க்கம் மொட்டுகளை கசக்கத் தயங்காது என்று. எங்கள் குழந்தைக்கு தெரியாது. இங்கே நடப்பது ராமராஜ்ஜியம், அதில் குழந்தை ஆரம்பித்து குதூகலமாய் உலா வரும் பெண்கள் வரை அனைவரும் பாலியல் பண்டங்கள் தான் என்று நிச்சயமாக எங்கள் ஆசிபாவிற்குத் தெரிந்திருக்காது. ‘கோவில்களும், தேவாலயங்களும், மசூதிகளும் இங்கே விபச்சாரக் கூடங்களாக மாறிவிட்டது என்று.

3. இழிவான ஈனப்புத்தி கொண்ட அக்கயவர்கள் இனிப்பு தருகிறேன் என்று அழைத்துச் சென்றார்களோ எங்கள் செல்வத்தை? காமக்கொடூர கயவர்கள் கடவுள் காட்டுகிறோம் வா, என்று அழைத்தார்களோ எங்கள் குழந்தையை...

4. தாயின் வயிற்றில் பிறந்து, ஏதோ ஒரு சகோதரியோடு வளர்ந்த உங்கள் ஆணுறுப்புக்குத் தெரியவில்லை யாரிடத்தில் அதை புகுத்த வேண்டும் என்று. உங்கள் தாயின் மார்பில் பால் குடித்தபோது வராத காம புத்தி எங்கள் மழலையின் பிஞ்சு உடம்பை பார்த்ததும் வந்துவிட்டதா? உங்கள் சகோதரிகளின் உறுப்புகளை விட எங்கள் குழந்தை ஆசிபாவின் உடல் ஒன்றும் வளர்ந்துவிடவில்லையே? 8 நாட்களில் ஒரு நாள் கூட உங்களுக்கு உங்கள் குழந்தைகளின் முகம் நினைவுக்கு வரவில்லையா? கடவுள் சிலைதான் என்பதனால்தான் என்னவோ, பெண் கடவுள் சிலைகள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படவில்லை.

5. ஆடையை வைத்து ஒரு பெண்ணின் கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கலாச்சாரக் காவலர்களே, சேலை அணிந்தால் எங்கள் மாராப்பு விலகி மார்பு தெரிந்ததால் வன்புணர்வு என்கிறீர்கள்: பாவாடை அணிந்தால் தொடை தெரிந்ததால் வன்புணர்வு என்கிறீர்கள்: சுடிதார் அணிந்தால் உடலமைப்பு உங்களை இழுக்கிறது என்கிறீர்கள்: முழுவதுமாக மூடி மறைத்து பர்தா அணிந்தால் கை, கால் நகங்களும், விரல்களும் தெரிவதால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாள் என்கிறீர்கள். நீங்களே பதில் கூறுங்கள் எங்கள் ஆசிபாவின் ஆடையில் என்ன கவர்ச்சியைக் கண்டீர்கள்? எங்கள் குழந்தையின் எந்த உறுப்பு உங்களை அவளை வன்புணர்வு செய்யத் தூண்டியது?

6. மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறீர்கள் பெண்ணின் நிறமோ, உடையோ, வயதோ, உடல் திடமோ, கவர்ச்சியோ, நடையோ உங்களை பாலியல் வன்கொடுமைக்குத் தூண்டவில்லை, செத்த பிணமாக இருந்தாலும் சடலத்தின் மேல் ‘பெண்’ என்ற வார்த்தை, ஒற்றை வார்த்தை எழுதியிருந்தால் போதும், அதையும் இந்தக் காவிக் கயவர்கள், காமக்கொடூரர்கள், இந்து ராஜ்ஜியம் அமைக்கத் துடிக்கும் ஈன பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூட்டங்கள் விடாது என்று.

7. உங்கள் மனுதர்மத்தில் பெண்கள் ‘பாவயோனியில்’ பிறந்தவர்கள் என்று எழுதியிருக்கிறது. அந்த பாவயோனியால் தான் உங்களை போன்ற பாவிகள், அப்பாவிக் குழந்தைகளைச் சூைறயாடுகிறீர்கள்.

