1. யார் இந்த நந்தினி?
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், சிறுகடம்பூர் கிராமம், ஆதித்திராவிடர் குடியிருப்பு, அம்பேத்கர் நகர் மேற்குத் தெருவில் 18 x 16 ச.அடி பரப்புள்ள தொகுப்பு வீட்டில் வசித்த காலஞ்சென்ற கு. இராசேந்திரன் (50) - இராசகிளி (45) இணையருக்கு மூன்று பிள்ளைகள். 1. இரஞ்சினி (25), 2. இரஞ்சித்குமார் (20), 3. நந்தினி (12.5.2000). மூத்தப் பெண் உள்ளூரில் செல்வம் என்பவரை திருமணம் செய்துகொண்டு கணவருடன் வாழ்கிறார். இரண்டாவதான மகன் இரஞ்சித் குமார் 10ஆம் வகுப்பு படிப்பைப் பாதியில் விட்டுவிட்டார். 2012இல் தந்தை இறக்கவே, நந்தினியும் 9ஆம் வகுப்பில் இடையில் நிறுத்திவிட்டார். வீடு மட்டுமே இவர்களின் சொத்து. சொந்த நிலம் இல்லை. கூலி வேலை செய்தே பிழைப்பை ஓட்டிவரும் ஆதித் திராவிட ஏழைக்குடும்பம்.
2. அரியலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி :
2016 சூன் மாத வாக்கில், திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரைச் சேர்ந்த (வன்) அடியாள் ‘குண சேகரன்’ என்பவர், அரியலூர் மாவட்டத்தில் இந்து முன்னணிக் கொள்கையைப் பரப்பவும், ஆள்சேர்க்க வும் அவ் இயக்கத்தால் ஏவப்பட்ட ஒரு கைக்கூலி. அவர் பொன்பரப்பிக்கு வருகிறார். செயராமன் ஒரு விவசாயி. அவர் மகன் இராசசேகர். அவரை மூளைச் சலவை செய்து, அரியலூர் மாவட்ட அமைப்பாளர் பதவி தந்து காவித்துண்டு அணிவித்து, பெருமைப் படுத்துகிறார். உடனே பொன்பரப்பியில் தாமரைக் கொடியைப் பறக்க விடுகிறார்கள். இராமகோபலன், பதாகை மக்களின் கண்களை ஈர்க்கும் அளவில் வைக் கிறார்கள். பேருந்து நிறுத்தத்தில் இன்றும் காணமுடி யும். அவர்களது வலையில் சிக்கியவர்கள் கீழமாளி கையிலும் இருக்கிறார்கள். பணம் இலட்சங்கள் கை மாறியதில் அவர்கள் போதையில் மிதக்க ஆரம்பித்து விட்டனர்.
3. இந்து முன்னணியினரின் சூட்சி வலை :
2016 நவம்பர் மாத வாக்கில் சிறுகடம்பூர், அம்பேத் கர் நகர், நந்தினி குடியிருந்த தெருவுக்கும் பக்கத்துத் தெருவுக்கும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்காகக் கீழமாளிகையைச் சேர்ந்த இந்து முன்னணியினர் இரா. மணிகண்டன், த. மணிவண்ணன், அ. திரு முருகன், சீ. வெற்றிச்செல்வன் சாலை போடத் தேவை யான கருவிகள் தட்டுமுட்டுச் சாமான்கள் சிறு சரக் குந்தில் (Mini Auto) ஏற்றிக்கொண்டு 5, 6 சிற்றாள் களுடன் வந்திறங்கினர். வேலை ஆரம்பிக்கப்பட்டது. எங்களுக்கு இன்னும் சில ஆள்கள் வேலைக்குத் தேவை, வருகிறீர்களா? என வினவுகின்றனர். நான்கு பேர் சிற்றாள்களாக வேலைக்குச் செல்கிறார்கள். இதில் நந்தினியும் ஒருவர். ஐந்து நாள்கள் தொடர்ந்து வேலை நடக்கிறது. வேலை முடிவில் பேசியபடியே பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.
இந்தப் பழக்கத்தில் வெளியூரில் சிமிட்டி வேலை, கட்டட வேலை நடந்த போது நந்தினியையும் அவரது தோழி வீ. தேவியையும் சிற்றாள் வேலைக்கு மணி கண்டன் அழைத்துப் போகிறார். மணிகண்டன் நந்தினி மீது ஒரு கண் வைக்கிறார். தேவிக்கு இது தெரிகிறது. இவர்கள் நட்பு வளர்ந்து காதலாகிறது. சில இலட்சங் கள் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நெருக்க மாகப் பழகி, தன் காம வலையில் நந்தினியை வீழ்த்து கிறான். ஏழை அப்பாவிப் பெண்ணும் ஏமாறுகிறாள். அவனை நம்பி தன்னை இழந்தாள். வயிற்றில் கரு வளர்ந்தது. தாய்க்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் இதை நந்தினி மறைத்தார். தேவிக்குத் தெரிந்தும் வெளியில் சொல்லவில்லை. தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி, நந்தினி வற்புறுத்துகிறாள். நீ ஒத்துக்கொள்ளாவிட்டால், காவல்துறையை அணுகி இதுபற்றிப் புகார் செய்வேன் என மிரட்டியதும், கவலைப் படாதே, எனக்கு ஒரு இடத்திலிருந்து பணம் வரும்; வந்தவுடனே, உன்னை வந்து அழைத்துப் போகிறேன்; கொஞ்சநாள் பொறுத்திரு எனப் பக்குவமாகச் சொல்லி, அவ்வப்போது அலைபேசியில் ஆசைவார்த்தைகள் கூறி நம்பவைத்து காத்திருக்கச் செய்கிறார். நந்தினி யும் காத்திருந்தாள்.
4. நந்தினி கடத்தல் :
29.12.2016 வியாழன் இரவு 7.30 மணியளவில் வீ. தேவி மூலம் நந்தினி வீட்டில் யார், யார் இருக் கிறார்கள் என்று விவரம் தெரிந்து கொண்டு, நந்தினி யிடம் சிறுகடம்பூர் ஏரிக்கரைக்கு தான் இருக்கும் இடத்திற்கு “உடனே வா, திருமணத்திற்கு எல்லா ஏற்பாடும் செய்துவிட்டேன்” என்றவுடனே, வீட்டில் அம்மா, அண்ணன், யாரும் இல்லை. வீட்டைச் சாத்தி விட்டு நந்தினி, மணிகண்டன் இருக்குமிடம் போக இருசக்கர வண்டியில் இருவரும் பறக்கிறார்கள். ‘செந்து றையில் இருந்து வெள்ளூர் தமிழரசன் பேசுகிறேன் நந்தினி என்னுடன் தான் இருக்கிறாள். தேடவேண் டாம்’ என்று இரவு 8 மணியளவில் குமிழியத்தில் இருக்கும் வெண்ணிலாவுக்கு ஊரையும் பேரையும் மாற்றி மணிகண்டன் செய்தி சொல்ல, அந்தப் பெண் சித்தி மகள் இரஞ்சினிக்கு இந்தச் செய்தியைச் சொல்ல வும், தாய், மூத்த மகள் இரஞ்சினி, அவரது கணவர் செல்வம் எல்லாரும் நந்தினியைத் தேடினர். மணிகண்டன் பெண்ணைக் கடத்தி விட்டான் எனத் தெரிந்து, இரும்புலிக் குறிச்சி காவல் நிலையம் சென்று புகார் மனு கொடுத் தார், அதை வாங்க மறுத்து, நாளை காலை வாருங் கள் என காவலர்கள் அனுப்பி விடுகின்றனர்.
30.12.2016 காலை 9 மணிக்குச் சென்றவர் களிடம் பெண்ணைக் ‘காணவில்லை’ என்றே எழுதி வாங்கிக் கொண்டு, இரசீது கொடுத்தனுப்புகிறார்கள். கடத்தல் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க, மணிகண்டன் தொடர்பு கொண்டு பேசிய அலைபேசி 8939439565 எண்ணைக் கொடுக்கிறார்கள். வீ. தேவியும் சாட்சி சொல்கிறாள். நீங்கள் ஊருக்குச் செல் லுங்கள். நாங்கள் தேடிப் பார்க்கிறோம். திருவரங்கம் சொர்க்கவாசல் திருவிழாவிற்கு எல்லாரும் போய்விட் டார்கள். நான் மட்டும்தான் இருக்கிறேன். மூன்று நாள் கழித்து வாருங்கள் எனக் கூறி காவலர் மணி வண்ணன் அனுப்பிவிட்டார்.
ஆனால், அன்றைக்கே கீழமாளிகை சென்று இரா. மணிகண்டனை அழைத்துவந்து விசாரிக்கின்றனர். பொன்பரப்பி இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் செ. இராசசேகர், இரும்புலிக்குறிச்சி காவல் நிலையம் வந்து “மணிகண்டன் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர். அவரை சந்தேகப்படவேண்டாம்” என காவல்துறை யை மிரட்டி, மணிகண்டனை மீட்டுக்கொண்டு போய் விட்டார்.
அன்றைக்கே மணிகண்டனைக் கைது செய்தி ருந்தால், நந்தினிக்குச் சாவு நேர்ந்திருக்காது.
5. காமக்களியாட்டமும் - கொலையும் அரங்கேறியது :
இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய மணிகண்டன், தன் நண்பர்களான த. மணிவண்ணன், அ. திருமுருகன், சீ. வெற்றிச்செல்வன் முதலான இந்து முனினணியினருடன் ஒன்றுகூடி மதுவைக் குடித்துவிட்டு தீட்டிய சதி ஆலோசனையை 30.12.2016 வெள்ளி இரவே நிறைவேற்ற முடிவு செய்துவிட்டனர்.