8. மாதவிடாய் தீட்டு என்று சொன்னீர்கள். அந்த மாதவிடாயின் உதிர கழிவுகள் வெளியேறும் வலியினை கூட இதுவரை எங்கள் ஆசிபா அனுபவித்திருக்கமாட்டாள். அப்பிஞ்சு குழந்தையின் உறுப்பில் எப்படி நுழைக்கத் துடித்தீர்களோ உங்கள் ஆணுறுப்பை? எங்கள் செல்வத்திற்கு தெரியாது அவளும் ஒரு பெண், அவளுக்கும் அப்படியெல்லாம் மறைக்கப்பட்ட துவாரங்கள் இருப்பது. உங்கள் ஆணாதிக்கத்தை பறைசாற்ற துடிக்கும் ‘ஆணுறுப்பை’ ஒருமுறை ஒருவனுக்கு துண்டித்தால் ஒழிய, உங்கள் அட்டூழியங்கள் ஓயாது.

9. தேசியக் கொடி ஏந்தி வீதிக்கு வந்து ஆசிபாவைக் படுகொலைச் செய்த தேசத்தியாகிகள், பாரத மாதாவின் பி.ஜே.பி பிள்ளைகளுக்காக கொடி தூக்கும், தேசியக் கொடித் தூக்கும் ஈனப்பிறவிகளே, உங்கள் பாரத மாதாவும் பெண்தான், உங்கள் பல கோடி கற்பனை கடவுள்களும் பெண்தான், அவர்களைப் புணர்ந்து விட்டு வாருங்கள், எங்கள் கோவண துணிதான் உங்கள் தேசியக் கொடி என்பதை நிரூபிக்கிறோம்.

10. எட்டு நாட்கள் கருவறையை விட்டு வெளியே வந்து எங்கள் குழந்தையை காப்பாற்றாத உங்கள் கடவுள்களா இனி எங்களைக் காப்பாற்றப் போகிறது. உள்ளே இருந்த இந்து கடவுளுக்கு பிடிவாதமோ? வேற்று மதக் குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது என்று.

11. ஆசிபாவின் மரணம் மனதை ரணப்படுத்தி ஏங்க வைக்கம் நேரத்தில், அதிலிருந்து மீள்வதற்குள் குஜராத்தில் இன்னொரு பெண் குழந்தை. பாரத மாதா பெருமை பேசும் பைத்திய அயோக்கியர்களே, நிச்சயம் எங்கள் கையில் சட்டம் இருந்தால் உங்கள் ஆணுறுப்பை எல்லாம் துண்டித்து வீதியில் எறிவோம். கையாலாகாத சட்டமும், கேடுகெட்ட மத்திய அரசும், வாய்மூடி மௌனியாய் இருக்கும் சமூகமும் ஒன்று சேர்ந்து மன்னிப்புக் கேளுங்கள் எங்கள் ஆசிபாவிடம். வீடுதோறும் எழுதுங்கள்.

‘இது குழந்தைகள் வாழும் இல்லம்
காவிகளுக்கும், காலிகளுக்கும் இடம் இல்லை” என்று.

12. வலியை மட்டும் பேசினால் மீண்டும் ஒரு ஆசிபாவைப் பலிகொடுக்க நேரிடும். குறைந்தபட்ச தற்காப்புகளை, தற்காப்புக் கலைகளையாவது கற்றுக்கொடுங்கள் பெண் பிள்ளைகளுக்கு. பெண் என்ற பாலியல் பேதத்தை உண்டாக்காமல், அதே நேரத்தில் பாலியல் கல்வியை கற்றுக் கொடுங்கள். கத்தியை கொடுத்து பெண் பிள்ளைகளை வெளியே அனுப்புங்கள். தொட வரும் ஆணாதிக்க அயோக்கியனை துண்டிப்பது (ஆணுறுப்பை) எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.

13. சாதியம், மதவாதம், ஆணாதிக்கம் எதுவாக இருந்தாலும் சரி இங்கே பலிக்கு ஆளாக்கப்படுவது என்னவோ பெண்கள்தான்? பெண் குழந்தைகள் ஆரம்பித்து வயது முதிர்ந்த பெண்கள் வரை தற்காப்புக் கலை பயின்று மன வலிமையோடு ஆணாதிக்க, மதவாத சிந்தனையை வேரறுக்கும் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்போம். மன்னித்துவிடு ஆசிபா, மன்னித்து விடு எங்கள் செல்லமே.

Pin It