மறைவான இடத்திற்கு நந்தினியை கடத்திக் கொண்டு போய், நால்வரும் அவரது ஆடையை உருவி நிர்வாணப்படுத்தி வாயில் துணியைத் திணித்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டு குற்றுயிரும் குலையுயிரு மாக இருக்கும்போது, வயிற்றைக் கிழித்து கருப்பை யையும் எடுத்த பின்னர், பாழுங் கிணற்றில் தூக்கி வீசிவிட்டு, கட்டியிருந்த ஆடைகளோடு கருவையும் எரித்து விட்டு அவரவர் வீட்டுக்குப் போய்விட்டனர்.
6. காவல்துறையின் அலட்சியப் போக்கு :
காவல்துறையினரின் அலட்சியப் போக்கால், ஏழைச் சிறுமி கொலையில் முடிந்தது. இதுவே, வசதி படைத்தவர்களாய் இருந்தால், செல்வாக்கு உள்ளவர் களாய் இருந்தால், இதே காவல்துறை அவனை விட்டிருக்குமா? உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு, குற்றவாளிகளைப் பிடிப்பதோடு நில்லாமல், பெண்ணை யும் மீட்டுக் கொண்டு வந்திருப்பார்களே! நந்தினி காப்பாற்றப்பட்டிருப்பாரே!
பெண்ணையிழந்த பெற்றோர் 8.1.2017இல் செயங் கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளரிடமும் 12.1.2017இல் அரியலூர் மாவட்டக் கண்காணிப்பா ளரிடமும் புகார் மனு கொடுத்தனர்.
14.1.2017இல், கீழமாளிகை அன்பழகன் கிணற் றில் நந்தினி பிணமாகக் கிடக்கும் தகவல் தெரிந்து ஓடுகின்றனர். இரும்புலிக்குறிச்சி காவல்துறை உடலைக் கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கின்றனர். 15.1.2017இல் பிரேதப் பரி சோதனை நடக்கிறது. கொலையாளியைக் கைது செய் யாமல், பிணத்தை வாங்க மறுத்து, அரியலூர் பெரியார் சிலை அருகில் பல்வேறு அமைப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் 17.1.2017இல் பிணத் தைப் பெற்று அடக்கம் செய்கிறார்கள். நால்வரையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். பெண்ணை இழந்த பெற்றோருக்கு பல்வேறு அமைப்பினர் ஆறு தலும் தேறுதலும் சொன்னார்கள். தொல். திருமாவள வன், மு.க. ஸ்டாலின், வே. ஆனைமுத்து, பொன். இராதாகிருஷ்ணன், சீமான் முதலான தலைவர்கள் நேரில் வந்து ஆறுதல் கூறினர்.
7. நீதி வேண்டும் :
இந்து முன்னணியினர் வடக்கே கரசேவையின் பேரால் பாபர் மசூதி இடிப்பு தொடங்கி, பெருந்தலைவர் தில்லியில் காமராசர் வீட்டுக்குத் தீ வைத்து கொலை செய்ய முயன்றது முதலான பல்வேறு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதும், அரியலூர் மாவட்டத் தில் பெண் கற்பழிப்பு, கொலை போன்ற காரியங்களில் ஈடுபடுவதும் அடாத செயல்கள். இதற்கு மன்னிப்பே கிடையாது. அப்படிப்பட்ட கொடியவர்கள் யாராய் இருந் தாலும், எந்த அமைப்பினராயினும் சிறிதும் கருணை காட்டாது-பாரபட்சம் பார்க்காமல் இக்கொலைக்கு காரணமானவர்களையும், அரசு உடனே கைது செய்ய வும், தக்க தண்டனை வழங்குவதன் மூலமே நந்தினி யை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும் தகுந்த நிவாரணம் வழங்குவதுமே நியாயமாகும்.
வள்ளலாரும் காந்தியும் பெரியாரும் அம்பேத்கரும் காமராசரும் வாழ்ந்த மண்ணில் இப்படி ஒரு அநீதியான செயலா? இது தகுமா? இது முறையா? இது தருமம்தானா?
8. நீதிபோதனை - அரசுக்கு வேண்டுகோள் :
பள்ளியில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை நல்ல நீதிநெறிகளைப் பாடமாக வைத்து, பிஞ்சு மனங்களில் நல்ல பண்பாட்டை வளர்க்க வேண்டும். மதுவை அறவே ஒழித்து, வள்ளுவம் தலைதூக்க அரசு உடனடி கவனம் செலுத்தி, கட்டாயப் பாடமாக்க வேண்டும். இல்லையேல் எதிர்கால இளந்தலைமுறை அடியோடு சீரழிந்து போகும் ஒரு அவல நிலையே தமிழ்நாட்டில் உருவாகும். பொறுப் புள்ள பெற்றோர்களும், கற்ற அறிஞர்களும் மக்கள் தலைவர்களும் இதுபற்றிச் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும். இதுவே இப்போதைய உடனடி தேவை.
- இரா.கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளர், மா.பெ.பொ.க. அரியலூர்